Labels

Tuesday, August 30, 2011

முதல்வரிடம் கேட்காமல், வேறு யாரிடம் நாங்கள் கேட்க முடியும்: வைகோ



பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரத்தில் முதல்வரிடம் கேட்காமல், வேறு யாரிடம் நாங்கள் கேட்க முடியும் என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார். சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் பொதுக்கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சியில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:

பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை, மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அவர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது வாழ்க்கையை சிறையில் கழித்துள்ளனர்.

மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் என, அனைத்து கதவுகளை தட்டியும் பயன் இல்லை. நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன். ஒரு வேளை நீங்கள் தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், வரும் 2047ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது இந்தியாவில் தமிழகம் என்ற மாநிலம் இருக்காது. இந்திய தேசிய ஒருமைப்பாடும் தூக்கில் விடப்படும். இந்த விசயத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கருணை காட்டுவார் என நம்பியுள்ளோம். முதல்வரிடம் கேட்காமல், வேறு யாரிடம் நாங்கள் கேட்க முடியும்.


இவ்வாறு வைகோ பேசினார்.

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் :

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் அனைத்து கட்சிகளும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தால் தமிழக முழுவதும் உள்ள மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம். இதனை தமிழக முதல் அமைச்சர் அவர்கள் புரிந்துகொண்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பாமக வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.

பேரறிவாளன், சாந்தன், முருகனை இந்திய சட்டப்படி தூக்கிலிட முடியாது - பிரபல வழக்கறிஞர் கருத்து :

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் இந்திய சட்டப்படி தூக்கிலிட முடியாது என்று பிரபல வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தமிழக முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு செய்தியாளர் சங்கம் சார்பில் சென்னையில் 22.08.201 அன்று பொதுக்கருத்தரங்கம் நடைபெற்றது.


இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,


பூந்தமல்லி தடா கோர்ட் இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது, தடா கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தது. 4 பேர் தவிர மற்ற அனைவரின் தண்டனைகளும் குறைக்கப்பட்டன.


நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ் குறைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் நளினிக்கு சதி செயலில் நேரடி பங்கு இல்லை என்பதாகும். அந்த காரணம் இந்த 3 பேருக்கும் பொருந்தும்.


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் ஆகும். இவ்மூவரும் ஏற்கனவே ஒன்றரை மடங்கு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டனர். இந்திய சட்டப்படி ஒரு குற்ற வழக்கில் 2 தண்டனை விதிக்க முடியாது. அந்த அடிப்படையில் இவர்களை தூக்கிலிடுவது இந்திய சட்டத்திற்கு எதிரானது
என்றார்.

No comments:

Post a Comment