Labels

Monday, May 9, 2011

ராஜபக்சே போர்க் குற்றவாளியே! இந்தியாவை உணர வைக்க ஒன்று திரள்வோம்! - கி.வீரமணி பேச்சு



ஈழத் தமிழர்கள் படுகொலை பற்றிய ஐ.நா.குழுவின் அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்னும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6.05.2011 அன்று மாலை 6 மணியளவில் மதுரை சின்னக் கடைத்தெரு பள்ளி வாசல் அருகில் நடைபெற்றது.


கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் தொடுத்த போர். ஹிட்லரை விட பெரிய கொடுங்கோலன் ராஜபச்சே!


ஐ.நா.சபையால் அமைக்கப்பட்ட குழுவின் அடிப்படையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி எனும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும. மதுரையில் தமிழ் ஈழ மாநாட்டை முதன் முதலில் திராவிடர் கழகம் நடத்தியது.


அன்று முதல் இன்று வரை தமிழ்ஈழம்தான் தீர்வு என்பதில் தெளிவாக இருக்கிறோம். தமிழ் ஈழம்தான் தீர்வு என் பதை மத்திய அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் வரும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இலங்கைப் பிரச்சினையிலே ஒரு தெளிவு இருந்தது. ஆனால் அதற்குப் பின்னால் வந்தவர்களுக்கு அந்தத் தெளிவு இல்லை. இனப் படுகொலை எப்படி நடத்தப்பட்டது என்பதை ஐ.நா.சபையால் அமைக்கப்பட்ட குழு விரிவாக எடுத்துரைத்திருக் கிறது.

இந்திய அரசு கவனத்தில் எடுத்தாக தெரியவில்லை. எடுக்க வைக்க நாம் தமிழர்கள் ஒன்றிணைவோம். கருநாடகத்தில், கேரளத்தில் பொதுவான பிரச்சினைகளில் எல்லோரும் கட்சிகளை மறந்து ஒன்றிணைகின்றார்கள். ஆனால் இங்கு இழவு வீட்டிற்கு கூட ஒன்றாகப் போவதில்லை. அரசியல் அந்தப்பாடு படுத்துகிறது. தமிழ் ஈழமே தீர்வு என்பதில் ஒன்றிணைந்து வரும் கட்சிகளோடு சேர்ந்து பேச நாங்கள் தயார். ஜாதி, மத, அரசியல் மறந்து ஈழத் தமிழர்களின் துயர் நீக்க ஒன்றிணைவோம்
என்றார்.

தமிழ் ஈழம் பற்றி பேச யார் அழைத்தாலும் வரத் தயாராக இருக்கின்றோம் - சுப.வீரபாண்டியன் :

கூட்டத்தில் பேசிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், 30, 35 ஆண்டுகால ஈழப் போராட்ட வரலாற்றில, இந்த உணர்வினை எந்த பெரியார் திடல் ஊட்டியதோ, அதே திடலிலிருந்து ஈழச் சிக்கலை விடுவிக்க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் இங்கு வந்திருக்கின்றோம்.


இப்பகுதி மக்கள் எப்படி பென்னிகுயினை மறக்காமல் இருக் கின்றார்களோ அதனைப் போல உலகத் தமிழர்கள் மறக்காமல் இருக்க வேண்டிய பெயர் நவிப்பிள்ளை ஆவார். அவரால்தான் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கான ஐ.நா.குழு அமைக்கப்பட்டது. இந்தியா வரலாற்று ரீதியான தவறை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது. வெட்கப்படுகின்றோம். நார்வே நாட்டு உயர்நீதிமன்றம் கொடுங்கோலன் ராஜபக்சே மீது பிடியாணையை பிறப்பிக்க தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாம் 3 கோரிக்கைகளை வலியுறுத்து கின்றோம். உள்ளூர் அரசியல் பேசாமல் தமிழ் ஈழம் பற்றி பேச யார் அழைத்தாலும் நாங்கள் வரத் தயாராக இருக்கின்றோம்
என்றார்.

No comments:

Post a Comment