Labels

Tuesday, July 12, 2011

ஈழத்தில் மிகப் பெரிய இழப்பு, அதுவே முடிவல்ல-ஈழம் மலர்ந்தே தீரும்...! : சேலத்தில் பரபரப்பூட்டிய வழக்காடு மன்றம்



சேலம் மய்யப் பகுதி யான, சின்னக் கடைவீதி, பட்டைக்கோயில் அருகில் 9.7.2011 சனிக் கிழமை சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக் சேவுக்கு துணை நிற் போர் குற்றவாளிகளே என்ற தலைப்பில் வழக் காடு மன்றம் நடை பெற்றது. கழக சொற் பொழிவாளர் இரா.பெரி யார்செல்வன் வழக்கை தொடுக்க, வழக்குரை ஞர் பூவை.புலிகேசி வழக்கை மறுக்க, முனைவர் அதிரடி க.அன்பழ கன், நடுவராக பொறுப்பு வகித்து வழக்காடு மன்றத்தை நடத்தினார்.

மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியை துவக்குவ தாக இருந்த நிலையில், பலத்த மழை பெய்யவே நிகழ்ச்சி தடைப்பட்டது. தொடர்ந்து 8 மணி வரை மழை நீடித்தது. 8.15 மணிக்கு மழை சற்று குறைய மழையின் நெருக்கடி மற்றும் நேரத்தின் நெருக்கடிக்கு இடையே நிகழ்ச்சியைத் துவக்கினார்கள் தோழர்கள்.

மாநகர் தலைவர் வி.வடிவேல் தலைமை வகிக்க, மாவட்ட தலை வர் மு.செல்வராசு, துணைத் தலைவர் சி.பூபதி, செயலாளர் அரங்க.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி அமைப்பாளர் தமிழர் தலைவர் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட அமைப்பாளர் கவிஞர் எஸ்.முனுசாமி வரவேற் றார். மண்டல தலைவர் பழனி.புள்ளையண்ணன் துவக்கவுரையாற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஈழத்தில் தமிழ் இனத் தையே படுகொலை செய்து அழித்து, ஒழித்து விட்ட நிலையில் இருக் கின்ற மக்களைப் பாது காக்கவும், ராஜபக்சே வுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும், மக்க ளுக்கு எழுச்சி உண்டாக்குகின்ற வகையிலேதான் இந்த வழக்காடு மன்றம் நடத்தப்படுகிறது என்பதையும், சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்து பொறுப் பேற்று ஒரு மாத காலத்திற்குள்ளா கவே, உச்சநீதிமன்றத்தி லும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் கண் டனத்திற்கு ஆளான அரசின் நிலையைக் கண்டித்தும், அதே சமயத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண் டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற அர சின் தீர்மானங்களை பாராட்டியும், திராவி டர் கழகம் நல்லதை பாராட்டும் அல்லதை எதிர்த்தே தீரும் என்ற நிலைப்பாட்டை பொதுமக்களுக்கு உணர்த்தி முனைவர் அதிரடி அன்பழகன் அறிமுக உரையாற்றி னார்.

தொடர்ந்து, இரா. பெரியார்செல்வன் வழக்கைத் தொடுத்து ஈழத்தமிழர்களுக்கு உதவுங்கள் என்று பல் முனையில் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தியும், நாங்கள் பழி தீர்த்துகொள்வோம் என்று செயல்பட்ட, இலங்கைக்கு துணைநிற்கும் இந்தியா, காங்கிரசு கட்சி மற்றும் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா நாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் விடுதலைபுலி கள் விரும்பி ஆயுதத்தை தூக்கவில்லை என்பதை யும், இலங்கை இராணுவத் தினர் இங்கே தமிழன் கறி கிடைக்கும், தமிழச்சி உறுப்புகள் கிடைக்கும் என்று மனிதத்தன்மையே இல்லாத வகையில் செய்த கொடுமைகளே அவர் களை ஆயுதம் ஏந்தி போராட வைத்தது, மேலும் ஈழத்தில் இப்போது மிகப் பெரிய இழப்பு ஏற்பட் டுள்ளது. ஆனால், அதுவே முடிவானது அல்ல... ஈழம் மலர்ந்தே தீரும் என்று உரையாற்றி னார்.
வழக்கை மறுத்து வழக் குரைஞர் பூவை.புலிகேசி ஈழத்தில் போரை நடத் தியதே இந்தியாதான் என் றும் இன்று, நேற்றல்ல, காலங்காலமாகவே இந் தியா ஈழத்தமிழர்களுக்கு விரோதமாக நடந்து வந் துள்ளது. இப்படியிருக்க உலகநாடுகளுக்கு ஈழத் தமிழர்கள் மீது பற்று இருக்கும் என்ற எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றார். ஈழத்தமிழர் போராட் டங்களை கொச்சைப் படுத்தும் பார்ப்பன ஊட கங்கள், அவற்றை வாங் கும் தமிழர்கள் குற்ற வாளி. இனவுணர்வு பிரச் சனையை சொந்த நல னுக்கு பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதி கள், குற்றவாளி. ஈழத் தமிழர்களைப் பற்றி பேசுங்கள், விடுதலைப் புலிகளை பற்றி பேசா தீர்கள், என்று சொல்லும் ஈனர்கள் குற்றவாளி என்று தம் பங்குக்கு ஈழப்போராட்ட எதிரி களை தோலுரித்து காட் டினார்.

இறுதியாக, ஹிட் லரை விட ஆயிரம் மடங்கு கொடியவன் இராஜபக்சேவுக்கு தண் டனை வழங்காவிட்டால், அய்.நா. சபை தன் மதிப் பிழந்துவிடும் என்று எச் சரித்து, ராஜபக்சேவுக்கு துணைநிற்கும் பார்ப்பன ஊடகங்கள், நாடுகள் இவற்றை விட, தமிழர் களின் தொப்புள்கொடி உறவுகளுக்கு, துரோகம் இழைக்கும் இந்தியாவும், காங்கிரசும்தான் குற்ற வாளி என்று தீர்ப்பு கூறினார் நடுவர் முனை வர் அதிரடி அன்பழ கன். மாநகர செயலா ளர் அ.ச.இளவழகன், நன்றி கூற வழக்காடு மன்றம் இரவு 10.20க்கு முடிவடைந்தது. கழக சொற்பொழிவாளர் களுக்கு நன்கொடை வழங்கியும், கை குலுக் கியும், பொதுமக்கள் தம் நெகிழ்ச்சியையும், எழுச்சியையும், வெளிப்படுத்தினர். சொற்பொழிவாளர் களுக்கும், கழக தோழர் களுக்கும் மாநகர செய லாளர் இல்லத்தில் இரவு அசைவ சிற் றுண்டி வழங்கப்பட் டது.

நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வழக்கு ரைஞர் அருளரசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பா.வைரம், சேலம் கழக பொறுப்பாளர்கள் சக்திவேல், தமிழர் தலைவர், சுஜாதா, பிர பாகரன், கமலம், பா. வெற்றி, ந.கலையழகன், கே.சிவக்குமார், புரட்சிவேந்தன், மல்லூர் பழனிசாமி, மல்லிகா, தங்கவேல், ஆட்டோ முருகேசன், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment