Labels

Sunday, August 7, 2011

இலங்கையில் தமிழர் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் கொல்கத்தாவில் 2 நாட்கள் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும். தமிழர் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு தாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment