

இனப்படுகொலை நடத்திய இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை இலங்கை அரசின் பாதுகாப்பு துணை செயலர் கோத்தபய ராஜபக்சே, விமர்சனம் செய்தார்.
இதைக்கண்டித்து பாளையங்கோட்டை அரசு சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவ,மாணவிகள் மாணவர் நம்பிராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, கோத்தபய ராஜபக்சேன் உருவபொம்மையை எரித்தனர்.
மேலும், இந்த பிரச்னையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 23ம் தேதி நெல்லை சட்டக்கல்லூரி முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்றூம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment