Labels

Saturday, November 27, 2010

வெளி நாடுகளில் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்ட காட்சி படங்கள்










கட்டாரில் நடைபெற்ற தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் படங்களை பீரிஸ் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார் அவருக்கு எமது நன்றிகள்
















பிரித்தானியாவின் லண்டன் நகர் அருகில் உள்ள லூசியம் பகுதிக்கு அருகில் உள்ள தமது வேலைத்தள நிறுவனத்தில் கேக் வெட்டி ஆடி பாடி கூடி தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர் .தலைவர் மீது அதித பாசம் கொண்ட வாலிபர்கள் யுவதிகள் .



இதே போல பெக்கம் பகுதி குறைடன் பகுதி ஈஸ்டாம் பகுதிகளில் உள்ள தமிழ் நிறுவங்களின் உரிமையாளர்கள் தொழிலார்கள் இணைந்து தமிழீழ சூரிய தேவன் பிராபகாரனின் இனிய பிறந்த நாளை அக மகிந்து கொண்டாடினர் . இவர்களிற்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாக . நமக்கு அனுப்பி வைக்க பட்ட நிழல் பட காட்சிகளை இங்கே தருகின்றோம்.

வல்வையில் உதித்த வனப்புமிகு ஆதவனுக்கு அகவை 56,

ஈழத்தமிழினத்தை உலகுக்கு காட்டிய சூரியனுக்கு அகவை 56,

தமிழ் மொழியை சர்வதேசத்திற்கு இனங்காட்டிய சூரியத்தேவனுக்கு வயது 56,

ஒடுக்கப்பட்ட தமிழர் இதயத்தில் வீரத்தை பாய்ச்சி வீறு கொள்ளவைத்த வீரத்தலைவனுக்கு அகவை 56,

நீளுலகில் நிமிர்ந்த தமிழினத்தின் தலைவனுக்கு அகவை 56,

பாயும் புலிகளின் தலைவன் பிரபாகரனுக்கு அகவை 56,

தமிழினத்தின் தேசியத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வயது 56,

மானத்தமிழ்தலைவன் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோம்,

தமிழீழம் அமைய உலக நாடுகள் வழிசெய்ய வேண்டும்! – விடுதலைப் புலிகள்




































மாவீரர் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை:

மாவீரர்நாள் அறிக்கை:
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர் புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழி மூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக் குழந்தையின் வழித் தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப் புதல்வர்களையும், வீரப் புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம்.

மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திர நாயகர்கள்.

பெருந்தலைவன் வழிகாட்டுதல்படி…

எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்த பரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும்.
காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது.

அவலங்களின் மத்தியில் வன்னிமண்…

அடங்காப் பற்றாக வணங்காது தலை நிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத் தமிழினத்தின் வரலாற்றுப் பெருமை கூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.
தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலை பேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத் தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.
அதியுச்ச படை வலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்று குவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டு வைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத் தளங்களையும், விமான ஓடு பாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது.


துட்டகாமினியும் ராஜபக்சேவும்:


துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத் துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை.

எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாச மலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச் சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுத வலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச் சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப் பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை.

எமது அன்பார்ந்த மக்களே,
வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றி கொண்டு அமைதியை நிலை நாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர் தொடுத்துள்ளது.

படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது.
அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரை வார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன.

மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்க வைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது.
இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை.

எமது பாசத்துக்குரிய மக்களே,
சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை.

நாம் போர் வெறியர்கள் அல்ல…
நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்த மண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.
ஆயுதத்தின் மீது அலாதிப் பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர் புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம் புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது.
அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.
இருந்த பொழுதும் அமைதி வழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை.

திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நார்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம்.

எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர் நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைவைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம்.

எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக் குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம்.

எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித் தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது.
ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர் நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம் செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள்.

எமது அன்பார்ந்த மக்களே,
போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.
நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நார்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது.

முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலி வேட்டையாடியது.
எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது.

உலக சமூகம் மீது நம்பிக்கை:

இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீதும் நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழி சமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச் சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை.

எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல் கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க் குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தெம்பூட்டுகின்றது.

இந்த வகையில் ஈழத் தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

பிரிவினைவாதிகள் அல்லர்…

சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை.
நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச் சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப் பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம்.
இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறை வைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறையின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.


புலம் பெயர் வாழ் தமிழர்களின் பொறுப்பு:


உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம்.

தாய் மண்ணை விட்டுத் தொலை தூரம் புலம் பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம் பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது.

இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம்.
சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது.

இந்தியாவின் ஆதரவு…

எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

சத்திய இலட்சியத்தை உயிர் மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திர நாயகர்களை நினைவு கூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.
நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து - வித்யாசாகர்



எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை
விடுதலையை -
எம் உணர்வை -
மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே;

வாழ்வின் வெற்றிதனை -
விடுதலை வேட்கையாகக் கொண்டு -
மொழி உணர்வை தமிழ் உணர்வென – என்
கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே;

வீழும் ஒரு தோல்வியில் கூட -
பாடம் உண்டென மீண்டு -
எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து
ஒரு தேசமாய் வளர்த்தவரே;

அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும்
அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும்
உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து – எம்
விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே;

ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து
வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி -
தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால்
எப்படி இருக்குமென்றும் உலகிற்குக் காட்ட உழைத்தவரே;

என் தாய் வயிற்றில் பிறக்காமல் உற்ற
என்னன்பு அண்ணனே,
என்றேனும் ஓர் தினம் எம் தேசம் ஆளப் போகும்
எம் புகழ்மிகு மன்னனே,

உனக்கு செல்வங்கள் பதினாறென்ன -
இருக்கும் எல்லாம் வளமும் நலமும் கிடைத்து
சுதந்திரம் வீசும் மண்ணின் – ஒற்றை தலைவனாய்
எமை காக்கும் உண்மை தலைவனாய்

வாழ்வாங்கு வாழ -
எம் இனத்தின் மொழியின் வழிநின்று
இறையின் அருளுக்கு இறைஞ்சி
மனதார வாழ்த்துகிறோம்!!

- வித்யாசாகர்.

தமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர்



லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.

சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா…?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.

‘ஏதோ அறியாதவன். சில நாட்;கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்…. சங்கராக விடுதலைப் புலியாக மாறினான்.

சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.

சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.

1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.

1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் ஏழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம்.

முதலில்… எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமானத் தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.

இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்… இதை மோப்பம் பிடித்துவிடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகையிடப்படுகிறது….. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக்கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று … விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான்.

தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.

தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

நன்றி
எரிமலை நவம்பர் 2000

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள் – போராளிகள் குடும்ப நலன் பேணல் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை



மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணித்தவர்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது. அந்த மாவீரர் நினைவுகளைப் பேணிய வண்ணம் மாவீரர்களதும் முன்னாள் போராளிகளதும் குடும்பங்களின் நலன் பேணும் நோக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் சார்பில் பின்வரும் திட்டப் பரிந்துரைகளை இப்புனித தினத்தில் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.


முழு விபரம் வருமாறு:

மாவீரர் நினைவுகள் ஏந்திய, மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் செயற்திட்டங்கள்:

மாவீர் குடும்பநலன் அறக்கட்டளை.
மாவீரர் நினைவில்லம்.
இணையவழி மாவீரர் துயிலும் இல்லம்.
தமிழீழ தேச விடுதலைக்காய்த் தம்மினிய உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு இன்றைய மாவீரர் நாளில் முதற்கண் எமது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணித்தவர்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது. அந்த மாவீரர் நினைவுகளைப் பேணிய வண்ணம் மாவீரர்களதும் முன்னாள் போராளிகளதும் குடும்பங்களின் நலன் பேணும் நோக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் சார்பில் பின்வரும் திட்டப் பரிந்துரைகளை இப்புனித தினத்தில் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அறக்கட்டளை

மாவீரர்களதும் முன்னாள் போராளிகளதும் குடும்ப நலன்களைப் பேணும் நோக்குடன் இக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு, கல்வி மேம்பாடு, சமூக மேம்பாடு ஆகியவற்றை நோக்காகக் கொண்டு அறக் கட்டளை ஒன்றினை உருவாக்கி, இவ் அறக்கட்டளையின் ஊடாக மாவீரர்களதும் முன்னாள் போராளிகளதும் குடும்ப நலன்களைப் பேணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இம் முடிவினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினைக் கையேற்றுள்ள மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சு, அதற்கான செயற்பாடுகளை இன்றைய மாவீரர்நாளில் இருந்து ஆரம்பிக்கிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக அறக்கட்டளையின் வடிவம், செயற்பாட்டு முறைகள் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்களை நடாத்தவும், அதன் தொடர்ச்சியாக அறக்கட்டளையினைச் சட்டரீதியாக உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறியத் தரப்படும்.

மாவீரர் நினைவில்லம்

எமது தமிழீழத் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச் சின்னங்களையும் சிதைத்துத்துவம்சம் செய்து மானுடத்திற்கு எதிரான குற்றங்களை சிறிலங்கா அரசு புரிந்திருக்கிறது. நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் சிறிலங்கா அரசு புரிந்திருக்கும் இவ் அநாகரீகச் செயற்பாடுகள் மாவீரர்கள் என்ற தியாகக் குறியீடு தமிழீழ மக்கள் மத்தியில் தமிழீழம் என்ற இலட்சியத்தீயினை சுடரச் செய்து கொண்டிருக்கும் என்ற சிங்களத்தின் அச்சத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படக்கூடியது.

ஈழத் தமிழ் மக்கள் இன்று ஒரு நாடு கடந்த தேசமாக உருவெடுத்திருக்கிறார்கள். எமது இலட்சியத்தீயினை சிறிலங்கா அரசு தனது இராணுவ இரும்புச் சப்பாத்துக்களால் நசுக்கி விடமுடியாது. இதனை குறியீட்டு வடிவில் உணர்த்தும் வகையிலும், எமது மாவீரர்களை நாம் நெஞ்சிலிருத்தி நினைவுகூரவும், அவர்களது வரலாறுகளை நிலையாய்ப் பதிவு செய்யவும், மாவீர்கள் தொடர்பான கல்வி மற்றும் ஆய்வுகளைச் செய்யும் எமது அடுத்த தலைமுறையினருக்கும் அனைத்துலக சமூகத்தினருக்கும் வழிகாட்டுதல்களை வழங்கவும் வழிசமைக்கும் வகையிலும் மாவீரர் நினைவில்லம் ஒன்றினை தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இம் முடிவினை நடமுறைப்படுத்தும் பொறுப்பினையும் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சு கையேற்றுள்ளது. இவ் நினைவில்லம் அமைப்பது தொடர்பான சில ஆரம்பக் கலந்துரையாடல்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இவ் விடயம் தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை நாம் மக்களுக்கு விரைவில் அறியத் தருவோம்.

இணையவழி மாவீரர் துயிலும் இல்லம்

மாவீரர் துயிலும் இல்லங்களை சிறிலங்கா அரசு துவம்சம் செய்துள்ள நிலையில் மாவீரர் நினைவுகளை நமது நெஞ்சங்களில் நிலையாய் இருத்த வழிசெய்யும் வகையில் மாவீரருக்கான துயிலும் இல்லம் ஒன்றினை இணையத்தில் உருவாக்கி, தமிழீழ இலட்சியத்துக்காகத் தமது இனிய உயிர்களை ஈகம் செய்த ஒவ்வொரு மாவீரருக்கும் நாம் சுடர் ஏற்றி வணக்கம் செய்யக்கூடிய ஏற்பாட்டினை ஈழம்வெப் என்ற இணையத்தின் ஊடாக சில தேசப்பற்றாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த 17,500 க்கும் மேற்பட்ட மாவீரர்களது துயிலிடங்கள் இதுவரை இவ் இணையவழி மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவீரர்களது விபரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கான துயிலிடங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம் முயற்சியினை மேற்கொண்டு வருபவர்களுடன் இணைந்து இவ் இணையவழி மாவீரர் துயிலும் இல்லத்தை முழுiமைப்படுத்திப் பராமரிக்கும் பொறுப்பினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துள்ளது. இம் முயற்சியும் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சின் ஊடாக ஒருங்கிணைக்கப்படும். சேகரிக்கப்பட்டுள்ள மாவீரர்களுக்கான துயிலிடங்களை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மாவீரர்களது விபரங்களைச் சேகரிக்கும் பணியும் தொடரர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் www.eelamweb.com என்ற இணையத்தள முகவரிக்கூடாக இணைய மாவீரர் இல்லத்துக்கு வருகை தந்து மாவீரர்களுக்கான சுடர் வணக்கத்தை செலுத்தலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்களை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு இத் திட்டங்களில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களது பங்குபற்றலும், ஆதரவும் இன்றியமையாதவை. இத் திட்டங்களில் தங்களை இணைத்துச் செயற்படுவதற்கு தமிழ் மக்கள் அனைவரையும் முன்வருமாறும், ஆர்வமுள்ள அனைவரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் இத் தருணத்தில் வேண்டிக் கொள்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சகத்துடன் தாங்கள் தொடர்பு கொள்ளுவதற்கான மின்னஞ்சல் முகவரி: wfecm@tgte.org

தமது குருதியாலும் மூச்சாலும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை உரைத்து நின்ற நமது மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து அவர்கள் இலட்சியம் ஈடேற நாம் ஒன்றுபட்டு செயலாற்ற உறுதி கொள்வோம்!

உருத்திரபதி சேகர்
மாவீரர்கள், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

உன்னத மாவீரர் நினைவோடு உறுதியுடன் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்! – தமிழீழ பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன்



இன்று மாவீரர் நாள்!

தமது வீரத்தாலும் ஈகத்தாலும் இலட்சிய உறுதியாலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் களமாடி நம்தேசத்தின் மீது விதையாய்ப் பரவிநிற்கும் நமது மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மதிப்பளித்து வணங்கி நிற்கும் நாள்!


ஈழத் தமிழர் தேசத்தை, இத் தேசத்தின் விடுதலை வேட்கையை, இத் தேச மக்களின் வீரமிகு விடுதலைப்போராட்டத்தை உலகப்பந்தின் அனைத்து மூலைகளிலும் நிலைநிறுத்திச் சென்ற நம் வீரமறவர்களின் நினைவேந்தி, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமக்குள் இன்னும் உறுதியாக நாம் உரமேற்றிக் கொள்ளும் நாள்.

இப் புனித நாளில், உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் நமது மாவீர்களுக்கு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நமது மாவீர்களின் ஈகமே தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உயிர்நாடியாக இருந்து விடுதலைத் தணலை நமது நெஞ்சமெல்லாம் நிறைத்து நிற்கிறது. போராட்டத்தின் அடித்தளமாக இருந்து நம்மை வழிநடாத்தி வருகிறது. இம் மாவீரர்களின் ஈகம் ஒருபோதும் வீண்போகப் போவதில்லை. இவ் ஈகச்சுடரொளி நமது தேசம் விடுதலை அடைந்த செய்தியினை என்றோ ஒருநாள் உலகெங்கிலும் பரவச் செய்து நிற்கும் என்பது திண்ணம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்கப் பிறந்த ஒரு குழந்தை. இக் குழந்தையின் பெற்றோர்கள் நமது மாவீரர்களே. மாவீரர்கள் ஈழத்தமிழ் மண்ணில் வாழ்ந்த வாழ்வின் நினைவுகளையும், அவர்களது வீரச்சாவு நமக்குக் கூறும் செய்திகளின் கனதியினையும் நன்கு புரிந்துகொண்டுதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகப்பரப்பில் தனது ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்கிறது. நாம் முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியும் மாவீர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடினார்களோ அந்த இலட்சியத்தை நோக்கியதாகவே அமையும். மாவீரர் தமது குருதி சிந்திய அந்தத் தமிழீழத் தாயக மண்ணில் நமக்கென்றொரு தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை நமது முன்னோக்கிய பயணம் என்றும் ஓயப்போவதில்லை.

இலங்கைத்தீவில், ஈழத் தமிழர் தாயகப்ப+மியில், தமிழர்களுக்கென்ற ஒரு தனிநாடு உருவாகுவதனைத்தவிர ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய இனச்சிக்கலுக்கு வேறு எந்தத்தீர்வும் அமையப்போவதில்லை. சிறீலங்கா அரசின் கீழ் ஈழத்தமிழ் மக்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வது என்பது என்றுமே சாத்தியமாக முடியாத ஒரு பகற்கனவு. முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த தேசமாக, – சிங்கள இராணுவம், சிங்கள சிவில் நிர்வாகம், சிங்கள தேசத்தின் நலன்பேணும் நீதித்துறை- இவற்றின் துணையுடன் பெரும்பான்மையினரின் அரசியல் முடிவுகளை ஈழத் தமிழ் தேசத்தின் மீதும் ஏனைய மக்கள் மீதும் ஏவிவிடும்- அநீதியும், அதர்மமும் புரியும் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து ஈழத்தமிழ் தேசம் நீதியினை எதிர்பார்க்க முடியாது.

நீதியின் அடிப்படையில் அமையாத வாழ்வு ஒரு அடிமை வாழ்வு. இவ் அடிமை வாழ்வினையே இன்று நமது தாயக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது அரசியல் உணர்வு அடக்குமுறைச்சட்டங்களாலும், இராணுவ அச்சுறுத்தல்களாலும் நசுக்கப் பட்டிருக்கிறது. தங்கள் சொந்த நிலங்களில் குடியமர்ந்து வாழும் உரிமை நமது மக்களுக்குத் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகிறது. நமது தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த தமது சொந்தப்பிள்ளைகளின், சகோதரர்களின், பெற்றோர்களின் நினைவாய் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் அந்த அடிப்படை உரிமைகூட நமது மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்தவகையில் நமது மக்கள் தமக்கான அரசியல் வெளி மட்டுமல்ல ஆன்மீக வெளி;யும் மறுக்கப்பட்ட மக்களாகவே தாயக மண்ணில்; வாழ்ந்து வருகின்றனர்.

நமது மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லங்கள் நினைவுத்தூபிகள், சின்னங்கள் போன்றவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் அனைத்துலக நடைமுறைகளுக்கு முரணாகச் சிதைத்துத் துவம்சம் செய்திருக்கின்றனர். இச்செயல் தமிழ் மக்களுக்கெதிரான சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் ஓர் அங்கம் என நாம் குற்றம் சுமத்துகிறோம். நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்தி சிங்கள அரசின் இக் குற்றத்தையும் ஏனைய இனஅழிப்பு குற்றங்களையும் புரிந்தவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவென உலகின் மனச் சாட்சியின் முன் நாம் ஓங்கிக் குரல் எழுப்புவோம்.

மாவீரர் கனவாகிய சுதந்திரத் தமிழீழத்தை அமைப்பதற்குத் தற்போது நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை அரசியல் இராஜதந்திர வழிகள் தழுவியது. இவ் வழிவகை மூலம் தழிழீழ இலட்சியத்தை வென்றடைதல் சாத்தியமானதுதானா என்ற கேள்வி பலர் மனதில் எழுவதனையும் நாம் அறிவோம். தமிழீழம் தொடர்பான எமது நிலைப்பாடு எமது விருப்பங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. தமிழீழம் என்ற சுதந்திரமும் இறைமையும் கொண்ட ஒரு நாட்டினை நமக்கென நாம் அமைக்காது விட்டால் காலப்போக்கில் இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்ந்தமைக்கான அடையாளங்களே அழிந்து போகக்கூடிய ஆபத்தினை நாம் இன்று எதிர் கொண்டுள்ளோம். ஈழத் தமிழ் தேசத்தை இயலக் கூடிய அளவு விரைவாக விழுங்கி விடுவதற்கு சிங்கள இனவாதப்ப+தம் துடித்துக் கொண்டிருக்கிறது. இப்ப+தத்தின் தொண்டையினைத் திருகி, இம் முயற்சியினை இதுவரைகாலமும் தடுத்து நிறுத்தியவர்கள் நமது மாவீர்களே. தற்போதைய சூழலில் தனது இராணுவ ஆதிக்கநிலையில் இருந்தவாறு ஈழத் தமிழர் தேசத்தினை விழுங்கும்; முயற்சிகளை சிங்களம் பெரிதும் தீவிரப்படுத்தியுள்ளது. இந் நிலையில் தமிழீழம் என்ற தனிநாடு ஈழத் தமிழர் தேசத்தின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் தவிர்க்க முடியாத ஒரு தேவையாகவே அமைகின்றது.

சிங்களத்தின் இன்றைய முயற்சியினைத் தடுத்து நிறுத்தி தமிழீழ இலட்சியம் குறித்து நாம் முன்னேறுவது எவ்வாறு? இதற்கான விய+கங்கள்தான் என்ன? நமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்டத்தைச் சிங்கள தேசம் தனித்து எதிர்கொள்ளவில்லை என்ற உண்மையினை நாம் கவனத்துக்கு எடுத்தாக வேண்டும். சிங்கள தேசம் தனது நலன்களையும் உலக சக்திகளின் நலன்களையும் நேர்கோட்டில் இணைய வைத்து, உலக நாடுகளைத் தன்பக்கம் அரவணைத்துத்தான் தனது ஆக்கிரமிப்புப் போரினை நடாத்தியது. இலங்கைத்தீவு இரண்டாகப்பிரியக்கூடாது என்ற பிராந்திய மற்றும் உலக சக்திகளின் நிலைப்பாடுதான் சிங்களத்தின் வியூகங்களுக்கு வாய்ப்பான சூழலைக் கொடுத்தது. இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். உலக ஒழுங்கும், பிராந்திய மற்றும் உலக சக்திகளின் புவிசார் அரசியலும் ஒரே சமன்பாட்டில் எக்காலமும் இயங்குவதில்லை. இலங்கைத்தீவு இரண்டாகப் பிரியக்கூடாது என்ற இன்றைய நிலைப்பாடு மாறி இலங்கைத்தீவில் இரு நாடுகள் உருவாகுவதனை பிராந்திய மற்றும் உலக சத்திகள் விரும்பும் சூழல் உருவாகக்கூடிய வாய்ப்புக்களுக்கும் வரலாற்றில் இடம் உண்டு. உலகில் இடம்பெறும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து, ஈழதேசத்தின் நலன்களையும் உலக சக்திகளின் நலன்களையும் இணைய வைக்கக்கூடிய ஒரு சூழலை உரிய வரலாற்றுக் கட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் உருவாக்க முடியுமென நாம் திடமாக நம்புகிறோம்.

தமிழீழம் என்ற நமது தாயகம் நோக்கிய பயணத்தில் தமிழீழத் தாயகம் அமைந்திருக்கும் பகுதியின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், தாயக மக்களின் தளராத விடுதலை உணர்வு, தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழரின் பலம், உலக அரங்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஏற்படுத்தக்கூடிய அரசியல் அதிர்வுகள் போன்றவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அமைகின்றன. தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழ தாயகப்பகுதியின்; முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட சிங்களம் இப்பகுதியினை சிங்களமயமாக்கி எம்மிடமிருந்து பறித்துவிட முயல்கிறது. தாயக மக்களின் விடுதலை உணர்வினை இராணுவ அடக்குமுறைகளின் ஊடாகவும் சிங்களத்தின் ஆதிக்கத்தை நிறுவும் மேம்பாட்டுத் திட்டங்களின் ஊடாகவும் நசுக்கி விட முயல்கிறது. தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழரின் பலம் தமிழக மக்களின் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதற்கேற்ற வகையில் புலம் பெயர்ந்த மக்களின் அரசியல் முயற்சிகளை நாம் தெளிவான திசையில் நகர்த்த வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஈழத் தமிழ் மக்களின் போராட்டமாக மட்டுமன்றி, எண்பது மில்லியன் மக்கள் பலத்தைக் கொண்ட உலகத் தமிழ் மக்களின் போராட்டமாக, குறிப்பாக தமிழக மக்களின் பரந்துபட்ட பங்களிப்புடன் முன்னோக்கி நகர்த்துவது அவசியமானதென நாம் கருதுகிறோம். இதற்குக் கட்சி பேதங்கள் கடந்த நிலையில் தமிழக மக்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஈழத் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வும் பாதுகாப்பும் தமிழக மக்களின் கைகளில் பெரிதும் தங்கியுள்ளது என்பதனையும் தமிழக மக்களதும் அரசியல் தலைவர்களதும் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

இன்றைய நிலையிலிருந்து முன்னோக்கி நகர இரு விடயங்களில் கொள்கைவழி நிலைப்பாடு முக்கியமானது எனவும் நாம் கருதுகிறோம்.

உலக நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளும்வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையினை வகுத்தல்.
சிறீலங்காவின் அரசியல் சூழ்ச்சிகட்குள் சிக்கிக் கொள்ளாது, தாயக மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்தும் வகையிலான தாயகம் நோக்கிய பொருளாதார சமூக மேம்பாட்டுக் கொள்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கென வடிவமைத்தல்.
இக் கொள்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டும் தீர்மானிக்கும் வகையிலில்லாமல் உலகெங்கும் வாழும் எண்பது மில்லியன் தமிழ் மக்களின் பங்கு பற்றலுடன், அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். இது குறித்த விபரங்களை மக்களுக்கு விரைவில் அறியத் தருவோம்.

இக் கொள்கைவழி நிலைப்பாட்டு ஏற்பாடுகளை விட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்களும் தத்தமது செயற்திட்டங்களையும் வகுத்து வருகின்றனர். மாவீரர், முன்னாள் போராளிகள் நலன் பேணும் அமைச்சு மாவீரர்நினைவாக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களாக மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அறக்கட்டளை, மாவீரர் நினைவில்லம், இணையவழி மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றை மாவீரர் நாளாகிய இன்று அறிவிக்கின்றது. ஏனைய அமைச்சுக்களும் தமது செயற்திட்டங்களை விரைவில் அறிவிப்பார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உலகப்பரப்பில் எண்பது மில்லியன் உலகத் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு வலுமையமாக உருவாக்குவது தமிழீழம் நோக்கிய நமது பயணத்துக்கு அடிப்படையானது.

தாயகத்தில் சிறீலங்கா அரசின் கொடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம் தாயக மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி, சிறீலங்கா அரசினை அம்;பலப்படுத்தி வருகிறார்கள். தாயகத் தமிழ்த் தலைவர்கள் கோரிநிற்பது போல, ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை சிறீலங்கா அரசு ஒரு போதும் முன்வைக்கப் போவதில்லை. அடக்குமுறை வாழ்வுக்கெதிராக, தமிழர் தாயகத்தினை சிங்களமயப்படுத்துவதற்கெதிராக தாயக மக்களின் எதிர்ப்பு வௌ;வேறு வடிவங்களில் பலம் பெறுவது தவிர்க்கமுடியாத வரலாற்றுப்போக்காக அமையும். தமிழீழம் என்ற தனியரசிற்கான தார்மீக நியாயங்களை தாயகச்சூழல் உலகத்துக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கும்.

எமது வணக்கத்துக்கும் அன்புக்குமுரிய மாவீரர்களின் பெற்றோர்களே, உடன்பிறப்புக்களே, குடும்பத்தினரே! தேசத்தின் விடியலுக்காக வித்தாகிவிட்ட உங்கள் அன்புக்குரியவர்கள் செய்த ஈகம் அளப்பரியது. காலத்தால் மறக்கமுடியாதது. அவர்களின் மறைவு உங்களுக்கு ஏற்படுத்திய பிரிவுத்துயரினை எங்களால் ஈடுசெய்யமுடியாது. எனினும் அவர்களின் இழப்பினால் உங்கள் எதிர்காலம் இருண்டுபோவதனை நாங்கள் அனுமதிக்கமுடியாது. உங்களின் நலனும் பாதுகாப்பான வாழ்வும் செழுமைமிக்க எதிர்காலமும் எங்களது முதன்மையான கடமைகளில் ஒன்றாகவேயுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் பின்புலமாக உள்ள பலலட்சம் புலம்பெயர் தமிழ் மக்களும் உங்களது மகிழ்ச்சிக்காய் மாண்புமிகு வாழ்வுக்காய் பலமாகவும் பின்புலமாகவும் நின்று உழைப்போம் என இன்றைய நாளில் உறுதிகூறுகின்றோம்.

ஊரெல்லாம்கூடித் தேர் இழுப்பது போல் உலகத் தமிழ் மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழத் தேசமென்ற தேரினை இழுப்போமானால் நமது வெற்றியை தடுத்து நிறுத்த எந்தச் சக்திகளாலும் முடியாது. இதற்கான ஆன்மபலத்தை மாவீரர்கள் நமக்கு வழங்கிக் கொண்டிருப்பார்கள். நமது மாவீரர்களின் கனவான தமிழீழத் தாயகத்தினை சுதந்திரநாடாக வெற்றிகொள்ளும் வரை நாம் அயராது உழைப்போம் என இன்றைய நாளில் அந்த உன்னத மாவீரர்களின் நினைவுடன் உறுதியெடுத்துக் கொள்வோமாக!

விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை: சீமான் மாவீரர் தின அறிக்கை



தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள சீமான், மாவீரர் தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


நவம்பர் 27 மாவீரர் நாள். மனித குல வரலாற்றில் மகத்தான தியாகங்களை புரிந்து வியத்தகு சாதனைகளை செய்து வித்தாகிப்போன எமது தமிழ்த்தேச விடுதலைப் போராளிகளை நினைவு கூறும் வீரத்திருநாள். வரலாற்றில் மூத்த தமிழ்க்குடிக்கு காலம் அளித்த கொடையான தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய பாதையில் தம்மை மனமுவந்து ஒப்படைத்துக்கொண்ட அந்த விடுதலை வேங்கைகளை நினைவு கூறும் உன்னத நாள்.


“தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல்
பாதுகாப்பாக வாழ்வதற்கு போராடித்தான்
வாழவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு
தமிழ்த்தேசம் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த தேசிய பணியிலிருந்துஇ வரலாற்றின்
அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை
ஒதுங்கிக்கொள்ளமுடியாது.


என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கமைய களமாடி விதையான 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை போற்றும் புனித நாள்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் பெருவளத்தான் காவிரியில் கல்லனை எழுப்பியபோது தமிழன் பெருமை உலகை சென்றடையவில்லை. எமது முப்பாட்டன் ராசராசனும் அவனது அருமை மகன் ராசேந்திரனும் கடல்கடந்து சென்று பல தேசங்களை வென்றபோதும் தமிழனின் புகழ் உலகத்தாரால் கவனிக்கப்படவில்லை.கற்பனைக்கெட்டாத எமது மாவீரர்களின் ஈகமே “தமிழன் என்றோர் இனமுண்டு என்பதை உலகமறியச் செய்தது.


“உயிர் உன்னதமானது;
விடுதலை உயிரை விட உன்னதமானது.

என்றார் தேசியத்தலைவர். அந்த வகையில் விடுதலைக்காக உயிர்த்துறந்தவர்கள் நமது மாவீரர்கள்.


ஆண்ட பரம்பரை மாண்டு போவதா?
ஆளப்பிறந்தவன் அடிமையாவதா?
வீரத் தமிழினம் வீழ்ந்து போவதா?
வீனர்க் கூட்டம் நம்மை ஆள்வதா?


என்று நம்மில் எழும் இவ்வினாக்களுக்கு விடையாகத்தான் நம் மாவீரர்கள் உயிரைக் கொடையாக கொடுத்து போராடினார்கள்.


நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே
அவர்கள் சுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டார்கள்.


அன்னைத் தமிழீழம் அன்னிய சிங்களனிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நமது வீரவேங்கைகள் உயிர் நீத்தார்கள்.


“அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானது.


என்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்பவே அவர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்.


ஈழ விடுதலை என்பது ஈழத்தில் வாழ்கிற - வாழ்ந்த - புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கான விடுதலை மட்டுமல்ல - அது உலகெங்கும் பரவி வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களுக்குமான தேச விடுதலை. ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை.


தமிழீழ விடுதலை என்பது தலைவர் பிரபாகரனின் சொந்த இலட்சியமோ தனிப்பட்ட விருப்பமோ அல்ல - ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இன மக்களின் ஆன்ம விருப்பத்தின் வெளிப்பாடே தனித்தமிழீழ அரசு. தமிழ்த் தேசிய மக்களின் அந்த ஆன்ம விருப்பத்தை நிறைவேற்றவே நமது தேசியத் தலைவர் “விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடினார்.


எமது மக்களின் இந்த விருப்பத்தினை புரிந்துகொள்ளாத சர்வதேச சமூகம் சிங்கள பேரினவாத அரசின் பொய்யான பரப்புரையினை நம்பி நமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென சித்தரித்து சிங்கள பேரினவாத அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது.


தற்பொழுது தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுத் தேக்கமொன்றில் வந்து நிற்கிறது. இனத்தின் விடியலுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் யுத்தகளத்தில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும். இந்த பின்னடைவுக்கான புறக்காரணங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானவையாக சிங்கள அரசின் இனவாதத்திற்கு இந்திய சீன ஏகாதிபத்தியங்களின் உதவி மேற்கத்திய நாடுகளின் ஆதரவு. ஐ.நா.சபையின் பொறுப்பற்ற தன்மை ஆகியவையாகும். அதிலும் குறிப்பாக விடுதலைப் போராட்டம் இன்று வந்தடைந்திருக்கும் தேக்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் பின்னணியில் இருந்து பெருமளவு இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன.


நார்வே அரசை நடுநிலையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே பெருமளவிலான நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடைவிதித்து. புலிகளின் பலத்தைப் பெருமளவு குறைத்தன. ஐ.நா.சபையோ இலட்சக்கணக்காகன மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் பொழிந்து தாக்கப்பட்டபோது அகதிகளாய் தமது வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்பட்;ட போது அங்கங்கள் சிதறி ஊனமடைந்து துடித்தபோது பசியில் சிறுகச் சிறுகச் செத்து மடிந்தபோது வெறுமென அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாமல் ‘போர் முடிந்தது.’ என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தபோது மட்டும் பொது வெளிக்கு வருகிறது.


தொடர்ச்சியான 30 வருடப் போரின் இறுதியில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னர் பல்லாயிரம் போராளிகளின் உயிரிழப்புக்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு போரின் கொடுமைகளைக் கண்ணால் பார்த்து மனம் பேதலித்து சில இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியிருக்கும் ஒரு மண்ணில் அவர்களுக்கான நியாயம் எப்படி யாரால் வழங்கப்படப் போகிறது?


“எமது தேச விடுதலை என்பது எதிரியால்
வழங்கப்படும் சலுகையல்ல. அது ரத்தம்
சிந்தி உயிர் விலை கொடுத்து போராடிப்
பெறவேண்டிய புனித உரிமை.


என்ற நமது தேசியத்தலைவர் கூற்றுக்கமைய எண்ணற்ற உயிர் விலையினை கொடுத்தே உலகின் மனசாட்சியை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் நிலை இன்று எழுந்துள்ளது.


உலகம் முழுவதும் பரவலாக வாழும் தமிழர்கள் இன்று வீதிக்கு வந்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள.; இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையாக அறியப்பட்டு வந்த தமிழர்களின் பிரச்சனை இன்று சர்வதேசம் முழுவதும் பேசப்படும் பெருளாக மாறி இருக்கிறது. போராட்டங்கள் வேறு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவிலும் இது நமக்கு சாதகமான விசயமாகும். வன்னிக்காட்டில் நடந்த யுத்தம் இன்று உலகின் வீதிகளில் எதிரொலிக்கிறது.


“போராட்ட வடிவங்கள் மாறலாம்;
போராட்ட இலட்சியங்கள் மாறுவதில்லை.

என்ற நமது தேசியத்தலைவர் கூற்றுக்கமையவும்.

“யுத்தம் என்பது இரத்தம் சிந்துகிற அரசியல்;
அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்.


என்ற புரட்சியாளர் மாவோ சொன்னதைப் போலவும் நாம் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தத்திற்க்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது.


ஒன்றரை கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான்.


இந்த நிலையிலிருந்து விடுதலையடையாமல் இனத்தின் விடுதலை சாத்தியமில்லை. நாம் தமிழர் என்ற உணர்வை பெற்று பேரினமாக ஒன்றிணையாத வரை நம் விடுதலையை வென்றெடுக்க வாய்ப்பில்லை.


“தமிழர் ஒன்றானால் வாழ்வு பொன்னாகும். இல்லையேல் மண்ணாகும்.


என்பதனை இந்த நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியவன் நான் பெரியவன் என்ற வேறுபாட்டை களைந்து இனம் பெரிதுஇ இனத்தின் மானம் பெரிது என்ற எண்ணம் வளர வேண்டும்.


இன்றைக்கு இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு - போர்க் குற்றம் புரிந்த நாடு என்ற உண்மையை பல்வேறு நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவால் ஐ.நா.அவை இலங்கை போர்க்குற்றம் குறித்த ஒரு விசாரணை குழுவை நியமித்திருக்கிறது. நாம் நம்மை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ராசபட்சேவுக்கு தண்டணை வாங்கித்தர வேண்டும் என்ற உறுதி ஏற்கவேண்டும். இதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான சர்வதேச ஆதரவு சக்திகளை திரட்ட வேண்டும். எம் தமிழின மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு இந்தியாவில் துணை நின்ற சக்திகளை விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த அணிவகுப்போம் என்ற சபதம் ஏற்க வேண்டும்.


மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க போராடவேண்டும். புலிகள் மீதான தடை என்பது தமிழ்த் தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு அவமானமாகும். இந்த தடையால் வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகிற எமது மக்களை ஏதிலிகளாக ஏற்க மறுக்கிற ஒரு நிலை நீடிக்கிறது. எனவே தடையை நீக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.


உன்னதமான இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த நம் மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய நாளில் நாம் ஏற்றுகிற ஈகச்சுடர் மீது சத்தியம் செய்து உறுதி ஏற்க வேண்டும். இதுவே அளப்பரிய அர்ப்பணிப்பு செய்த அந்த தியாக சீலர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக அமையும்.


நமது தேசியத் தலைவர் கூறியது போல

“சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால்
சாதாரணமானவனும் சரித்திரம் படைக்க முடியும்.

அவ்வாறு சாகத்துணிந்து சரித்திரமானவர்கள் நம் மாவீரர்கள்.

எங்கள் மாவீரர்களே!
உங்கள் இரத்தத்தால் நமது தமிழினத்தின் விடுதலை
வரலாறு மகத்துவம் பெறுகிறது.
உங்கள் இலட்சிய நெருப்பில் தமிழினப் போராட்டம்
புனிதம் பெறுகிறது.
அளப்பரிய உங்கள் தியாகத்தால் தமிழ்த்தேசியம்
உருவாக்கம் பெறுகிறது
உங்கள் நினைவுகளை போற்றுவதால் எங்கள்
உறுதி மேலும் மேலும் உறுதியாகிறது.
தாயகக் கனவுடன்
சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே!
எம் விடுதலைக்கான
வீர விதைகளாக
விழுந்த மாவீரர்களே!


எந்த இலட்சியத்தை எம்மிடம் கையளித்து சென்றீர்களோ அதனை நிறைவேற்றும் வரை உறுதியாக நின்று இறுதிவரை போராடுவோம் என்ற உறுதியோடு எங்களின் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் .


வீரவணக்கம்! வீரவணக்கம்!!
எங்கள் மாவீரர்களே வீரவணக்கம்!
நீங்கள் சிந்திய குருதி
ஈழம் மீட்பது உறுதி!


இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

௨0௧0 மாவீரர் தினம் சிறப்பு பாடல்

A song dedicated to our TAMIL HEROES for Maaveerar Dhinam on 27.11.2010 by " Iruppai Thamila Nerppai " Orkut Community and http://veerathamilan.blogspot.com

Friday, November 26, 2010

கருணை மனுக்களுக்கு மத்தியில் கசங்கியே கிடக்கின்றன நான்கு உயிர்கள்! - ஜூனியர் விகடன்



சிறை வாழ்க்கை பற்றி சினிமாவில் பார்த்து இருக்கிறோம். சிறை பற்றிய
கற்பனைகள் நிறைய நமக்கு உண்டு. ஆனால், உண்மையான சிறை வாழ்க்கைக்கும் நம் கற்பனைக்கும் வெகுதூரம்! சுற்றி வளைக்கப்பட்ட மதில் சுவர்களின் உள்ளே துளித்துளியாகக் கழியும் வாழ்க்கை, பெரிய ரணம். வேலூர் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்கு உள்ளாகக் கிட்டத்தட்ட இருபது வருடங்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர், ராஜீவ் கொலை வழக்கின் கைதிகள்.

சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி என அனைவரும் சிறைக்குச் சென்று 19 வருடங்கள் முடிந்துவிட்டன. இதில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகள். பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரைத் தவிர, மற்றவர்கள் ஈழத் தமிழர்கள். இன்று ராஜீவ் காந்தியும் இல்லை, விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. இவர்களுக்கு விடுதலையும் இல்லை!



கடந்த வாரம் சென்னை வழக்கறிஞர்கள் சிலர் வேலூர் சிறைக்குச் சென்று... நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் நீங்கலாக இதர ராஜீவ் கொலை வழக்கின் கைதிகளை சந்தித்துத் திரும்பி உள்ளனர். ''ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரே ஒரு முறையாவது ஊர், உலகத்தை, உறவுகளைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தைக் கண்டோம்...'' என்று தாங்கள் வேலூரில் சந்தித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

'சிறைக்குள் நுழைந்ததுமே வலது புறம் இருக்கும் ஒரு சிறிய அறையில்தான் அவர்களை சந்தித்தோம். ஒரு சிறை அதிகாரி அருகில் அமர்ந்து இருந்தார். என்றாலும், அவர் எங்களை அத்தனை நுணுக்கமாகக் கண்காணித்தார் என்று சொல்ல முடியாது. கிட்டத் தட்ட 11 வருடங்களாக அவர்கள் வேலூர் சிறையில் இருக்கிறார்கள். இதனால் கொஞ்சம் பழக்கமும், சுதந் திரமும் கிடைத்து இருக்கிறது. வெள்ளைச் சட்டையும், லுங்கியும் அணிந்துகொண்டு முதலில் முருகன் வந்தார். முடியில்லாத மொட் டைத் தலையுடன் பல வருடங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் பார்த்த அதே முகம். இப்போது நாற்பதை ஒட்டிய வயதுக்கான முதிர்ச்சி மட்டும் சேர்ந்திருக்கிறது. 'நளினியை, பிரியங்கா வந்து சந்திச்சதா சொன்னாங்க. அப்புறம் நளினி போனில் பேசுனதா, புழல் சிறைக்கு மாத்தினாங்க. எல்லாத்தையும் பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். மகள் அரித்ராவைக்கூட நாலு வருஷத்துக்கு முன்னாடி பார்த்ததுதான். யாருடைய தொடர்பும் இல்லை. படிப்பு, ஓவியம், தையல் என ஜெயிலுக்குள் என்ன இருக்கோ, அதை எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன். பி.பி.ஏ. முடிச்சு இப்போ எம்.சி.ஏ. சேர்ந்து இருக்கேன்...' என்று படபடவெனப் பேசிய முருகன், தான் வரைந்த ஓவியம் ஒன்றை ஆர்வத்துடன் காட்டினார். புறா ஒன்று, சிறைக் கம்பிகளை திறந்துகொண்டு சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கும் ஓவியம் அது. கீழே அவரது சொந்தப் பெயரான வெ.சிறிகரன் என்பதைக் கையெழுத்திட்டு, 12,840 என்ற அவரது கைதி எண் எழுதப்பட்டு இருந்தது. முருகன் உட்பட யாரும் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. எப்படி யேனும் தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என்றே எல்லோரும் நம்பி இருக் கின்றனர்.



ராபர்ட் பயஸ் பற்றி செய்திகளில்கூட அதிகம் வருவது இல்லை. யாரிடமாவது பேசுவதற்கு அவரது கண்கள் அலைபாய்கின்றன. 'யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற பகுதிதான் என் சொந்த ஊர். 20 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்பியபோது என் மகன் தமிழ்கோ, மூன்று மாதக் குழந்தை. அவனின் சிரித்த முகம் பார்த்து, மனைவி பிரேமாவின் ஆறுதல் கண்ணீருடன் தமிழகத்துக்கு அகதியாக வந்தேன். இருபது வருடங்கள் ஆகிவிட்டது. இடைப்பட்ட நாட்களில் என் உறவினர்கள் யாருடைய தொடர்பும் இல்லை. நான் கைது செய்யப்பட்டவுடன் இலங்கையில் இருந்த என் மனைவி பிரேமாவையும் ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டது. பிறகு விடுவிக்கப்பட்டு வெளியில் இருந்தவள், இறுதிக்கட்டப் போரின்போது முள்ளி வாய்க்கால் பகுதியில்தான் இருந்திருக்கிறாள். பிறகு மாணிக் ஃபார்ம் முகாமில் இருந்தவள், வெளியில் வந்து சமீபத்தில் மகனுடன் என்னைப் பார்க்க வந்தாள். மூன்று மாதக் குழந்தையாகப் பார்த்த மகன் தமிழ்கோ இன்று 20 வயது இளைஞனாக என் முன்னால் நின்றபோது, எனக்கு கைகள் நடுங்கின. மூன்றுபேரும் மாறி மாறி அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்? 'நேரமாச்சு, கிளம்புங்க' என்ற சிறை அதிகாரியின் குரலுக்குப் பிறகு அவர்கள் கிளம்பி இலங்கை போய்விட்டனர். நான் கம்பிக்குள் காத்திருக்கிறேன்...' என்ற ராபர்ட் பயஸின் விடுதலை கோரும் மனு, சமீபத்தில் அறிவுரை கழகத்தில் நிராகரிக்கப்பட்டது. அதற்கு சொன்ன காரணங்களில் ஒன்று, 'ராபர்ட் பயஸின் வழக்கறிஞர் வீடு சென்னை காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவன் அருகே இருக்கிறது. இவரை வெளியே விட்டால்... அந்தக் கட்சிக்கும் கட்டடத்துக்கும் ஆபத்து!' என்பது.

சிறைக்குள் தூர்தர்ஷன் சேனல் மட்டும் ஒளிபரப்பாகும். அதுபோக, அவ்வப்போது டி.வி.டி. வாங்கிவந்து ஏதேனும் ஒரு படம் போடுவதுண்டாம். நாங்கள் சென்றதற்கு முந்தைய வாரம் தனுஷ் நடித்த 'தேவதையைக் கண்டேன்' படம் திரையிட்டுள்ளனர். 'இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்த சமயத்தில் என்ன செய்தீர்கள்? உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?' என்று கேட்டபோது எல்லோரும் முகம் இறுகிப் போனார்கள். 'அங்கு மிக மோசமாக ஏதோ நடக்கிறது என்பது மட்டுமே எங்களுக்குத் தெரிந்தது. பத்திரிகைகள் மூலமே எல்லாவற்றையும் தெரிந்துகொண்டோம். ஒவ்வொரு நாளும் பதைபதைப்பாக இருக்கும். கடைசியில் எல்லாம் முடிந்து விட்டதாக அறிவித்த நாளன்று நம்ப முடியாமல் திகைத்துப்போனோம். ஏமாற்றமும், அவநம்பிக்கையுமாக இருந்தது...' என்று வருத்தத்துடன் பேசினார்கள்.

இத்தனை வருட சிறைவாழ்வும், இப்படியான ஏமாற்றங்களும் ஒவ்வொருவரையும் ஒரு மாதிரி மாற்றியிருக்கிறது. சாந்தன் ஓர் உதாரணம். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளைத் தாடியில் ஒரு முனிவரைப் போன்று இருந்த சாந்தன் கைகளில் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறார். 'சிறைக் கைதிகளுக்காக உள்ளளி என்ற பெயரில் பத்திரிகை ஒன்று நடத்தப்படுகிறது. அதில் நான் நிறைய எழுதுகிறேன்' என்று சொல்லி அந்த இதழைக் காட்டினார். 'கனவொன்று நனவான வேளை', 'சிறையறை சின்ன ஜன்னல்', '13,905' என்ற தலைப்புகளில் மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் சாந்தன். இதில் இரண்டு நூல்கள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. 'சிறைக் கைதிகள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு உள்ளே சின்னதாக ஒரு பாபா கோயில் கட்டி இருக்கிறோம். நான்தான் அதை கவனித்துக்கொள்கிறேன்' என்று அந்த பாபா கோயிலின் புகைப்படத்தை எல்லோரிடமும் ஆர்வத்துடன் காட்டினார். இப்படி சில ஏக்கர் பரப் பளவுக்குள் தங்கள் வாழ்க்கையை முடிந்த வரை வேறு மாதிரி மாற்றிக்கொள்ள முயல்கின்றனர் ஒவ்வொருவரும்.

வெள்ளைச் சட்டையும், வெள்ளை டிரவுசருமாகக் கைதிகளுக்கான உடையில் இருந்த பேரறிவாளன் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. தூய தமிழ்ச் சொற்களில் கனிவுடன் பேசுகிறார். '19 ஆண்டுகள் 10 திங்களுமாக என் வயது இருக்கும்போது சிறைக்குள் வந்தேன். உள்ளே வந்து 19 ஆண்டுகள் 6 திங்கள் முடிந்துவிட்டது. நான் வெளியில் இருந்ததும் உள்ளே இருப்பதும் சரிபாதி காலம் ஆகிவிட்டது. எப்படியாவது வெளி உலகத்தைப் பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய ஒரே ஆசை. தொலைக்காட்சியும் சினிமாவும் எனக்கு வெளியுலகம் காட்டுகின்றன. என்னைப் பெத்த தாய் அற்புதம்தான் என் ஒரே உலகம். அவர் என்னைப் பார்க்க வரும்போது விவரிக்கிற செய்திகளுக்கு, என் கற்பனையில் உருவம் கொடுத்து வைத்திருக்கிறேன். சிறை வாழ்க்கை மனதையும், உடம்பையும் பழக்கி விட்டது. ஆனாலும் இங்கே இருக்க முடியவில்லை. இப்போது என்னுடைய கோரிக்கை ஒன்றுதான்... நான் சாகத் தயாராக இருக்கிறேன். உடனே என்னைத் தூக்கில் போடுங்கள். இல்லையென்றால் விடுதலை செய்யுங்கள். எதையும் செய்யாமல் எத்தனை நாள் காத்திருப்பது?' என்று பேரறிவாளன் கேட்டபோது அவரது உதடுகள் என்னவோ புன்னகையுடன்தான் இருந்தன. எல்லோருக்கும் நம்பிக்கையும், ஆறுதலும் சொல்லிக் கிளம்பினோம். வழக்கறிஞர்களான எங்களால்கூட வேறு என்னதான் செய்ய முடியும்?'' என்று நெகிழ்ந்துருகிய குரலில் பேசி நிறுத்தினார்கள் அந்த வழக்கறிஞர்கள்.

கருணை மனுக்களுக்கு மத்தியில் கசங்கியே கிடக்கின்றன நான்கு உயிர்கள்!

பாரதிதம்பி
-

நன்றி : ஜூனியர் விகடன்

அண்ணைக்கு அன்னை - அறிவுமதி



அழுவதற்கும் முடியாமல்
அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்

- அறிவுமதி.

நன்றி : விகடன்.

மாவீரர் நாள் கார்த்திகை 27 எம் தியாக தீபங்களுக்கான தினம் — கலாநிதி ராம் சிவலிஙகம், பிரதிப் பிரதமர் – நாடு கடந்த தமிழீழ அரசு



மாவீரர் நாள், தன் உயிரை எம் இனத்திற்ககுத் தருவதை ஓர் வரமாக எண்ணி செயற்பட்ட அந்த தியாக தீபங்களை நாம் நினைவுகூறும் நாள். இந்தக் கார்த்திகை மாதம் 27ம் திகதி எமது வரலாற்றுப் பயணத்தில் பல திருப்பு முனைகளிற்குக் காரணமான எம் அன்புத் தெய்வங்களை நாம் தரிசிக்கும் தினம்.

காலத்தின் தேவையை உணர்ந்து தேசியத்தலைவரின் கைவண்ணத்தில் உருவான வீரத்தின் சின்னங்களை நினைவுகூறும் காலம். ஏழு ஜென்மம் எடுத்தாலும் பெறமுடியாத் புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் பெற்ற எம் காவிய நாயகர்களைக் கௌரவிக்கும் வாரம், துதி பாடும் வேளை.

அரச பயங்கரவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை உலகுக்கு உணர்த்திய உன்னதப் பிறப்புகள். மனித ரூபத்தில் தோண்றி மாயங்கள் பல படைத்த மந்திரவாதிகள். இதன் விளைவுதானே “ஆயுதம் தாங்கிப் போரட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உரிமையுண்டு” என்ற சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அப்பாவித் தமிழகளை அந்தக் கொடியவர்கள் தீயிட்டுக் கொளுத்தியதைப் பார்த்தபின்பும், மாதர்கள் மார்பினில் அந்தக் காடையர்கள் மைகொண்டெழுதிய காட்சியைக் கண்டபின்பும் , கோவில் குருக்களை அந்தக் கோழையர்கள் அழித்தபின்பும் எப்படி எம்மால் பொறுமையுடன் வாழமுடியும். அப்படி வாழவது ஒரு வாழ்வா? எனக்கூறி ஆயுதம் ஏந்திவர்கள்தானே இந்தக் கருணை நதியில் குளித்த எம் காவலர்கள். கார்த்திகைப் பூவிற்கு உரித்தானவர்கள். இன்று நாம் பூஜிக்கும் எம் இதய தெய்வங்கள்.

தாய்மொழி பெரிதா, தாய்நாடு பெரிதா? என்ற வினாவுக்கு விடைதந்த வித்துவான்கள். வீர வம்சத்தின் வித்துக்கள். எம் தேவையை அறிந்து எம்மைத் தேடிவந்த தேவர்கள். எம் தானைத் தலைவர் தத்தெடுத தம்பி, தங்கையர்கள்.

எமது சுமையை தமது தோழில் சுமந்த சரித்திர நாயகர்களை, சாவிலும் வாழும் சந்ததி நாம் எனற பெருமையை எமக்குத் தந்த இந்த ஞானிகளை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் தரிசிக்கவேண்டும். இது எம் கடமை, வரலாற்றுக் கடன். இதை, நாமும் எமது வருங்காலச் சந்ததியினரும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

எம் அனபான உறவுகளே! பாசத்துக்கு வரவிலக்கணம் வைத்தவர்களே!
உங்கள் வீட்டில் எம் தியாக தீபங்களுக்கு தீபமேற்றி வழிபடுங்கள், சமயத் தலங்களுக்குச் சென்று அவர்களுக்காகத் தியானியுங்கள், மாவீரர் தினம் நடக்கும் இடங்க்ளுக்குச் சென்று உங்கள் நன்றிக்கடனைச் செலுத்துங்கள்.

அதே வேளை, இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை விரைவில் அமைப்போம் என மாவீரர்களை மதிக்கும் அத்தனை உறவுகளும் இன்றே சபதம் எடுத்து செயற்பட வேண்டும். ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் நாம் ஒருங்கிணைந்து எமது மூன்றாம்கட்டப் போரான அரசியல்ப் போரை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும்.

உண்மையுடனும், உறுதியுடனும் உழைத்து கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழரும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும். இதுகண்டு, மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர் மனம் சாந்தியடைய வேண்டும். இதுவே என் ஆசை, அவா. நன்றி.

Dr. Ram Sivalingham
email: r.sivalingam@tgte.org

தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிலை கொள்ளும் – காசி ஆனந்தன்



இனிய தமிழீழ நெஞ்சங்களே கனடாவில் மொன்றியலில் தமிழீழ மாவீரர்களின் பெற்றோர்களை போற்றும் மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்குத் தெரியும் தமிழீழ விடுதலைக் களத்தின் தலை நிமிர்ந்த மாவீரர்கள் உலக விடுதலையாளர்களின் வரலாற்றிலேயே தன்னிகர் அற்றவர்கள் கழுத்தில் நஞ்சுகட்டிய ஒரே ஒரு விடுதலைப் படையாய் களத்தில் நின்று உலக வரலாறு படைத்தவர்கள் தமிழீழ நிலத்தில் விளைந்த புலிகள் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அறியாராய் நெஞ்சுரம் கொண்டு விஞ்சமர் கண்ட விடுதலையாளர்கள் ஈடினை அற்ற அந்த விடுதலையாளர்களை போற்றும் இவ் வேளையில் அவர்களை ஈன்று தமிழீழ மண்ணுக்கு கொடை தந்த பெற்றோர்களை நினைந்து மெய் சிலிர்ப்போம். அவர்களை வாழ்த்துவோம் அவர்களை வணங்குவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மாவீரரை ஈன்ற தாய் இருக்கிறாளே அவள் யார்? நெருப்பை சுமந்த கருப்பை. நஞ்சை விடுதலைக் களத்தில் உண்ட பிள்ளைக்கு பாலை ஊட்டி வளர்த்த தாயின் நெஞ்சை எப்படி மறப்போம். கோழையை மகனாக மகளாகப் பெறாமல் ஒரு வீரனை வீராங்கனையை தமிழீழ மண்ணுக்கு கொடையாக்கினானே தந்தை அவன் தோழை வாழ்த்த இவ்வேலை பயன் படட்டும் வாழ்த்துவோம் மாவீரர் பெற்றோரை மனமார வாழ்த்துவோம் தன்னிகர் அற்ற அந்த தாய் தந்தையர் எப்படியெல்லாம் தங்கள் பிள்ளைகளை மண் நிமிரட்டும் என்று கொடையாக்கினார்கள்.

ஆழக்கடலில் அங்கயற் கண்ணி எதிரி கப்பலை உடைக்க தன்னை தூள் தூலாக்கி வெடிக்கச் செய்த செய்தி அவளை ஈன்ற பெற்றோரை எப்படி உலுக்கி இருக்கும் இருந்தாலும் எங்கள் பிள்ளை நாட்டுக்காகவே மடிந்தால் என்று பெருமைப்பட்ட அவள் பெற்றோர்களின் ஆழக்கடலின் ஆழமான தாய் மண் பற்றை தமிழீழ பற்றை எப்படி நாம் மறக்க முடியும.;

விடுதலை பசிக்கு தன்னையே உணவாக்கிக் கொண்ட திலீபனை ஈன்ற அவன் தந்தை எப்படித் துடித்தார் கண்ணீர்; வடித்தார் என்பதையும் பின்பு அவன் வீரச்சாவில் எப்படி மகிழ்ந்தார் மகனைப் புகழ்ந்தார் என்பதையும் நான் அறிவேன்.

கரும்புலிகளாய் களமாடி கண்மூடிய பெரும் புலிகளின் சாவினை எப்படி அவர்களின் பெற்றோர்கள் எதிர்கொண்டார்கள் என்பதையெல்லாம் களமாடிய புலிகள் வரலாற்றில் கண்டோம்.

ஒன்றா இரண்டா நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் பெற்றோர்களை தமிழீழ விடுதலை வரலாற்றில் இதுவரை நாம் எறிமலை குன்றாய் புயலின் ஓங்கிய அலைவீச்சாய் வரலாற்றில் பார்த்தோம். சங்ககாலத்தில் பிள்ளைகளை போர் களத்திற்கு எண்னை தடவி தலைவாரி அனுப்பி வைத்த அதே வரலாற்றின் தொடர்ச்சியாய் தமிழீழத்தின் சமராடிய புலிகளின் பெற்றோரை நாம் பார்க்கிறோம் இந்த வரலாறு இந்த வரலாறு இனியும் தொடரும்.

மாவீரர்கள் மடிந்தார்கள் என்று சொல்லுகிறார்கள் இல்லை தமிழீழ மண்ணில் பிறந்தார்கள் இனியும் பிறப்பார்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். விடுதலைக்கான தேவை இருக்கும் வரை விடுதலைக்கான போராட்டமும் இருக்கும். தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் தமிழீழ விடுதலைக் களம் தொடர்ந்து நிலை கொள்ளும் மாவீரர் பெற்றோரை வாழ்த்துவோம் மாவீரர் பெற்றோரை வாழ்த்துவோம் மாவீரர் பெற்ரோரை வணங்குவோம் மாவீரர்பெற்றோரை வணங்குவோம் மாவீரர் பெற்றோரை பின்பற்றுவோம் மாவீரர் பெற்றோரை பின்பற்றுவோம்.

Thursday, November 25, 2010

பிரபாகரன் Prabakaran Birthday 2010 Special Song

A Song dedicated to our Beloved Leader V. PRABAKARAN for his birthday on 26.11.2010 by " Iruppai Thamila Neruppai " Orkut Community and http://veerathamilan.blogspot.com

Sunday, November 21, 2010

சிறை மட்டும் தான் தமிழனுக்கு மிச்சம்



சீமானுக்கு முன்னால் எப்போதும் நான்கைந்து செல்போன்கள் கிடக்கும். 'என் தேசத்தில்


முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார். 'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி,

நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்.

'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலைகளை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?

இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.

உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன், இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது

இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா?

ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர!

அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர,

சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்த கடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம், 'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம்.

"கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.

நன்றி : ஆனந்தவிகடன்