Labels

Sunday, May 29, 2011

ராஜபக்ஷே, சோனியா உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவது விரைவில் நடக்கும்! - வேலூரில் சீமான் ஆவேசம்



ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு. இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.
வேலூரில் கடந்த 18-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.

பாதையைத் தேடாதே... உருவாக்கு!’ கம்பீரமாக பிரபாகரன் சிரித்துக்​கொண்டு இருக்க, கீழே சிறுமி ஒருத்தி, 'வீர வணக்கம்... வீர வணக்கம்!’ என்றபடியே நாம் தமிழர் கட்சிக் கொடியைப் பிடித்துப் பேரணியைத் தொடக்கி வைத்தனர்.

பேரணியின் நடுவே ராஜபக்ஷே வேடத்தில் ஒருவர் செருப்பு மாலையுடன் நின்றார். ராஜபக்ஷே வேடம் அணிந்தவரை பேரணியில் அடித்தபடியே வந்தனர்.

மாலை பொதுக் கூட்டம் தொடங்கியது.

முதலில் இயக்குநர் செல்வமணி உரையாற்றுகையில்,

காங்கிரஸுக்கு யாரும் ஓட்டுப் போடா​தீங்கன்னு எல்லோரும் கத்தினோம். அதற்கு நல்ல பயன் கிடைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இனி யாரும் இருக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்யப்போகிறோம். காங்கிரஸில் இருப்பவர்கள் அங்கே இருந்து ஓடி​விடுங்கள்.

ஏன்னா இப்ப உங்களுக்கு ஐந்து தொகுதிகள் கிடைச்சிருக்கு. அடுத்த தேர்தல்ல யாருக்கும் டெபாஸிட் கூட கிடைக்காது. ஒரு பேச்சுக்குச் சொல்லுறேன்... தீ என்று சொன்னால் சுடாது. இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற மேடையில் குண்டு வெடிச்சா என்ன ஆகும்? சீமான், நான், செல்வபாரதி, தீரன், சந்திரசேகர்னு எல்லோரும் மேல போக வேண்டியதுதான்.

ஆனா ராஜீவ் காந்தி இறந்தாரே... அப்ப அவர்கூட இருந்த 7 போலீஸ்காரர்களும் 10 பொதுமக்களும்தான் இறந்தார்கள். அப்போது வாழப்பாடியார், மூப்பனார் எல்லாம் எங்கே இருந்தார்கள்? குண்டு வெடிப்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா? உண்மையை எப்பவும் மறைக்க முடியாது.

சிறையில் இருக்​கும் என் தம்பி, அக்காமார்களை விரைவில் விடுதலை செய்... இல்லை என்றால், நாங்களும் வருகிறோம். சிறைச்சாலையைத் தயார் செய்....'' என்று முடிக்க, கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

இறுதியில், ஆக்ரோஷத்தோடு வந்து நின்ற சீமான்,

கடந்த ஆண்டு மே 18-ம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சியைத் தொடக்கினோம். அதற்கு முந்தைய ஆண்டு 2009 மே 18-ம் தேதி ஈழத்தில், முள்ளி வாய்க்காலில் நம் தமிழ் சகோதர - சகோதரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

ஒரு காக்கை இறந்தால், அந்த காக்கை இனம் கூடிக் கரையும். ஒரு தெரு நாய் இறந்தால், அந்தத் தெரு முழுக்கக் குரைத்தபடி திரியும் தெருநாய் இனம்.

நம் தமிழ் சொந்தங்கள் அங்கு வன்புணர்ச்சி செய்யப்பட்டு மடிகிறார்கள். இதை நான் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். ஆனால், நம் தமிழ்நாட்டில் எத்தனை பேர் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பார்கள்? எல்லோரும் மானாட மயிலாடவும், நாயாட நரியாடவும்தான் பார்த்தார்கள்.

இந்தக் கூட்டம், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் போடப்பட்ட கூட்டம் அல்ல. தமிழர்களின் இரத்தம் குடித்த கூட்டத்தை விரட்டி அடிக்கப் போடப்பட்ட கூட்டம்.

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளைப் பார்த்துக் கேட்கிறேன்... பதவி ஆசையில் நம் இனத்தை அழித்தவனிடம் போய் நீங்கள் மண்டியிட்டீர்களே... இப்போது மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

நடந்து முடிந்தது தேர்தல் களம் அல்ல... அது ஒரு யுத்த களம்! ஐந்து தொகுதியில் ஜெயித்ததை நினைத்துக் கொக்கரிக்காதீர்கள். அந்த ஐந்து தொகுதிகளுக்கு வர எனக்கு நேரம் இல்லை. உங்களை வேரோடு அழிக்கும் வரை நான் ஓயப்போவது இல்லை.

தி.மு.க. தனது வரலாற்றில் எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளது. மறுபடியும் நீங்கள் கூட்டணி வைத்தால் 23 ஸீட்டுகள் இல்ல. மூணு ஸீட்டுகள்கூட வாங்க முடியாது. மேலும், சாதி அரசியலை வைத்து இனி எவனும் தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியாது.

ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு.

இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.

வலி இருந்தால்தானே வார்த்தைகளில் தீப்பறக்கும்!

நன்றி - ஜூனியர் விகடன்

Saturday, May 28, 2011

கே.பி. மூலம் சிங்கள அரசு சதி – விடுதலைபுலிகள் அறிக்கை.



கே.பி. என்னும் செல்வராசா பத்மநாதன் மூலம், சிங்கள அரசு தங்களுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அதன் தலைமைச் செயலகத்தின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆ. அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;

இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,

சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆ.அன்பரசன்,

ஊடகப்பிரிவு,

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

இன வரலாற்றில் மே 18 கறுப்பு நாள் – சீமான் அறிக்கை



ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை க்கு ஆதரவாகவும் இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 புதன்கிழமை அன்று வேலூர் கோட்டை முன்பு இன எழுச்சி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.

மே 18 , எம் இன வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். எம் மக்கள் கொத்துக்கொத்தாய் சிங்கள வெறி ராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்ட நாள். தமிழ் ரத்தம் ஈழமெங்கும் வழிந்தோடி இந்தியக் கடலில் கலந்து சிவந்த நாள். அரை நூற்றாண்டு கால வெஞ்சமர் கணட தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் சிங்கள இனவெறியர்களால் ஒடுக்கப்பட்டநாள். இன அழிப்பின் உச்ச கட்டக் கொடூரமாய் முள்ளிவாய்க்காலில் தடைசெய்யப்பட்ட குண்டுவீச்சால் குற்றுயிரும் குலையுயிருமாக துடித்த எம்மக்கள் பல்லாயிரம் பேரை மண்ணோடு மண்ணாய் ஒரே நாளில் புல்டோசர் கொண்டு அழித்து முடித்தநாள்.அன்று, எம் மக்களின் மரண ஓலம் உலகின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை.

எம் இனம் மொத்தமாய் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட போதும் மவுனமாய் வேடிக்கை பார்த்தது உலகம். மனித உரிமை, சர்வதேச நெறிமுறை என்று அனைத்தையும் இனத்தோடு சேர்த்துப் புதைத்து சிரித்துக் கூத்தாடியது சிங்கள இனவெறி அரசு.இருந்தும், எஞ்சிய எம் இனம் வீழ்ந்து விட வில்லை. துயரத்தில் ஓய்ந்து ஒடுங்கி விடவில்லை. எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு ஓயாத போராட்ட்த்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுத்தனர். நீண்ட நெடிய போராட்ட்த்தின் விளைவாக தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள அரசு குற்றங்கள் புரிந்துள்ளது என ஐ.நா.அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வரலாறு இதுவரை கண்டிராத இந்த இனக்கொலைக்கு இது உரிய தீர்வு அல்ல என்றாலும் எஞ்சியிருக்கும் ஒரு நம்பிக்கை இந்த அறிக்கை.

இதையும் ஏற்கமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது இலங்கை. இந்த அறிக்கை பற்றி பல நாடுகள் மௌனத்தை கடைப்பிடிக்கின்றன. அறிக்கை வெறும் அறிக்கையாகவே போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இன்னும் எம் மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அச்சமின்றி உற்சாகமாய் இருக்கிறர்கள். ரஷ்யாவும்,சீனாவும்,இந்தியாவும் இலங்கையைக் காப்பாற்றத் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தமிழகத் தேர்தல் முடிவு என்ற பரபரப்பில் நாம் இருந்தபோது, திட்டமிட்டே இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை செல்கிறார். அடுத்த நாள் இந்தியா வந்து இரண்டுநாள் அந்த அறிக்கை பற்றி ஆலோசனை நடத்துகிறார் சிங்கள அரசின் வெளியுறவு அமைச்சர். இந்திய வெளியுறவு அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே, இந்தியா எங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளது, இன்னும் செய்யும் என்று நம்புகிறோம் என்று பேட்டியளிக்கிறார். எம் இனத்திற்கு எதிராக இது வரை பல்வேறு துரோகங்களைச் செய்த இந்தியா இன்னும் ஓய்ந்து விடவில்லை. இலங்கைக்கு ஆதரவாய் தொடர்ந்து செயலாற்றுகிறது. ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து எவ்வாறு இலங்கையைக் காப்பாற்றுவது? இன்னும் மீதம் உள்ள இனத்தை எவ்வாறு ஒடுக்குவது?என்பது குறித்து ஆலோசனை நடத்த தமிழன் தேர்தல் முடிவுகளில் மூழ்கியிருக்கும் நேரத்தை தேர்ந்தெடுத்திருப்பதிலிருந்தே இந்தியாவின் துரோகம் தொடர்வதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலையில் நாம் வேலூரில் கூடவிருக்கிறோம்.,

நம் இனத்திற்கு எதிராய் இழைக்கப்ப்ட்ட கொடும் குற்றத்திற்கு தற்காலிக பரிகாரமான ஐ.நா.நிபுணர் குழுவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக, வெள்ளையனை எதிர்த்து வீரக்களம் கண்ட வேலூர் மண்ணில் கூட இருக்கிறோம்.

வேலூர் மண் வீரம் செறிந்த மண். திப்பு சுல்தானின் வாரிசுகள் ஆங்கிலக் கும்பினியர்களை எதிர்த்து போரிட்ட மண். கண்டிப்பகுதியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கனை போரில் நயவஞ்சகமாய் தோற்கடித்து அவரைக் கடைசிக்காலம் வரை ஆங்கிலேயர்கள் சிறை வைத்திருந்த மண். அந்த வீரம் செறிந்த மண்ணில் நாம் நம் இனத்தின் நீதிக்காக உலகின் மனசாட்சியை உலுக்க அணி திரள்வோம். வீழ்ந்துவிடாது எம் வீரம், மண்டியிடாது எம் மானம் என்ற உணர்வோடு, நாம் எழுப்புகிற உரிமைக்குரல் உலகின் செவிப்பறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும். வாருங்கள், சிங்கள இனவெறியர்களை உலக நீதிமன்றத்தில் ஏற்ற ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேலூரில் கூடுவோம்

கோவை யாழ் படிப்பகம் திறப்பு விழா



தமிழீழ விடுதலையும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும்

ஈழத் தமிழர் இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு

Friday, May 20, 2011

ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரி நியூயார்க்கில் அய்.நா. முன் ஆர்ப்பாட்டம் (18.5.2011) - அமெரிக்காவில் டிரான்ஸ்கரண்ட் ஏட்டின் படப்பிடிப்பு







India should perform its legitimate duty of protecting
the rights of the Tamil ethnic people – Dr. K.Veeramani


Rallies were held around the globe by Tamils on Wednesday – May 18th, which the organizers have marked is a “Time to mourn; A time to reflect; A time for resurgence and creating awareness towards seeking “Justice for Genocide Victims of Tamil Eelam.”

Among the attendees at a rally near United Nations in New York were members of Tamil Nadu based Dravidar Kazhagam. They distributed a statement from the President of Dravidar Kazhagam, Mr. K. Veeramani urging India to “perform its legitimate duty of protecting the rights of the Tamil ethnic people”; excerpts from the statement as follows:

The organisations in various countries of this world have raised their voices condemning the racial genocide took place in Sri Lanka.

Is it not the responsibility and duty of the U.N. to undertake such a detailed enquiry?

Of course there is a requirement that the Security Council of the U.N. must approve of such an action and to seek such approval, much pressure is to be exercised through the uprising of people. The rally proposed to be held in New York gains importance in this regard.

Dravidar Kazhagam, along with the Dravidar Iyakka Tamilar Peravai held demonstrations and conducted public meetings in various big towns of Tamil Nadu and created awareness among the public about this issue.

With enough international organisations and suitable international laws, could they have not themselves taken initiative in condemning and punishing those responsible for this genocide? Only then, it could be construed that the international laws are properly executed, human rights are properly protected and civilized policies are strictly followed.

On the other hand, if some of the countries of the world join together, form an alliance and try to thwart the initiative to order further enquiry into the war crimes and prosecute those responsible for the genocide in Sri Lanka, it will defeat the very purpose of the existence of the U.N.

If Rajabakshe is not punished, it would mean that free licence is granted for any atrocities to be committed in any part of the world.

Particularly, it is the moral responsibility and duty of the Government of India to take initiative in bringing a trial against Rajabakshe in the international court of justice. The Government of India has been acting sofar only against the interests of Tamils and in support of Sri Lanka.

At least now, when the international organisations from countries outside India are undertaking such rallies and demonstrations, India should come forward to perform its legitimate duty of protecting the rights of the Tamil ethnic people. It would be an appropriate opportunity for India to free herself from the wrongs committed sofar.

The Government of India should not take an adamant stand in this issue, which will create a blot on it in the history which could not be erased so easily and the price it has to pay and the loss it has to incur will be immense.

The agitation to be conducted before the office of the U.N. in New York is a very significant one. On behalf of Dravidar Kazhagam, we welcome and appreciate the unity of the Tamils of the world for a common cause.

V.Anburaj, Headquarters Secretary of Dravidar Kazhagam is going to take part in the rally. Dr. Soma Ilangovan, Director of Periyar International, Pennsylvania and other comrades are also taking part in this rally.

We would like to add that after taking into account the outcome of this rally in New York, and considering the circumstances, Dravidar Kazhagam will decide on the future course of action to be taken.

We earnestly request the political parties, other organizations and people of Tamil Nadu to come forward to insist the Government of India to act speedily on this issue, transcending their political differences.

(WITH COURTESY: TRANS CURRENTS-20.5.2011)

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற மெழுவர்த்தி ஊர்வலம்







18.05.2011 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற மெழுவர்த்தி ஊர்வலம்

Thursday, May 19, 2011

குற்றவாளி ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடு அய்.நா.முன்பு முழு ஒரு நாள் போராட்டம்





மனிதப் படுகொலைகள் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடு என்று அய்.நா. முன்பு முழு நாள் போராட்டம் 18.05.2011 அன்று நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை நிலையச் செயலாளரும், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் அதன் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

மே 18 அன்று நியூயார்க்கில் அய்க்கிய நாட்டு சபை முன்பு போராட்டம் ஒரு நாள் முழுதும் அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகரில் அய்க்கிய நாட்டுச் சபை முன்னர் மாபெரும் போராட்டம் நடை பெற்றது.

கனடா,அமெரிக்கா வாழ் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும், அவர்களுடைய அமெரிக்க நண்பர்களும் குடும்பங்களாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். காலை 10 மணி முதல் "குற்றவாளி ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடு", "அய்க்கிய நாடே! போர்க்குற்றத்தை விசாரித்து நடவடிக்கையெடு" என்று பேரொலியுடன் போராட்டம் நடத்தினர்.

பல் வேறு செய்தி, தொலைக்காட்சி, வானொலி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பியும், வந்திருந்த முக்கியமானவர்களைப் பேட்டியெடுத்துக் கொண்டு மிருந்தனர்.

கடும் மழையையையும் பொருட்படுத்தாது அனைவரும் நாள் முழுதும் நின்று போராடினர். பேச்சாளர்களும் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பேசினார்கள். அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர், உலகின் பல்வேறு தமிழினப் பற்றாளர்களின் செய்திகள் படிக்கப்பட்டன.

அன்புராஜ், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையைப் படித்தார். மிகவும் புகழ் பெற்ற அய்க்கிய நாட்டு செய்தியாளர் மேத்யூ லீ மற்றும் பல செய்தியாளர்களுடன் அளவளாவினார். தமிழ் நாட்டு முயற்சிகளை எடுத்துச் சொன்னார். தாய்த் தமிழ் நாட்டு மக்கள் முயன்றும், எம் உடன் பிறப்புகளைக் காப்பாற்ற முடிய வில்லையே என்ற ஏக்கமும், ஆதங்கமும் அவருடன் உரையாடிய தமிழர்களின் தாங்க முடியாத துயரமாக இருந்தது. அமெரிக்க, கனடிய தமிழ்த் தலைவர்கள் உரையாற்றினர்.

தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் உணர்ச்சிபூர்வ மாக உரையாற்றினார். நடக்க இருக்கும் செயல்பாடுகளை அறிவித்தார்.

மாலையில் இறந்த தமிழர்களுக்காக ஒளி அஞ்சலி பிடித்த வண்ணம் மக்கள் இருக்கையில் இசை இசைக்கப்பட்டது.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டனர்.

இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடு உலகை உலுக்கட்டும் என்று கூறி அனைவரும் விடை பெற்றனர்.

முள்ளி வாய்க்கால் நினைவு நாளையொட்டி மதுரையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்















மதுரையில் மே 17 மாலை முள்ளி வாய்க்கால் நினைவு நாள் மற்றும் தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமான ராஜபட்சே, சோனியா மன்மோகன் ஆகியோர் மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்க ஐ.நாவை வலியுறுத்தி மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை சந்திப்பு அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் மதுரையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்பினர், இடது சாரி மக்கள் விடுதலை அமைப்பினர், பெரியாரிய, தலித்திய அமைப்பினர், முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம், முத்துக்குமார் எழுச்சிப் பாசறை ,ஈழ, இன உணர்வாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி உணர்வு பூர்வமாக எழுச்சியாக நடைபெற்றது.

இனவெறியன் ராஜபக்சேவைத் தூக்கிலிட வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் முழுக்கம்





முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்தோர் நினைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை அசோக்நகர் தமிழ்மண் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் மே 18ஆம் தேதியை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைத் தூக்கிலிட வேண்டும் என்று அனைவரும் முழுக்கமிட்டனர்.

பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா











பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர் மீதான இன அழிப்பு நினைவு நாளை பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நினைவேந்தல் செய்தனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு 18-05-2011 அன்று மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்றது.

அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், ஈகச்சுடரை கப்டன் நாவலன் அல்லது நிதியரசன் என அழைக்கப்படும் சிவானந்தம் ராஜனிகாந்தின் சகோதரர் சுரேஸ் ஏற்றி வைத்தார்.
அரங்க நிகழ்வுகள் இடம்பெற்ற அதேவேளை, முள்ளிவாய்க்கால் உட்பட தாயகத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான மலர் வணக்கம் இடம்பெற்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக லலிந்திக்கா விஜயநாதன் ஆங்கிலத்தில் ஆரம்ப உரை நிகழ்த்திருந்தார்.

• இவரைத் தொடர்ந்து பிரித்தானிய தமிழ் இளையோர் சார்பாக ஆர்.பைரவி,
• சமூகங்களை குற்றவாளிகள் ஆக்குவதற்கு எதிராக பரப்புரை அமைப்பைச் சேர்ந்த மனித உரிமையாளர் ஹியூகோ சால்ரன்,
• பிரித்தானிய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான தாராண்மைவாதக் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சைமன் ஹியூஸ்,
• பிரித்தானிய தேசிய ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர் மார்டின் பவல் டேவிஸ்,
• லண்டன் அதிகார சபையைச் சேர்ந்த றோஜர் ஈவான்ஸ்,
• அக்ட் நவ் அமைப்பின் இயக்குனர் ரிம் மார்ட்டின், மற்றும் டெபோறா லெங்,
• போரை நிறுத்துவதற்கான பரப்புரை அமைப்பின் உறுப்பினர் ஜோன் றைஸ்,
• ஹார்லோ தொகுதி ஆளும் மரபுவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் ஹாபொன்,
• ஈலிங் நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மாவின் நாடாளுமன்ற செயலும், ஈலிங்; நகரசபை உறுப்பினருமான ஜூலியன் பெல்,
• லண்டன் தொகுதியைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களான தொழிற்கட்சியின் குளோட் மோர்ஸ், தாராண்மைவாதக் கட்சியின் பரோன்ஸ் லுட்போர்ட்,
• ஈஸ்லிங்ரன் வடக்கு தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பன்,
• பசிட்லோ பிரதேச தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மான்,
• கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக அரசியல் மற்றும் மனித உரிமைகளுக்கான விரிவுரையாளர் அன்றூ கிக்கின்பொட்டம்,
• சவுத் என்ட் பிரதேச சபை உறுப்பினர் கலாநிதி றொபின்,
• இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் ஜனனி ஜனநாயகம்,
• பிரித்தானியா தமிழர் பேரவை சார்பாக ரவிக்குமார்,
• உலகத் தமிழர் பேரவையின் (ஜி.ரி.எஃப்) தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்,ஜே.இம்மானுவேல் அடிகளார் ஆகியோர் உரையாற்றினர்.

இவற்றுடன் பாடசாலை சிறுவர்கள் மற்றும் திருமதி றூபி குமார், திருமதி நிவேதா உதயராஜன், மற்றும் ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் வழங்கிய அரங்க நிகழ்வும் இடம்பெற்றது.

இதேவேளை, அனைத்துலக போர்க்குற்ற சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள பரப்புரையை, ஆளும் மரபுவாதக் கட்சியின் இல்போர்ட் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் ஆரம்பித்து வைத்து உரையாற்றி இருந்தார்.

நிறைவாக நாடு நடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரனின் உரை ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வுகளின் நடுவே அரங்கத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மீது உறுதி எடுக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் பாடல் ஒன்றும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அந்த உறுதியுரையில்,
முள்ளிவாய்க்கால் வெளியில் மூச்சாக்க கலந்த ஆயிரம் ஆயிரம் எம் சொந்தங்கள் மீது உறுதி!
அடக்குமுறை ஆக்கிரமிப்பின் கீழ் மாற்றுவலுவுள்ளோர் ஆக்கப்பட்டு தவிக்கும் ஆயிரம் ஆயிரம் எம் சொந்தங்கள் மீது உறுதி!
அன்னை, தந்தை இழந்து இளமையிலே தனிமையாக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் எம்மினக் குழந்தைகள் மீது உறுதி!
சிங்கள ஆக்கிரமிப்பால் நாதியற்றோராகி சொந்த நாட்டில் தவிக்கும் எம் சொந்தங்கள் மீது உறுதி!
தாய் மண் மீட்கும் புனிதப் பணியில் விதையாகிய எம் வீர மறவர்கள் மீது உறுதி!
எம் தாய் மண்ணின் விடுதலை கிடைக்கும்வரை எம்மினத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்தும் போராடுவோம். இது அந்த முள்ளிவாய்க்கால் மண் மீது உறுதி!
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அரங்கத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரையில் காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்தகொண்ட அனைத்து மக்களும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்த அதேவேளை, தமிழ் மக்கள் மீதான தொடரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தி தீர்வைப் பெறவும், போர்க்குற்ற நபர்களை நீதியின் முன்னிறுத்தவும் சபதம் எடுத்துக் கொண்டதுடன், அதற்காகாகத் தொடர்ந்து பாடுபடுவோம் எனவும் உறுதி எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியச்சிறையில் முள்ளிவாய்க்கால் துக்க தினம் கடைபிடிப்பு



முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தித்தில் உயிரிழந்த மக்களை நினைவு கோரும் வகையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் 18.05.2011 அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இலங்கையின் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி இறுதிக்கட்ட யுத்தம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தினத்தை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தேசிய துக்கதினமாக கடைபிடித்து வருகிறார்கள்.

பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி: விஸ்வநாதன் உருத்திரகுமாரன்



தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள் வாங்கி – நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி படுத்திடும் நாளாக இது அமைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தமிழீழ தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதனுடைய முழுமையான விபரம் :

அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!

இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்!

சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள்.
தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள்.
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் வழிநடத்தலாலும் மாவீரர்களின் ஈகத்தாலும் வீரத்தாலும் உருவாக்கப்பட்ட நிகழ்வுபூர்வமான தமிழீழம்; தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை உருவாக்கிய நிகழ்வுபூர்வமான தமிழீழம் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு முழுமையாக உள்ளான கரி நாள்.
சிங்கள இனவாதப்ப+தத்தின் கோரதாண்டவத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே கொல்லப்பட்டு நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலை நடந்தேறிய நாட்களின் உச்சமாக அமைந்;து விட்ட நாள்.
இந்த நாளில் சிங்களஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு தமது இன்னுயிர்களை இழந்த அனைத்துத் தமிழர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது. சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத் தினத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏன் தமிழீழ தேசிய துக்க நாளாகப் பிரகடனப்படுத்தியது?
ஈழத் தமிழர் தேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு துன்பமும் துயரமும் அவலமும் நிரம்பியதாக நமது மக்களின் வாழ்வு போரின் இறுதிக் கட்ட நாட்களில் சிங்களத்தால் சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தது.

மக்கள் தம் வாழ்விடங்களெங்கும் – வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள்.
நடக்கும்போதும், படிக்கும்போதும், உண்ணும்போதும், உடுக்கும் போதும், உறங்கும்போதும், கூடும்போதும், இயலாது இருக்கும் போதும் எங்குமே எப்போதுமே கலைத்துக் கலைத்து வேட்டையாடப்பட்டார்கள்.

குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக்; கொழுத்துவதைப்போல – மூட்டைப்பச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்துக் காலால் நசுக்குவதைப்போல – நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.
தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட இந்த நினைவுகள் தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளாக தலைமுறை தலைமுறையாக உலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலைக்கப் போகின்ற நினைவுகள்.

இந் நினைவுகளைப் பேணுவதற்கும் தலைமுறை தலைமுறையாய் எடுத்துச் செல்வதற்கும், தமிழீழ மக்கள் அடைந்த துயரையும் அவலத்தையும் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் நினைவு கொள்ளக்கூடிய வகையில் மே 18 ஆம் நாளைத் தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகனடம் செய்துள்ளது.

இத் தேசிய துக்கநாளையும் ஒவ்வொரு வருடமும் மே 12-18 க்கு இடைப்பட்ட நாட்களினை இனப் படுகொலையின் நினைவேந்தல் வாரமாகவும் துயர் பகிரவும், உணர்வு பெற்று, எழுச்சி கொள்ளவும் உரியவகையில் நடைமுறைப்படுத்துவது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இவ் வருடம் முதற் கொண்டு இந் நடைமுறை ஆரப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ( Collective memory) ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ( holocaust) எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.

துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை. ய+த மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது. பலஸ்தீன மக்களுக்கென எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தனிஅரசும் இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டுநினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப்
பேணிவருவதனால்தான் சாத்தியமாகப் போகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கும் இவ்வுதாரணங்கள் மிகவும் பொருந்தப் போகின்றன.

தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள் வாங்கி – நாம்ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி ப+ண்டிடும் நாளாக இது அமைய வேண்டும்.

நமது மக்களை இனஅழிப்பு செய்தவர்களை, நமது மக்களுக்கெதிராக குற்றங்கள் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நாம் உத்வேகத்துடன் செயற்படுவதற்கு திடசங்கற்பம் ப+ணும் நாளாக இது அமைய வேண்டும்.
சிங்களத்தால் சீரழிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதுணையாக நின்று செயலாற்ற வேண்டிய அவசியத்தை நமக்குள் நன்கு உள்ளிருத்திக் கொள்ளும் நாளாக இது அமைய வேண்டும்.

இவை குறித்த செயற்பாடுகளை நாம் இன்னும் துணிவுடன் முடுக்கி விட இந்த நாள் உத்வேகம் கொடுக்கும் நாளாக அமைய வேண்டும்.
தமிழீழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாகத் தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. தேசங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

ஆனால் இச் சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும்போது மட்டும்தான் செயல் வடிவம் பெறுகின்றன. நீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தே இந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன. இத்தகையதொரு உலக ஒழுங்கில்தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது இன்று நாம் எதிர் நோக்கும் முக்கியமான ஒரு சவால். இத்தகையதொரு சவால் மிக்க ஒரு சூழலில் நமக்குக் கிடைக்கக்கூடிய சாதகமான வாய்ப்புக்களையெல்லாம் தவற விடாமல் பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த வகையில், தற்போது வெளிவந்துள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினை நாம் சாதகதாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ் அறிக்கை சிறிலங்கா அரசு புரிந்துள்ள போர்க்குற்றங்களை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னர் 140,000 வரையிலான தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என கணக்கிட முடியாததாய் உள்ளது என்பதனையும் இவ் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதே வேளை இவற்றை சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன ஒழிப்பின் (பநழெஉனைந) ஒரு அங்கமாக இவ் அறிக்கை வகைப்படுத்தவில்லை.
இருந்து போதும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டிய சிறிலங்கா படையினர் புரிந்திருக்கக் கூடியதான மோசமான ஐந்து வகை போர்க்குற்ற நடடிக்கைகைளில் நான்கு இனஅழிப்பின் பாற்பட்டவையென தெளிவாக ஆவணப்;படுத்தப்பட்டுள்ளது.
மக்களை வகைதொகையின்றி எறிகணை வீச்சுக்களால் கொலை செய்தமை, மருத்துவமனைகள் மீதும் மனிதாபிமான இலக்குகள் மீதும் எறிகணை மற்றும் குண்டு வீச்சுக்களை நிகழ்த்தியமை, மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க மறுத்தமை, சிறிலங்கா அரசு புரிந்த மனித உரிமை மீறல்கள் – இவையெல்லாம் அனைத்துலகச் சட்டங்களின்படி இனஅழிப்பின் பாற்பட்டதாக அமையக்கூடியதான குற்றங்கள்தான்.
இவை தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பாலும் சிங்களவர்களையே கொண்ட சிறி லங்கா அரசின் அரசியல், இராணுவத்தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்களாக அமைந்துள்ளன. இச் சர்வதேச குற்றங்களை திட்டமிட்ட முறையில் அரசியல் ராணுவத்தலைமைகள் நிறைவேற்றியுள்ளதனால் அவர்கள் இதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவேணடு; ம். மேலும், நிபுணர் குழுவால் கவனமாக ஆராயப்பட்டு பெறப்பட்ட மேலதிக சான்றுகளின் படி யுத்தம் முடிவடைந்த பின்பும் கூட தமிழ் மக்கள் இன அடிப்படையில் சித்திரவதை, பலவந்தமான சிறைப்படுத்தல,; ஏனைய வகையில் அமைந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்பதும் இவை இலங்கை அரசின் நடைமுறைக் கொள்கையின் பால் அமைந்தவையே என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையின்படி தமிழ் மக்களுக்கு ஏதிரான இனப்படுகொலை இங்கு நிகழ்த்தப் பட்டுள்ளது என்பது இதன் மூலம் மிகவும் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

இருந்து போதும் அரசுகள் தமது அரசியல் நலன்களின் அடிப்படையிலும்; இனப்படுகொலைக் குற்றச்சாட்டு ஏற்படுத்தக்கூடிய அரசியல் விளைவுகளின் அடிப்படையிலும் சிறிலங்கா அரசு புரிந்த குற்றங்களை இனஅழிப்பாக வகைப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றன. இதன் எதிரொலியாகவே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையும் இவற்றை இனஅழிப்பின் அங்கமாக குறிப்பிடாமையினை நாம் நோக்க வேண்டும்.

இதனால் இன்று நம்முன்னால் உள்ள ஒரு முக்கியமான பணி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைத் துணையாகக் கொண்டு சிறிலங்கா அரசு புரிந்தது இனப்படுகொலைதான் என்பதனை அனைத்துலக அரங்கில் நிலை நிறுத்துவதற்காகச் செயற்படவேண்டியதே. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கான செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினை எவரும் குப்பைத்தொட்டிக்குள் வீசி விட முடியாத அளவுக்கு வலுவான அனைத்துலக சமூகத்தின் உணர்வலைகளைத் தட்டியெழுப்பி, இவ் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்ற அனைத்துலக கருத்தைக் காத்திரமாக உருவாக்குவது முக்கியமானது உன உணர்ந்து செயற்படுகிறோம்.

அன்பான மக்களே!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கருத்துருவாக அறிவிக்கப்பட்டபோது ஒரு புதிய எண்ணக்கருவாக இருந்த இதன் சாத்தியப்பாடு குறித்துப் பலதரப்பிலும் பல்வேறுவகையான சந்தேகங்கள் இருந்தன. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தும் அச்சுறுத்தல்கள் இருந்தன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கூட்டங்களை நடாத்தவதிலும் கூட இடையறுகள் இருந்துன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான நாடு தழுவிய செயற்குழுக்களை அமைப்பதலும் தடங்கல்கள் வந்தன. தேர்தல்களை நடாத்துவதிலும் சவால்கள் எழுந்தன. இருந்த போதும் இச் சவால்கள் எல்லாவற்றையும் தாண்டி நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாக ஈன்றெடுத்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தை தவழ்ந்து, தற்போது ஒரு வயதை நிறைவு செய்த நிலையில் நிமிர்ந்து நடைபயிலத் தொடங்குகிறது. எந்த ஒரு புதிய அமைப்பும் உருவாகும்போது அவ்வமைப்பு தனது நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி முன்னெடுக்கச் சிறிது காலம் தேவைப்படும். இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் பொருந்தும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிதானமாக அதேவேளை திடமாகத் தனது காலடிகளை முன்னெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. எமது கருத்தக்களை அனைத்துலக கொள்கைவகுப்பாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். ஊடகங்கள், குறிப்பாக இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும் உள்ள பிரதான ஊடகங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தக்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.

இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கமே ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் வெற்றிதான் என்பதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரவேட்கையினை எவராலும் நசுக்கி விட முடியாது என்ற செய்தியினை சிங்களப் பேரினவாதிகளுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.

சுதந்திரத் தமிழீழ அரசினை அமைப்பதற்குரிய அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஒரு பலமான அடித்தளத்தை இடும் செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது. உலகில் பலமிக்க அரசுகளின் நலன்கள், ஒரு பிரச்சினையில் இந்த அரசுகள் எடுக்கும் நிலைப்பாடுகள் காத்திரமான பங்கினை வகிக்கும் என்பதனை நாம் கவனத்திற் கொண்டு இம் முயற்சியினை மேற் கொண்டுள்ளோம். இதவேளை ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு நிலைமைகளுக்கும் உள்நாட்டுக் கொள்கைகைளுக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருக்கும் நிலைமைகளையும் உள்வாங்கியே எமது விய+கங்களை வகுத்து வருகிறோம்.

அன்பான மக்களே!

இன்றைய நாளில் அனைத்துலக அரசியல் தளத்தில் ஆதரவிiயுனம் அங்கீகாரத்தினையும் வென்றெடுப்பதற்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளையும், கடைப்படிக்கும், கடைப்பிடிக்கவிருக்கும் அணுகுமுறையினைக் வெளிப்படுத்துவது பொருத்தமுடையது எனக் கருதுகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவினையும் அங்கீகாரத்தையும் வென்றெடுப்பதற்கு நாம் நமது அரசாங்கத்தை ஒரு வலுமையமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்;. பலத்தினதும் நலன்களதும்; அச்சில் சுழலும் இவ் உலக ஒழுங்கில் உலகின் கவனத்தை நாம் நமது பக்கம் ஈர்க்க வேண்டுமானால் நாம் பலமிக்கவர்களாக மிளிர வேண்டும்.

ஈழத் தாயகத்தின் புவியியல் அமைவிடம், தாயக மக்களின் தளராத விடுதலை உணர்வு, புலம் பெயர் மக்களின் தியாகப்பற்றும் செயற்பாடுகளும், உலகம் முழுவதும் பரந்துள்ள 80 மில்லியன் தமிழர்களும் ஒருங்கு சேரந்து எழுப்பக்கூடிய தோழமை உணர்வு – இவையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்குத் தேவையான வலுவினைத் தரக்கூடியவை.

இத்தகைய ஒரு வலுமையத்தை நாம் உருவாக்கிக் கொள்வது தொடர்பாக நம்பிக்கை தரும் வகையில் முன்னேறத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்கம் செய்வதில் தமிழின உணர்வாளர்கள் பேராசிரியர் சரஸ்வதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தை அமைத்து முனைப்பாக ஈடுபட்டு வருவது நமது நம்பிக்கைகைகளை மேலும் வலுவடையச் செய்கிறது.

இன்றைய உலக ஒழுங்கு இயங்கும் விதத்தை புரிந்து கொண்டு இயங்கும் நாம் உலக அரசகளுடன் முதற்கண் குறி வைப்பது அவர்களின் வெளிப்படையான அங்கீகாரத்தை அல்ல. நாம் இயங்குவதற்கும், நமது நாடு கடந்த அரசாங்கத்தை செயற்படுத்துவதற்கும் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும் வகையிலான ஒரு மறைமுகமாக அங்கீகாரத்தில் இருந்துதான் நாம் நமது இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும் ஜனநாய விழுமியங்களும் எமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாயிருக்கின்றன. இதன் அடுத்த கட்டம் வெளிப்படையான அங்கீகாரத்தை நோக்கியதாக இருக்கும். இத்தகைய மறைமுகமான மற்றும் வெளிப்படையான அங்கீகாரம் நாம் நமது இலக்கு குறித்து முன்னேறுவதற்குத் துணைபுரியக்கூடியவை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசை எதிர் கொள்ளக்கூடிய ஒரு வலுமையமாக உருவெடுப்பதற்கான அடிப்படைகளை நிலைநிறுத்தி, தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப்;பிராந்தியத்தினதும் புவிசார் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தவிர்க்கமுடியாத அங்கமாக நிலைபெறுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் நமது செயற்பாடுகளை முன்னெடுக்க முனைகிறோம்;.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள நமது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்குவதனைத்தவிர வேறுவழியில்லை என்ற கருத்துக்கு கூடுதலான அனைத்துலக ஆதரவினைத் தேடுவதில் நாம் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கும் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்காது – சமத்துவத்துடன் நடாத்தாது சிங்கள மேலாதிக்கத்தினை நிலைநிறுத்தும் முயற்சிகளும் எமது தனியரசு நிலைப்பாட்டை மேலும் வலும்படுத்த துணைநிற்பவையாக நாம் உணர்கிறோம்..
தமிழீழத்தனியரசு அமைவது பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் நன்மைகளோடும் ஒத்துப்போகக்கூடியது என்பதனையும் தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தினதும் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் துணைபுரியக்கூடியது என்பதனையும் கருத்துநிiயில் உறுதியாக முன்வைத்து வருகிறோம்.

இலங்கைத்தீவில் புவிசார் அரசியல் அடிப்படையில் அக்கறை செலுத்தும் பலமிக்க அரசுகளில் எவற்றின் நலன்கள் ஈழத் தமிழ் நலன்களோடு ஒரேதளத்தில் சந்திக்கக்கூடியவை என்பதனை ஆராய்ந்து, அவற்றை அரசியல் இராஜதந்திர அறிவியல் மட்டத்தில் முன்வைத்து, இவ் விடயம் தொடர்பாக கொள்கைவகுப்பாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இம் முயற்சியினை வலுப்படுத்துவதற்காக நாம் ஒரு ஆய்வுநிறுவனத்தையும் உருவாக்கம் செய்து வருகிறோம்.
என்றும் தணியாத ஈழத் தமிழரின் சுதந்திரத் தாகத்தினை ஒரு இம்மி கூட உங்களால் அடக்கி நசுக்க முடியவில்லை என்ற செய்தியினை சிங்கள தேசத்துக்கு தெளிவான செய்தியாக நாம் இன்று மீண்டும் ஒருமுறை தெரிவிக்க விரும்புகிறோம். ஐ நா முன்பும்இ ஜெனீவாவிலும் இன்னும் பல்வேறு நகரங்களிலும் வீதிகளிலும் ஈழத் தமிழர் ஒன்று கூடி ஒத்த குரலில் இன்று முறையிடுவது எல்லாம் அவர்கள் தமக்கான சுய நிர்ணய உரிமை மீது கொண்டுள்ள அசையாத நம்பிக்கையையும் பற்றுறுதியையும் மிகத் தெளிவாகவே குறியிட்டு நிற்கிறது.
ஈழத் தமிழரது சுதந்திர வேட்கைத் தணல் என்றும் இல்லாதவாறு தீவிரமாகவே வெந்து கொண்டிருக்கிறது. தமது முழுமையான விடுதலை மேல் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அவர்களது அயராத உழைப்புக்கும் போராட்டத்துக்கும் உந்து சக்தியாக அவர்களை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நசுக்கப் பட்டோம் என்று நலிந்து போகாமல்இ அடக்க வந்தார்கள் என்பதால் அடங்கிப் போகாமல் இழப்புக்கள் எல்லாவற்றின் மத்தியிலும் எமது பொறுப்புக்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு எமது தோள்களில் சுமத்தப் பட்ட பாரங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு போராட்டப் பாதையில் நாம் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இரண்டு ஆண்டுகளாக நாம் எல்லாம் சேர்ந்து மேற்கொண்ட உழைப்பு வீண் போகவில்லை. எமது தொடர்ச்சியான போராட்டத்தின் பலாபலன்கள் இப்போது வெளிவரத் தொடங்கி உள்ளன. சிங்கள அரச இராணுவ தலைவர்கள் விரும்பிய படியெல்லாம் வெளிப்படையாக பயணம் பண்ண முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளதை நாம் இன்று காண்கின்றோம். அவர்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்கு ஓடலாமே ஒழிய பதவியுடனான சட்ட விலக்களிப்பு ( Immunity) என்ற முகத்திரையின் பின்னால் என்றைக்கும் ஒழித்திருக்க முடியாது என்ற உண்மையை இன்று நாம் சிங்கள தேசத்துக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம். சர்வதேசக் குற்றச் சாட்டுக்களின் பெயரால் அம்முகத்திரை ஏற்கெனவே சிதைக்கப் பட்டு வருவதனை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். நாங்கள் அனைவரும் இன்னும் துணிவுடனும் விவேகத்துடனும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உண்டு.

அனைத்துலகச் சமூகத்தினை நம்மை நோக்கித் திரும்பச் செய்ய நாம் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட, பல்வேறு அரசியல் இராஜதந்திர நகர்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழீழத்தின் நலனையும் உலகின் பலம் மிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணைய வைக்க முடியும் என்பது குறித்து கூடுதல் கவனம் கொடுக்க வேண்டியள்ளது. உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வீச்சாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நாம் தனித்து நிற்காது உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்புக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒருங்குபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

நன்றி

விஸ்வநாதன் உருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தேவை அதிரடி – குமுதம் தலையங்கம்



மீண்டும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து ஒரு தூதுக் குழு இந்த வாரம் செல்ல இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் இங்கே வருவாராம். பேச்சுவார்த்தை நடத்துவாராம். விருந்தினர் வீட்டில் காபி சாப்பிட்டு வருவது போல் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைப் போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது.இது போன்ற குழுக்கள் போவதும் வருவதுமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவரை உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.ஈழத் தமிழர்களின் கண்ணீரும் கவலையும் அப்படியேதான் இருக்கிறது.

இந்தமுறை செல்வது சிங்கள அரசின் போர்க்குற்றங்களைப் பற்றி விசாரிக்கவாம். சிங்களர்களின் கொடூரமான போர்க்குற்றங்களை பலர் சொல்லியிருக்கிறார்கள். காட்சிகளாய் வெளிவந்திருக்கின்றன. இப்போது ஐ.நா.சபையும் தனது விசாரணை அறிக்கையில் சிங்கள அரசு போர்க்குற்றவாளிதான் என்று தெளிவாய் குறிப்பிட்டிருக்கிறது.இதற்கு மேல் என்ன விசாரணைக் குழு வேண்டியிருக்கிறது என்று புரியவில்லை.

ஐ.நா. சபை இந்த அறிக்கையைத் தந்ததுமே இலங்கைக்கு கொடுத்துக் கொண்டிருந்த வர்த்தகச் சலுகைகளை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கிறது. அடுத்த நடவடிக்கைகளைக் குறித்து தங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்க இருக்கிறது.உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், தமிழர்களைக் கொன்று குவித்து போர்க்குற்றங்கள் புரிந்துள்ள சிங்கள அரசின் மீது இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழ் இனத்தின் வாழ்க்கைப் பிரச்னை என்பதை தூது செல்லும் மேனன்களும் ராவ்களும் உணர்ந்ததாக தெரியவில்லை.

இப்போதைய தேவை விசாரணைக் குழுக்கள் அல்ல, தமிழர் துயர் தீர்க்கும் அதிரடி நடவடிக்கைகள்.

- குமுதம்

மே 18 : நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்



மே 18 வேலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்

1. தமிழக மக்களுக்கு நன்றி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி, திட்டமிட்டு தமிழினப் படுகொலைப் போரை நடத்திய சிங்கள பௌத்த இனவாத அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்து துணைபோன, தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய காங்கிரஸ் அரசிற்கு பாடம் புகட்ட காங்கிரஸ் கட்சியை தமிழ் மண்ணில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் துடைத்தெறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், இதர தமிழ்த் தேச இயக்கங்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து தமிழினத்தின் கோபத்தை டெல்லிக்கு காட்டிய தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.

ஈழத் தமிழினத்தின் படுகொலைக்குத் தெரிந்தே துணைபோன தி.மு.க. அரசையும், தமிழினத்தை பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளிய அதன் திட்டங்களையும், குடும்ப ஆட்சியை வலிமைப்படுத்தும் அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாலர் செந்தமிழன் சீமானும், அவருடைய தம்பிகளும் செய்த பரப்புரைக்கு முழுமையாகச் செவி சாய்த்து தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்றியுள்ளனர். அதற்காகவும் தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தமிழனத்தின் மானத்திற்கு சவாலாக நடைபெற்ற இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியோடு இணைந்து பணியாற்றிய தமிழ்த் தேச இயக்கங்களுக்கும், ஆங்காங்கு தங்களது சக்திக்கு உட்பட்ட அளவில் காங்கிரஸை வீழ்த்த பரப்புரை மேற்கொண்ட தமிழ்த் தேச அமைப்புகள் அனைத்திற்கும் நாம் தமிழர் கட்சி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

2. புதிய ஆட்சிக்கு வாழ்த்துகளும், நாம் தமிழரின் விண்ணப்பமும்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழ மக்கள் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளனர். தமிழக மக்கள் தந்த நிகரற்ற ஆதரவினால் அ.இ.அ.தி.மு.க. தனித்தப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு முதலைமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும் அவரது அமைச்சரவைக்கும் நாம் தமிழர் கட்சி தனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி உறுதியானதும் அளித்த பேட்டியில், ஈழத்தில் தமிழினத்தை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்; அதற்கு இந்திய அரசு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களுக்கு கௌரவமான கண்ணியமான ஒரு வாழ்க்கையை அமைத்துத்தர சிறிலங்க அரசு தவறுமானால், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறிய பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.


ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு

ஈழத் தமிழினம் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி கீழ்க்கண்ட கோரிக்கைகளை வைக்கிறது.

ஈழத் தமிழினத்தை முற்றாக அழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இனப் படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். பெரும் பாலியல் கொடுமைக்கு தமிழ்ப் பெண்கள் இன்றளவும் ஆட்படுத்தப்படுகின்றனர். தெற்காசிய வல்லாதிக்கங்களின் பேராதரவுடன் நடத்தப்பட்ட இனப் படுகொலைப் போரில் ஈழத் தமிழினம் சிதைக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசம் சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னமும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் தேவைப்படும் அத்தியாவசிய உதவிகளை அளிக்க முன்வரும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தமிழர் பகுதிகளுக்குள் அனுமதிக்க சிங்கள பௌத்த இனவெறி அரசு மறுத்து வருகிறது. அவர்களுக்கு நிதி அனுப்பினாலும் அதனை அனுமதிக்க மறுத்து வருகிறது.

தமிழ் மக்களின் காணிகள் (நிலங்கள்) பறிக்கப்பட்டு தமிழ் மண்ணில் குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. தமிழர் வாழ்ந்த நகரங்களின் பெரும் பகுதிகள் இன்று சிறிலங்க இராணுவப் பகுதிகளாக (Cantonments) அறிவிக்கப்பட்டு, பெரும் முகாம்களும், இராணுவக் குடியிருப்புகளும் கட்டப்படுகின்றன. பிழைக்க வழியேதுமற்ற நிலையில் மிக ஆபத்தான கண்ணி வெடி அகற்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். மொத்தத்தில் வாழ வழியுமின்றி, உழைக்க காணியுமின்றி ஈழத் தமிழினம் சிங்கள – பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலிற்கு இன்றளவும் ஆட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில்தான், தமிழர்களுக்கு எதிரான அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரையின்படி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் எழுந்துள்ளது. அந்தக் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்றும், அந்த மக்களுக்கு அரசியல் ரீதியான நியாயம் கிடைக்க பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு முழுமையாக துணை நிற்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் வைக்கிறது.

தமிழீழ அகதிகள் நிலை மாற வேண்டும்

ஈழத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்துவந்த இனப் படுகொலைப் போர் முடிந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தாலும் இன்னமும் அதன் இன அழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் போரின்போது தாய்த்தமிழ் மண்ணான நமது தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களின் அவலத்தை பல இதழ்களும், ஊடகங்களும் ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்தன. ஆயினும், அம்மக்களின் நிலையில் மாற்றமில்லை. இந்த நாட்டிற்கு வந்து தஞ்சமடைந்த திபெத்தியர்கள் அகதிகளுக்கு உரிய அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிறைவுடன் வாழ்ந்து வருகையில், தாய்த்தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை அவலம் நிறைந்ததாக உள்ளது. அவர்களை தமிழக காவல் துறையின் கியூ பிரிவு காவல்துறையினர் இழிவுபடுத்துகின்றனர். அவர்கள் வெளியில் சென்று பணிபுரிய சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. அம்மக்களின் பிள்ளைகள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பும் இல்லை, வசதிகளும் இல்லை. மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக அம்மக்கள் நடத்தப்படுகிறார்கள். இந்நிலையை மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மாற்றிட வேண்டும். அவர்களும் கௌரவமான ஒரு வாழ்க்கை நடத்திட எல்லா விதத்திலும் உதவி புரிந்திட வேண்டும்.


சிறப்பு முகாம்களை அகற்ற வேண்டும்


தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் பலரை ஐயத்தின் பேரில் வழ்க்கேதுமின்றி, வழக்கு இருந்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமலும், நீதிமன்றத்தில் அவர்கள் பிணைய விடுதலை பெறுவதைத் தடுப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான உரிமைகளை மறுத்து, சிறப்பு முகாம் என்ற பெயரில் அநியாயமாக சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்து அல்லது விடுதலை செய் என்று நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேச அரசியல் இயக்கங்கள் பலவும் பல முறை போராட்டம் நடத்தியுள்ளன. அதன் விளைவாக அறுபதுக்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இன்னும் சிலர் பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்படுத்தல் சட்ட விரோதமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது. எனவே இதற்கு மேலும் அவர்களை சிறையில் வைத்திருக்காமல் உடனடிக விடுதலை செய்து இதர முகாம்களில் உள்ள அவர்களின் உறவினர்களோடு வாழ தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கம் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறது.

இராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டோருக்கு விடுதலை

முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரும், ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நளினி, இரவி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்படுள்ளனர். 1991-ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் 20 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் உள்ளனர். நளினி, இரவி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைவாச விதிகளின்படி தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், அதற்குத் தாங்கள் தகுதியானவர்களே என்றும் நீதிமன்றம் சென்று சட்டரீதியாக நிரூபித்தும் உள்ளனர். ஆனால், தமிழக அரசு கூட்டணி அரசியல் தர்மம் என்ற பெயரில் இல்லாத பொல்லாத காரணங்களைக் கூறி நியாயமாக அவர்கள் பெறக்கூடிய விடுதலையைத் தடுத்து வந்தது. இந்த நிலை தொடர்வது மானுட மனப்பாங்கிற்கு உகந்ததல்ல.

மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற – காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயில்ன் தம்பி கோபால் கோட்சே விடுவிக்கப்பட்டு புனேயில் வாழ்ந்து வருகிறார். எனவே ஆயுள் தண்டனை என்ற காரணத்தைக் காட்டி எந்த ஒரு குற்றவாளியையும் நிரந்தரமாக சிறைப்படுத்தி வைத்திருப்பது சிறைப்படுத்தலின் அடிப்படையாகத் திகழும் தத்துவத்திற்கு முரணானது ஆகும். எனவே இந்த நால்வரையும் விடுதலை செய்வதில் அரசுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவித்திடல் வேண்டும். அதன் மூலம் மனிதாபிமானத்தைத் தமிழக அரசு நிலைநிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அறிவு என்கிற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் நிலை இன்னமும் கவலைக்குரியது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக இவர்களும் சிறையில் உள்ளனர். 1998-ல் இவர்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து 13 ஆண்டுகளாக சாவை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர். ராஜீவ் கொலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாற்றப்பட்ட முக்கிய குற்றவாளீகள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர். கொலையாளிகளுக்கு இடமளித்தனர், கொலைக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது போன்ற சாதரண குற்றங்களுக்காக தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட ஒரு கொடும் தண்டனைக்கு உரியவர்கள்தானா? மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டாமா? 13 ஆண்டுகள் சாவை மட்டுமே எதிர்நோக்கி வாழ்ந்து வரும் இவர்களை இதற்கு மேலும் அதே நிலையில் வைத்து அவர்களை உயிருடன் கொல்லப்போகிறோமா? தண்டனை என்ற பெயரில் இவர்களின் வாழ்வுரிமை மறுப்பிற்கு போதுமான காரணங்கள் உள்ளனவா? இப்படி சிறையில் இருந்து இவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு இன்றுவரை எவரும் பதில் கூறவில்லையே!

19 வயதில் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, இளமை பறிக்கப்பட்டு 20 ஆண்டு காலமாக சிறையில் வாடுகிறானே பேரறிவாளன் – பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றம் அவனது வாழ்வை சூனியமாக்க போதுமானதா? அப்படி நாம் கருதுவோமானால் அது நியாயமானதா? என்கிற வினாக்களை ஈர நெஞ்சுடன் மாநில அரசிற்கு நாம் தமிழர் கட்சி எழுப்புகிறது.

ராஜீவ்காந்தி கொலையில் பல மர்மங்கள் உள்ளன. அவைகள் அவிழ்க்கப்படவில்லை. அவரை சதித்திட்டம் தீட்டி கொன்றது தமிழினமே என்று உறுதிப்படுத்திடவே இவர்கள் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இராஜீவ் கொலையை ஒரு கரணமாக்கியே ஈழத் தமிழர் இனப்படுகொலையை இந்திய அரசு ஆதரித்து உதவியது என்று இந்தியாவில் மட்டுமல்ல, சிறிலங்க அமைச்சர்களும் கூறுகின்றனர். இப்படி தமிழினத்தின் மீது அபாண்ட பழி சுமத்தி, அதையே காரணமாக்கி தமிழினத்தை அழித்துள்ளரே இது நியாயம்தானா என்ற வினாவை நாம் தமிழர் கட்சி எழுப்புகிறது.

’பழி ஒரு பக்கம்; பாவம் ஒரு பக்கம்’ எனும் முதுமொழி இராஜீவ் கொலைக்கு மிகவும் பொருத்தமானது. எனவே இராஜீவ் கொலையோடு பின்னியுள்ள அரசியலை ஒதுக்கிவிட்டு, மனிதாபிமான உணர்வோடு – வாழ்வுரிமையை மதித்து இன்றைய உலகம் செல்லும் பாதையில் சென்று – இந்த மூன்று பேரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து, அவர்கள் இத்தனை ஆண்டு காலம் சிறையில் இருந்ததே பெரும் தண்டனைதான் என்பதை சட்ட ரீதியாக எடுத்துக்கூறி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி இந்த மாபெரும் மக்கள் திரளின் பேராதரவோடு தமிழக அரசிற்கு முன்வைக்கிறது.

3. தமிழீழ விடுதலையை முன்னெடுப்போம்

முழு உரிமையுடனும், கண்ணியத்துடனும் இறையாண்மையுடனும் வாழ தமிழீழ மக்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்றும் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முடக்க தமிழினத்தையே அழித்தால் மட்டுமே முடியும் எனத் திட்டமிட்டு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, சிங்கள – பௌத்த இனவாத அரசு இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை கொன்று போரை முடித்த நாளின் இரண்டாவது நினைவு நாள் இன்று.

முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் எனும் இரண்டு சிறிய கிராமங்களுக்குள் சிங்கள – பௌத்த இனவாத அரசு நடத்திய இனப்படுகொலை போரின் இறுதி கட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் செலுத்துவதோடு எம் மண்ணையும் மக்களையும் காக்க களத்தில் நின்று போராடி தங்கள் இன்னுயிர் நீத்த போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி புரட்சிகரமான வீர வணக்கத்தை செலுத்துகிறது.

முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் படுகொலையோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்தது என்று நினைத்தன சிங்கள அரசும், அதற்கு உற்ற துணையாக நின்று தமிழினப் படுகொலையை முழுமையாக முடித்த டெல்லி அரசும். ஆனால், அது நடக்காது. தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகெங்கிலும் முன்னெடுக்கப்படும் என்பதை தமிழினிம் இன்று நிரூபித்து வருகிறது. தமிழீழ தேசத்தின் விடுதலை என்ற அந்த நியாயமான அரசில் ஆர்வத்திற்கு வடிவம் தர நாம் தமிழர் கட்சி அனைத்து வகையிலும் தொடர்ந்து போராடும் என்பதை இத்தீர்மானத்தின் மூலம் வலிமையாக உறுதி செய்கிறது.

4. ஐ.நா. மன்றமே பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடு

ஈழத்தில் சிறிலங்க இனவாத அரசு நடத்திய போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் சிங்கள படையினரின் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பொறுப்பாக்க, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் சிறிலங்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஐ.ந. நிபுணர் குழுவின் பரிந்துரையை வரவேற்கும் நாம் தமிழர் கட்சி, விசாரணைப் பொறுப்பை சிறிலங்க அரசிடம் அளிப்பது நியாயத்திற்கு வழிவகுக்காது என்பதால், சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ. நா. பொதுச் செயலருக்கும், ஐ. நா. பாதுகாப்புப் பேரவையின் உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுக்கிறது.

போரால் சின்னாபின்னமாக்கப்பட எமது இனத்திற்கு நியாயம் கிட்ட சுதந்திரமான பன்னாட்டு விசாரணையே ஒரே வழி என்பதை நாம் தமிழர் கட்சி சிரத்தையுடன் வலியுறுத்துகிறது.


5. உலக நாடுகளுக்கு வேண்டுகோள்

இலங்கைப் போர் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகளுக்கு முழுமையான ஆதரவு நல்கிடுமாறு உலக நாடுகளை – குறிப்பாக ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் நிரந்த உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இரஷ்யா, ஆகிய 5 நாடுகளின் அரசுகளை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தனது நாட்டு மக்களின் மீது ஒரு பெரும் போரை திட்டமிட்டு நடத்தி இனப்படுகொலை செய்துள்ளது சிறிலங்க அரசு. இனவெறியுடன் அது நிகழ்த்திய இந்தப் போரை உள்நாட்டு பிரச்சனை என்றோ, பயங்கரவாதப் பிரச்சனை என்றோ கூறி திசை திருப்ப வேண்டாம் என்று அமெரிக்கா, இரஷ்யா, உள்ளிட்ட வல்லரசுகளை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

சம உரிமைக்காகவும், கண்ணியமான வாழ்விற்காகவும் அரை நூற்றாண்டிற்கு மேலாக ஈழத் தமிழ் மக்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை தங்கள் சுய நிர்ணய உரிமையை மீட்க நடத்திய தியாகப் போராட்டத்தை உள்நாட்டுப் பிரச்சனை, பயங்கரவாதம் என்றெல்லாம் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பான, அநியாயமான கூற்றாகும் என்பதை நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூறுகிறது. எனவே வல்லரசுகளும், உலக நாடுகளின் அரசுகளும் பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.


6. சுப. முத்துக்குமார் கொலையாளிகளை கைது செய்க.


நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சுப. முத்துக்குமார் புதுக்கோட்டை நகரில் படுகொலை செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகியும் கொலையாளிகள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கொலையாளிகளை கண்டுபிடிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் மற்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் சார்பிலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆயினும் இன்றுவரை கொலையாளிகள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முந்தைய அரசு கொலையாளைகளை கைது செய்யவில்லை.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இது அத்தாட்சியாகும். இப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது, மக்கள் சுதந்திரமாக, அச்சமற்று பாதுகாப்பாக வாழலாம் என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தங்களது தலையாயப் பணி என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பது எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. எனவே இதற்கு பிறகாவது கொலைகாரர்கள் அனைவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் என்றைக்கும் முன்னால் நிற்போம்: வைகோ



ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார்.


இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது.


இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,


உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஏன் அமெரிக்காவே நேரடியாக விசாரணை செய்யும் என்று கூறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இந்திய அரசும் இலங்கை அரசும் கூட்டறிக்கையின் மூலமாக ஐ.நா. மன்றத்திற்கு மூவர் குழு கொடுத்த அறிக்கைக்கு மாறாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.


இந்திய அரசே, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ராஜபக்சேவை கூண்டிலே நிறுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. கருத்துக்களை ஜனநாயகத்திலே அவரவர் சொல்ல உரிமை உண்டு. நான் எவர் கருத்தையும் இங்கே விமர்சிக்க விரும்பவில்லை.


நடந்து முடிந்த தேர்தல் களத்தைப் பற்றிய செய்திகள் எல்லாம் இங்கே வந்தன. தேர்தல் களத்திலே மதிமுக பங்கேற்கவில்லை. தேர்தல் களத்தில்தான் தற்காலிகமாக பங்கேற்கவில்லையே தவிர, ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம்.


இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றாச்சாட்டுக்கான நாடு இந்தியா அல்ல. இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் கட்சியின் தலைமை. அந்த தலைமையின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், அவர் தலைமையிலான அமைச்சர்கள். அந்த அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகள். இவர்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.


லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், இந்திய அரசே நீ கொடுத்த ஆயுதங்கள், நீ அள்ளிக்கொடுத்த ஆயிரம் கோடி பணம், நீ அனுப்பி வைத்த முப்படை தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், நீ தந்து உதவிய நவீன உபகரணங்கள், குண்டு வீச விடுதலைப்புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று செயற்கைகோள் படங்கள்.


விடுதலைப்புலிகளை களத்திலே வெல்ல முடியாது. ஆனால் போர்க்களத்திலே அவர்கள் தோற்க என்ன காரணம். தமிழினத்தை அழிப்பதற்கு ராஜபக்சேவுக்கு துணை நின்று அத்தனை துரோகமும் செய்தது இந்திய அரசு.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய மனித உரிமை மீறல்களையும், பல ஆயிரம் தமிழர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்ததையும் ஐ.நா. சபை அமைத்தகுழு அம்பலப்படுத்தியுள்ளது. இந்தப் போர்க் குற்றங்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தி, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இலங்கையில் போரின்போது நடந்தவைகள் குறித்து இலங்கை அரசு நடத்தி வரும் விசாரணையே போதும் என்று இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் கூறியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் துரோகம் தொடர்வதையே இது காட்டுகிறது
என்றார்.

Monday, May 16, 2011

மூத்த தளபதி பிரிகேடியர் சொர்ணம்











தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை.
எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை ©மிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன்.
அவன்தான் புலிகளின் மூத்த தளபதி சொர்ணம்.

தம்பியை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்தான் தயாளன். தந்தை யோசப் தாய் திரேசம்மா (பரி©ரணம்) என்ன தவம் செய்தனரோ? ஒரு உலகம் போற்றும் மாவீரனை மகனாகப் பெற. தாய் திரேசம்மாவின் மடி அது ஓர் புலியுறங்கிய குகை.
திருகோணமலை அது எப்பொழுதும் அலையெழுந்து ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய நகரம். கடல் ©த்த ©மி. எங்கள் தமிழீழத்தின் தலைநகர் எனும் சிறப்பைப் பெற்றது. அந்தத் தலைநகர் தன் பங்கிற்காக தானைத் தளபதியைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்தது. திருகோணமலை அரசடி அது அன்று திருமலை வாழ் சிங்களவரின் வயிற்றில் புளியைக் கரைக்குமிடம். சிங்களவரைப் பயத்தில் சிறுநீர் போகவைக்குமிடம். திருமலை அரசடி வாழைத்தோட்டம் அதுதான் தயாளனைப் பச்சிளம் குழந்தையாக பாலருந்தும் பாலகனாக பள்ளிச் சிறுவனாக பாடசாலை மாணவனாக தன் மடியில் சுமந்த மண். மலையென எழும் கடலலைகளை அன்றாடம் எதிர்த்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்ததால் அலையையும் புயலையும் எதிர்த்து வளர்ந்தது அவர் வீரம்.
சிறுவயதிலேயே அவன் குறும்புகளுக்குக் குறைவில்லை. அது மட்டுமன்றி உடற்பயிற்சியிலும் தற்காப்புக் கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நண்பர்கள் கூட்டத்தில் என்றும் அவர் தலை உயர்ந்து நிற்கும் கலகங்கள் வந்துவிட்டாலோ அவர் கரம் ஓங்கிநிற்கும்.

திருகோணமலை மாவட்டம் அன்று 80வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த மண். அதைச் சிங்கள ©மியாக்க சிங்களவர் மும்மரமாகச் செயற்பட்டகாலம். தயாளன் சிறுவயதிலேயே துவேசம் கொண்ட சிங்களவர் முப்படைகள் பொலீசாலும் தமிழ் மக்கள் படும் வேதனைகளையும் கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு கொதித்தெழும்பியவன். இதனால் வெறிகொண்ட சிங்களத்தின் கண்கள் தயாளனைக் குறிவைக்கத் தொடங்கியது. உண்மையாகவே எங்கள் தமிழ் மண்ணை எங்கள் தமிழீழ எல்லைகளைக் காக்கவேண்டுமென்றால் அது எங்கள் தலைவனால் அமைக்கப்பட்ட புலிகள் அமைப்பில்தான் இணையவேண்டும் என்பதை தம்பி தயாளன் தூரநோக்கோடு நன்கு அறிந்துகொண்டார். அவர் தன் விடுதலை வேட்கையை வீச்சாக்க திருகோணமலை அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பயின்ற உயர்தரக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டு 12.09.1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்.

தானைத் தலைவனின் வழிநடத்தலில் புடம்போட்ட தங்கமாகப் புதுப் பொலிவு பெற்று புதுப் புலியாகி எங்கள் தேசத்தின் எல்லைகளுக்கு தன்னுயிரை வேலியாக்கினான். அவன் கரங்களில் சுமந்த கருவிகள் பகைவனின் பகைமுறித்தது. அவன் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதிமுறித்தது. தலைவன் கூறும் தத்துவங்களை எல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத் தளபதி. கயமைத்தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இராணுவத்திற்கோர் சிம்மசொற்பனம். களத்திலே இவன் இறங்கிவிட்டால் இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை க்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தாலும் எதிர்கொள்ளும் எதிரிகள் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடுவர்.

இவன் தலைவன் காட்டிய நெறியில் தவறியதில்லை இவன் வைத்த குறியும் தப்பியதில்லை.
அழகிய புன்முறவலும் அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன் என் தம்பி. பட்டத்து யானைபோன்று நெடிய கம்பீரத் தோற்றம். புது யுகத்தின் அத்தியாயத்தை எழுதத் துடித்துநின்ற தானைத் தளபதி.
தமிழனின் விடிவிற்காய் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆக்ரோசமான போர் வியூகங்களைக் கண்டு அகமகிழ்ந்த அன்னைத் தமிழும் அரியணை ஏற ஆயத்தமானாள். ஆனாலும் உலகத்தின் துரோகக் கரம்ஒன்று பின்னால் தொடர்ந்ததை யாரறிவார்?. இருபதற்கும் மேற்பட்ட உலகில் சக்திவாய்ந்த நாடுகள் முண்டுகொடுக்க இனவெறிகொண்ட சிங்களம் கூன் நிமிர்ந்து எமது சொந்தங்களை வெறித்தனமாய் வேட்டையாடி எங்கள் தேசத்தைச் சுடுகாடாக்கியது.
அன்று உன்னதமான தமிழீழத் தலைமைத் தளபதி வீழ்ந்துவிட்டான். ஆம் என் தம்பி வீழ்ந்துவிட்டான். ஆளரவமற்ற இருட்புலத்திலே புதைக்கப்பட்டான். அவனுக்காக யாரும் கண்ணீர் சிந்தினார்களா?
தெரியவில்லை. யாரோ அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனரே. அவனின் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ சமாதியோ மண்டபமோ ஏது மில்லையே.
அங்கு தலை சாய்ந்திருந்த புல்லிதழ்கள் அவனின் மரணத்தை அறிந்திருக்கும். முள்ளிவாய்க்கால் கரையை மோதிச் சீறியடிக்கும் அலைகளே அவன் மரணத்திற்குச் சாட்சி. வல்லமை வாய்ந்த அவ் அலைகளால் கூட தொலை தூரத்திற்கு அந்தச் செய்தியை எம்மிடம் கொண்டுவர முடியாமற் போய்விட்டதே. நீ இறுமாப்போடு எழுந்து வருவாயென்று நான் எதிர்பார்த்தேனே. என் கனவுகள் பொடியானதே

புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன் விடுதலை தேடி வேகத்தோடு உயர்ந்து வீசியடித்த பேரலை இருபத்தாறு வருடங்களாக ஓயாது சுழன்றடித்த சூறாவளி ஓய்ந்துபோனது. மரணித்துவிட்ட எங்கள் விடியலே பலவீனமான எம் இனத்தின் பலமான உயிராயுதமே எமது திமிரின் அடையாளமே எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட் டாயோ?

எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை - விடுதலைப் புலிகள்



தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும்.



தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/04/11

தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

16/05/ 2011.

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011

அன்பான தமிழ் மக்களே,

மே-18. தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.

காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.



பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.



பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.



எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச்சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.



போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல், பக்கச்சார்பானவையென்றும், உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.



முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும், மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்குழுவை அமைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.



ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.



எம் அன்பிற்குரிய தமிழக மக்களே,

எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.



எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும்வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.



அன்பான உலகத்தமிழ் உறவுகளே,

தமிழீழத் தாயகமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்தவெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றநிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மைநிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில், இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.



நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆ.அன்பரசன்,

ஊடகப்பிரிவு,

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.