Sunday, July 3, 2011
இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து!
இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...
தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழீழ நடைமுறை அரசினை சிறப்புடன் முன்னெடுத்த விதமும் காவல்துறை நீதித்துறையினை கையாண்ட திறணும் வியக்க வைப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய யாழ்பாணத்தை எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை எனும் போதுதான் வன்னியில் போர் சூழல் இறுக்கமாக நிலவிவந்த காலகட்டங்களில் எல்லாம் காவல் மற்றும் நீதித் துறைகளை சிறப்பாக கையாண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அரசாண்டவிதம் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய கலாச்சார சீர்கேடுகள் சமூகச்சிதைவுகள் கொலைக் கலாச்சாரங்கள் என்பன மிக வேகமாக யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதியில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களாலோ சிறிலங்கா அரச நிர்வாகத்தினாலோ தடுத்துநிறுத்த முடியாது எனவும் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்தால்தான் சீர்படுத்த முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
வன்னியில் இருந்து கொண்டு தமிழீழ நடைமுறை அரசை முன்னெடுத்து வந்திருந்தாலும் யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய ஆளுகையின் வீச்சு இருந்தது. ஆனால் முன்னர் அது யாராலும் இனம்காணப்படாது இருந்துவந்தது. தற்போதுதான் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்களது ஆற்றலின் வலிமை.
இவ்வாறு நீதியினை வழங்கும் உயர்பீடத்தில் இருப்பவர்கள் முதல் சாதாரண குடிசைவாசிகள் வரை தலைவர் பிரபாகரன் அவர்களது வரவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அடிபட்டு நொந்துபோய் எல்லாவற்றையும் இழந்த பின்பும் தேசத்தின் இன்றைய இழிநிலை கண்டு மனம்பொறுக்காத மாணம் உணர்வுள்ளவர்களது புலம்பல் இதுவாகத்தான் இருக்கின்றது...
"...என்னதான் இருந்தாலும் பெடியள்(புலிகள்) இருக்கேக்கை உந்தச் சேட்டையள் எல்லாம் இல்லாமல் தான் இருந்தது... செல்லடிச்சாலும் கிபிரடிச்சாலும் எங்கட மண்ணிலை சுதந்திரமா நாங்கள் இருந்த வாழ்க்கை சொர்க்கம் தான்.. திரும்பவும் பெடியள்(புலிகள்) வந்தால்தான் எல்லாத்திற்கும் ஒரு முடிவுகிடைக்கும்.. இந்த அக்கரமங்களை எல்லாம் போக்கி தமிழனை தலைநிமிர வைக்க தலைவர் ஒருவராலதான் முடியும்."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment