Labels

Monday, August 30, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு: நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நியூசிலாந்தில் அடைக்கலத்தஞ்சம் கோரிய விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற கப்பலில் முன்னர் பணியாற்றிய ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நியூசிலாந்து அரசு மேற்கொண்ட வழக்கை நிராகரித்துள்ள நீதிமன்றம் அவருக்கு அடைக்கலத்தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை (27.08.2010) பரிந்துரை செய்துள்ளது.

மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்ட ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த தவறிய சிறீலங்கா அரசே விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கான பாதையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளை ஒரு அரசியல் அமைப்பாக கருதவே வழியேற்படுத்தியுள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலில் பணியாற்றியதாக குற்றம் சுமத்திய நியூசிலாந்து அரசு மூன்று ஈழத்தமிழ் மக்களின் அடைக்கலத்தஞ்சக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. அவர்களில் இருவர் மீண்டும் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். எனினும் கப்பலில் கப்டனாக பணியாற்றியவர் நியூசிலாந்து அரசின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.

இவ்வாறான வழக்குகளில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நியூசிலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளை தடைசெய்யும் பிரேரனைகளை 2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது, அதற்கு எதிராக நியூசிலாந்தில் வாழும் தமிழ் மக்கள் மேற்முறையீடு செய்திருந்தனர்.

உலகின் மனித உரிமைகள் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதன் தனக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போரடமுடியும் என்பதே இந்த மேற்முறையீட்டின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நியூசிலாந்து அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்யும் தனது திட்டத்தை கைவிட்டிருந்தது.அந்த நடவடிக்கை இப்பொழுது வந்த தீர்ப் பிற்கு உதவியுள்ளது எனக் கருதலாம்

Monday, August 16, 2010

ஈழத்தமிழர்கள் பற்றி இலங்கை ஜெயராஜ் பேச்சு: கண்கலங்கிய ரஜினி


சென்னை கம்பன் விழாவில், இலங்கை தமிழர் பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினி கண்கலங்கினார்.


கம்பன் கழகம் சார்பில், 36வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.


இறுதி நாளன்று, கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.


பட்டிமன்றத்தில் பேசிய இலங்கை ஜெயராஜ்,


நான் தமிழன் ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?. ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாக பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.

ஒருவன் கோடிக் கோடியாக சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தை தராது. அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும். காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாக சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்? என்று இலங்கை ஜெயராஜ் பேசினார்.

இதை மேடையின் முன்வரிசையில் இருந்து இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினி கண்கலங்கினார்.

பொட்டு பத்திரம்... தலைவர் ரகசியம்? - புலிகளின் புலனாய்வுப்புலி பேட்டி!



விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு பொறுப்பாளரான சிரஞ்சீவி மாஸ்டர், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாகத் தேடப் பட்டு... கடந்த ஜூன் மாதம் தமிழக உளவுத் துறையால் வளைக்கப்பட்டார். இது குறித்து, 'தொட்டுவிடும் தூரத்தில் 'பொட்டு' ரகசியம்!' என்ற தலைப்பில் 23.06.2010 தேதியிட்ட ஜூ.வி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டு இருந்தோம். அதில், 'கை, கால்களில் காயங்களுடன் இருக்கும் சிரஞ்சீவி மாஸ்டர் புலிகள் குறித்தும்... குறிப்பாக, பொட்டு அம்மான் குறித்தும் என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி..!' என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில், திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிரஞ்சீவி மாஸ்டர், சில தினங்களுக்கு முன் பூந்தமல்லி சிறப்பு முகாமுக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை சந்தித்துப் பேச பல வழிகளிலும் முயன்றோம். பெரும் முயற்சிக்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகளின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு மற்றும் சில வழக்கறிஞர்கள் மூலமாக சிரஞ்சீவி மாஸ்டரிடம் பேசினோம்.

?'உங்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச் சாட்டுகள் உண்மைதானா?'

'என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கி இருந்தாலும், இதுகாலம் வரை எவ்விதத் தவறான செயல் பாடுகளிலும் நாங்கள் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைதுசெய்து இருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை!'

?'பிரபாகரனுக்கு எதிரான வரதராஜ பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப் பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டு இருந்தார்களே..?

(சிரிக்கிறார்...) ''எனக்கு அப்படி எல்லாம் எவ்வித அஸைன்மென்டும் கொடுக்கப் படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் வல்லமை என்ன? என்பது போலீஸாருக்கே தெரியும். அவர்கள் மூலமாக வரதராஜ பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கை யானது. பிடிபட்டவர்கள் அப்படி ஒரு வாக்கு மூலத்தைக் கொடுத்தார்களா..? இல்லை, வேண்டுமென்றே அப்படி ஒரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பது தெரியவில்லை. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதை எல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.'

?'ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்களா? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?'

'சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருசேர அழிக்கப்பட்டனர். 'பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம்' என்கிற செய்தியை தினசரிகளில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் மனது பதறுகிறது. ஆனால், ஈழத்தில் கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலகம் முன்வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை!'

?'பிரபாகரன் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தை காட்டியது. இதில் எதுதான் உண்மை?'

'எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.'

?'சரி... உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங் களேன்...?'

(பலமாக சிரிக்கிறார்) ''மிகப்பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.'

?'கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறதே?'

'சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய் கிறது. போர்க் காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.'

?'ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா?'

'முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்குமுறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்!' -உறுதியோடு சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்!

- இரா.சரவணன்

Monday, August 9, 2010

நடிகைகள் இலங்கைக்கு போக வேண்டாம்: சத்தியராஜ்


ஆயிரம் விளக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சத்தியராஜ், ஆயிரம் விளக்கு படத்தில் நடித்துள்ள கதாநாயகி சானா கான், இந்திக்கு போய்விடுவார்.


இப்போது தமிழில் நடித்த நடிகைகள் எல்லாம் இந்திக்கு போகிறார்கள். நீங்கள் இந்திக்கு போங்கள். வேறு எங்கு வேண்டுமானாலும் போங்கள். ஆனால் இலங்கைக்கு மட்டும் போகாதீர்கள்.

இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று சொல்கிறார்கள். இலங்கையில் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழகர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கும்போது நாம் இலங்கைக்கு செல்வோம். இப்போது எந்த நடிகையும் போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமிதாப் பச்சனை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, அவர் இலங்கை பயணத்தை ரத்து செய்தார். அவரை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Thursday, August 5, 2010

இலங்கையில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது: உருத்திரகுமாரன்


கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் இலங்கை அரசின் ஒரு கைதி. இலங்கையில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது.

கேபி அவர்களின் தற்போதய நிலையும் அப்படித்தான். மேலும், தற்போதுள்ள ஒரு சூழலில் அவர் சுயாதீனமானவராக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இவரை இலங்கை அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதனை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு, கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும் அவருக்கும் எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. நாம் சுயாதீனமான குழுவாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டோம். இவரது கைதுக்கு முன்னரே, உருவாக்கற்குழுவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு என்னைக் கேட்கப்பட்டபோதே பலநாடுகளில் உள்ள சட்டப்பிரச்சினைகள் காரணமாக, நான் அவரது கட்டுப்பாட்டிலோ அல்லது வழிகாட்டுதலிலோ செயற்படமுடியாது என்பதனைத் தெரிவித்து, அதில் உடன்பாடு காணப்பட்ட பின்னரே நான் அப்பொறுப்பை ஏற்றிருந்தேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு சுயாதீனமமான அமைப்பு. அதன் கொள்கையும் நடைமுறையும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையானவை.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான முழுமையான செவ்வி

கேள்வி: நாடுகடந்த அரசாங்கம் தனது முதலமர்வினை மேற்கொண்டதன் பிற்பாடு அதன் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலமர்வில் தனக்கான அரசியல் அபைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும் உடனடியான முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அரசியல் அமைப்பு விவகாரக்குழு, அரசியல் அமைப்பு உபகுழு, கல்வி, பண்பாடு;, உடல்நலம், விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு

அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவு திரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும்.

