
போர்க் குற்றங்கள் புரிந்தமைக் காகக் கைது செய்யப்படு வார் என்ற அச்சத்தில் இலங்கை அதிபர் ராஜ பக்சே லண்டன் பய ணத்தை ரத்து செய்துள்ளார்.
லண்டன் செல்லவி ருந்த ராஜபக்சே, ஆக்ஸ் போர்ட் யூனியனில் உரையாற்ற இருந்தார். ஆனால் இங்கு வரும் அவரை லண்டன் நீதி மன்றம் கைது செய்யும் விதமாக சில நடவடிக் கைகளை ஈழத் தமிழர் அமைப்புகள் முன்னெ டுத்துள்ளன. எனவே இவற்றால் தனக்கு நிச்ச யம் ஆபத்து உள்ளதை அறிந்துள்ள ராஜபக்சே பயணத்தையே ரத்துச் செய்துள்ளார்.இப்பயணம் குறித்த தகவல்களைப் பெறு வதற்கென இலங்கை அதிபர் மாளிகைக்கு தொலைபேசி அழைப்பு மேல் அழைப்பு வந்து கொண்டிருக்கின்ற போதிலும், பெரும்பா லான அழைப்புகளுக்கு திட்டம் மாற்றப்பட்டுள் ளது என்று பதிலாகக் கிடைத்துள்ளது.
அதிபர் தனது திட் டங்களை மாற்றியுள் ளார் என்று மட்டுமே இங்கிலாந்து அயல் நாட்டு அலுவலகம் பதிலை அளித்துள்ள தும் குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து சட்ட விதிமுறையின் பிரகா ரம், ஒருவர் போர்க் குற்றங்களையோ அல் லது மனித உரிமை மீறல் களையோ இங்கிலாந் தில் செய்திருக்காவிட் டாலும் கூட, அந்நபர் அங்கு வரும்போது அவரை விசாரணை செய் வதற்கு இடமுள்ளது.
இதன் பிரகாரமே, 1998 ஆம் ஆண்டு அக் டோபர் மாதத்தில் சிலி யன் சர்வாதிகாரி அகஸ்ரோ பினோ செட்டை லண்டனில் வைத்து ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை கைது செய்தது. இவர் தனது 17 ஆவது ஆண்டு ஆட்சியின்போது ஸ்பானிஷ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment