Labels

Showing posts with label TGTE. Show all posts
Showing posts with label TGTE. Show all posts

Friday, July 22, 2011

தமிழீழத் தனியரசுக்கான தேவையினை உறுதி செய்த கறுப்பு யூலையினை நினைவிருத்தி செயற்படுவோம்! - பிரதமர் வி.ருத்ரகுமாரன்



1983 யூலை கறுப்பு நாட்கள் இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் இருப்பும் வாழ்வும் தொடர்பாக அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி அவைக்கான பதில்களையும் வழங்கி நின்றன.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை மனிதில் இருத்தி வீச்சுடன் செயற்படுவதற்கு இக் கறுப்பு யூலை நினைவு நாளில் நாம் உறுதி கொள்வோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழுவிபரம் :

தமிழீழ மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் புரிந்த இனப்படுகொலைக் குற்றங்களின் ஒரு பதிவாக - தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நெருப்பு நினைவுகள் சுமந்த நாட்களாய் அமைந்து விட்ட கறுப்பு யூலைப் படுகொலைகள் நிகழ்ந்து 28 ஆண்டுகள் கழிந்து போயுள்ளன.

1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலைப் படுகொலைகள் நடைபெற்ற போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள்ளும், கொழும்பு உட்பட சிறிலங்காவின் ஏனைய பகுதிகளிலும் சிங்கள அரசின் துணையுடன் சிங்களக் கொலை வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் தனது மரியாதை வணக்கத்தைச் செலுத்தி நிற்கிறது.

சிங்களக் கொலைவெறியர்களின் கரங்களில் இருந்து பல தமிழ் மக்களைப் பாது காத்த சிங்கள மக்களையும் இப் படுகொலைகளுக்கெதிராக குரல் எழுப்பிய சிங்கள முற்போக்காளர்களையும் நாம் இத் தருணத்தில் நன்றியுடன் நினைவில் இருத்திக் கொள்கிறோம்.

1983 யூலை கறுப்பு நாட்கள் இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் இருப்பும் வாழ்வும் தொடர்பாக அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி அவைக்கான பதில்களையும் வழங்கி நின்றன.

சிறிலங்காவின் அதிபாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் வெலிக்கடைச் சிறையில் சிறைப் பாதுகாவலர்களின் துணையுடன் சிங்களக் கொலைவெறிக் கைதிகள் தமிழ்ப் போராளிகள் உள்ளடங்கலாக 50 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை கொன்று குவித்த போது –

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தமது கண்களைத் தானம் செய்து அக் கண்களின் ஊடாக மலரப் போகும் தமிழீழத்தைப் பார்ப்பேன் எனப் பிரகடனம் செய்த போராளி குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து காலால் நசுக்கித் துவம்சம் செய்த போது -

தமிழ் இனத்தைச் சேரந்தவர்கள் என்பதற்காக, தமிழ் மொழி பேசுபவர்கள் என்பதற்காக மட்டும் சிறிலங்கா அரசின் துணையுடன் பேரினவாதக் கொலை வெறிக் கும்பல் 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடப் பார்க்காது வீதிகள் எங்கும் வீடுகள் எங்கும் கொன்று குவித்த போது –

தமிழர்களின் வீடுகளையும், உடைமைகளையும், ஆலயங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஏனைய தொழில் முயற்சிகளையும் கொள்ளையிட்டு அதன் பின்னர் தீயிட்டு அழித்த போது –
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் தமக்குப் பாதுகாப்பில்லை என்பதனையுணர்ந்து தமிழர் தாயகக் பகுதிகளான வட கிழக்குப் பகுதிகளுக்கு ஓடி வந்த போது –

சிங்கள அரசும் தமிழ் மக்களை தென்னிலங்கையில் வைத்து பாதுகாக்க வேண்டிய தனது கடமையினை செய்ய முடியாது அவர்களை தமது தாயகத்துக்கு கப்பல் ஏற்றி அனுப்பி வைத்த போது –

இவையெல்லாம், இந் நிகழ்வுகளெல்லாம் தமிழீழ மக்களின் ஆழ்மனங்களில் பல கேள்விளை எழுப்பின.

இக் கேள்விகள் எல்லாம் தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழுத் தனியரசினை அமைப்பதனைத் தவிர வேறு மார்க்கம் இல்iலை என்ற பதிலினை உறுதியாய் வழங்கின.

ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராட களம் இறங்கினர். வரலாற்றோட்டத்தில் தேசியத் தலைவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சியுடன் முன்னோக்கி நகர்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைமையில் நடைமுறையரசும் அமைக்கப்பட்டது.

கறுப்பு யூலை நிகழ்வுகள் நடைபெற்று 25 வருடங்கள் நிறைவுற்ற பின்னர் மாறிப் போய் விட்ட உலக ஒழுங்கில் ஒடுக்குமுறை சிறிலங்கா அரசுடன் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில் உலகம் கூட்டுச் சேர்ந்த போது –

நீதியையும், தர்மத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கனவு என்ற தார்மீக இலட்சியத்தினயும் நிராகரித்து தமது சுய நலன்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதற்கான முடிவை உலக நாடுகள் எடுத்த போது -

இதன் பெயரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதனை தடுத்து நிறுத்துவதற்கு உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அனைத்தலக சமூகம் எடுக்கத் தவறிய போது –

2009;; ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழன அழிப்பினை முள்ளிவாய்க்கால் மூலைக்குள் வைத்து சிங்களம் செய்து முடித்தது.

1983 இல் தான் இறந்தாலும் கண்தானம் வழங்கி மலரப் போகும் தமிழீழத்தை பார்தது மகிழ்வேன் என்று தனது விடுதலை வேட்கையினை வெளிப்படுத்திய போராளியின் கண்களைத் தோண்டியெடுத்து காலால் நசுக்கித் துவம்சம் செய்தவர்கள் 2009 இல் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினை நசுக்குவதற்கு பெரும் இனஅழிப்பை நடாத்தி முடித்திருக்கிறார்கள்.

கறுப்பு யூலையில் அரசின் துணையுடன் சிங்கள் காடையர்கள் செய்து முடித்த காரியத்தை முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசே தனது ஆயுதப்படைக் காடையர்களைக் கொண்டு மிகப் பெரும் அளவில், மிகக் கொடுரமான முறையில் செய்து முடித்திருக்கிறது.

1983 கறுப்புயூலை எவ்வர்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியதோ அதேபோல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்னொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தி வருகிறது.

முள்ளிவாய்க்காலில் சிங்களம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் நாலாபுறத்தலிருந்தும் கிளம்பி வருகின்றன. அனைத்துலக சமூகம் இவற்றை போர்க்குற்றங்கள் என்ற பெயரில் அழைத்தாலும் தமிழீழ மக்களைப் பெறுத்தவரை இவை இனப்படுகொலையே.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பினுள் வாழ்ந்து வந்த அனைத்து மக்களையும் குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள் இவற்றை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந் நிலப்பரப்பினுள் குறிப்பிட்டளவு சிங்கள மக்கள் வாழ்ந்திருந்தால் இவ்வர்று கூட்டாகத் தண்டிக்கும் அணுமுறையினை சிங்கள அரசு எடுத்திருக்க மாட்டாது.

இன்று சிங்களத்தின் சிறையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் தமிழ் மக்களும் கைதிகளாக்கபட்டுள்ளனர். சிங்களத்தின் சிறைக்கூடங்கள் தமிழர்களுக்கு என்றும் ஆபத்தானவை என்பதனை கறுப்பு யூலை நினைவுகள் நமக்கு நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. கறுப்பு யூலையினை நினைவு கொள்ளும் இத் தருணத்தில் சிங்களத்தின் சிறைக்கூடங்களில் உள்ளவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலை மீண்டும் முன்வைக்கிறோம்.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை மனிதில் இருத்தி வீச்சுடன் செயற்படுவதற்கு இக் கறுப்பு யூலை நினைவு நாளில் நாம் உறுதி கொள்வோமாக!

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்

Saturday, July 16, 2011

பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா – கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு



நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்.

திடகாத்திரமான, சாமர்த்தியமான எமது செயல்கள் யாவும் சிங்கள தேசத்தை திணற வைக்கவேண்டும். ஜனநாயக நாட்டின் சர்வாதிகாரி என்ன செய்வது,ஏது செய்வதென்று தெரியாது தடுமாறவேண்டும். எமது ஒவ்வொரு முன்னெடுப்பும் சிங்கள அரசுக்குப் பின்னடைவைத் தரவேண்டும். நீதி வேண்டும் உலகம் எமக்கு நீதி பெற்றுத் தரவேண்டும். அழிக்கப்படும் எம்மினம் அயர்ந்து தூங்க வேண்டும்.

இவையெல்லம் நிறைவுபெற, எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தற்பத்தையும் நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பதுங்கி வாழ்ந்த சிங்களத் தலைமை மீண்டும் பயந்து வாழ வேண்டும். பயத்தைக் கொடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் சிங்கள அரசும், அதே கொள்கையுடன் இயங்கும் தமிழ் அமைப்புக்களும் தக்கபாடம் படிக்கவேண்டும்.
நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டில் ஒன்றுதான் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை புறக்கணிப்பது. இந்தப் புற்க்கணிப்பு காலதாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும். இப்பொருட்களை வாங்கி எம் உடன்பிற்ப்புகளின் அழிவுக்கு நாமும் பாத்திரமாகலாமா? குறிப்பாக, சனல் 4 காட்சிகளைக் கண்டபின்பும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா?

இறக்குமதி செய்யும் பொருட்களால் பெறப்படும் அந்நியச் செலாவணியில் கிடைக்கும் பணத்தால் வாங்கிய ஆயுதங்களைக் கொண்டுதானே நிராயுதபாணியான எம் இனத்தை, உயிரிலும் மேலான எம் உறவுகளை காட்டு விலங்குகள் போல் வேட்டையாடி விளையாடுகிறார்கள் அந்தக் கோழையர்கள்.

நாம் அப்பொருட்களை வாங்குவதை நிறுத்துவதோடு நிற்காமல், மாற்றாருக்கும் சிங்கள அரசால் நடாத்தப்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி. எம் வேதனையை விளக்கி, எம் துன்பங்களை எடுத்துரைத்து அவர்களையும் சிறீலங்கா பொருட்களை வாங்காது தடுக்க வேண்டும்.

சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அங்கிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தி, மாற்று நாடுகளிலிருந்து அதே பொருட்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்து, அதை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இறக்குமதி செய்பவர்களின் திறமையிலும், ஒத்துழைப்பிலும்தான் இந்த மாற்றத்தை சுமூகமாகவும், துரிதமாக்வும், வெற்றிகரமாகவும் நிறைவுசெய்ய முடியும்.
இதுவரை, சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை விற்கும் வியாபார நிலையங்கள் அப்பொருட்களை தமது கடைகளில் விற்பதை நிறுத்தவேண்டும். மாற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பொருட்களை மட்டுமே விற்கவேண்டும். சிங்கள நாட்டுப் பொருட்களை நாம் விற்பனை செய்வதாதால் நாமே எம் இனத்தை அழிக்க உதவுவதாக அமைந்துவிடுமல்லவா?

விற்பனையாளர்களே! இருக்கும் பொருட்களை விற்பதற்கான காலம் இவ்வாண்டு ஐப்பேசி மாதம் முதலாம் திகதி (Oct 1st ). இன்று தொடக்கம் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதைதை நிறுத்திவிடுங்கள். மாற்று நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையே வாங்கி விற்குமாறு, அழிக்கப்படும் உறவுகள் சார்பில், உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

எம் இனிய உறவுகளே! சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வாங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். ஐப்பேசி மாதம் முதலாம் திகதிக்குப் (Oct 1st ) பிறகு சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கமாட்டோம் என்று இன்றே சபதமெடுத்துச் செயற்படுங்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைப் புறக்கணியுங்கள். மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்.

சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை முற்றாகப் புறக்கணிக்கும் நாளான ஐப்பேசி மாதம் முதலாம் திகதி (Oct 1st ) உலகளாவிய ரீதியில் ஓர் சரித்திர நிகழ்வாக அமைய வேண்டுமென, வாய்பேசா உறவுகள் சார்பில், உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம்.

தென் சூடானின் சுதந்திர விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டுள்ளது!



தென் சூடானின் சுதந்திர விழாவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகசுந்திரம் மாணிக்கவாசகர், பிரதமர் அலுவலக பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் ஆகியோர் தென் சூடான் அரசின் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர்.

தென் சூடான் சட்ட சபையின் சபாநாயகர் ஜேம்ஸ் வானி இக்கா அவர்களின் சுதந்திரப் பிரகடன உரையுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து குழலிசையில் தேசியகீதம் ஒலிக்க, சூடானின் தேசியக்கொடி இறக்கப்பட்டு புதிய தென் சூடான் குடியரசின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

குடியரசு தலைவர் சலிவா கீர் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு சத்தியப்பிரமாணத்தை செய்து தென் சூடான் குடியரசின் தலைவராக பதவியேற்று பேசுகையில்,
‘எமது மாவீரர்கள் வீணாக தமது இன்னுயிர்களை அர்ப்பணிக்கவில்லை இந்த நாளுக்காக நாம் 56 ஆண்டுகளுக்கு மேலாக பொறுத்திருக்க வேண்டியிருந்து. இந்த நாள் நிரந்தரமாக என்றைக்கும் எமது மனங்களிலும் நினைவுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறினார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,

’தென் சூடான் மக்கள் சுதந்திரமான மக்களாகி அடையும் மகிழ்ச்சியை, தமிழீழ மக்களும் தெளிவாக புரிந்துகொண்டு அந்த மகிழ்வில் பங்குகொள்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் தென் சூடான் மக்களுக்கு, அவர்களின் விடுதலைக்காக தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்கி அவர்களது உறுதியையும், வீரத்தையும் தமிழீழ மக்கள் பாராட்டுகிறார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

தென் சூடான் வானொலி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான நேர்காணலை ஒலிபரப்பியது. தென் சூடானின் சுதந்திரதின விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்றியது மட்டுமன்றி, அங்கு தொடர்ந்து தங்கிநின்று தென் சூடானின் அபிவிருத்திக்கு குறித்த துறைகளில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் துறைசார் வல்லுனர்கள், உதவக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தென் சூடான் அரசாங்கத்துடன் கலந்துரையாடினர்.

மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சுதந்திரதின விழாவில் பங்குகொள்ள வந்திருந்த பல வெளிநாட்டு அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஈழத்தமிழரின் நிலைக்கும், தென் சூடானின் கடந்தகாலத்துக்கும் இடையேயான பொதுவான தன்மைகளை விளக்கினர். மேலும் அவர்கள் சிறிலங்கா அரசு புரிந்துவரும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வழங்கினர்.

சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியாவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுயாக் அவர்களை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது.

தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப் போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழமக்களுடனான தமது உறுதிப்பாட்டை குறிப்பிட்டும் அவர் உரையாற்றியிருந்தார்.

தென் சூடானில் இடம்பெற்றது போல ஈழத்திலும் சர்வதேச கண்காணிப்புடனான சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமுகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

2009 இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழின படுகொலையால் தமிழர்களுக்கு தனியான நாடு ஒன்றே அவர்கள் உயிருடன் வாழ்வதற்கான ஒரே தீர்வு என்ற வகையில் தமிழரின் தனிநாட்டு கோரிக்கை மேலும் நியாயமானது என்பது இங்கு குறிப்பிட்டு காட்டப்படுள்ளது.

Thursday, June 23, 2011

வட அயர்லாந்து அரசாங்கம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வ சந்திப்பு



வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.

நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், போர்குற்றங்கள் இனப்படுகொலை மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்துறை அமைச்சர் டிலக்சன் மொறிஸ் ஆகியோர் தலைமையில் சென்றடைந்துள்ள நா.த.அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினரை, அரச மரியாதையுடன் வட அயர்லாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை (யூன்21) வட அயர்லாந்து துணை முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும், நா.த.அரசாங்க குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
பாராளுமன்ற - துணை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 2மணி நேரம்வரை இடம்பெற்றது.

தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலை, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுப்பு, ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் ஆகிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதனுடைய சனநாயக நடைமுறைச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துரைத்த அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய சனநாயகவழி போராடத்தின் உயர்பீடமாக அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, வெளிப்படையயை கிடைத்து வருகின்ற உலக நாடுகளின் அங்கீகாரமாகவே இதனைக் கருதுவதாக தெரிவித்தார்.

அமைச்சர் டிலக்சன் மொறிஸ் அவர்கள் கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய நிலைப்பாடு - நிலைவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டு வட அயலர்லாந்து அரச பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுவது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டதோடு, தமிழ் மக்களுடைய சனநாய பொறிமுறையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும் வரவேற்றுள்ளனர்.

வட அயர்லாந்து அரச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களுடனான தொடர் சந்திப்புக்களை நா.த.அரசாங்க உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Thursday, May 19, 2011

பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி: விஸ்வநாதன் உருத்திரகுமாரன்



தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள் வாங்கி – நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி படுத்திடும் நாளாக இது அமைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தமிழீழ தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதனுடைய முழுமையான விபரம் :

அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!

இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்!

சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள்.
தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள்.
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் வழிநடத்தலாலும் மாவீரர்களின் ஈகத்தாலும் வீரத்தாலும் உருவாக்கப்பட்ட நிகழ்வுபூர்வமான தமிழீழம்; தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை உருவாக்கிய நிகழ்வுபூர்வமான தமிழீழம் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு முழுமையாக உள்ளான கரி நாள்.
சிங்கள இனவாதப்ப+தத்தின் கோரதாண்டவத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே கொல்லப்பட்டு நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலை நடந்தேறிய நாட்களின் உச்சமாக அமைந்;து விட்ட நாள்.
இந்த நாளில் சிங்களஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு தமது இன்னுயிர்களை இழந்த அனைத்துத் தமிழர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது. சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத் தினத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏன் தமிழீழ தேசிய துக்க நாளாகப் பிரகடனப்படுத்தியது?
ஈழத் தமிழர் தேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு துன்பமும் துயரமும் அவலமும் நிரம்பியதாக நமது மக்களின் வாழ்வு போரின் இறுதிக் கட்ட நாட்களில் சிங்களத்தால் சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தது.

மக்கள் தம் வாழ்விடங்களெங்கும் – வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள்.
நடக்கும்போதும், படிக்கும்போதும், உண்ணும்போதும், உடுக்கும் போதும், உறங்கும்போதும், கூடும்போதும், இயலாது இருக்கும் போதும் எங்குமே எப்போதுமே கலைத்துக் கலைத்து வேட்டையாடப்பட்டார்கள்.

குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக்; கொழுத்துவதைப்போல – மூட்டைப்பச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்துக் காலால் நசுக்குவதைப்போல – நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.
தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட இந்த நினைவுகள் தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளாக தலைமுறை தலைமுறையாக உலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலைக்கப் போகின்ற நினைவுகள்.

இந் நினைவுகளைப் பேணுவதற்கும் தலைமுறை தலைமுறையாய் எடுத்துச் செல்வதற்கும், தமிழீழ மக்கள் அடைந்த துயரையும் அவலத்தையும் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் நினைவு கொள்ளக்கூடிய வகையில் மே 18 ஆம் நாளைத் தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகனடம் செய்துள்ளது.

இத் தேசிய துக்கநாளையும் ஒவ்வொரு வருடமும் மே 12-18 க்கு இடைப்பட்ட நாட்களினை இனப் படுகொலையின் நினைவேந்தல் வாரமாகவும் துயர் பகிரவும், உணர்வு பெற்று, எழுச்சி கொள்ளவும் உரியவகையில் நடைமுறைப்படுத்துவது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இவ் வருடம் முதற் கொண்டு இந் நடைமுறை ஆரப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ( Collective memory) ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ( holocaust) எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.

துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை. ய+த மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது. பலஸ்தீன மக்களுக்கென எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தனிஅரசும் இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டுநினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப்
பேணிவருவதனால்தான் சாத்தியமாகப் போகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கும் இவ்வுதாரணங்கள் மிகவும் பொருந்தப் போகின்றன.

தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள் வாங்கி – நாம்ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி ப+ண்டிடும் நாளாக இது அமைய வேண்டும்.

நமது மக்களை இனஅழிப்பு செய்தவர்களை, நமது மக்களுக்கெதிராக குற்றங்கள் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நாம் உத்வேகத்துடன் செயற்படுவதற்கு திடசங்கற்பம் ப+ணும் நாளாக இது அமைய வேண்டும்.
சிங்களத்தால் சீரழிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதுணையாக நின்று செயலாற்ற வேண்டிய அவசியத்தை நமக்குள் நன்கு உள்ளிருத்திக் கொள்ளும் நாளாக இது அமைய வேண்டும்.

இவை குறித்த செயற்பாடுகளை நாம் இன்னும் துணிவுடன் முடுக்கி விட இந்த நாள் உத்வேகம் கொடுக்கும் நாளாக அமைய வேண்டும்.
தமிழீழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாகத் தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. தேசங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

ஆனால் இச் சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும்போது மட்டும்தான் செயல் வடிவம் பெறுகின்றன. நீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தே இந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன. இத்தகையதொரு உலக ஒழுங்கில்தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது இன்று நாம் எதிர் நோக்கும் முக்கியமான ஒரு சவால். இத்தகையதொரு சவால் மிக்க ஒரு சூழலில் நமக்குக் கிடைக்கக்கூடிய சாதகமான வாய்ப்புக்களையெல்லாம் தவற விடாமல் பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த வகையில், தற்போது வெளிவந்துள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினை நாம் சாதகதாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ் அறிக்கை சிறிலங்கா அரசு புரிந்துள்ள போர்க்குற்றங்களை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னர் 140,000 வரையிலான தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என கணக்கிட முடியாததாய் உள்ளது என்பதனையும் இவ் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதே வேளை இவற்றை சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன ஒழிப்பின் (பநழெஉனைந) ஒரு அங்கமாக இவ் அறிக்கை வகைப்படுத்தவில்லை.
இருந்து போதும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டிய சிறிலங்கா படையினர் புரிந்திருக்கக் கூடியதான மோசமான ஐந்து வகை போர்க்குற்ற நடடிக்கைகைளில் நான்கு இனஅழிப்பின் பாற்பட்டவையென தெளிவாக ஆவணப்;படுத்தப்பட்டுள்ளது.
மக்களை வகைதொகையின்றி எறிகணை வீச்சுக்களால் கொலை செய்தமை, மருத்துவமனைகள் மீதும் மனிதாபிமான இலக்குகள் மீதும் எறிகணை மற்றும் குண்டு வீச்சுக்களை நிகழ்த்தியமை, மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க மறுத்தமை, சிறிலங்கா அரசு புரிந்த மனித உரிமை மீறல்கள் – இவையெல்லாம் அனைத்துலகச் சட்டங்களின்படி இனஅழிப்பின் பாற்பட்டதாக அமையக்கூடியதான குற்றங்கள்தான்.
இவை தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பாலும் சிங்களவர்களையே கொண்ட சிறி லங்கா அரசின் அரசியல், இராணுவத்தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்களாக அமைந்துள்ளன. இச் சர்வதேச குற்றங்களை திட்டமிட்ட முறையில் அரசியல் ராணுவத்தலைமைகள் நிறைவேற்றியுள்ளதனால் அவர்கள் இதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவேணடு; ம். மேலும், நிபுணர் குழுவால் கவனமாக ஆராயப்பட்டு பெறப்பட்ட மேலதிக சான்றுகளின் படி யுத்தம் முடிவடைந்த பின்பும் கூட தமிழ் மக்கள் இன அடிப்படையில் சித்திரவதை, பலவந்தமான சிறைப்படுத்தல,; ஏனைய வகையில் அமைந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்பதும் இவை இலங்கை அரசின் நடைமுறைக் கொள்கையின் பால் அமைந்தவையே என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையின்படி தமிழ் மக்களுக்கு ஏதிரான இனப்படுகொலை இங்கு நிகழ்த்தப் பட்டுள்ளது என்பது இதன் மூலம் மிகவும் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

இருந்து போதும் அரசுகள் தமது அரசியல் நலன்களின் அடிப்படையிலும்; இனப்படுகொலைக் குற்றச்சாட்டு ஏற்படுத்தக்கூடிய அரசியல் விளைவுகளின் அடிப்படையிலும் சிறிலங்கா அரசு புரிந்த குற்றங்களை இனஅழிப்பாக வகைப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றன. இதன் எதிரொலியாகவே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையும் இவற்றை இனஅழிப்பின் அங்கமாக குறிப்பிடாமையினை நாம் நோக்க வேண்டும்.

இதனால் இன்று நம்முன்னால் உள்ள ஒரு முக்கியமான பணி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைத் துணையாகக் கொண்டு சிறிலங்கா அரசு புரிந்தது இனப்படுகொலைதான் என்பதனை அனைத்துலக அரங்கில் நிலை நிறுத்துவதற்காகச் செயற்படவேண்டியதே. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கான செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினை எவரும் குப்பைத்தொட்டிக்குள் வீசி விட முடியாத அளவுக்கு வலுவான அனைத்துலக சமூகத்தின் உணர்வலைகளைத் தட்டியெழுப்பி, இவ் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்ற அனைத்துலக கருத்தைக் காத்திரமாக உருவாக்குவது முக்கியமானது உன உணர்ந்து செயற்படுகிறோம்.

அன்பான மக்களே!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கருத்துருவாக அறிவிக்கப்பட்டபோது ஒரு புதிய எண்ணக்கருவாக இருந்த இதன் சாத்தியப்பாடு குறித்துப் பலதரப்பிலும் பல்வேறுவகையான சந்தேகங்கள் இருந்தன. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தும் அச்சுறுத்தல்கள் இருந்தன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கூட்டங்களை நடாத்தவதிலும் கூட இடையறுகள் இருந்துன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான நாடு தழுவிய செயற்குழுக்களை அமைப்பதலும் தடங்கல்கள் வந்தன. தேர்தல்களை நடாத்துவதிலும் சவால்கள் எழுந்தன. இருந்த போதும் இச் சவால்கள் எல்லாவற்றையும் தாண்டி நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாக ஈன்றெடுத்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தை தவழ்ந்து, தற்போது ஒரு வயதை நிறைவு செய்த நிலையில் நிமிர்ந்து நடைபயிலத் தொடங்குகிறது. எந்த ஒரு புதிய அமைப்பும் உருவாகும்போது அவ்வமைப்பு தனது நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி முன்னெடுக்கச் சிறிது காலம் தேவைப்படும். இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் பொருந்தும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிதானமாக அதேவேளை திடமாகத் தனது காலடிகளை முன்னெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. எமது கருத்தக்களை அனைத்துலக கொள்கைவகுப்பாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். ஊடகங்கள், குறிப்பாக இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும் உள்ள பிரதான ஊடகங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தக்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.

இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கமே ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் வெற்றிதான் என்பதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரவேட்கையினை எவராலும் நசுக்கி விட முடியாது என்ற செய்தியினை சிங்களப் பேரினவாதிகளுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.

சுதந்திரத் தமிழீழ அரசினை அமைப்பதற்குரிய அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஒரு பலமான அடித்தளத்தை இடும் செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது. உலகில் பலமிக்க அரசுகளின் நலன்கள், ஒரு பிரச்சினையில் இந்த அரசுகள் எடுக்கும் நிலைப்பாடுகள் காத்திரமான பங்கினை வகிக்கும் என்பதனை நாம் கவனத்திற் கொண்டு இம் முயற்சியினை மேற் கொண்டுள்ளோம். இதவேளை ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு நிலைமைகளுக்கும் உள்நாட்டுக் கொள்கைகைளுக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருக்கும் நிலைமைகளையும் உள்வாங்கியே எமது விய+கங்களை வகுத்து வருகிறோம்.

அன்பான மக்களே!

இன்றைய நாளில் அனைத்துலக அரசியல் தளத்தில் ஆதரவிiயுனம் அங்கீகாரத்தினையும் வென்றெடுப்பதற்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளையும், கடைப்படிக்கும், கடைப்பிடிக்கவிருக்கும் அணுகுமுறையினைக் வெளிப்படுத்துவது பொருத்தமுடையது எனக் கருதுகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவினையும் அங்கீகாரத்தையும் வென்றெடுப்பதற்கு நாம் நமது அரசாங்கத்தை ஒரு வலுமையமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்;. பலத்தினதும் நலன்களதும்; அச்சில் சுழலும் இவ் உலக ஒழுங்கில் உலகின் கவனத்தை நாம் நமது பக்கம் ஈர்க்க வேண்டுமானால் நாம் பலமிக்கவர்களாக மிளிர வேண்டும்.

ஈழத் தாயகத்தின் புவியியல் அமைவிடம், தாயக மக்களின் தளராத விடுதலை உணர்வு, புலம் பெயர் மக்களின் தியாகப்பற்றும் செயற்பாடுகளும், உலகம் முழுவதும் பரந்துள்ள 80 மில்லியன் தமிழர்களும் ஒருங்கு சேரந்து எழுப்பக்கூடிய தோழமை உணர்வு – இவையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்குத் தேவையான வலுவினைத் தரக்கூடியவை.

இத்தகைய ஒரு வலுமையத்தை நாம் உருவாக்கிக் கொள்வது தொடர்பாக நம்பிக்கை தரும் வகையில் முன்னேறத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்கம் செய்வதில் தமிழின உணர்வாளர்கள் பேராசிரியர் சரஸ்வதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தை அமைத்து முனைப்பாக ஈடுபட்டு வருவது நமது நம்பிக்கைகைகளை மேலும் வலுவடையச் செய்கிறது.

இன்றைய உலக ஒழுங்கு இயங்கும் விதத்தை புரிந்து கொண்டு இயங்கும் நாம் உலக அரசகளுடன் முதற்கண் குறி வைப்பது அவர்களின் வெளிப்படையான அங்கீகாரத்தை அல்ல. நாம் இயங்குவதற்கும், நமது நாடு கடந்த அரசாங்கத்தை செயற்படுத்துவதற்கும் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும் வகையிலான ஒரு மறைமுகமாக அங்கீகாரத்தில் இருந்துதான் நாம் நமது இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும் ஜனநாய விழுமியங்களும் எமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாயிருக்கின்றன. இதன் அடுத்த கட்டம் வெளிப்படையான அங்கீகாரத்தை நோக்கியதாக இருக்கும். இத்தகைய மறைமுகமான மற்றும் வெளிப்படையான அங்கீகாரம் நாம் நமது இலக்கு குறித்து முன்னேறுவதற்குத் துணைபுரியக்கூடியவை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசை எதிர் கொள்ளக்கூடிய ஒரு வலுமையமாக உருவெடுப்பதற்கான அடிப்படைகளை நிலைநிறுத்தி, தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப்;பிராந்தியத்தினதும் புவிசார் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தவிர்க்கமுடியாத அங்கமாக நிலைபெறுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் நமது செயற்பாடுகளை முன்னெடுக்க முனைகிறோம்;.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள நமது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்குவதனைத்தவிர வேறுவழியில்லை என்ற கருத்துக்கு கூடுதலான அனைத்துலக ஆதரவினைத் தேடுவதில் நாம் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கும் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்காது – சமத்துவத்துடன் நடாத்தாது சிங்கள மேலாதிக்கத்தினை நிலைநிறுத்தும் முயற்சிகளும் எமது தனியரசு நிலைப்பாட்டை மேலும் வலும்படுத்த துணைநிற்பவையாக நாம் உணர்கிறோம்..
தமிழீழத்தனியரசு அமைவது பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் நன்மைகளோடும் ஒத்துப்போகக்கூடியது என்பதனையும் தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தினதும் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் துணைபுரியக்கூடியது என்பதனையும் கருத்துநிiயில் உறுதியாக முன்வைத்து வருகிறோம்.

இலங்கைத்தீவில் புவிசார் அரசியல் அடிப்படையில் அக்கறை செலுத்தும் பலமிக்க அரசுகளில் எவற்றின் நலன்கள் ஈழத் தமிழ் நலன்களோடு ஒரேதளத்தில் சந்திக்கக்கூடியவை என்பதனை ஆராய்ந்து, அவற்றை அரசியல் இராஜதந்திர அறிவியல் மட்டத்தில் முன்வைத்து, இவ் விடயம் தொடர்பாக கொள்கைவகுப்பாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இம் முயற்சியினை வலுப்படுத்துவதற்காக நாம் ஒரு ஆய்வுநிறுவனத்தையும் உருவாக்கம் செய்து வருகிறோம்.
என்றும் தணியாத ஈழத் தமிழரின் சுதந்திரத் தாகத்தினை ஒரு இம்மி கூட உங்களால் அடக்கி நசுக்க முடியவில்லை என்ற செய்தியினை சிங்கள தேசத்துக்கு தெளிவான செய்தியாக நாம் இன்று மீண்டும் ஒருமுறை தெரிவிக்க விரும்புகிறோம். ஐ நா முன்பும்இ ஜெனீவாவிலும் இன்னும் பல்வேறு நகரங்களிலும் வீதிகளிலும் ஈழத் தமிழர் ஒன்று கூடி ஒத்த குரலில் இன்று முறையிடுவது எல்லாம் அவர்கள் தமக்கான சுய நிர்ணய உரிமை மீது கொண்டுள்ள அசையாத நம்பிக்கையையும் பற்றுறுதியையும் மிகத் தெளிவாகவே குறியிட்டு நிற்கிறது.
ஈழத் தமிழரது சுதந்திர வேட்கைத் தணல் என்றும் இல்லாதவாறு தீவிரமாகவே வெந்து கொண்டிருக்கிறது. தமது முழுமையான விடுதலை மேல் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அவர்களது அயராத உழைப்புக்கும் போராட்டத்துக்கும் உந்து சக்தியாக அவர்களை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நசுக்கப் பட்டோம் என்று நலிந்து போகாமல்இ அடக்க வந்தார்கள் என்பதால் அடங்கிப் போகாமல் இழப்புக்கள் எல்லாவற்றின் மத்தியிலும் எமது பொறுப்புக்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு எமது தோள்களில் சுமத்தப் பட்ட பாரங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு போராட்டப் பாதையில் நாம் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இரண்டு ஆண்டுகளாக நாம் எல்லாம் சேர்ந்து மேற்கொண்ட உழைப்பு வீண் போகவில்லை. எமது தொடர்ச்சியான போராட்டத்தின் பலாபலன்கள் இப்போது வெளிவரத் தொடங்கி உள்ளன. சிங்கள அரச இராணுவ தலைவர்கள் விரும்பிய படியெல்லாம் வெளிப்படையாக பயணம் பண்ண முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளதை நாம் இன்று காண்கின்றோம். அவர்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்கு ஓடலாமே ஒழிய பதவியுடனான சட்ட விலக்களிப்பு ( Immunity) என்ற முகத்திரையின் பின்னால் என்றைக்கும் ஒழித்திருக்க முடியாது என்ற உண்மையை இன்று நாம் சிங்கள தேசத்துக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம். சர்வதேசக் குற்றச் சாட்டுக்களின் பெயரால் அம்முகத்திரை ஏற்கெனவே சிதைக்கப் பட்டு வருவதனை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். நாங்கள் அனைவரும் இன்னும் துணிவுடனும் விவேகத்துடனும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உண்டு.

அனைத்துலகச் சமூகத்தினை நம்மை நோக்கித் திரும்பச் செய்ய நாம் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட, பல்வேறு அரசியல் இராஜதந்திர நகர்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழீழத்தின் நலனையும் உலகின் பலம் மிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணைய வைக்க முடியும் என்பது குறித்து கூடுதல் கவனம் கொடுக்க வேண்டியள்ளது. உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வீச்சாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நாம் தனித்து நிற்காது உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்புக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒருங்குபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

நன்றி

விஸ்வநாதன் உருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Tuesday, May 10, 2011

''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - உருத்திரகுமாரனின் உருக்கமான பேட்டி





விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இந்த இரு ஆண்டுகளில் தமிழினம் கற்றுக்கொண்டு இருப்பது என்ன? கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?''

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய கடந்த இரு ஆண்டு களில், அனைத்துலக அரசுகளின் நலன்களையும் தமிழர் நலன்களையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைக்க வேண்டிய அவசியத்தை நாம் மேலும் உணர்ந்து இருக்கிறோம். சுயநலன்களின் அடிப்படையில், தமது புவிசார் அரசியல் தளத்தில் இயங்கும் உலக அரசுகளிடம், நீதியையும் நியாயத்தையும் அறத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பது யதார்த்தம். இந்த நிலையில், நாடு கடந்த சமூகமாக வாழும் தமிழர்களாகிய நாம், கீழிருந்து மேல் எழும் சக்தியாக மிளிர்ந்து, நீதியின்பால் பற்றுகொண்ட உலக மக்கள் சமூகத்தின் உதவியுடன் நமது விடுதலையை வென்றெடுக்கும் வாய்ப்பு களை மேலும் துல்லியமாகக் கண்டறிந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்!''

''இறுதிப் போர் தொடர்பான ஐ.நா குழுவின் அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?''

''இந்த அறிக்கை அனைத்துலகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும். கொடூரமான முறையில் நடத்தப் பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக மட்ட விசாரணைதேவை என்ற குரலை மேலும் வலுவடையச் செய்யும். நீதியை மதிக்கக்கூடிய உலகச் சமூகத்தின் மத்தியில், களங்கப்பட்ட அரசாக சிறீலங்கா அரசு கூனிக் குறுகும் நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கைத் தீவில் இன்னும் ஒரு முறை இனப் படுகொலை நடக்காமல் இருப்ப தற்கான மாற்று வழி கருத்துப் பரி மாற்றத்தை சர்வதேச சமுதாயத்தில் ஏற்படுத்தும். தென் சூடான்,கொசாவோ, கிழக்கு திமோர் ஆகிய நாடுகள் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு சுதந்திரத் தனி நாடே அவசியம் என்ற முடிவை சர்வதேச சமுதாயம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதே சமயம், இந்த அறிக்கை ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியையும் வெளிப்படுத்துவதாகக் கருதுகிறோம். இது ஐ.நா சபையின் மறுசீரமைப்பு குறித்த விவாதங்களைத் தோற்றுவிக்கலாம். இத்தகைய மறுசீரமைப்பு, ஐ.நா சபையை நீதியின் ஆலயமாக மாற்ற வேண்டுமே தவிர, அதிகார அரசியலின் பலிபீடமாகத் தொடர வழி செய்யக் கூடாது!
போரின் இறுதிக் காலகட்ட இன அழிப்பின்போது கொல்லப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் நாள் விரைவில் வந்தடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்!''

''தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?''

''ஈழத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும், கொடூரமான வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ளாக்கியது யார் என்பதை நமது மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்துலக விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தும்!''

''இறுதிப் போரின்போது தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிநடத்தலால் தான், புலிகள் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போனதாகச் சொல்லப்படுவதுபற்றி..?''

''தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமையின் மீதும் நெடுமாறன் ஐயா மற்றும் வைகோ அண்ணனுக்கு இருக் கும் விசுவாசம் குறித்து நாம் அப்பழுக்கற்ற நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்!''

''இப்போதைய சூழலில் தமிழகத் தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

''ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கு, தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும். இதை வலியுறுத்தியும், தமிழீழத் தனிஅரசை அங்கீகரித்தும், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
சுதந்திரத் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில், இந்திய அரசிடம் முன்வைத்து அதை வென்றெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துஉள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப் படுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி, இந்தியச் சிறைக் கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களை மனிதாபி மான அடிப்படையில் விடுவிக்க, மாநில, மத்திய அரசுகளைத் தூண்ட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பத் தேவையான உதவிகள், நம் மக்களை நேரடியாகச் சென்று அடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும், மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுக்க வேண்டும்.
இவையே எமது எதிர்பார்ப்புகள்!''

Monday, May 9, 2011

ஐ.நா. அறிக்கை இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்தியுள்ளது : ருத்ரகுமாரன்



ஐ.நா. செயலாளரின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையானது, இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்துவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகத்தை விளைவித்தார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த விமர்சனங்கள் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த ருத்ரகுமாரன், புலம்பெயர் தமிழர் இந்த போராட்டத்தை நடத்தவில்லை என்றும், இலங்கையில் இருந்த தமிழர்களே அதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.


இந்தப் போர் குறித்து முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட்டாலே முழுமையான உண்மைகள் வெளிவரும் என்று ருத்ரகுமாரன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சபையின் அனுமதி தேவை. ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்தவற்கு வழக்கறிஞர்களுக்கு பரிந்துரைப்பதை ஐ.நா. செயலாளர்தான் செய்ய முடியும். அதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது என்றும் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

Friday, April 22, 2011

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை.. இலங்கை அரசு தலைவர்களை கூண்டிலேற்ற முதற்படி: ருத்திரகுமாரன்



ஐ.நா. நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையே, இலங்கையின் அரச தலைவர்களையும், படைத் தலைவர்களையும் கூண்டிலேற்ற முதற்படி என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையின் தொடர் விளைவாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தையும் படை உத்தியோகத்தர்களையும் சர்வதேச சுயாதீன போர்க் குற்றவியல் விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதை நியாயப்படுத்திக் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து பாரதூர அத்துமீறல்களில் நான்கு இலங்கை அரசாங்கத்தாலும், அதன் ஆயுதப்படைகளினாலும் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டிருக்கும் ஓர் இன ஒழிப்புச் செயல் என கண்டறிந்துள்ளது என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. அவையாவன:

1) பரந்துபட்ட குண்டுத் தாக்குதல் மூலம் பொது மக்கள் கொல்லப்பட்டமை.

2) வைத்தியசாலைகளும், பாடசாலைகள் உட்பட பொதுமக்கள் வதிவிடங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தியது.

3) மனிதாபிமான உதவி மறுப்பு.

4) போரில் உயிர் தப்பிப் பிழைத்து உள்ளூரில் இடம் பெயர்ந்தோரும் சந்தேகத்திற்குரிய விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கிய பாதிக்கப்பட்டோர் அனுபவித்த மனித உரிமை மீறல்கள் ஆகியவை சிங்கள அரசாங்கத்தாலும் அதன் சிங்களப் படையாலும் இயக்கப்பெற்று பாதுகாப்பற்ற வன்னிப்பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை என்பதனால், திட்டமிடப்பட்டு இலங்கை அரசினால் செயற்படுத்தப்பட்ட இனப்படுகொலை என்பது தெளிவாக் நிருபனமாகின்றது.

மேலும் நிபுணர் குழுவினரால் கண்டறியப்பட்ட பிரத்தியேகத் தீங்கான இனரீதியான அரசியல், சமூக, பொருளாதாரரத் தவிர்ப்புக் கொள்கைகளால் தமிழர்கள் தொடர்ந்தும் இனப்படுகொலைக் குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதைச் சான்றுபடுத்தும். இந்த அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், மற்றையோரும் ஒட்டுமொத்தத் தமிழர் படுகொலை சம்பந்தமாகக் கூறிவந்ததை ஊர்ஜிதப் படுத்துகின்றது.

போர்க் குற்றங்கள், மனிதாபிமானக் குற்றச் செயல்கள் ஆகியவை பற்றி அறிக்கை தெளிவுபடக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கை வெளியானதுடன் இலங்கை அரசின் தமிழர் படுகொலை சம்பந்தமான கண்துடைப்புப் பிரச்சாரம் தோல்வியுற்றுள்ளது.

இறுதியில் இலங்கையின் தலைவர்கள், அவர்கள் தமிழர்களின் மேல் நடாத்திய கொலைகளுக்குரிய விலையைக் கொடுப்பதுடன் நீதி வழங்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாயும் அமைகிறது.

அந்த அறிக்கையில் கற்பழிப்பு, சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு, ஆட்கடத்தல், பரந்துபட்ட குண்டுத்தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மிரட்டல் முயற்சிகள் ஆகியன கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தமிழ் மக்கள் ஆதியிலிருந்தே அபிப்பிராயப்பட்டது போன்று இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பலத்த விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவு குறைபாடுகளுடையது என்பதுடன் சர்வதேசத் தரத்திற்கு அமைய நம்பகத் தன்மையற்றதும், செயற்திறன் அற்றதுமாகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடாத்திய தமிழ்ப் பொது மக்களின் படுகொலைகள் சம்பந்தமான விவர அறிக்கை ஒன்று ஏற்கனவே ஜ.நா குழுவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் சமர்ப்பிக்கப் பட்டதுடன் நடேசன் மகனுடைய நேர்முக வாக்குமூலத்திற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நடேசன் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவர். அவருடைய மகனது வாக்குமூலம், நடேசனின் இறுதிக் கணங்கள் சம்பந்தமான உண்மையான தகவல்கள் அடங்கியது.

இன்னுமொரு நம்பகரமான சாட்சியம் கேணல் ரமேஸ் மனைவியால் வழங்கப்பட்டது. இலங்கையின் அரச தலைவர்களையும், படைத்தலைவர்களையும் கூண்டிலேற்ற இதுவே முதற்படி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதுடன் இவர்கள் நாளடைவில் போர்க்குற்றங்கள், மனித விரோத மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் முகம் கொடுத்தே ஆக வேண்டுமெனவும் நம்புகின்றது.

இவ்வறிக்கை, இறுதிப்போர் நடைபெற்ற காலத்திலும் போர் முடிவுற்ற அண்மைக் காலத்திலும் ஜ.நா.வினதும், மனித உரிமைகள் குழுவினரதும் மோசமான நடவடிக்கைகளையும் கண்டிக்கத் தவறவில்லை.

இவ்வறிக்கை ஜ.நா.வின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம். நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கருத்துப் பரிமாறலை இவ்வறிக்கை ஆரம்பித்து வைக்கும் என்பது எங்கள் உளமார்ந்த நம்பிக்கை.

தமிழ் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் ஒவ்வாத பிணைப்பால், நல்ல அயலவர்களாக நிரந்தர முரண்பாட்டுப் போருடன் கூடியிருக்கச்செய்வது உசிதமல்ல என்று நாடுகடந்த தமிழீழ அரசங்கம் இங்கே கோடிட்டுக்காட்டுகின்றது," என்று ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

Wednesday, April 20, 2011

மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு



முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.


இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது.


முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது.


தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.


உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.


உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.


முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்; ஐ.நா.விடம் நாடு கடந்த தமிழ்ஈழ அரசு



இலங்கை இறுதிப் போரில் போர் குற்றங்கள் நடந்ததா? என கண்டறிய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் இலங்கை அரசு போர் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளது.


இதையடுத்து நாடு கடந்த தமிழ்ஈழ அரசின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ருத்திரகுமாரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’ஐ.நா.குழு விசாரணை அறிக்கை மூலம் இலங்கை அரசும், ராணுவமும் போர் அத்துமீறல்களில் ஈடுபட்டு இன ஒழிப்பு செயல்களை செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையில் 4 முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இலங்கை ராணுவம் விரிவான குண்டு தாக்குதல் மூலம் பொதுமக்களை கொன்று விட்டு ஆஸ்பத்திரி, பள்ளி கூடங்கள், மற்றும் பொதுமக்கள் வாழ் விடங்களில் குண்டு வீச்சுகளை நடத்தி உள்ளது.

மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது. போரில் உயிர் தப்பி உள்ளூரில் இடம் பெயர்ந்தோம். விடுதலைப்புலிகள் என சந்தேகப்பட்ட வர்களும், மனித உரிமை மீறல்களை சந்தித்து உள்ளனர். இந்த 4 அம்சங்களுக்கும் இலங்கையில் சிங்கள அரசு, ராணுவத்தால் இனப்படு கொலைகள் நடந்து இருப்பதை தெளிவாக நிரூபித்துள்ளது.

மேலும் இனரீதியான அரசியல், சமூக பொருளாதார புறக்கணிப்பு கொள்கை போன்றவற்றின் மூலம் தொடர்ந்து தமி ழர்கள் இனப்படுகொலை குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அறிக்கை சுட்டிகாட்டி உள்ளது. இதுவரை நாடுகடந்த தமிழ்ஈழ அரசும், மற்றவர்களும் கூறி வந்த போர் குற்றக் காட்சிகளை ஐ.நா. குழு அறிக்கை உறுதிபடுத்தி உள்ளது.

இந்த அறிக்கையில் கற்பழிப்பு, சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு ஆள் கடத்தல், பறந்து வட்ட குண்டு தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களை கட்டுப்படுத்துதல், அரசின் மிட்டல் போன்றவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசு மீது ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்கள் சந்தேகப்பட்டார்கள். அவர்கள் சந் தேகப்பட்ட அனைத்தும் நடந்துள்ளது அறிக்கை மூலம் தெரிகிறது.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய படுகொலை சம்பந்தமான அறிக்கையை ஏற்கனவே நாடு கடந்த தமிழ்ஈழ அரசு ஐ.நா. சபைக்கு அனுப்பி இருந்தது. ஐ.நா. குழு அறிக்கையின் படி இலங்கை அரசு மீது சர்வதேச அமைப்பு மூலம் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூனை கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசு தலைவர்களையும், ராணுவ தளபதிகளையும் கூண்டிலேற்ற இதுவே சரியான நேரம் என கருத்துகிறோம். இலங்கையில் நடக்கும் இனவெறி தமிழர்களிடமும், சிங்களர்களிடமும் நிரந்தர முரண்பாட்டை உருவாக்கி விட்டது. எனவே இரு தரப்பினரும் ஒன்றாக இருக்க சாத்தியம் இல்லை என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகிறோம்.

Saturday, April 2, 2011

60,000 தமிழ்ப் பொதுமக்களை கொன்ற குற்றத்திலிருந்து சிறிலங்கா தப்பமுடியாது -பிரதமர் வி.ருத்திரகுமாரன் சண்டே லீடருக்கு செவ்வி



இனமுரண்பாடு சிறிலங்காவில் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நிலைநாட்ட நிறையவே செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

அவற்றுள் சர்வதேச தமிழ் சமூகத்துடன் பரஸ்பர இலாபம் தரக்கூடிய உறவினைக் கட்டியெழுப்புவதும் ஒன்று என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அது அப்படி இருக்க அரசின் இம்முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜனாதிபதி ராஜபக்ச மீதும், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகண மீதும் வழக்குகள் பதியப்பட்டது உட்பட புலம் பெயர்ந்த மக்களின் செயற்பாடுகள் வேறு திசையிலேயே அமைந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் இது பற்றிய தனது பார்வையையும் புலம்பெயர்ந்த மக்களின் ஏனைய கரிசனைகளையும் சண்டே லீடருக்கான மின்னஞ்சலூடான செவ்வியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கே: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய வகுபாகம் என்ன?

ப: சிங்கள தலைவர்களின் ஒதுக்கிவைக்கும் கொள்கைகளினதும், நாட்டில் நிலைபெற்றுப் பரவியுள்ள இனத்துவேசத்தினதும் விளைவாக தமிழர் தேசம் இலங்கைத் தீவின் அரசியற்செயற்பாடுகளில் பங்குபற்றுவது நடைமுறையில் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் தமக்கான சுதந்திரமான நாடொன்றிலேயே சுதந்திரமாகவும் மானத்துடனும் வாழமுடியும் என்பதை குரூரமான அடக்குமுறையும், தொடர்ந்து ஒடுக்கப்படுதலும் தெளிவாக நிரூபித்துள்ளன. 1977ன் பொதுசன தேர்தலில் தமிழ்மக்கள் தமது விருப்பைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசின் ஜனநாயக வழிமுறையிலமைந்த ஒரு செயற்பாட்டின் மூலமே தமிழரின் இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. ஆயுதப்போராட்டம் தீவிரமாக ஆரம்பிப்பதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே தமக்கான தனி நாட்டுக் கோரிக்கையை தமிழ்மக்கள் அமைதியான முறையில் வெளிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பாக நோக்கப்பட வேண்டும். தமிழினம் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்குத் தனியானதும் சுதந்திரமானதுமான இறைமையுள்ள நாடு ஒன்று மட்டுமே வழி வகுக்குமென்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த அரசியற்களம் இல்லாத நிலையிலும், தேசிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கு, நாட்டிலும், சர்வதேசமட்டத்திலும் வழிமுறைகள் எதுவும் இல்லாத நிலையிலும், தமிழ்மக்களின் சாத்வீக போராட்டமானது காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாக உருமாற்றம் பெற்றது. இக்காலத்தில் எழுந்த தமிழீழ நடைமுறை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு இந்த அரசியற்களத்தை வழங்கியிருந்தது. தமிழீழ நடைமுறை அரசாங்கமும் அது வழங்கிய அரசியற்களமும் அழிக்கப்பட்ட பின்னர் நிலமை முன்னர் இருந்த இடத்துக்கு மீளவும் தள்ளப்பட்டிருக்கிறது.

இச் சூழ்நிலையில், தார்மீக அடிப்படையிலும், நடைமுறைத் தேவையாகவும் நாம் ஒரு அரசியற்களத்தை இலங்கைத்தீவுக்கு வெளியில் உருவாக்குவது தேவையானதாக அமைந்தது. இவ்வாறான சூழ்நிலையிலேயே தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கரு உருவாக்கம் பெற்றது. இதற்கான அரசியல் வழிமுறை, தமிழரும் தமிழர் அல்லாதவர்களுமான அறிஞர்கள் பலரைக் கொண்ட ஒரு மதியுரைக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. 12 நாடுகளில் நாடு தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல்கள் நடாத்தப்பட்டன. அரசியலமைப்பு உருவாக்கல் குழு அமைக்கப்பட்டு அரசியலமைப்பு வரையப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு அதன்படி அரசாங்கமும் அமைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலத்தில் தமிழ்மக்களின் போராட்டத்தினை ஜனநாயக இராஜதந்திர வழியில் முன்னெடுப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; செயற்பாடாக அமைந்துள்ளது.

கே: தமிழீழ விடுதலைப்புலிகளை ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத அமைப்பாக மீளவும் பட்டியலிட்டுள்ளது. இதுபற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்து என்ன?


ப: பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பிறகு இவ்வாறாக ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் பட்டியலிட்டிருப்பதை தமிழ்மக்கள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநியாயமாகவே பார்க்கிறார்கள். மேலும், உண்மையான நிலையையும் முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களையும் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. இந்த நிலையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும்படி தமிழ்மக்கள் எம்மை அணுகியுள்ளனர்.

இவ்வாறாக வரைவிலக்கணப்படுத்தியதையும், அதற்கான சட்டவரையறையையும் எதிர்கொண்ட சட்டத்தரணி என்ற அடிப்படையில் நான் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளேன். நீதிமன்றுகள் இவற்றை அரசியல் பிரிவுகளே முடிவெடுக்குமாறு விட்டுவிட்டுள்ளன. அரசியற் காரணங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படும்போது அது சட்டத்தின் உறுதிப்பாட்டைப் பாதிப்பதுடன், அந்த நாட்டு மக்களது சட்டவியல் சுதந்திரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும். இந்த அரசியல் முடிவை மீளாய்வு செய்யுமாறு ஐரோப்பிய யூனியனை நாம் கேட்க வேண்டியது அவசியமாகிறது.

இன்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தம்மைத்தாமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். “எமது கடந்தகால செயற்பாடுகள் 60,000 தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தியதா? எமது செயற்பாடுகள் கடந்தகாலத்தில் தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க உதவியதா? இல்லாவிட்டால், ஏன் உதவவில்லை? ஏதும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவை எவை? எங்கு எப்படி இத் தவறுகள் இடம்பெற்றன?” கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து முன்னோக்கிச் செல்லவேண்டியதன் சிறப்பை மற்றவர்களுக்குப் போதித்து வந்தவர்களே, இன்று தாம் கடந்தகாலப் பார்வையோடு வீணே வாழ்ந்து வருவது மிகவும் கவலைக்குரியது.

தமிழீழ விடுதலைப்புலிகளை மீளவும் பட்டியலில் இட்டிருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கே: நீங்கள் பிரபாகரனின் பின்வந்த ’வாரிசு’ என்று பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப: தமிழர் விடுதலைப்போராட்டத்தில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பங்களிப்பு தனித்துவமானதும் விசாலமானதுமாகும்.

நான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற பொறுப்பினை மக்கள் எனக்குத்தந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் பிரதமராகவும் என்னைத் தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே, சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனிநாட்டினை அடைவதற்காக எனக்கு அளிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கூடாக நான் அனைத்தையும் செய்வேன்.

கே: நீங்கள் தன்னைத் தானே நியமித்துக்கொண்ட பிரதமர் என்று நோர்வேயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசின் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டிவருவதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு ஜனநாயக அமைப்பு. அங்கத்தவர்கள் சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான சர்வதேச தராதரத்தின் படி தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள். தேர்தல் ஆணையாளர்கள் நடுநிலைக்கும் நியாயத்துக்குமான அவர்களின் தராதரத்தில் உயர்வாக மதிக்கப்படுபவர்கள். உதாரணமாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்கத் தேர்தல்களுக்கு ஆணையாளராக அமெரிக்க அரசின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க் பணியாற்றினார். தேர்தல்கள் மிகவும் உற்சாகமாக இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மணித்தியாலக்கணக்காக வரிசைகளில் நின்று வாக்களித்தார்கள். பல தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்களைக் கண்காணித்து, அவை நியாயமாகவும் நீதியாகவும் இடம் பெற்றதாக அறிவித்தனர். உலகெங்கும் உள்ள ஊடகங்கள் இத் தேர்தல்களைப் பற்றி செய்திகளை வெளியிட்டிருந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; அங்கத்தவர்கள் அரசியலமைப்பு ஒன்றினை அங்கீகரித்து பிரதமர் உட்பட பல பதவிகளை வகுத்துள்ளனர். நான் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டேன். இவ்வாறாக ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டவர்களான எம் மத்தியில் கொள்கை வேறுபாடுகள் எதுவுமில்லை. ஒவ்வொருவரும் உண்மையாவும், செயற்றிறனுடனும் அர்ப்பணிப்புடனும் சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழத்தை இராஜதந்திர முறைகளில் வென்றெடுக்க வெளிப்படையாகவும் அமைதியான வழியிலும் வன்முறைகளுக்கு இடமில்லாத வகையிலும் முயற்சி செய்கின்றனர். உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்களின் விருப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அங்கத்தவர்கள், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 60,000 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தமக்குள்ள பாரிய பொறுப்பை அறிந்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட இச் சம்பவங்கள் அரசு சம்பந்தப்பட்ட நடைமுறைகள் பற்றியவை என்பதுடன், இவை ஜனநாயக அமைப்புகளில் இயல்பாகவும் சாதாரணமாகவும் இடம்பெறுபவையே. இவை எந்தவகையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைத் தளரவைக்காது என்பதுடன், சுதந்திர தமிழீழத்துக்கான எமது செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கமாட்டாது என்பதும் எமது திடமான நம்பிக்கையாகும்.

கே: அண்மையில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுகளில் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து செயற்படுகிறது என்றும், இது பல “குற்றச்செயல்களில்” ஈடுபடுகிறது என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: சிறிலங்கா அரசின் குற்றச்செயல்கள், நல்லிணக்கக் குழு என்ற ஏமாற்றுச் செயற்பாடுகள் மற்றைய மோசமான குறைபாடுகளைக் காரணங்காட்டி சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு போன்ற அமைப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களோடு; மீண்டும் மீண்டும் தன்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளால்; கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசு வழமைபோல் உலகின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆயினும், ஆதாரங்கள் மிகவும் பலமாக இருப்பதனால், சிறிலங்கா அரசு இந்தமுறை தனது தந்திரங்களில் வெற்றிபெற மாட்டாது.

ஐ.நா. சபையில் பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் குழு தயாரித்த சிறிலங்காவின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கை இந்த மாதம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும் அத்தோடு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், ஐ.நா. பாதுகாப்புசபைக்கும் அனுப்பப்பட வேண்டும் என்று நாம் கோரவுள்ளோம்.

அண்மையில் லிபியாவுக்கு எதிராக இந்த இரு சபைகளும் எடுத்த நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு என்ன நடக்கப்போகிறது எனபதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. 60,000 தமிழ்ப் பொதுமக்களை கொன்ற குற்றத்திலிருந்து சிறிலங்கா தப்பமுடியாது.

கே: வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவும், சாதாரண நிலையை உருவாக்கவும் புலம்பெயர்ந்த தமிழர்களது ஆதரவினை வரவேற்பதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இவ்வாறான ஆதரவு தமக்குக் கிடைக்கும் என்று சிறிலங்கா அரசு உறுதியாக நம்புவதாகவும் அரச பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல எமது பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அங்கு போதிய சுதந்திரம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைவர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கும் இவ்வாறான ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளனரா?

ப: வடக்கு கிழக்கில் இன்று சாதாரணநிலை இல்லை. இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர். கொலை, சித்திரவதை பாலியல் வல்லுறவு, வன்முறை மூலம் காணாமல் போகச் செய்தல், வன்முறை மூலமான விபச்சாரம் ஆகியவை எங்கும் பரந்துள்ளன. சிறிலங்கா அரசு போரில் வெற்றிபெற்றுவிட்டதாக சொல்லிக்கொள்ளும் அதேவேளை இராணுவ ஆக்கிரமிப்பு நிலைத்திருக்கிறது. மியான்மார் (பர்மா), பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் போல, சிறிலங்காவிலும் இராணுவம் வணிகச் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. நிரந்தரமாக வடக்கு கிழக்கை இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் நோக்கத்தை சிறிலங்கா கொண்டிருப்பதை இவை போதுமான அளவில் உறுதிப்படுத்துகின்றன. இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் அபிவிருத்தி இடம்பெற முடியும் என நாம் நம்பவில்லை. மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் சிறிலங்கா உண்மையில் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்ற ஆக்கிரமிப்பிலேயே இறங்கியுள்ளது.

சிறிலங்கா அரசு அபிவிருத்தி பற்றி பேசுகின்ற அதேவேளை அதன் நடவடிக்கைகள் வேறுவிதமானவையாக இருக்கின்றன. வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு செல்லும் நிதியுதவிகளையும் எல்லா நிறுவனங்களையும் சிறிலங்கா மிகவும் கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் தாம் முதன்மைப்படுத்தும் செயற்திட்டங்களில் பணத்தை செலவிடுவது தடுக்கப்பட்டு, சிறிலங்கா அரசு முதன்மைப்படுத்தும் திட்டங்களுக்கு பணம் திசை திருப்பப்படுவதனால் அது பாதகமாக இருக்கிறது.

சிறிலங்கா அரசில் காணப்படும் மோசமான ஊழலும் இன்னுமொரு பிரச்சினையாக இருக்கிறது. ஊழல்களற்ற நிறுவனங்கள் 10 புள்ளிகள் பெறும் ரான்ஸ்பரன்சி இன்ரநசனலின் அளவுகோலில் சிறிலங்கா 3.2 புள்ளிகளை பெற்று மிகவும் கீழான நிலையில் இருக்கிறது. சிறிலங்காவுக்குக் கிடைக்கும் பெருமளவிலான நிதியுதவி தேவையான மக்களுக்கு போய்ச்சேருவதில்லை. இவற்றிற்கு மேலாக, முடிவுகள் எடுக்கும் உரிமைகள் இல்லாத, அரசியல் சுதந்திரம் அற்ற நிலையில் அபிவிருத்தி இடம்பெற முடியாது என்பதை நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

நோபல்பரிசு பெற்ற அமர்த்தியா சென் அவர்கள் குறிப்பிட்டது போல விடுதலை என்பது அபிவிருத்திக்கான முக்கியமான பாதையாகவும் அதனது முதன்மையான விளைவாகவும் இருக்கின்றது. ஆகவே எந்தவிதமான அர்த்தமுள்ள அபிவிருத்திக்கும், முதலில் இராணுவம் அகற்றப்பட்டு, பங்குபற்றுபவர்கள் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

கே: சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழரின் முயற்சிகள் எவ்வாறு பயனளிக்கும்?

ப: நான் முன்னர் தெரிவித்து போல, புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத் தமிழ் தேசத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக அமைகின்றனர். இலங்கைத் தீவில் வாழும் தமிழரும், வெளியே வாழ்பவர்களும் ஒன்றே. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி அவர்களுக்கு மறுக்கப்படும்வரை, உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் அச்செயற்பாட்டினைப் பொறுப்பெடுக்க வேண்டியிருக்கிறது.

எமது தாயகத்தில் வாழும் மக்களும் அவர்களது அரசியல் தலைவர்களும் தாம் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமை முதல், தமது சமூக, பொருளாதார நலனுக்காகவும், தமது வதிவிடத்துக்கான இயல்பான உரிமைக்காகவும், தமிழர் பிரதேசத்தைப் பாதுகாக்கவும்; அன்றாடம் போராட வேண்டியிருக்கிறது.

எமது தேசத்தின் இருப்புக்காகவும், அதன் அடிப்படைப் பாதுகாப்புக்காகவும் இப் போராட்டங்கள் அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. மேலும், கிடைக்கும் ஒவ்வொரு சிறிய இடைவெளியிலும் இவை வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. சர்வதேச மட்டத்திலான எமது முயற்சிகளின் விளைவாக இலங்கைத் தீவிலும் அரசியற்களம் விரிவடையும் என்பது எமது நம்பிக்கையாகும்.

எமக்கென சுதந்திரமான தனியரசை அமைத்துக்கொள்வதற்கான சிறிலங்கா தீவுக்குள்ளும் வெளியிலுமான எமது போராட்டம் ஒத்தியங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது எமது நம்பிக்கையாகும்.

எழுதியவர் மிரியம் அஸ்வர்
சண்டே லீடர் மார்ச் 20, 2011

Tuesday, March 29, 2011

மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்! ஒருங்கிணைந்து செயற்பட முன்வருமாறு நா.க.தமிழீழ அரசின் பிரதமர் வேண்டுகோள்



முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெரு விருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை வடிவமைப்பதற்காக மதியுரைஞர்குழுவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் செயற்பாட்டுக்குழுக்களும் எனது ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு - 12 நாடுகளில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற ஓராண்டு காலகட்டமாகிய 2010 ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட பிலடெல்பியா நகரில் அமைந்திருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க மண்டபத்தில் கூட்டப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்.

முதலாமது அமர்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசவை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்டது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன. அரசியலமைப்பின் முன்வரைவினை விவாதித்து ஏற்றுக்கொண்டு – அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வதற்காகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் கூடினோம். அரசியலமைப்பினை விவாதித்தோம். ஏற்றுக் கொண்டோம். இவையெல்லாம் வீடியோ பதிவுகளாக நம்மிடம் உள்ளன. அமர்வின் இறுதி நேரத்தில் சில உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகச் சபையில் இருந்து வெளியேறினர். ஜனநாயக முறையின் ஓர் அங்கமாகத் தான் இதனையும் அணுகினோம்.

இதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியில் அமைப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடாத்திச் செல்லும் நிர்வாகபீடமாக அமைச்சரவையை உருவாக்கினோம். இவ் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தமது விருப்பத்தையும் தாம் ஆற்றக்கூடிய பணிகளையும் அறியத் தருமாறு சபையில் இருந்து வெளியேறியோர் உட்பட அனைத்து உறுப்பினர்;களிடமும் கோரினோம். தமது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள் மத்தியில் இருந்து அமைச்சர்களையும் துணையமைச்சர்களையும் தெரிவுசெய்தோம். இளையோர்கள், மூத்தோர்கள், பெண்கள் என அனைவரைம் உள்ளடக்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தொடங்கினோம்.

தமிழீழ விடுதலை என்ற நமது இலக்கினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் பணிமனையினையும் 10 அமைச்சுக்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தை 10 மாதம் கருவில் இருந்து உருவாகிப் பிறந்து தவழத் தொடங்கி இன்று நடை பயிலவென நிமிரத் தொடங்கும் கால கட்டத்திலேதான் நாம் நிற்கிறோம். இக் குழந்தையின் வளர்ச்சியில் படிநிலைகள் உள்ளன. இவ் வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் நாம் கட்டம் கட்டமாகத் தான் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குரிய தொலைநோக்குடன் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனைத் தாங்கள் எல்லோரும் நன்கறிவீர்கள். நேரடித் தேர்தல்கள் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுக்களை உருவாக்கியுள்ள நாம் அமைச்சுகளுக்குரிய கட்டமைப்புக்களைத் தற்பொழுதுதான் உருவாக்கத் தொடங்கியுள்ளோம். முதற்தடைவையாக அமைக்கப்படும் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியும் எம்மிடமே உள்ளது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்பாடுகளையும் முன்னெடுப்பது என்பது இரட்டிப்பு சவால் நிறைந்த பணியாகும். நாம் தற்போது உருவாக்கி வரும் அரசாங்கக் கட்டடைப்புக்கள் எதிர்காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைய வேண்டியவை. தற்போதய சூழலில் நாம் ஒருங்குபட்டு கடினமாக உழைப்பதன் ஊடாகவே வலுவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அடித்தளத்தை இட முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இக் குறுகிய கால இயக்கத்தின்போது தனது செயற்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்சூடானுடன் நட்புறவுப்பாலம் கட்டப்பட்டள்ளது. ஏனைய பல முனைகளிலும் இராஜதந்திர உறவுகள் கட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரம் வரும் போது அவற்றை மக்களுக்கு அறியத் தருவோம். சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது.

இத்தகையதொரு சூழலிலே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பினை ஏற்றுக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தம்மை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருவது நமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும்; தருகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்று உறுதிமொழி எடுக்கும்போதுதான் உறுப்பினர் தகைமையைப் பெறுகின்றனர். இதனால் அனைத்துத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் முறையாக எல்லோரது அங்கீகாரத்துடனும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியலமைப்பின்படி உறுதிமொழியெடுத்து உறுப்பினர்களாகுமாறு நாம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம். எத்தகைய கருத்து முரண்பாடுகளையும்; உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து அணுகுவோம் என்பதுதான் இவ் விடயத்தில் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இக்தகைய சூழலில் பெப்ரவரி மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்காத சிலரதும் தெரிவு செய்யப்படாதவர்கள் சிலரதும் பெயர்களில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. இக் கடிதம் என்னை வந்தடைவதற்கு முன்னரே ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. ஓரிரு இணையத்தள ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது.

இக் கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்ற ரீதியில் எனக்கு எழுதப்படவில்லை. இக் கடிதத்திற்கு நான் பதிலளிக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக இக் கடிதம் ஊடகங்களில் முதலில் வெளிவந்து ஒரு கிழமைக்குப் பின்னர் தான் எனக்குக் கிடைத்தது. இரண்டாவதாக நாடு கடந்த உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படாத சிலரது பெயர்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மூன்றாவதாக இக்கடிதத்;தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எல்லாம் என்னிடம் இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடங்கும் அதிகாரங்கள் மட்டும் எனக்கு உண்டே ஒழிய, நான் சர்வ அதிகாரங்கள் கொண்டவன் அல்ல. நான்காவதாக இக்கடிதத்தில் காணப்பட்ட மிரட்டல் தொனி.

இக்கடிதம் எனக்குப் பிரதமர் என்ற ரீதியில் எழுதப்படாவிடினும், இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பானது என்ற படியினால் இக்கடிதம் பற்றி நான் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டேன். மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் இக்கடிதம் ஒரு நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட கடிதமாக அமையவில்லை என்பதனாலும் நான் அதற்குப் பதில் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவையும் கருதியது.

இச் சிக்கலை மேலும் நீடிக்க விரும்பாத நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்து உறுப்பினர்களாக தகைமைப்;படுத்துமாறு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அழைத்தோம். இக் கால அவகாசம் போதாது எனத் தெரிவிக்கப்பட்டமையால் இது இம்மாதம் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டள்ளது. அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யுப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.

இந் நிலை தோற்றம் பெறுவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற நிலையில் இருந்து நான் விரும்பவில்லை. அவைத்தலைவர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

இவ் வேளையில், உறுதிமொழி எடுக்காதவர்களை உறுதிமொழியை எடுத்து அவையின் உள்ளே வந்து எமது ஒற்றுமையைப் பலப்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தின் இளம் தலைமுறை உறுப்பினர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இம் முயற்சிக்குப் பாராட்டும், இம் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காhகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை. இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன். நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதுவரை தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைத் தெரிவு செய்யவும், நியமனம் செய்யப்படும் பேராளர்களை நியமனம் செய்யவும,; செனட்சபையை நிர்ணயம் செய்வதற்குமான ஏற்பாடுகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம். பிரான்சிலும் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் பின்லாhந்திலும் இருந்து இன்னும் தேர்தல்கள் மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளோம். இத் தெரிவுகள் நடைபெற்ற பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உட்பட உறுப்பினர்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை அரசியலமைப்புக்குட்பட்டு மேற்கொள்ள முடியும். பேச்சுக்களின் மூலம் மாறுபட்ட கருத்துக்களுக்குள் உடன்பாடு காணவும் முடியும். நாம் அரசாங்கத்தினை அமைத்த பின்னர் அரசாங்க நடைமுறைகளில் இருந்து பின்வாங்குவதோ, விலகிச் செயற்படுவதோ அல்லது தடம் பிறள்வதோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சிறப்புக்கோ உதவாது. இந்த விடயத்தில் நாம் தெளிவாகத் தான் இருக்கின்றோம.;

நாம் இப்போது உருவாக்கும் அரசாங்கத்தை அதன் கட்டமைப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்படவர்களே எதிர்காலத்திலும் நடாத்திச் செல்லப் போகின்றனர். இங்கு நான் உட்பட தனி மனிதர்கள் எவரும் அரசாங்கத்தின் நிலையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்கள் தமது முழுமையான விடுதலையை அடைந்து கொள்வதற்கு வழிகோலும் வலுமையமாக நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக எம்முன்னே விரிந்து நிற்கின்றது. அதனைக் கவனத்தில் கொண்டு அவ்வுண்மையை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உரிமையுடன் கோரி நிற்கின்றேன்.

தமிழ் உறவுகளே!

நாம் அதிவேகமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. தமிழ் ஈழத் தேசத்தவராகிய நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோர வேண்டிய காலகட்டம். நமது மக்களுக்கு அநீதியினை இழைத்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு நாம் அணிவகுக்கும் காலகட்டம். நமது மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வேண்டி நாம் போர்க்கொடி தூக்கும் காலகட்டம். தமது குருதியால் நமது தாயகப்ப+மியினை நனைத்து, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து, இக் கனவுகளுடன் தம்விழி மூடிய நமது மாவீர்களின் எண்ணங்களுக்கு நாம் வடிவம் கொடுக்கும் கால கட்டம். தாயக ப+மியில் சிங்கள இனவாதப் ப+தத்தால் பிய்த்தெறியப்பட்ட நமது மக்களின் மற்றும் மாவீரர், போராளிகள் குடும்பங்களின் வாழ்க்கையினை நிமிரச் செய்வதற்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டிய காலகட்டம். நமது தேசத்தின், மக்களின் நலன் சார்ந்து, நமது மக்களுக்கு விசுவாசமாக நாம் செயற்பட வேண்டிய காலகட்டம். இக் காலகட்டத்தில் மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அனைத்தும் அமையட்டும்.

உறுதிமொழி எடுக்காதிருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற ரீதியில் இரு கரம் விரித்து உங்களை அழைக்கின்றேன். வாருங்கள்;. ஒன்றாகப் பயணிப்போம். சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்போம்.

நன்றி.

விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


Saturday, February 19, 2011

எகிப்து புரட்சி : நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து



எகிப்து மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

’’எகிப்திய மக்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம்! இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது பாராட்டுதல்களையும்; வாழ்த்துக்களையும் எகிப்திய மக்களுக்கு தெரிவிக்கின்றது.

எகிப்திய மக்கள் அராஜகத்தை தமது நாட்டிலிருந்து அகற்றி இந்த வரலாற்று நிகழ்வை அடைந்திருப்பதைக் கண்டும், அவர்கள் தங்களுக்கு எதிரான பிரமாண்டமான தடைகளை மேற்கொண்ட விதத்தை பார்த்தும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள்.

எகிப்திய மக்களின் சாதனை உலகெங்கும் எதிரொலித்த வண்ணம் உள்ளது. இவர்களின் வெற்றி உலகெங்கும் உள்ள ஏனைய ஊழல் மிகுந்த தலைவர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

மக்களின் மீது திணிக்கப்பட்ட துயரத்தையும், இருண்டுபோன வாழ்வையும் குறிப்பிட்டு டுனீசியாவின் கவிஞர் அப்துல் குயாசிம் அல் சகாபி (1909-1934) எழுதிய கவிதையை டுனீசியாவிலும் எகிப்திலும் முன்னணியில் நின்று இயங்கியவர்கள் மேற்கோள் காட்டி வருகிறார்கள்.

இந்த வரலாற்று நிகழ்வை நோக்கி சென்ற நாட்களில், விடுதலையை நேசிக்கும் எகிப்திய மக்களுக்கு விடுதலைக்கான குரல்களும், கவிதைகளும் பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் ஊடாக உலகெங்கும் சென்றடைந்தன. அரச மாற்றத்தை ஏற்படுத்துவதில் சமுக தொடர்புசாதனங்களின் சக்தியையும், உயிர்ப்பையும் இந்த புரட்சி வெளிப்படுத்தியுள்ளது.

வன்முறையற்ற, தளராத நடவடிக்கை மூலமாக எகிப்திய மக்கள் சாதித்துக் காட்டியதை உலகம் அவதானித்திருக்கிறது. அண்மைக் காலத்தில் என்றும் இல்லாத அளவில், சுதந்திரமான அரசாங்கங்களின் தோற்றத்துக்கான நம்பிக்கை ஒளி பிரகாசமாக இருக்கிறது.

எகிப்திய மக்களை இந்த நம்பிக்கை ஒளி தொடர்ந்து வழிநடத்தும் அதேவேளை, இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கும் அது பிரகாசமாக ஒளிர்கிறது.

இந்த முக்கியமான தருணத்தில், அனைத்து ஈழத்தமிழருக்கும் எமது விடுதலைக்கும், இறையாண்மைக்குமான, அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டத்தை தீவிரப்படுத்த சமுக தொடர்புசாதனங்கள் உட்பட அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் பயன்படுத்துமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

உண்மையான கருத்து சுதந்திரத்தையும், அர்த்தமுள்ள ஜனநாயகத்தையும் அடையும் பயணத்திலும், சித்திரவதைகளற்ற சுதந்திர நாட்டைப் பெறுவதிலும், எகிப்திய மக்கள் அடைந்துள்ள இந்த முக்கியமான வெற்றிக்காக அவர்களை மீண்டும் ஒரு முறை வாழ்த்தி, அவர்களின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இணைந்து கொள்வது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Sunday, February 6, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளுக்கு எதிரானதா…? – பேராசிரியர் சரஸ்வதி பரபரப்பு பேட்டி



இலங்கைத் தமிழர் பிரச்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ருத்ரகுமாரன். இந்த அரசின் பிரதமரும் அவர்தான். இதில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் குறையாமல் இருக்க, தங்கள் அரசின் இந்தியாவின் எம்.பி.க்களாக நாடு கடந்த தமிழீழ அரசு 5 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. அதில் முதல் எம்.பி.யாக அறிவிக்கப்பட இருப்பவர் பேராசிரியை சரஸ்வதி. இவர் ஏற்கெனவே தமிழீழப் பிரச்னைக்காக, 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படு த்தியவர்.

ஜெயலலிதா நேரடியாக அறிக்கை விட்ட பிறகுதான் அந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டார் சரஸ்வதி. எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதியை நேரில் சந்தித்துப் பேசினோம்.

‘‘ஒரு மிகப் பெரிய இனம் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. ராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டதன் மூலம் தமிழீழத்தின் கோரிக்கையை விட்டுவிடுவார்கள் என்று இலங்கை அரசு நினைத்திருக்கலாம்

ராணுவ ரீதியான போராட்டத்தில் பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் மூலம் தமிழீழத்திற்கான முக்கியத்து வத்தை உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மூலம் கொண்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறோம்.

85 நாடுகளில் தேர்தல் மூலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதால் நேரடியாக என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

அதேபோல், பலரும் இந்த அமைப்பை விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்பு என்று கூறி வருகின்றனர். உலக அளவில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்பு தமிழீழத்திற்குத் தேவை என்று சொன்ன தலைவர் பிரபாகரனின் கருத்திற்கேற்பவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

வருகிற 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் என்பதால் நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்களின் அறிவிப்பை அந்தந்த நாடுகளில் வெளியிட்டு தமிழீழத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

சென்னையிலும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சார்பாக கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் ரீதியான கருத்துகளை தமிழீழத்தின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் பிரசாரமாக செய்ய இருக்கிறோம். தமிழகம்மட்டுமில்லாமல் இந்தியாவில்உள்ள மற்ற மாநிலங்களிலும் இந்தக் கருத்தைப் பரப்ப முடிவு செய்துள்ளோம்.

தமிழீழத்தின் அவசியத்தை இதுவரையில் உலக நாடுகள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் கருத்தை அனைத்து நாடுகளிலும் பரப்பி தமிழீழத்தின் முக்கியத்துவத்தை அந்த நாடுகள் ஏற்கும் வகையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்’’ என்று முடித்துக்கொண்டார் பேராசிரியை சரஸ்வதி.

படம்: ஞானமணி
ப.ரஜினிகாந்த்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி!



இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத்தோற்கடிக்கப்​பட்ட பின்னரும், ‘புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’!

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி​களைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்​படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்.

மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்படும் இவர், ஈழத் தமிழர் படுகொலை உச்சகட்டத்தில் நிகழ்ந்த நேரத்தில், அதைத் தடுக்கக் கோரி 13 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். உயிருக்குப் போராடும் அளவுக்கு உடல்நிலை மோசமாகி, கட்டாய சிகிச்சையில் உயிர் மீண்டவர். இவருடன் பல்வேறு தமிழின அமைப்புகளும் இணைந்து, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தோழமை மையம்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர்.

சரசுவதியைச் சந்தித்துப் பேசினோம்.

”நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?”

”ஈழ விடுதலைக்கான ராணுவப் போராட்டம், தற்காலிகப் பின்னடைவு அடைந்த நிலையில்… தமிழீழ லட்சியத்துக்காக, உலக அளவில் அரசியல் ரீதியில் செயல்பட ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் பல நாடுகளில் பகிரங்கமாகத் தேர்தல் நடத்தி, இதன் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்தந்த நாடுகளின் அரசுகள் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியம் இல்லையே! நாங்களும், தமிழ் ஈழம் அமைவதற்கு ஆதரவாக ஜனநாயகரீதியில் குரல் கொடுப்பதற்காகவே, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான தோழமை மையத்தைத் தொடங்கி உள்ளோம். இதில், பெரியார் தி.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சேவ் தமிழ், மே 17 இயக்கம் உள்பட 20 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் இன்குலாப், டி.எஸ்.எஸ்.மணி போன்ற செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆதரவு சக்திகளுடன் இணைந்து கருத்துப் பரப்பல் செய்வதுதான் எங்களின் வேலை.”

”இந்தியாவில் விடு​தலைப் புலிகளுக்குத் தடை இருக்கும் நிலையில் உங்களின் ஈழ ஆதரவு செயல்பாடுகளுக்குப் பிரச்னை வராதா?”

”ஈழத்தில் இனப் படுகொலையால், உறவுகளை இழந்து நொறுங்கிக்கிடக்கும் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வேளை உணவு கிடைக்காமல், வசிப்பதற்கு வீடு இல்லாமல், ஊனமடைந்து, சிகிச்சை பெற முடியாமல் நம் சகோதரர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஈழத்தை அடைவதற்கான முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குத்தான் கடமை இருக்கிறது.

நாடே இல்லாமல் இருந்த யூதர்கள், பல நாடுகளில் பரவியிருந்தும் தங்களுக்காக இஸ்ரேல் என்ற தனி நாட்டை எப்படி உருவாக்கினார்களோ, அந்த வழியில்தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசும் செயல்படுகிறது. சூடான் நாட்டில் இருந்து அண்மையில் வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்துள்ள தெற்கு சூடான் அரசு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அங்கீகாரம் செய்துள்ளது. இது உலக அளவில் கிடைத்த முதல் வெற்றி. படிப்படியாக ஈழத்துக்கான நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் எங்கள் பணி.

இந்தியாவில் தமிழ் ஈழ அரசை ஆதரித்துப் பேசுவதும் அதற்கான நியாயங்​களை மக்களிடம் எடுத்துச்செல்வதும் முழுக்கவும் ஜனநாயகச் செயல்பாடுதான். இது எந்த வகையிலும் இந்தியாவின் இறையாண்​மைக்கோ, சட்ட திட்டங்களுக்கோ எதிரானது அல்ல. சொல்லப்போனால், அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படையான பேச்சுரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமைப்படி இது சரியானதே.”

”ஈழம் பெறுவது ஒரு புறம்… இலங்கை ராணுவத் தாக்குதலால் கண், கை, கால் இழந்து கதறும் ஈழத் தமிழர்களுக்கு, இப்​போது நாடு கடந்த தமிழ் ஈழ அரசால் எப்படி உதவ முடியும் என நினைக்​கிறீர்கள்?”

”இதைக் கவனத்தில்கொண்டுதான் புலம் பெயர் தமிழ் மக்கள், அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் செயல்​பாடுகள் மூலம் சர்வதேச அளவில் நெருக்கடி தருவதன் மூலம், அடிப்படை மனிதாபிமான உதவிகளைச் செய்ய​வைக்க இலங்கை அரசை நிர்பந்தம் செய்ய முடியும். மேலும், உடனடி​யாக, அகதிகளுக்கான பொரு​ளாதார, கல்வி மேம்பாடு போன்ற உதவி​களைச் செய்யவும் நாடு கடந்த அரசு திட்ட​மிட்டுள்ளது.”

”இலங்கை அரசுடன் சேர்ந்து​விட்டதாகக் கருதப்படும் கே.பி-யின் நீர்டோ அமைப்​பினரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் பிரதிநிதிகளாக இருப்பது முரண்பாடாக இருக்கிறதே?”

”நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உருவாக்கத்தில் கே.பி-யின் பங்கு இருந்தது உண்மைதான். அவர் கைது செய்யப்​​பட்ட பிறகு, அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை என நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசின் பிடிக்குள் போய்விட்ட கே.பி. போன்ற தனி மனிதர்களைப்பற்றிப் பெரிதாகப் பேசவேண்டியது இல்லை. மற்றபடி யாராக இருந்தாலும் செயல்பாட்டைவைத்தே அவர்​களைப்பற்றி தீர்மானிக்க முடியும். என்னைப் பொறுத்த வரை, தமிழீழத்தை நோக்கிய அரசியல் முயற்சிகளை வெற்றி பெறவைப்பதில் கவனம் செலுத்துவதுதான் உணர்வாளர்களின் இப்போதைய கடமையாக இருக்க முடியும் என நினைக்கிறேன்!”

- இரா. தமிழ்க்கனல்

படம்: வி.செந்தில்குமார்

நன்றி: ஜூனியர் விகடன்

Tuesday, January 18, 2011

ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார் :நாடு கடந்த தமிழ் ஈழ அரசு



நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது.

சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்பார்கள். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் "நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தெற்கு சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டிக்கொள்கிறது.

விடுதலை பெற்ற தெற்கு சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு சூடான் போலவே தமிழ் ஈழமும் விரைவில் விடுதலை பெறுமென ஈழத்தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

தெற்கு சூடானில் வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அதிபர் ஒபாமா "நியுயார்க் டைம்ஸ்" பத்திரிகையில், "லட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒபாமாவின் இச்செய்தியை வரவேற்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேபோல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தமிழ் ஈழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய இலங்கைவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது.

சூடானின் அதிபர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 1, 2011

சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை: ருத்திரகுமாரன்



நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய ஆண்டு மலரும் இத்தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


கடந்து சென்ற 2010ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப்புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசகங்களும் தனித்தனியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கும் தாயகத்துக்கும் இடையிலான தொடர்பு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறோம்.


நமது பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. நமது பூமி சிங்கள பௌத்த இனவாதக் குழுவினரால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


தமிழ் ஈழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்களால், அரசியல் தலைமைகளால் பங்குகேற்பதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதைய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.


இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஆவன செய்யும்.

தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்படுவதில் இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புகள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது.

இரண்டாவதாக, சர்வதேசரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது.

புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழ் ஈழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.

இவ்வாறு ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.