இலங்கையில் தமிழர் விடுதலைக்காக போராடி வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிப்பதற்கான தீர்மானம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பு சார்பில், ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். தடை நீடிப்பு தீர்மானம் சர்வதேச ஐரோப்பிய சட்டங்களுக்கு புறம்பானது'' என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பு சார்பில் ஆஜரான சட்ட நிபுணர் விக்டர் கோப் வாதாடுகையில்,
’’விடுதலைப்புலிகள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக ரீதியில் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விடுதலைப்புலிகளை தொடர்ந்து பயங்கரவாத பட்டியலில் இணைப்பது பொருத்தமாகாது.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளுக்காகவே தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினார்கள்.
சுய நிர்ணய உரிமைக்காக போராட்டத்தை முன்னெடுக்கும் இரண்டு தரப்பினரில், ஒரு தரப்பை மட்டும் பயங்கரவாத அமைப்பாக பட்டியல் படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது’’ என்று வாதாடினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment