
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருகின்றன. அங்கு மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு சர்வதேச போர் விதிமுறையை மீறி செயல்பட்டது. பெண்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏராளமானோரை போர்க்குற்றவாளி என்ற பெயரில் ராணுவம் கைது செய்து உள்ளது. அவர்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி மனித உரிமை மீறலை நடத்தி வருகிறார்கள். இன்னும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் தொடர்கிறது. இதை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்.
போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான மனித உரிமை மீறலை இந்தியா கண்டிக்க வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்போது, அந்த தண்டனை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.
தமிழர்கள் மீதான அத்துமீறல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் இதை கண்கூடாக பார்த்து கொண்டு இந்திய அரசு மவுனம் காக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு அவசியம். பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அந்த அரசுடன் இந்தியா வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment