Labels

Monday, May 9, 2011

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும்: ஐ.நா.வுக்கு திருமா கோரிக்கை



இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோரியும், இலங்கையில் தமிழர்களை கொன்றொழித்தது இனப்படுகொலை என்றும் ஐ.நா. அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய்ய வலியுறுத்தியும், ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க இந்தியா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் 01.05.2011 அன்று காலை 10 மணியளவில் சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் நினைவு அரங்கம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபக்சேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,

இன்று ஞாயிற்றுகிழமை அத்துடன் மேதினம் ஆகிய இந்த விடுமுறை நாளில் நாம் ஆர்ப்பாட்டம் நடத்திகொண்டு இருக்கிறோம். திடீரென்று இரண்டு நாள் இடைவெளியில் அறிவிப்புசெய்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த கொள்வதற்கு காரணம் இன்று இதே நாளில் சர்வதேச போர்குற்றவாளி கொடும்பாவி ராசப்பக்சே கொழும்பில் தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி ஐ.நா பேரவையின் அறிக்கைக்கு எதிரான பேரணியை நடத்துகிறார். அதனை எதிர்க்கிற அடையாளமாக நாம் அவசர அவசரமாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து இருக்கிறோம்.


கடந்த 25ஆம் ததி ஐ.நா பேரவையால் நியேமிக்கப்பட்ட விசாரணைகுழு தன்னுடைய அறிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கசிந்து இணையத்தளத்தில் வெளியானது.


நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் அந்த அறிக்கையை வெளியிட்டதே சிங்கள இனவெறி அரசுதான் என்று சொல்லப்படுகிறது. அந்த அறிக்கையின் நகல் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதாவது அந்த அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் இருக்கிற செய்திகளை ஐ.நாபேரவையின் விசாரணைகுழு அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே சிங்கள இனவெறி அரசு கசியவிட்டதற்கு காரணம் தம்முடைய ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சி என்று தெரிகிறது. இப்படியெல்லாம் சிங்களஅரசுக்கு எதிராக ஐ.நாபேரவை அறிக்கை இருக்கிறது. உலகநாடுகள் ஒருங்கிணைவதற்கு முன்பு சிங்கள் இனவெறி சமூகம் நீங்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று தம்முடைய ஆதரவாளர்களை அணிதிரட்டுவதற்காகவே ராசப்பச்சே அரசு இந்த தகவல்களை முன்கூட்டியே கசியவிட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.


அதிகாரபூர்வமாக ஏப்ரல் 25யில்தான் ஐ.நாபேரவையால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு தன்னுடைய 214 பக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிற செய்தி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமைந்து இருப்பதைப்போல ஒரு தோற்றம் இன்றைக்கு உருவாக்கப்பட்டுயிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல, அந்த அறிக்கையில் சிங்கள் இனவெறி ஆட்சியாளர்கள் மீது எப்படி குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்களோ, அப்படி விடுதலைக்காக போராடிய, போராடிக்கொண்டு இருக்கிற மேதகு.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான விடுதலை புலிகளின் மீதும் குற்றசாட்டுகளை சுமத்தி இருக்கிறார்கள். சிங்கள இனவெறி மீது 5 குற்றசாட்டுகள் என்றால் விடுதலை புலிகளின் மீது 6 குற்றசாட்டுகளை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆக அந்த அறிக்கை என்பது தமிழ் இனத்திற்கு ஆதரவாக வெளிவந்திருப்பதைபோல தமிழ்நாட்டில் நாடகம் ஆடுகிற போலிகள் தமிழ்தேசிய போலிகள் அதை தலையில் தூக்கிவைத்து ஆடுகிறார்கள். இப்பொழுது ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள், அறிக்கையை வெளியிடுகிறார்கள் ஏன் அம்மாவே வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கையை வெளியிடுகிறார்கள், ஐம்பதாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது யுத்தம் என்றால் மக்கள் சாவது சகஜம் தானே என்று மிகச் சாதாரணமாகச் சொன்னவரிடம் அன்றைக்கே அவரை ஆதரித்து கைகோர்த்து கொண்டிருந்தவர்கள் போலி தமிழ்தேசியவாதிகள். ஆக இப்படிப்பட்ட நிலையிலே பொது மக்களுக்கு தமிழ் சமூகத்திற்கு உண்மையை எடுத்து சொல்லுவதும் அதற்கு ஏற்ற வகையில் உண்மையான போர்குணமுள்ள போராளிகளை ஒருங்கிணைப்பதும் விடுதலைச்சிறுத்தைகளின் கடமை என்ற அந்த உணர்வோடுதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.


ஐ.நாபேரவை விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டு இருக்கிற உறுப்பினர் யாரும் ஈழத்திற்கு நேரடியாகபோய் ஆய்வு செய்ய முடியவில்லை. கொடும்பாவி ராசாபக்சே அந்த கமிட்டியை நான் அனுமதிக்கமாட்டேன் என்று தடுத்துவிட்டார் ஆக அந்த குழு இலங்கைகே போகவில்லை, வவுனியாவக்கு போகவில்லை, வதைமுகாமுக்கு போகவில்லை, முள்ளிவாய்காலுக்கு போகவில்லை போகமலே அவர்கள் தயாரித்த அறிக்கைதான் இன்றைக்கு அவர்கள் வெளியிட்டுயிருக்கிற அறிக்கை, வெளியிலிருந்து கிடைத்து இருக்கிற தகவலை வைத்து, ஆதாரங்களாக அவற்றை சுருக்கி அதன் அடிப்படையிலே அந்த அறிக்கையை வெளியிட்டுயிருக்கிறார்கள்.


குறிப்பாக விடுதலைபுலிகள் மீது 6 குற்றசாட்டுங்களை வைத்து இருக்கிறார்கள், சிங்கள இனவெறியர்கள் மீது 5 குற்றசாட்டுங்களை வைத்து இருக்கிறார்கள் ஆக குற்றசாட்டு என்னவென்றால்? போர் நடக்கிறபோது சில சர்வதேச நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது ஐ.நாபேரவையால் வரையருக்கப்பட்டு இருக்கிறது. அது மீறியது போர்குற்றம் ஆனால் அங்கே நடந்தது. இரண்டு நாடுகளின் இடையிலே நடந்த யுத்தம் என்று உலகநாடுகள் ஏற்று கொண்டனவா? இல்லை இரண்டு நாடுகளில் இடையிலே போர்நடத்திருக்கிறது என்று ஏற்றுகொள்ளாத போது அது எப்படி போர்குற்றம் என்று இவர்கள் எப்படி வரையேருக்க முடியும்.

ஒரு இயக்கத்திற்கும் ஒரு நாடுக்கும் இடையிலே யுத்தம் நடக்கிறது. ஒரு இயக்கம் என்பது ஒரு நாட்டை உருவாக்குகிற இயக்கம், அது மக்கள் இயக்கம். ஏன் போராடுகிறது? எதற்கு விடுதலையை வெளிப்படுத்துகிறது நீண்ட நெடிய அடக்குமுறையில் இருந்த மக்களை விடுவிப்பதற்காக ஒட்டுமெத்தமாக இந்த வரலாற்றை எல்லாம் புதைத்துவிட்டு யுத்தம்நடந்தபோது எவை எவை மீறப்பட்டு இருக்கின்றன என்பதை மட்டும் வைத்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆக விடுதலைச்சிறுத்தைகள் எதை நாம் வலியுருத்துகிறோம் என்றால் இது இருநாடுகளுக்கிடையிலே நடக்கிற யுத்தமாக ஆக இரண்டு அரசுக்கு இடையிலே நடக்கிற யுத்தமாக சர்வதேச சமூகம் ஏற்று கொள்ளாதபோது அதை போர்குற்றம் என்று வரையேறுத்து அதை திருப்பி தாக்கிவிடகூடாது அப்படி தாக்கினால் இரண்டு தரப்பை சார்ந்தவர்களுக்கும் விசாரணை நடத்தவேண்டிய சூழ்நிலைவரும், விடுதலைபுலிகளின் தளபதிகளும் விசாரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.


ராசபச்சேவையும் விசாரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள் ஆக இரண்டு பேரையும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புதான் இந்த போர்குற்றம் என்ற அறிவிப்பு, ஆக நாம் என்ன சொல்கிறோம் என்றால் விடுதலை புலிகளை விசாரிக்ககூடாது, விசாரிக்கமுடியாது ஆக மக்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒரு நீண்ட நெடிய அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் ஆகவே ஒரு சமூகத்தை அவர்கள் தமிழீனம் என்பதற்காக, தமிழ்மொழி பேசுகிறார்கள் என்பதற்காகவே, தமிழ்தேசிய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள் என்பதற்காகவே திட்டமிட்டு நீண்ட நெடுங்காலமாக நசுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில்தான் ஒரு இனபடுகொலை நடத்தப்பட்டு இருக்கிறது.

இனபடுகொலை என்பது அந்த பரம்பரையே அழிப்பது, நேருக்கு நேராக குற்றம் செய்தவனை கொலை செய்வது என்பதுவேறு அவன் வம்சமே இருக்ககூடாது என்று வாரிசுகளை அழிப்பது என்பது வேறு ஒரு வம்சத்தையே வேர் எடுக்ககூடிய வகையில் வாரிசுகளை அழிப்பதுதான் இனப்படுகொலை ஆக சிங்கள இனவெறியர்கள் செய்து இருப்பது இனப்படுகொலை. அந்த கோணத்தில் பார்த்தால் சிங்கள இனவெறியர்களை மட்டும்தான் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசரிக்க வேண்டும், தண்டனை வழங்க வேண்டுமே தவிர விடுதலைபுலிகள் மீது குற்றம் சுமத்தமுடியாது அவர்களை விசாரிக்ககூடாது என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைபாடு
என்று பேசினார்..

No comments:

Post a Comment