நாம் அமைத்துள்ள குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் (convenor) நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் குழுக்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளயும், தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய வேலைகள் தொடர்பான திட்டங்களையும் ஆராய்ந்து இக் குழுக்களுக்கென நியமிக்கப்படும் நிபுணர்குழுவின் ஆலோசனையுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்புக்களை உருவாக்கும்போது இக் குழுக்கள் இக் கட்டமைப்புக்களோடு ஒருங்கிணைக்கப்படும்.

கேள்வி: இன்று தமிழீழ தாயகத்தில் வாழும் மக்கள் குறிப்பாக வன்னி, தென்தமிழீழ மக்கள் பலத்த மனிதாபிமான சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதுவொரு அவசரமான கவனிப்பினை மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல். இந்த அவசர மனிதாபிமானச்சிக்கல் தங்களது செயற்பாடுகளில் முக்கிய இடத்தினை பிடித்துள்ளதா? இதனை எவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசு கையாளுகின்றது?.

இவ் விடயத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எனினும் எமது மக்களுக்கு நமது உதவிக் கரங்களை நேரடியாக நீட்டுவதில் சில நடைமுறைப்பிரச்சனைகள் தற்போது உள்ளன. இலங்கை அரசு மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் அரசியல் நோக்கம் கொண்டே அணுகுகிறது. இதனால் இவ் விடயத்தில் நாம் அவதானமாக இருப்பது முக்கியம். இவ் விடயத்தில் நாம் இரு முறைககளில் செயற்படுவதற்கான உத்திகளை வகுத்துள்ளோம்.

முதலவது, இலங்கை அரசுக்கு உதவி வழங்கும் நாடுகளையும் அனைத்துலக அமைப்புக்கiளுயும் அணுகி, அவர்ககளின் உதவி எமது மக்களைச் சென்றடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

இரண்டாவது, அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புக்களுடன் இணைந்த வகையில் எமது உதவிகள் மக்களைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதனை ஆராயந்து செயற்படல்.

நான் கடந்த வாரம் ஒரு அனைத்துலக அரசுசார அமைப்புடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தேன். இச் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அரசு சாரா அமைப்புக்களுடன் ஒரு வகை பங்காளர் ஏற்பாட்டுக்கு வரும் பட்சத்தில்; போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு; உதவி வழங்குவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு இது வாய்ப்பளிக்கும் என்ற கருத்து அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதும் நாம் அனைத்துலக அரசுசாரா அமைப்புக்கள் ஊடாக உதவ முற்பட்டாலும் அது இலங்கை அரசின் திட்டங்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவுவதாக அமைந்துவிடக்கூடாது என்ற அக்கறை எமக்கு உண்டு. இதனால் இவ் விடயத்தில மிகவும் நன்றாக ஆராய்ந்து, எமது மக்களுக்கு உதவிகள் சென்றடையும் அதேவேளை அது இலங்கை அரசின் திட்டங்களுக்கு உதவாத வகையில் அமையக்கூடிய வழிமுறைகளை; கண்டறிவதில் நாம முனைப்பாக உள்ளோம்.

கேள்வி: போர் முடிவுற்ற காலகட்டத்தில் கைதாகிய, சரணடைந்த போராளிகள் தொடர்பான தெளிவான தகவல்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. சர்வதேசரீதியாகவும் போராளிகள் தொடர்பான வலுவான குரல் இதுவரை எழுப்பப்படவில்லை. நாடுகடந்த அரசு இது தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது?

போரின் பேர்து இலங்கை படைகளால் கைதுசெய்யப்பட்டு அல்லது சரணடைந்து கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் மூன்றாவது ஜெனிவாப் பிரகடனத்தின் அடிப்படையில் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே இவ்விடயத்தில் எமது நிலைப்பாடு.

மேலும், மூன்றாவது ஜெனிவாப் பிரகடனத்தின் 69, 70 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் சிறைக்குள் அடைக்கப்;பட்டிருக்கும் போராளிகள் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும்;, இவர்களது குடும்ப அங்கத்தவர்கள் இவர்களைச் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இருந்த போதும் இலங்கை அரசு இவர்களைப் போர்க்கைதிகளாக கருதி, இவர்களுக்கு அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய எற்பாடுகள் எதனையும் செய்யவில்லை. அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் இவர்களைச் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கவில்லை.

அண்மையில் அமைச்சர் குணசேகரா தனது நேர்காணலில் திரு பாலகுமார், திரு யோகி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக உட்கிடக்கையாகக் கூறியுள்ளார். இது தமிழ் மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரு பாலகுமார், திரு யோகி ஆகியோர் உயிருடன் உள்ளனரா என்பதை அறிய வேண்டிய பெர்றுப்பு சர்வதேசத்தலைவர்களுக்கு உண்டு.

கைதிகளாக வைக்கப்பட்டுள்ள போராளிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படுதல், இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா என்பதனை அறியாது தவிக்கும் குடும்பத்தினருக்கு ஒருவகை ஆறுதலைத் தரும். அவர்களது பாதுகாப்பை ஒரளவுக்காவது உறுதிப்படுத்துவதற்கும் இது உதவும். இவ்விடயத்தினை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்iளை அவர்கள் தமது கூடுதல் கவனத்தற்கு எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகிறோம். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை நாம் இவ்விவகாரத்துக்காக ஒரு செயற்பாட்டுக்குழுவை அமைத்துள்ளோம். இவர்கள் இது தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் செயற்பட்டு வருகின்றனர்.

கேள்வி: நாடு கடந்த அரசாங்கம் சர்வதேசசமூகத்துடன் தொடர்பாடல் முயற்சிகளை ஆரம்பித்துவிட்டதா?. குறிப்பாக, அமெரிக்கா, இந்தியா போன்ற தரப்புக்களுடன் பேச்சுக்களுக்கான முயற்சி ஆரம்பமாகிவிட்டதா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக நாம் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தாம் வாழும் நாடுகளின் அரச தலைவர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை குறித்தும் அதன் அரசியல் கொள்கைகளையும் எடுத்து விளக்கி வருகின்றனர்.

இதேவேள, அரசாங்கங்களுடன் காத்திரமான உறவாடல்களை மேற்கொள்வதனை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எமது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின் “இராசதந்திர முன்னெடுப்புக்களின்; வெற்றியை பலம் தீர்மானிக்கின்றது. பலத்திற்கு முன்னுரிமையும் வலுவான அந்தஸ்தும் உண்டு”. நண்பர்களோ அல்லது எதிரிகளோ உறவுமுறையினைத் தீர்மானிப்பதில் பலம் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு வலுவானதாக உருவாகும் போது அது நாடுகளுடன் காத்திரமான உறவுகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் வழிகோலும்.

கேள்வி: நாடுகடந்த அரசாங்கம் மரபுவழி அரசாங்கங்கள் போன்று செயற்படுவதற்கான துறைகளை இனம்கண்டுள்ளதா? அரசாங்கத்தினை நிறுவனமயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு அரசாங்கம் போன்று இயங்கினாலும் இது மரபு சார்ந்த அரசாங்கங்களை விட அடிப்படையில் வேறுபாடானது. நாம் ஒரு நிலப்பரப்பை ஆளுகை செய்யவில்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், வரி விதிப்பு போன்ற பணிகளும் இவ் அரசாங்கத்தின் செயற்படு எல்லைக்குள் உள்ளடங்கவில்லை. இதேவேளை, நாம் உருவாக்கியுள்ள செயற்குழுக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவர்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் ஒரு அரசாங்கத்தின் அமைச்சுக்களைப் போல செயற்படுவதற்குள்ளன. அரசுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதைப்போல, நாமும் சட்டவாக்கம், நிறைவேற்றுகை என இரு வேறுபட்ட நிறுவனக் கட்டமைப்பைக் கொண்டதாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கி வருகிறோம். ஒரு அரசாங்கத்தினைப்போல திறைசேரியினை உருவாக்கும் நடைமுறையினையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களுடனான நாடுகடந்த அரசின் தொடர்பாடல் முறைகள் என்ன?. நாடுகள் வாரியாக அதற்கான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடிப்படையாhன எண்ணக்கரு நாடு கடந்த நிலை என்பதேயாகும். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடுகளின் எல்லைகளைக் கடந்தே தனது பணியை ஆற்றும். இருந்த போதும் இன்று தேச-அரசுகளாக (nation-states) ஒழுங்கமைப்பட்டுள்ள நாடுகளில் செயற்படுவதற்கு எமக்கு நாடுகள் சார்ந்தும் செயற்படுதளம் தேவை. நாம் அந்தரத்தில் தொங்க முடியாது. இந் நாடுகள் சார்ந்த செயற்படுதளம் அந்தந்த நாடுகளுக்கானவையாக மட்டும் இருந்துவிடவும் முடியாது. இவ்விடயத்தில நாம் ஒரு கவனமான சமநிலையைப் பேணவேண்டும்.

தற்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசியல், பண்பாட்டு, விiயாட்டுத் தளங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் மக்களைச் சந்தித்து மக்களோட கருத்துப்பரிமாறி வருகின்றனர். இதற்கான முறைசார் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு புதுமையான எண்ணக்கருவாக உள்ளமையாலும், தமிழர்களாகிய நாமே இதற்கு முன்னோடிகளாக உள்ளமையாலும் உரிய முறைசார் பொறிமுறைகளை உருவாக்கி முடிக்கச் சற்றுக் காலம் தேவைப்படும்.

கேள்வி: இன்று தாயகத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெளிவாகவே கூட்டாட்சி அடிப்படையிலான பேச்சுக்களை சிறீலங்காவுடன் மேற்கொள்ள முனைகின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகடந்த அரசு இந்த நிலைப்பாட்டினை எவ்வாறு பார்க்கின்றது?.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு உட்பட தாயகத்தில் செயற்படும் அமைப்புக்களின் அரசியல் நிலைப்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருகி;றோம். அக்கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழீழ மக்களின் குறுங்கால தேவைகளை கவனத்தில் எடுக்கும் அதேவேளையில் நீண்டகால நலன்கள், பாதுகாப்பு, மேம்பாடு குறித்த கவனம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை அவர்களிடம் வலியுறுத்த விரும்புகின்றோம். பூரண அரசியல் அதிகாரம் இன்றி நாம் எமது மக்ககளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோ அல்லது மேம்பாட்டு நடடிவடிக்கைகளில் ஈடுபடுவதோ நடைமுறைச் சாத்தியமற்றது.

சுதந்திரத் தமிழீழ அரசு அமைவதே தமிழ் மக்கள் கௌரவமாகவும், பர்துகாப்பாகவும், மேம்பாடாகவும், தமது தனிமனித மற்றும் கூட்டு உரிமைகளப் பெற்று வாழ்வதற்கான ஒரேவழி என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். இந் நம்பிக்கை சமீப கால நிகழ்வுகளால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமத்துவம், கூட்டாட்சி போன்ற அடிப்படைகளில் தமிழ்த் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியினைத் தழுவிய வரலாற்றுப் பட்டடறிவில் இருந்துதான் தமிழ் மக்கள் தமக்கெனத் தனியரசொன்றினை அமைக்கும் அரசியல் முடிவினை எடுத்தனர். தமிழீழத் தனியரசின் தேவைக்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இன்னும் சொல்லப்போனால், தமிழர் தாயகப்பகுதியை விழுங்கி இனக்கபளீகரம் செய்யும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக இறங்கியுள்ள இவ்வேளை எமக்கான தனிநாட்டுக்கான தேவை அனைவராலும் முன்னரைவிட பெரிதும் உணரப்படுகிறது. ஆனால் அதன் சாத்தியப்பாடு குறித்த சந்தேகமே தற்போது எழுந்துள்ளது. நாம் நம்பிக்கையை இழக்காமல் எமக்கு சாதமான மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்ற உறுதிப்பாட்டுடன் எமது போராட்டத்தைத் தொடர வேண்டும். தாயகத்தில் உள்ள தமிழ்த் தலைவர்கள் தனித் தமிழீழ அரசுக்காக செயற்பட முடியாத நிலை இருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம். இதே நேரம் தமிழீழத் தனியரசுதான் எமது மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு அடிப்படையானது என்ற தொலைநோக்கை (vision) அவர்கள் கைவிடக்கூடாது என நாம் அவர்களை வேண்டுகிறோம்.

கேள்வி: கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் போராளிகள் விடுதலை சார்பான முயற்சிகளை கேபி அவர்கள் சிறீலங்கா அரசுடன் பேசி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. புலம்பெயர்ந்து வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகடந்த அரசாங்கம் இந்த முயற்சியினை எவ்வாறு பார்க்கின்றது? அவருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தொடர்புகள் ஏதாவது உள்ளனவா?

கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் இலங்கை அரசின் ஒரு கைதி. இலங்கையில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதய நிலையும் அப்படித்தான். மேலும், தற்போதுள்ள ஒரு சூழலில் அவர் சுயாதீனமானவராக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இவரை இலங்கை அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதனை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு, கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும் அவருக்கும் எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. நாம் சுயாதீனமான குழுவாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டோம். இவரது கைதுக்கு முன்னரே, உருவாக்கற்குழுவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு என்னைக் கேட்கப்பட்டபோதே பலநாடுகளில் உள்ள சட்டப்பிரச்சினகள் காரணமாக, நான் அவரது கட்டுப்பாட்டிலோ அல்லது வழிகாட்டுதலிலோ செயற்படமுடியாது என்பதனைத் தெரிவித்து, அதில் உடன்பாடு காணப்பட்ட பின்னரே நான் அப்பொறுப்பை ஏற்றிருந்தேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு சுயாதீனமமான அமைப்பு. அதன் கொள்கையும் நடைமுறையும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையானவை.

கேள்வி: தத்துவார்த்தரீதியாக தமிழீழத்தினை சாத்தியமாக்க தாங்கள் வகுத்துள்ள காலஎல்லை எது?. வாய்ப்புக்கள் என்ன? சவால்கள் என்ன?

தமிழீழத்தைச் சாத்தியமாக்குவதற்கான கால எல்லையினை முன்கூட்டியே தீர்மானிப்பது கடினமானது. அது உலகில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்பு பட்டது. எனினும் வரலாற்றுப்போக்கினை ஆராய்ந்து பார்க்கும்போது தமிழீழம் சாத்தியமானது என்பதனையும் இரத்தம் சிந்தாத போராட்ட வழிமுறைகள் ஊடாக அதனை வென்றெடுக்க முடியும் என்பதனையும் உணர முடிகிறது.

நான் முன்னர் தெரிவித்திருந்தவர்று சுதந்திரத் தமிழீத்தின் உருவாக்கம் இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் தென்னாசியாவிலும் ஏற்படும் புவிசார் அரசியல் மாற்றங்களுடன் தொடர்பு பட்டுள்ளது. தமிழர்களின் அரசியல் நலன்களையும் தமிழீழ உருவாக்கத்தினை நிர்ணயம் செய்யக்கூடிய உலக சக்திகளின் நலன்களையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கக்கூடிய நிலைமைகள் தோற்றம் பெறும் என்றே நாம் நம்புகிறோம். இலங்கைத்தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. வல்லரசுகள் இப் பகுதியில் இலங்கைத்தீவினை மையமாக வைத்து தமது நகர்வுகளை மேற்கொள்கின்றன. இச் சூழல் எமக்கான வாய்ப்புக்களையும் கொண்டு வரக்கூடியது.

மேலும் இன்றைய உலகமயமாதல் சூழலில் சிறிய மற்றும் பலவீனமான அரசுகள் தனித்து உயிர்வாழ முடியாது. புறக்காரணிகள் இதில் முக்கிய பாத்திரம் வகிக்கும். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் ஊhடாக இப் புறக்காரணிகள் மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்பு உண்டு.

இலங்கை அரசு மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை இழிவு செய்வது குறித்து அனைத்துலக சமூகத்தின் உணர்வுகளை நாம் இப்போது காண முடிசிறது. இது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கண்டனங்களை அனைத்துலக அரங்கில் எழுப்பி வருகிறது. எனினும் அனைத்துலக அரசியல், நலன்களின் அச்சுக்களில் சுற்றுவது என்பதனை நாம் புரிந்திருக்கிறோம். இப் புரிதலுடன் செயற்பட்டு இலங்கை அரசினை மேலும் அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்துவதற்கு நாம் முயல வேண்டும்.

இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையினை (Genocide) அனைத்துலக அரங்கில் நன்கு வெளிப்படுத்தியும், உள்நாடுகளில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டும் இலங்கையை ஒரு காவாலி அரசாக (rouge state) நாம் அடையாளப்படுத்த வேண்டும். மேலும் இனப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதே என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும் என்பதனை நீதித்தளத்திலும் அனைத்துலகச் சட்டத்தளத்திலும் முன்வைத்து நாம் செயற்படவேண்டும்.

இவற்றில் நாம் எதிர் கொள்ளும் சவால்கள் அனைத்துலக ஒழுங்கு என்பது நடைமுறையில் அரசுகளுக்கிடையிலான ஒழுங்காக இருப்பதில் இருந்துதான் எழுகின்றன. இவ் உலக ஒழுங்கில் இலங்கை, ஒரு அரசாக இருக்கும் காரணத்தால் சில வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்கிறது. இருந்த போதும் நாமும் உலகில் இடம் பெற்று வரும் மாற்றங்களின் ஊடாக உலக அரசுகளின் துணையுடன் எமக்கான தனிநாட்டை உருவாக்கிக் கொள்ளும் காலம் வந்துதான் தீரும்.

இலங்கை தமிழர்களின் பிரச்சனை: உலகப் பெருந்தலைவர்கள் குழு வேதனை




இலங்கையில் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக உலக நாடுகளுக்கு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுமாறு, ராஜபக்சே அரசை வலியுறுத்தும்படி உலகப் பெருந்தலைவர்கள் குழு இந்தியா மற்றும் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபிஅனான், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.


இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் இலங்கை அரசை கடுமையாக குறை கூறி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் இக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.


மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கடுமையான போர் குற்றங்கள் புரிந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், உலகப் பெருந்தலைவர்கள் குழுவும் இலங்கை அரசுக்கு எதிராக தங்கள் வேதனையை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதற்கும் இக்குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எதையும் எடுக்காததையும் இக்குழுவினர் வேதனையோடு சுட்டிக்காட்டியுள்ளனர்.

Wednesday, August 4, 2010

இலங்கைத் தமிழர் குறித்து அவதூறுச் செய்தி - ஆங்கில ஊடகங்கள் பணிந்தன


லண்டன் ஆக. 2 கடந்த ஆண்டு லண்டனில், பிரிட்டன் நாடாளுமன் றத்தின் முன்பாக உண்ணாநிலையில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் சுப்ரமணியம் பரமேஸ்வரனின் பட்டினிப் போராட்டத்தினை அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற செய்தி வெளியிட்ட, லண்டன் ஆங்கில ஊடகங்கள் இரண்டுக்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில், லண்டன் உயர் நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரமேஸ்வர னுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள் ளது.
பரமேஸ்வரனின் போராட்டம் உண்மையானதெனவும், பத்திரிகை களின் செய்திகள் ஆதாரமற்றவை எனவும், இந்தத் தவறான செய்திகளால் பரமேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச் சலுக்காக அவரிடம் மேற்படி பத்திரி கைகள் மன்னிப்பு கோருவதுடன், வழக்கிற்கான செலவுகளுடன் இழப் பீட்டுத் தொகையாக 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்டுகளையும் வழங்க வேண்டுமெனவும், அத் தீர்ப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வன்னி நிலப்பரப் பில், தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கெண்ட போரினை உடன் நிறுத்தக் கோரி, 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர் கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளா கத்தின் முன் நடத்திய போராட்டத் தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாள்கள் பட்டினிப் போராட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏதுமறியாது புலம் பெயர் தமிழ் சமூகம் திக்கித்து நின்ற வேளையில், இளையவர்களின் உணர்வெழுச்சி யோடு நடைபெற்ற இந்த உண்ணா நிலைப் போராட்டத்தில் பெருமள வான மக்கள் இணைந்து கொண்டி ருந்தனர்.
கோரிக்கைகள் எதுவும் முழுமையாக நிறை வேற்றப்படாத நிலையிலும், அரசியற் பிரமுகர்கள் எடுத்த இடைமுயற்சிகள் காரண மாகப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அப்போராட்டங் கள் முடிந்த சிலகாலங்களுக்குப் பின், அப்போராட்டத்தினை அவதூறு செய்யும் வகையில், உண்ணாநிலையி லிருந்த பரமேஸ்வரன், அந்த நாள்களில் இரகசியமாகப் உணவு சாப்பிட்டார் என்று லண்டனில் இருந்து வெளியாகும், டெய்லி மெயில், மற்றும் சன் பத்திரிகைகள், செய்தி வெளியிட்டிருந்தன.
2009ஆம் ஆண்டு, அக்டேபர் 9 ஆம்தேதி டெய்லி மெயில் பத்தி ரிகை, பட்டினிப் போராளியின் 7 மில்லியன் பிக் மக் என்ற தலைப் பில், அந்த அவதூறுச் செய்திக் கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அதில் பரமேஸ்வரன், பட்டினிப் போராட்டம் காலத்தில் இரகசிய மாக பர்கர்ளைச் சாப்பிட்டு, பொய் யாக உண்ணாநிலை மேற்கொண்ட தாகவும், அவரது இந்த நடவடிக் கையால் லண்டன் காவல்துறையின ருக்கு 7மில்லியன் ரூபா செலவினம் ஏற்பட்டதாகவும், இதன் மூலம் பொது மக்கள் பணம் விரயமாக்க நேரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டி ருந்தது.
இந்தச் செய்தித் திரிபுக்கு எதிராக உண்ணாநிலை மேற் கொண்டிருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன் மிகுந்த சிரமங்களின் மத்தியில் எதிர் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புகள் பங்கேற்றிருந்த போதும், தனிப் பட்ட முறையில் அவை இந்த வழக் கிற்கு உதவ முன்வராத நிலையில், வெற்றி பெற்றால் வழக்குரைஞருக் குச் சன்மானம் என்ற அடிப்படை யிலேயே வழக்குரைஞர் மேக்னஸ் பாயிட்டினை அமர்த்தி, இந்த வழக்கை எதிர்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரி கைகளின் சார்பில் வாதாடிய வழக் குரைஞர்களும் தாங்கள் வெளி யிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண் டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் இழப்பீடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்குரைஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்திருக்கிறார்.
இந் நிலையில் இந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை லண்டன் ராயல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து, மேற்படி பத்திரிகைகளின் பொய்ச் செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங் களாக மிகுந்த அவமானங்களை தான் பல தரப்புகளிடமிருந்தும் சந்தித்த தாகவும், இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பரமேஸ்வரன் செய்தி யாளர்களுக்குத் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை மீறல் கள் குறித்து மேற்குலகின் கவனம் பெற்று வரும் இன்றைய பொழுது களில், பரமேஸ்வரனின் நீதியான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி, இத்தகைய போராட்டங்களை மேற் கொண்டு வரும் இளைய தலைமுறைக்கு உற்சாகம் தருவதாகவும், அற வழிப் போராட்டங்களில் மேலும் நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இந்த வெற்றி அமைந்திருப்பதாக செய்திகள் தெரி விக்கின்றன.