
�ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த மவுனம் சாதிப்பது ஏன்?� என்று இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 08.07.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் இடையே பரதன் பேசுகையில், “இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளும், ஐ.நா.வும் செயல்படுகின்றன. ஆனால், இந்தியா மட்டும் ஆழ்ந்த மவுனம் சாதிக்கிறது. எது ஏன்? இந்த பிரச்னையை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும்” என்றார்.
டி.ராஜா பேசுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும். இலங்கை சம்பந்தப்பட்ட வெளியுறவு கொள்கையில் மத்திய அரசு இரட்டை வேஷம் போடுகிறது. தமிழர்களின் துயரத்தை துடைக்க, ராஜபக்சேவுக்கு நிர்பந்தம் கொடுத்து இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கூறினார். அதற்கு மறுநாளே, இந்தியா எந்த நிர்பந்தமும் செய்யவில்லை என்று ராஜபக்சே அறிவிக்கை விடுகிறார். இதில் யாரை நம்புவது?” என்றார்.
No comments:
Post a Comment