Labels

Saturday, December 11, 2010

புலம் பெயர் மக்களை எதிர்கொள்ள தைரியமில்லாத மகிந்த பின் வாசல் வழியாக ஓட்டம்









புலம் பெயர் மக்களை எதிர்கொள்ள தைரியமில்லாத மகிந்த பின் வாசல் வழியாக ஓட்டம் போர்க்குற்றவாளியான மகிந்த தன்னுடைய மந்திரிகள் கும்பலுடன் இலண்டன் வந்தடைந்தார்.

இவரது வரவை அறிந்த மக்கள் ஓர் இரு மணித்தியால ஏற்பாட்டில் மகிந்த வரவிருந்த இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் திரண்டனர். விமான காவல் அதிகாரிகள் செய்வதரியாது திகைத்து நிற்க தேசியக் கொடி ஏந்தியவாறு மக்கள் போர்க் குற்றவாளி மகிந்த போர்க் குற்றவாளி மகிந்த என பெரும் குரல் கொடுத்து போராட்டம் நடத்தினார்கள்.
மக்களின் அக்குரல் விமான நிலையமெங்கும் எதிரொளித்தது அந்த எதிரொளியில் விமான நிலைய வரவேற்பிடமே அதிர்ந்தது.

அதன் பின்பு மக்களிம் வந்த காவல் துறையினர் இங்கு போராட்டம் நடாத்த அனுமதி இல்லை இருப்பினும் நீங்கள் இங்கு போராட்டம் நடத்த அனுமதி தருவதாக கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.

மகிந்தவின் விமானத்தில் வந்த சில தமிழர்களை அழைத்து இளையோர்கள் விசாரித்ததில் மகிந்த மக்கள் திரண்டிருப்பதை அவர்கள் அறிந்து மாற்றுப்பாதை ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தனர்.

விலைக்கு வாங்கிய சில தமிழர்களை கொழும்பில் சந்தித்துவிட்டு புலம்பெயர் மக்களை சந்தித்ததாக புலுடா விடும் மகிந்த கொம்பனி இன்று உண்மையான புலம்பெயர் தமிழர்களை கண்டு பின் வாசல் வழியாக ஓட்டமெடுக்க வைத்தனர் புலம்பெயர் மக்கள்.

மகிந்தவின் விமானத்தில் வந்த சிங்களவர்கள் பலர் அவ்வழியே வந்தனர் தேசியக் கொடியேந்திய தமிழ் மக்களை கண்டவுடன் மிரண்ட அவர்கள் சுவர் ஓரமாக ஒதிங்கியபடியே சென்றனர்.

இருப்பினம் எந்தவெரு தமிழரும் எந்தவெரு சிங்களவருக்கும் எவ்வித சிக்கல்களையும் ஏற்படுத்தவில்லை.

No comments:

Post a Comment