Thursday, February 24, 2011
சிங்கள வெறியின் உச்ச கட்டம் - பார்வதி அம்மையாரின் அஸ்தியை நாசப்படுத்திய கேவலம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா ளின் அஸ்தி நேற்று முன் தினம் (22.02.2011)இரவு அடையா ளம் தெரியாத சிலரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப் பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் மூன்று நாய்களை சுட்டுப் போட்டதுடன், அவரது அஸ்தியையும் தாறுமாறாக அள்ளி வீசியுள்ளனர்.
இது குறித்து இலங்கை தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ளதாவது:
நேற்று முன் தினம் (22.02.2011)மாலை பார்வ தியம்மாளின் உடல் இறுதிமரியாதை நிகழ் வுக்குப் பின்னர் ஊரணி மயானத்தில் எரியூட்டப் பட்டது. இரவு 7 மணிக்குப் பின்னர் அங்கு கூடியிருந்த மக் கள் கலைந்து சென்றனர்.
நேற்று (23.02.2011)காலை மயானத்துக்குச் சென்று அஸ்தியை சேகரிக்க முயன்ற போது அங்கு அஸ்திகள் தாறுமாறாக வீசப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் பார்வதியம்மாள் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப் பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டு இருந்தது.
சிங்களப் படைகளே இந்த கேவலமான செய லில் ஈடுபட்டிருக்கலாம் என அந்தப் பகுதியினர் அச்சத்துடன் தெரிவித் தனர். நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் பார்வதியம்மாளின் இறுதிநிகழ்வுகளை நடத்தியவர்கள் யார்? என சிங்களத்தில் மிரட் டும் தொனியில் விசாரித் ததாகவும் கூறினர்.
Wednesday, February 23, 2011
திருமாவளவனுக்கு இலங்கையில் அனுமதி மறுப்பு: சத்யராஜ் கண்டனம்
பார்வதி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திருமாவளவனுக்கு இலங்கையில் அனுமதி அளிக்காததற்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணம் அடைந்ததற்காக, உலக தமிழர்களுடன் சேர்ந்து நானும் வருத்தப்பட்டேன். பார்வதி அம்மாளின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு பள்ளியில் பழ.நெடுமாறன், வைகோ ஆகிய இருவரின் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. அங்கு சென்று நான் அஞ்சலி செலுத்தினேன்.
பார்வதி அம்மாளின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இலங்கைக்கு செல்ல இருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்து இருக்கிறது.
இதற்காக, என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதில் இருந்து இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.
உலக தமிழர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது
தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயாரும் ஈழத்தாயுமான பார்வதி அம்மாவின் பூதவுடல் 22.02.2011 அன்று மாலை 4.50க்கு சிதைமூட்டப்பட்டது, அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார். இந் நிகழ்வில் உள்ளுர், தமிழக அரசியல்வாதிகள் இரங்கல் உரையுடன் சிங்கள இனவெறி அரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இறுதி நிகழ்வு நடைப்பெற்றது.
ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட வீரத்தையின் பூதவுடல் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீட்டுக்கு முன்னால் பத்து நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.
குவித்து வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரையும் பொருட்படுத்தாது மக்கள் வீரத்தையின் இறுதி காரியத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழகத்திலிருந்து பழ. நெடுமாறன், வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் இரங்கல் உரைகள் தொலைபேசி ஊடாக ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டன.
மேலும் சுரேஷ் பிரேமச்சந்திரன், விநோ நோகதரலிங்கம்,சிவசக்தி ஆனந்தன், பா. அரியநேத்திரன்,யோகேஸ்வரன்,ஸ்ரீதரன், சரவணபவன்,கஜேந்திரகுமார்,சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா உட்படப் பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் தமிழ் அரசியல் பிரமுகர்கள் வீரத்தாயின் இறுதிக் காரியத்தில் கலந்து கொண்டதுடன் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினர்.
இதேவேளை, இந்த இறுதி நிகழ்வைப் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் உட்பட பலரையும் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களைப் புகைப்படம் பிடித்ததுடன் அவர்களது அடையாள அட்டைகளையும் புகைப்படம் பிடித்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடமராட்சியின் அனைத்து வீதிகளிலும் செல்வோர் அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் இந் நடவடிக்கையில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபட்டிருக்கின்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் செல்வோரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனைகளுக்கு உட்படு்த்தியே அனுமதிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
Tuesday, February 22, 2011
இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? - கி. வீரமணி அறிக்கை
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தாயாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து, அனுமதி மறுத்து, வந்த விமானத்திலேயே அவரைத் திருப்பி அனுப்பிய இலங்கை அரசைக் கண்டித்தும், துக்கம் விசாரிக்கச் செல்லுவதற்கு அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் இரண்டு நாள்களுக்குமுன் இலங்கை யாழ்ப்பாணத்தில் காலமானதையொட்டி, மனிதநேயத்துடன் அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் நேற்றிரவு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்று, அவர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவருக்கு இலங்கைச் சிங்கள இராஜபக்சே அரசு உள்ளே செல்ல அனுமதி மறுத்து, அவரை வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லுமாறு பிடிவாதம் காட்டி, சிங்கள அரசின்அதிகாரிகள் அவரை சென்னை திரும்பும்படிச் செய்துவிட்ட கொடுமையைக் கேட்டு உணர்ச்சியும், மனிதநேயமும் உள்ள நமது நெஞ்சங்கள் குமுறுகின்றன.
தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும்கூட (எம்.பி.).
இலங்கையில் நடப்பது காட்டாட்சியா?
ஏற்கெனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, இராசபக்சேவிடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் - அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்று திருப்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா? காரணத்தைக் கூறுங்கள் என்று பல முறை அவர் வற்புறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை.
அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை; துக்க நிகழ்ச்சி - மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது?
மத்திய அரசு பரிகாரம் தேட வேண்டும்
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்.
தனிப்பட்ட தொல். திருமாவளவனுக்கு ஏற்பட்ட அவமானமோ, பின்னடைவோ அல்ல இது. இந்தியப் பேரரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்ற நிலைப்பாட்டுடன், கொதிப்புடன் மத்திய அரசின் வெளியுறவுத் துறை இதனை எண்ணிப் பரிகாரம் தேட வேண்டும்.
மீண்டும் அனுமதி தேவை!
ஏற்கெனவே பிரபாகரனின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்தபோது செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது மட்டும் மறுப்பதேன்? தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது - ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகி விட்டது!
மத்திய அரசு இதுகுறித்து இலங்கைத் தூதரிடம் பேசித் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதும், மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி துக்கம் விசாரிக்க உதவுவதும் அதன் முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சிங்களப்படையினரின் போர்க்குற்றம் குறித்த அய்.நா. அறிக்கை : ஓரிரு நாளில் தாக்கல்
இலங்கை போரின் போது சிங்களப்படை யினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பான அய்.நா. குழுவினரின் விசாரணை அறிக்கை ஓரிரு நாள்களில் அய்.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூனிடம் தாக் கல் செய்யப்பட உள் ளது. இந்த அறிக்கையின் நகல் ஒன்று இலங்கை அரசிடம் வழங்கப் பட்டு, அதன் அடிப் படையில் மேற்கொள் ளும் படி கேட்டுக் கொள்ளப்படும் என்று அய்.நா. தலைமைச் செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித் தன.
அய்.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவின் பதவிக் காலம் டிசம்பர் மாதமே முடிவடைய இருந்த நிலையில், இலங்கைக்குச் சென்று போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்காக அதன் பதவியின் காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீட் டிக்கப்பட்டது.
எனி னும், பல்வேறு காரணங் களால் அய்.நா. போர்க் குற்ற விசாரணை நடத்த வில்லை. மாறாக இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசா ரணைக் குழுவிடமும், இலங்கை அரசிடமும் பல்வேறு வினாக்கள் அடங்கிய பட்டியலை அளித்த அய்.நா. குழு வினர், அவற்றுக்கு விடையளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு, அய்.நா. குழு எழுப்பிய வினாக் களுக்கு அண்மையில் விடை அளித்திருந்தது.
அதன் அடிப்படை யில் போர்க்குற்ற விசா ரணை அறிக்கையை மார்சுகி தரூஸ் மென் தலைமையிலான அய்.நா. குழு தயாரித்து விட்டதாகவும், அடுத்த ஓரிரு நாள்களில் இக் குழுவினர் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்து இந்த அறிக்கையை வழங்குவார்கள் என்றும் அய்.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.
போர்க் குற்ற விசாரணைக் குழு வின் பதவிக்காலம் வரும் 28ஆம் தேதியுடன் முடி வடைய இருப்பதால் அதற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய் யப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
விசாரணை அறிக்கையின் நகல் ஒன்று இலங்கை அர சுக்கு அனுப்பி வைக்கப் படும் என்றும், அதன் அடிப்படையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட வர்கள; மீது நடவ டிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப் படும் என்றும் அய்.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. இலங் கைப் போரின்போது சிங்களப்படையினர் பல்வேறு போர்க்குற்றங் களை இழைத்தனர்.
அப்பாவி தமிழ் மக் களைக் கடத்தியும், பாலியல் வன்கொடுமை செய்தும் அவர்கள் கொடுமைப்படுத்தினர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் மீதும், மருத்துவமனை களில் மருத்துவம் பெற்று வந்த தமிழ் மக்கள்மீதும் சிங்களப் படையினர் ஏவுகணை களை வீசிக் கொன்ற னர்.
இதற்கெல்லாம் மேலாக போரின் இறு திக்கட்டத்தில் சரண டைவதற்காக வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், சமாதானப் பிரிவு செய லகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோ ரையும் அவர்கள் இரக் கமின்றி படுகொலை செய்தனர்.
சிங்களப்படை யினரின் இத்தகைய போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திய தையடுத்து மூன்று உறுப் பினர்கள் கொண்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவை அய்.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் கடந்த ஆண்டு சூன் மாதம் அமைத்திருந்தார்.
இந்தோனேசிய நாட்டின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்சுகி தரூஸ்மென், தென்னாப் பிரிக்க மனித உரிமைப் போராளி யாஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்டப்பேரா சிரியர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக் கது.
Monday, February 21, 2011
பார்வதியம்மாள் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதி மறுப்பு : திருமாவளவன் ஆவேசம்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொளவதற்காக இலங்கை சென்றார்.
விமானத்தில் சென்று கொழும்பில் இறங்கிய திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கொழும்பு சென்ற திருமாவளவனை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது இலங்கை.
இது குறித்து ஆவேசமான திருமாவளவன், எம்.பி.யாகிய தன்னை திருப்பி அனுப்பியது இந்தியாவுக்கு அவமானம். இந்த அவமானத்தை போக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக கூறியுள்ளார்.
கொலைவெறியன் ராஜபக்சே - திருமாவளவன் ஆவேசம் :
சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை இராஜபக்சே ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை! இந்திய, தமிழக அரசுகள் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் கடந்த 20Š02Š2011 அன்று அதிகாலையில் வல்வெட்டித் துறை பொது மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று (22Š.02.Š2011) மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று (21Š.02Š.2011) நள்ளிரவு 12.30 மணியளவில் கட்சிப் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா ஆகியோருடன் கொழும்பு சென்றோம்.
கொழும்பு விமான நிலையத்தில் சிங்கள அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் எங்களை வழிமடக்கி, "இலங்கைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்!'' என்று கூறினர்.
""நாங்கள் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும்'' என்று வாதாடினோம்.
"அவ்வாறு அனுமதிக்க இயலாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள்'' என்று வற்புறுத்தினர். "நான் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவிலும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும், இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட இந்திய அரசுக்கும், இந்திய தேசத்திற்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும். இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன்'' என்றும் எச்சரிக்கை விடுத்தேன்.
மேலும் என்னையும் என்னுடன் வந்தவர்களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அவ்வாறு வழங்க இயலாது என்று மறுத்ததோடு எங்களை வலுக்கட்டாயப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அனுமதிக்காத, ஈவிரக்கமில்லாத கொடுங்கோலன் இராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அன்னை பார்வதி அம்மாள் இறப்பையொட்டி ஈழத்தில் கருப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் ஆங்காங்கே அவரின் திருவுருப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனவும் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் இராணுவ கொடுநெறி அரசு கெடுபிடி செய்து வருகிறது.
அன்னை பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் இராஜபக்சேவின் இராணுவம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடுகளவும் கருணையில்லாத கொடூரன் இராஜபக்சேவின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது.
ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் இராஜபக்சேவின் அணுகுமுறைகள் தொடர்கின்றன. இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இனவெறிபிடித்த கொலைவெறியன் இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதிலிருந்தே அறியலாம்.
இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் இராஜபக்சே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
நேரிலே அஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும் அன்னை பார்வதி அம்மாளுக்கு இலட்சோபலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை தமிழகத்திலிருந்து செலுத்துகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருமாவளவன் கைது!:
திருமாவளவன் திருப்பியனுப்பப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டமும் இராஜபக்சே உருவபொம்மை எரிப்புப் போராட்டமும் நடத்தினர்.
இலங்கை அரசையும், அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவையும் கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இச்செயலை கண்டித்து காஞ்சிபுரம் சிக்னல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பூண்டி ஒன்றியம் சீதஞ்சேரியில் அக்கட்சி தொண்டர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் ராஜபக்சே உருவ பொம்மையை ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல கும்மிடிப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் ஜெமினி தலைமையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் நகரசெயலாளர், கண்ணியப்பன், பொருளாளர் தலீத்ஐயா, ஒன்றியதுணைச்செயலாளர் நேசக்குமார், சுப்பிரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இன்று (22.02.2011) சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தொல்.திருமாவளவன் தலைமையேற்றார்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அமைச்சரைக் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றார்.
விமானத்தில் சென்று கொழும்பில் இறங்கிய திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொழும்பு சென்ற திருமாவளவனை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது இலங்கை.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.
திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர். எந்த நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல இந்த பாஸ்போர்ட் அனுமதிக்கும். ஆனால் அவரை இலங்கை திருப்பி அனுப்பியது இந்திய அரசை அவமதித்த செயலாகும்.
சென்னை நீதிமன்றத்தால் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு தாராளமாக வந்துசெல்கிறார்.
ஆனால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை இலங்கை திருப்பி அனுப்புகிறது. இது பெரும் அவமானம்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த சர்வதேச காவல்துறை மூலம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் பார்வதி அம்மாள் உடல்
பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதற்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்று (20.02.2011) காலை காலமானார்.
பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அஞ்சலிகள் செலுத்துவதை கூட சிங்கள இராணுவம் தடுத்து வருகிறது. ஆனால் அதனையும் மீறி தமிழ் மக்கள் தமது இறுதி வணக்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
யாழில் பல பகுதிகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறிப்பாக வடமராட்சி பகுதியில் பல வீடுகளிலும், பொது அமைப்புக்களின் அலுவலகங்களிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
தற்போது வல்வெட்டித்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளின் உடல் தீருவில் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அங்கு தான் கேணல் கிட்டு, லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா ஆகியோரின் நினைவு மண்டபம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அது பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுவிட்டது.
கடந்த வருடம் காலம்சென்ற தேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலும் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சோகத்தில் மூழ்கியுள்ளது யாழ்.குடாநாடு :
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவையடுத்து யாழ்.குடாநாடு சோகத்தில் மூழ்கியுள்ளது.
யாழ். குடாநாட்டில் போக்குவரத்து சேவைகள், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. யாழ்.நகரப் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
பார்வதி அம்மாளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் பல தமிழ் பிரமுகர்கள் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Sunday, February 20, 2011
தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மாள் காலமானார்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள்(வயது 81) யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இன்று (20.02.2011) காலமானார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார் பார்வதியம்மாள்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்தது.
ஆயினும் அவரது குடும்பத்தினர் நிபந்தனையின் அடிப்படையில் அவர் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்தும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை. இதனாலேயே அவர் சொந்த ஊருக்குத் திரும்பி அழைத்து செல்லப்பட்டார்.
பார்வதி அம்மாள், அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்துசெ செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார். இந்நிலையில் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று (20.02.2011) காலை 6.10 மணியளவில் காலமானார். ஏற்கனவே, அவருடைய கணவர் வேலுப்பிள்ளை கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து விட்டார்.
பார்வதி அம்மாள்-வேலுப்பிள்ளை தம்பதிக்கு விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தவிர, மனோகரன் என்ற மற்றொரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஒரு மகள் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரிலும், மற்றொரு மகள் சென்னையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகன் மனோகரன், டென்மார்க் நாட்டில் குடும்பத்தினருடன் உள்ளார்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.02.2011) அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் , ‘’மரணமடைந்த பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவருடைய மரணம் பற்றிய தகவலை மகன் மற்றும் மகள்களுக்கு தெரிவித்து விட்டேன். பார்வதி அம்மாளின் நெருங்கிய உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவருடைய இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெறும். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அன்று (22.02.2011) இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கருதுகிறேன்’ என்று தெரிவித்தூள்ளார்.
நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (22.02.2011) மாலை 3 மணியளவில் வல்வெட்டித்துறையில் நடைபெறும் பார்வதி அம்மாள் இறுதி அடக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொள்வதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் இரங்கல் :
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை பொதுமருத்துவமனையில் நீண்டகாலமாக உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலையில் காலமாகிவிட்டார்.
அவருடைய இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
அவரது இழப்பு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அவரது இழப்பால் உள்ளம் வருந்தும் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி ஆறுதல் தேடும் நிலையே உள்ளது.
அந்த வகையில் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் இரங்கல் :
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’ ஈழத் தமிழர்களின் சன நாயக உரிமைகளுக்காகவும், சொந்தமண்ணில் சம உரிமைகளுடனும், சுயமரியாதையுடனும் வாழவும் போராடிய போராளி பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் காலமானார் என்ற துயரச் செய்தி ஈழத் தமிழர்களை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது.
கடந்த ஓர் ஆண்டு காலமாக கடும் நோயினால் அவதிப்பட்டு மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வந்த பார்வதியம்மாள், சிகிச்சை பலனின்றி காலமானதைத் தொடர்ந்து துயரத்திற்கும், அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிற அவரது குடும்பத்தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
சீமான் இரங்கல் :
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழீழத்தின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று இறந்து விட்டார் என்னும் துயரச்செய்தி வந்துள்ளது.
அவர் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும். நாங்கள் வரலாற்றில் படித்த கரிகாலனை நேரில் காட்டியவர் பார்வதி அம்மாள்.
அவருக்கு நாம் அனைவரும் நேரில் சென்று வணங்கி அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு ஈழம் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
விரைவில் இந்த இழி நிலை மாறும். பார்வதி அம்மாளுக்கு நாம் தமிழர் கட்சி தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இறுதிக்காலத்தில் தனது உடல் நலனுக்குச் சிகிச்சை பெறும் பொருட்டு தாய்த் தமிழ்நாடு வந்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதநேயமற்றுத் திருப்பி அனுப்பினார்கள்.
எந்த ஆட்சி அதிகாரம் அவருக்கு அனுமதி மறுத்ததோ அந்த ஆட்சி அதிகாரமே தலைகுனியும் வண்ணம் இன்று நம் நாட்டின் சாலைகளெங்கும், தெருக்கள் எங்கும், சந்து பொந்துகள் எங்கும் பார்வதி அம்மாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற வேண்டும். அவரின் நினைவைப் போற்றும் வகையில் நெடுமாறன் நடத்தும் அமைதிப் பேரணியில் நாம் தமிழர் சார்பில் அதில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இன்று (20.02.2011) மாலை கோவையில் பார்வதி அம்மாளின் நினைவைப் போற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
வைகோ இரங்கல் :
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரனைத் தன் மணி வயிற்றில் சுமந்த அந்த வீரத்தாயின் மரணச் செய்தி, இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.
தமிழ் ஈழத்தின் தவப்புதல்வனைப் பெற்ற அந்தத் தாய்க்கு, அவரது வாழ்நாளில் ஏற்பட்ட துயரம், விவரிக்கவே இயலாத கொடுந்துன்பம் ஆகும்.
தன் வீர மைந்தனைத் தங்கள் நெஞ்சங்களிலே பூசித்த கோடானு கோடித் தமிழர்களை எண்ணி அவர் பெருமிதம் கொண்டு இருந்தாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வீரப்பிள்ளைகளும், வீராங்கனைகளும் வெஞ்சமரில் மடிந்த போது, வேதனைத்தீயில் துடித்தார்.
உத்தமர் வேலுப்பிள்ளையும் அன்னை பார்வதி அம்மையாரும் என் இல்லத்துக்கு வந்து, என் பேரனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதும் என் மகனின் திருமணத்துக்கு இருவரும் வந்து வாழ்த்தியதும், என் வாழ்வில் நான் பெற்ற பேறுகள் ஆகும்.
பார்வதி அம்மையாருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து, இரங்கல் ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறேன்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (21.02.2011) மாலை 4 மணி அளவில், தியாகராயநகர், வெங்கட் ரமணா சாலையில் உள்ள செ.த. நாயகம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடக்கிறது.
பழ.நெடுமாறன், தலைமை ஏற்க, நானும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்கிறோம். புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும் திரளாகப் பங்கேற்கும்படி வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பழ. நெடுமாறன் இரங்கல் :
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழீழத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் இன்று அதிகாலை 6:10 மணிக்கு காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கூட அங்கிருந்து வெளியேறி பத்திரமான இடம் தேடி அவரும் அவரது கணவரும் வாழ முயலவில்லை.
தங்கள் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுடனேயே அத்தனை துன்பங்களையும் தாங்கி இறுதியாக சிங்கள ராணுவச் சிறையில் பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்த போதிலும் அவர் கொஞ்சமும் கலங்கவில்லை.
சிறையில் தனது கணவரை பறிகொடுத்தத் துயரம் அவரது உடல்நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.
இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வாழும் அவரது மூத்த மகனும் அவரது மகள்களும் மற்ற நெருங்கிய உறவினர்களும் இலங்கை சென்று சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. அவரைத் தமிழகம் கொண்டு வந்து அவரோடு நெருங்கிப் பழகிய குடும்பங்களோடு தங்க வைத்து மன ஆறுதலையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்க செய்யப்பட்ட ஏற்பாட்டினை இந்திய தமிழக அரசுகள் மனிதநேயம் கொஞ்சமும் இல்லாமல் முறியடித்தன.
தமிழகத்தில் வந்து இறங்கிய அவரை ஈவு இரக்கமில்லாமல் திருப்பி அனுப்பிய கொடுமையும் நிகழ்ந்தது. இதெல்லாம் அவருடைய மனநிலையை மேலும் பாதித்துவிட்டன. இந்த சூழ்நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் அவர் காலமாகியிருக்கிறார்.
அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் திங்கள் கிழமை (21-2-2011) மாலை 4 மணிக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் இரங்கல் :
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’பார்வதி அம்மாளின் மறைவுக்காக உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் வருத்தத்தோடு கண்ணீர் சிந்தி அவரது மறைவுக்கு வீர அஞ்சலி செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.
டாக்டர் ஆர்.கிருஷ்ணசாமி இரங்கல் :
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஆர்.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’ஈழ விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட உலக தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகிற மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்பாணத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி நம்மை எல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது’’என்று கூறியுள்ளார்.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் இரங்கல் :
பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில்,
’’உலகத்தமிழர் பார்வையில் மாவீரனாக விளங்கிய பிரபாகரனை ஈன்றெடுத்த அவருடைய தாயார் பார்வதி அம்மாள், நேற்று முன்தினம் மறைந்த செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகிற்கு மனிதன் ஒருவனை அளித்த அன்னை பார்வதி அம்மாள் மறைவு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். தனது இறுதி காலத்தில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சையை பெற அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்திருப்பார் என்று கருதத் தோன்றுகிறது.
பார்வதி அம்மையாரின் மறைவு தமிழர்களின் நெஞ்சில் நீங்கா வடுவினை ஏற்படுத்தினாலும், தமிழர்கள் வரலாற்றில் ஒரு நிலையான இடத்தை அவரது வரலாறும் இடம்பெறும். பார்வதி அம்மையாரின் மறைவிற்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் :
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருமதி பார்வதி அம்மையார் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர் பிரிவால் வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உலகத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
(அனைவரும் இரு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர்)
இத்தீர்மானத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்மொழிந்தார்.
பார்வதி அம்மாள் மறைவு - இயக்குனர்கள் இரங்கல்
21.02.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் எழில், துணைத் தலைவர்கள் விக்ரமன், சசிமோகன், இணைச்செயலாளர்கள் அமீர், டி.கே.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Saturday, February 19, 2011
எகிப்து புரட்சி : நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து
எகிப்து மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
’’எகிப்திய மக்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம்! இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது பாராட்டுதல்களையும்; வாழ்த்துக்களையும் எகிப்திய மக்களுக்கு தெரிவிக்கின்றது.
எகிப்திய மக்கள் அராஜகத்தை தமது நாட்டிலிருந்து அகற்றி இந்த வரலாற்று நிகழ்வை அடைந்திருப்பதைக் கண்டும், அவர்கள் தங்களுக்கு எதிரான பிரமாண்டமான தடைகளை மேற்கொண்ட விதத்தை பார்த்தும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள்.
எகிப்திய மக்களின் சாதனை உலகெங்கும் எதிரொலித்த வண்ணம் உள்ளது. இவர்களின் வெற்றி உலகெங்கும் உள்ள ஏனைய ஊழல் மிகுந்த தலைவர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மக்களின் மீது திணிக்கப்பட்ட துயரத்தையும், இருண்டுபோன வாழ்வையும் குறிப்பிட்டு டுனீசியாவின் கவிஞர் அப்துல் குயாசிம் அல் சகாபி (1909-1934) எழுதிய கவிதையை டுனீசியாவிலும் எகிப்திலும் முன்னணியில் நின்று இயங்கியவர்கள் மேற்கோள் காட்டி வருகிறார்கள்.
இந்த வரலாற்று நிகழ்வை நோக்கி சென்ற நாட்களில், விடுதலையை நேசிக்கும் எகிப்திய மக்களுக்கு விடுதலைக்கான குரல்களும், கவிதைகளும் பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் ஊடாக உலகெங்கும் சென்றடைந்தன. அரச மாற்றத்தை ஏற்படுத்துவதில் சமுக தொடர்புசாதனங்களின் சக்தியையும், உயிர்ப்பையும் இந்த புரட்சி வெளிப்படுத்தியுள்ளது.
வன்முறையற்ற, தளராத நடவடிக்கை மூலமாக எகிப்திய மக்கள் சாதித்துக் காட்டியதை உலகம் அவதானித்திருக்கிறது. அண்மைக் காலத்தில் என்றும் இல்லாத அளவில், சுதந்திரமான அரசாங்கங்களின் தோற்றத்துக்கான நம்பிக்கை ஒளி பிரகாசமாக இருக்கிறது.
எகிப்திய மக்களை இந்த நம்பிக்கை ஒளி தொடர்ந்து வழிநடத்தும் அதேவேளை, இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கும் அது பிரகாசமாக ஒளிர்கிறது.
இந்த முக்கியமான தருணத்தில், அனைத்து ஈழத்தமிழருக்கும் எமது விடுதலைக்கும், இறையாண்மைக்குமான, அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டத்தை தீவிரப்படுத்த சமுக தொடர்புசாதனங்கள் உட்பட அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் பயன்படுத்துமாறு அறைகூவல் விடுக்கிறோம்.
உண்மையான கருத்து சுதந்திரத்தையும், அர்த்தமுள்ள ஜனநாயகத்தையும் அடையும் பயணத்திலும், சித்திரவதைகளற்ற சுதந்திர நாட்டைப் பெறுவதிலும், எகிப்திய மக்கள் அடைந்துள்ள இந்த முக்கியமான வெற்றிக்காக அவர்களை மீண்டும் ஒரு முறை வாழ்த்தி, அவர்களின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இணைந்து கொள்வது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
Saturday, February 12, 2011
இந்தியாவை ‘நெருங்கும்’ உருத்திரகுமாரன்! - பின்னணி என்ன?
ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இன்னும் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், பிப்ரவரி 4&ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடியது ஒன்றுபட்ட(!) இலங்கை.
அதேநாள், சென்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு & ஏன்?’ என்கிற கேள்வியுடன் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது ‘நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையம்’.
ஈழப்போருக்குப் பின்னர் புலிகள் இயக்கம் பின்னடைவை சந்தித்த நிலையில், தனி ஈழத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் கையிலெடுத்த உலகளாவிய ஜனநாயக போராட்ட ஆயுதம்தான்... ‘நாடு கடந்த தமிழீழ அரசு’. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, தமிழர்கள் வாழும் 86 நாடுகளில் தேர்தல்களையும் நடத்தி முடித்து, நாடு கடந்த தமிழீழ அரசை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் நியமன எம்.பி.யாக தேர்ந்தெடுக்-கப்பட்டிருக்கும் பேராசிரியர் சரசுவதி தலைமையில் சென்னையில் நடந்தது இந்தக் கருத்தரங்கு.
கொளத்தூர் மணி, தியாகு, மணிவண்ணன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு திரண்டிருந்த உணர்வு ரீதியான ஆர்வலர்களோடு, உளவு ரீதியான ஆர்வலர்களும் வந்திருந்தனர்.
கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்துப் பேசிய பேராசியர் சரசுவதி, ‘‘அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஈழ மக்கள் மட்டுமின்றி, இந்தியத் தமிழர்களும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்தல் முடிந்ததும் அனைத்துப் பிரதிநிதிகளும் அமெரிக்காவில் ஒன்றுகூடி, தமிழர்களின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த அரசு, உலகத் தமிழர்-களுக்கான உரிமையை அரசியல்ரீதியாக பெற்றுத் தரும்’’ என்று நாடு கடந்த அரசு பற்றி விளக்கினார். அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தியாகு பேசினார். அவர் பேசி முடித்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டன.
இருள் சூழ்ந்த நேரத்தில், உளவுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, திடீரென அரங்கத்-துக்குள் பிரவேசித்தார் (வீடியோ கான்பரன்ஸிங் முறையில்) நாடு கடந்த தமிழீழ அரசின் முதன்மை அமைச்சர் உருத்திரகுமாரன்.
முத்துக்குமாருக்கு வீரவணக்கம் தெரிவித்துவிட்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கிய உருத்திரகுமாரன், ‘‘தற்போது பிறந்திருக்கும் நாடு கடந்த ஈழ அரசாங்கம், ஈழத்தின் குழந்தை மட்டுமல்ல. தமிழக மக்களின், உலகத் தமிழ் மக்களின் குழந்தை. ஈழ மக்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதம், தமிழக மீனவர்கள் மீதும் தன்னுடைய கொடூர பற்களை பதித்து வருகிறது. இது தற்செயலான நிகழ்வு அல்ல. இதன் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான இனவாதமும், இந்திய எதிர்ப்பும் உள்ளது’’ என்று ஆரம்பத்திலேயே தன் பேச்சை கவனிக்க வைத்த உருத்திரகுமாரன், தொடர்ந்து பேசுகையில்...
‘‘ஈழ மக்களை, இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் இலங்கை அரசு கருதுகிறது. தமிழ்நாட்டின் ஊடாகத்தான் சிங்கள மண்ணின் மீது இந்தியப் படையெடுப்பு நடந்ததாக நினைக்கும் சிங்களம், இந்தியாவைத் தன்னுடைய எதிரியாகவே நினைக்கிறது.
தமிழர்கள் என்கிற போர்வையில் இலங்கைக்குள் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கையை விடுவிக்கவேண்டும் என்பதே ராஜபக்ஷேவின் லட்சியம். புத்தமத பின்னணி கொண்ட சீனா, தனக்கு பாதுகாப்பாக இருக்குமென்று, அவர் கருதுகிறார். ஆனால், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம், இந்தியாவுக்கே ஆபத்தாக அமையும் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவே இல்லை. தற்போது முடிந்துள்ள போர்கூட, தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான போர்தான். இதுதான் உண்மை.
உலகில், தமிழர்களுக்கு எங்கே இன்னல் ஏற்பட்டாலும், ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ போராடும். சர்வதேச நியமனங்களுக்கு உட்பட்டு உரிமைகளை மீட்டெடுப்போம். அந்த வகையில், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டுச் செல்வோம். ‘போராட்ட வடிவம் மாறினாலும், லட்சியம் மாறாது’ என்ற தேசியத் தலைவரின்(பிரபாகரன்) வாக்குக்கு இணங்க, புதிய பயணத்தை தொடங்குவோம்’’ என்று விரிவாகப் பேசி முடித்தார். உருத்திரகுமாரனின் பேச்சில் இந்தியா பற்றியான அக்கறை தொனிப்பதைக் கேட்டு, பலரும் அரங்கில் வியப்படைய... அடுத்துப் பேசிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சி.ராஜன், வெளிப்படையாகவே அதை மேடையில் கேட்டுவிட்டார். ‘‘தமிழர்களுக்கு எதிரான ஈழப் போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான். அப்படியிருக்க, இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து உருத்திரகுமாரன் கவலைப்படுவதுபோல் தெரிகிறது. எனவே, நாடு கடந்த தமிழீழ அரசுக்கு, இந்திய அரசோடு உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கவேண்டும்’’ என்று சலசலப்பைக் கிளப்பினார்.
இதையடுத்துப் பேசிய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ‘‘சிங்களப் பேரினவாதம், தங்களுடைய ராஜதந்திர நடவடிக்கைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. ஈழத்துக்கு எதிராக இருந்த வெனிசுலா நாடு, ஒரு கட்டத்தில் தன்னுடைய மனித உரிமை பார்வையை மாற்றி, ஈழத்துக்கு ஆதரவளிக்க முற்படுகிறது என்ற தகவல் கிடைத்ததுமே... கியூபா நாட்டு இலங்கைத் தூதர் வெனிசுலாவுக்குப் போகிறார். அங்கே ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரைப் பிடித்து, இலங்கை அரசுக்கு ஆதரவாக கட்டுரை எழுத வைக்கிறார். அதன் வழியாக வெனிசுலாவின் கருத்தை மாற்ற முயற்சிக்கிறார். அடுத்து யாரெல்லாம் ஐ.நா.வின் பொதுச்செயலாளர்களாக வர வாய்ப்பிருக்கிறதோ, அவர்களையெல்லாம் பார்த்துப் பேசுகிறார்கள்.
இதை எப்படி நாம் தடுப்பது? இதுபோன்ற கருத்தியல் தாக்குதல்களை முறியடிக்கவும், தனி ஈழத்துக்கான சர்வதேச ஆதரவை பெறவும் நாடு கடந்த தமிழீழ அரசு அவசியமான தேவை...’’ என்றார்.
சீனாவுடனான ராஜபக்ஷேவின் உறவுகள் வலுப்பெறுவதை சுட்டிக் காட்டி, இந்திய அரசை ஈழத்துக்கு ஆதரவான சக்தியாக மாற்றுவதே, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முக்கிய நோக்கம். இதை தன்னுடைய பேச்சில் பூடகமாக வெளிப்படுத்தியிருக்கும் உருத்திரகுமாரன், இந்த மனப்பான்மையை மையமாக வைத்து விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறாராம்.
நன்றி : தமிழக அரசியல்.
Thursday, February 10, 2011
தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம் - தமிழ்நதி
ஆயுதங்களைக் கைவிடும்படி
அறிவித்தல் கிடைத்தது.
நல்லது ஐயா!
எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்
எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
சுவர்களிலும் மரங்களிலும்
எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
வழியும் வெண் மூளைச்சாற்றின்
கனவில் இருப்பவர்களே!
சற்றே அவகாசம் கொடுங்கள்
எங்கள் குழந்தைகளுக்கு
நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
மேலும் நீங்கள்
வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
எங்கள் பெண்கள்
இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
சற்றே அவகாசம் கொடுங்கள்.
போராளிகள் ஆயுதங்களைக் கைவிடும்முன்
கவிஞர்கள்
தம் கடைசிக் கவிதையை
எழுதிக் கொள்ளட்டும்.
பத்திரிகையாளர்கள்
'ஜனநாயகம்... ஜனநாயகம்' என்றெழுதி
துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
அச்சொல்லின் மீது காறியுமிழட்டும்.
எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
உங்களுக்கும் அது வேண்டியதே.
சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க...
நவீன சித்திரவதைகளில்
சிறையதிகாரிகள் பயிற்சி பெற...
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும்
குடுவைகளில் சேகரிக்க...
நகக்கண்களுக்கென ஊசிகள்
குதிகால்களுக்கென குண்டாந்தடிகள்…
முகம் மூடச் சாக்குப்பைகள்...
கால்களுக்கிடையில் தூவ
மூட்டைகளில் மிளகாய்த்தூள்கள்
மேலும் சில இசைக்கருவிகள்
வதைபடும்போதில் எழும் கதறலை
நீங்கள் இசையமைத்து
பண்டிகைகளில் பாடவிரும்பலாம்.
எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
மறந்தே போனேன்
எங்களைக் கைவிட்டவர்கள்
தேர்ந்த சொற்களால்
இரங்கலுரைகளை முற்கூட்டியே எழுதிக்கொள்ளலாம்.
எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.
அந்தோ! பூரண அமைதி பொலிகிறது.
நாங்கள் கேட்கும்
அவகாசத்தை வழங்கி
தேவரீர் அருள்பாலிக்க வேண்டுகிறோம்.
- தமிழ்நதி
தாயகத்திலுள்ள மக்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் தலையாய கடமை: தமிழீழ விடுதலைப்புலிகள்
“வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்” என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச்செயலகம், த/செ/ஊ/அ/01/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/02/ 2011.
அன்பார்ந்த தமிழ் மக்களே,
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் விடுதலைப் பற்றைச் சிதறடித்து, உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தனது கபடத்தனமான இராஜதந்திர அணுகுமுறையால் பயங்கரவாத அமைப்பாக உலகின் கண்முன் காட்டியது. இப்போதும் சிங்கள அரசு புதிய புதிய உத்திகளை வகுத்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களால் உருவாக்கப்படும் ஜனனாயகக் கட்டமைப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உப அமைப்புக்களாகக் காட்டி அவ்வமைப்பைச் சட்டச் சிக்கலுக்குள் தள்ள முயற்சிக்கின்றது.
இத்தகைய சூழலில் சிங்கள அரசாங்கம் மற்றும் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தினை விரும்பாத சக்திகள், எம் மக்களினால் முன்னெடுத்துச் செல்லப்படும் போராட்ட நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறு சூழ்ச்சி வழிகளைக் கையாண்டு வருகின்றன. இதில் முக்கியமானது புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் ஆதரவுச் சாயம் பூசி அதனை ஒடுக்க முற்படுவதாகும்.
விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு தமிழர்களின் சுயமான ஜனனாயக எழுச்சிப் போராட்டங்களை முடக்குவதற்காகவே விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் எதிரியால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளில் சிலரை தம்வசப்படுத்தி அவர்களூடாக புலம்பெயர் தமிழ்மக்களிடம் நிதி சேகரிப்பில் சிறிலங்கா அரசு ஈடுபடுவது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளின் பற்றுச் சிட்டைகளைப் போன்ற பற்றுச்சிட்டைகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த சிறிலங்கா அரசு முற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஊடாக, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியற் செயற்பாடுகளையும், அதில் ஈடுபடும் அமைப்புக்களையும் முடக்க சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது.
வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத்தால் கபட நோக்கோடு உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் வலையில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடனிருக்க வேண்டியது அவசியமாகும்.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற சட்டச் சூழலைப் பயன்படுத்தியே தமிழர்களின் போராட்டத்தினை சிங்கள அரசு நசுக்க முற்படுவதனை மக்களாகிய எல்லோரும் நன்கு அறிவீர்கள். ஆகவே இச்சூழலை மாற்றியமைக்க புலம்பெயர் மக்கள் முனைப்புடன் செயற்படவேண்டும்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயக்கத்தின் தடையை நீக்குவதற்காக எடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து அண்மையில் பிரான்ஸ் நாட்டிலும் ‘தமிழர் நடுவம்’ எனும் அமைப்பினால் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை நீக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. இவ்வாறான முயற்சிகளுக்கு தமிழ்மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கி இம்முயற்சிகள் வெற்றிபெற உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அன்பான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது இனத்தின் மீதான ஒடுக்குமுறையை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தி வரும் அதேவேளை, எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி புல்லுருவிகள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் குழப்பங்களில் இருந்து விடுபட்டு எமது போராட்டச் செயற்பாடுகளைச் சரியான வழியில் கொண்டுசெல்ல எமது இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.
அப்பழுக்கற்ற எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிரியால் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
Tuesday, February 8, 2011
புலிகள் மீதான தடையை நீக்க என்ன தடை?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மீண்டும் ஒருமுறை நீட்டித்திருக்கிறது இந்திய அரசு. 1991 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையைக் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் மேலும் இரண்டாண்டுகள் நீட்டித்திருக்கிறது.
“விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டனர். அதன் முன்னணித் தலைவர் கள் அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான விடுதலைப் புலி வீரர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டுவிட்டனர். இந்தியா, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற உலக நாடுக ளின் உதவியோடு விடுதலைப்புலிகள் இயக்கமே இல்லாமல் செய்துவிட்டோம்” என்கிறது இலங் கை அரசு. தமிழ் மக்களை மட்டுமன்றி, தமிழ் நிலங்களையும் அழிக்கும் வகையில் இப்போது அங்கே சிங்களக் குடியேற்றம் தொடங்கி யுள்ளது
ஆனால் விடுதலைப் புலிகளின் செயல் பாடுகள் அறவே இல்லாத இந்தியாவில் மட்டும், அந்த இயக்கத்திற்குத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு ‘வேடிக்கை விநோத வினையாட்டு’ என்று சிறிதளவே செய்தி அறிந்துள்ளவர்களும் உணர்ந்து கொள்ள முடியும்.
ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள நாடாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் ராஜபக்சேவுக்கு இந்தியா செய்துவருகின்ற உதவிகளில் இதுவும் ஒன்று. விடுதலைப் புலிகள் மீது இந்தியா தடை விதித்த காரணத்தால், உலக நாடுகள் ஒவ்வொன்றாக அந்த இயக்கத்தைத் தடை செய்யத் தொடங்கின. இதன் விளைவு, அந்நாடுகளில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எந்த நாட்டைவிட்டு உயிரைக்காத்துக் கொள்ள ஓடிவந்தார்களோ, அதே கொலைக்களத்திற்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இராஜபக்சேயின் இனஅழிப்பு வேலையை இந்த விதத்திலும் இந்தியா இலகுவாக்கித் தருகிறது. இல்லாவிட்டால், இல்லை என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன் ?
இலங்கை அரசின் நோக்கமும், இந்தியா வின் நோக்கமும் ஏறத்தாழ ஒரே மாதிரியானது தான். தமிழின விரோதப் போக்கு இரண்டு நாடுகளின் தாரக மந்திரமாக இருக்கிறது. எனவேதான் நாடுகடந்த தமிழீழ அரசைப் பயங்கரவாத அமைப்பு என்று தடைவிதித்து, கடல் கடந்தும் ஈழத்தமிழர்களை அழிக்கத் துடிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை, உலக நாடுகள் பலவும் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் ராஜபக்சேவை, தமிழர்க ளின் வாழ்வோடு விளையாடிய ராஜபக்சேவை காமன்வெல்த் போட்டியை முடித்து வைக்க அழைத்து வந்தது மத்திய அரசு. இந்தியாவின் தலைமை அமைச்சரோ, தலைவாழை இலை போட்டு விருந்தே வைத்தார். தமிழர்களின் உணர்வுகளை இதை விடக்கொச்சைப்படுத்திட முடியாது.
புலிகள் மீதான தடை நீட்டிப்பு சரியா, தவறா என்பதை விசாரிக்கும் ஒரு நபர் நடுவர் மன்றத்தின் விசாரணையின் போது, அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது அங்கீகரிக்கப் பட்ட உறுப்பினர்கள்தான் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியும் என்பது விதி என்று சொல்லப்பட்டது. இலங்கை அரசால் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று அறிவிக்கப் பட்ட பிறகு யார் வந்து வாதாடுவார்கள்? எல்லாம் குழப்பமாக - திட்டமிட்ட குழப்பமாக உள்ளது. ஏதோ அனிச்சை செயல்போல இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் தடை நீட்டிக்கப்பட்டு விடுகிறது.
ஈழத்தில் நடந்து முடிந்த இனப்படு கொலையைத் தொடர்ந்து இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்? அங்கே நடந்தது இனப்படு கொலைதான், சர்வதேச போர்விதிகளை இலங்கை அரசு அப்பட்டமாக மீறியிருக்கிறது, எனவே இராஜபக்சே சகோதரர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதாரங்களோடு செய்திகளை வெளியிட்டதைப்போல, இந்தியாவும் செயலாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் அமைதி இலங்கைக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து முடித்தது.
இந்தியாவின் நிலைப்பாட்டைத்தான் இலங்கைக்கான அளவுகோலாக உலக நாடுகள் கொண்டுள்ளன. ஈழத்தில் இன அழிப்புப்போர் உச்சகட்டத்தை எட்டியபோதும் இந்தியாவின் அசைவைப் பொறுத்தே உலக நாடுகளின் நடவடிக்கைகள் அமைந்தன. இந்தியாவே வலியப்போய் இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியது, மற்ற நாடுகளும் தாராளமாக, அதிபயங்கர ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கக் காரணமா யிற்று. கடந்த காலம் இப்படி இருக்க, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருப்பதன் மூலம், உலக நாடுகளில் பரவலாக வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது இந்திய அரசு.
இந்தியாவைப் பொறுத்த வரையில், விடுதலைப்புலிகளானாலும் சரி, ஈழத்தமிழர் களின் உரிமைப்போரானாலும் சரி அது தமிழ்நாட்டோடு மட்டுமே தொடர்புடையது, தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது தான் பிற மாநிலங்களின் கருத்தாக இருக்கிறது. எனவேதான், அங்கே நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் கூட அந்த இனப்படுகொலையைக் கண்டிக்க அவை முன்வரவில்லை. ஈழத்தில் நடந்த வினைகளுக்கு எதிர்வினையாற்றியது தமிழ்நாடு மட்டுமே. அதற்காக வழக்குகளைச் சந்தித்ததும், சிறைகளுக் குள் அடைபட்டுக் கிடந்ததும் தமிழ்நாட்டு அரசியல் இயக்கத் தலைவர்களும், உணர்வாளர் களும்தான். விக்ரம் அஜித் சென் - ஐ நீதிபதியாகக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன் வாதிடவந்த போதும், அவர்களுடைய வாதங்களுக்குத் தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது.
அண்ணா பிறந்தநாளில் ஆயுள்தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுவித்தால், சுப்பிரம ணியசாமி உடனே வழக்குப் போடுகிறார். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள்கைதி களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்ப தால் அவருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட் டுள்ளதா? ஆனாலும் சம்மனே இல்லாமல் சுப்பிரமணிய சாமியால் ஆஜராக முடிகிறது. ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக நம்மால் வாதிட இயலவில்லை.
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மான் விடுவிக் கப்படுவதாகத் தடா நீதிமன்ற நீதிபதி கே.தட்சி ணாமூர்த்தி அறிவித்திருக்கிறார். இலங்கைத் துணைத் தூதரகம் மற்றும் இலங்கை அதிகாரிகள் அளித்துள்ள கடிதங்களின் அடிப்படையில், பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக நாங்கள் நம்புகிறோம். எனவே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. பல்நோக்குக் குழு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே தடா நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. ஒரு இயக்கத்தின் தலைமையே இல்லை என்று மத்திய அரசின் புலனாய்வுத் துறையே அறிவித்த பிறகு இந்தத் தடை நீட்டிப்பு நாடகம் யாருக்கு உதவுவதற்காக?
புலிகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது, அவர்களின் ஆதரவாளர்களும் வாதங்களை முன்வைக்க முடியாது என்றால் அந்த விசாரணை மன்றமும், இத்தனை அமர்வுகளும் எதற்காக?
இல்லை என்று சொல்லுகின்ற ஒரு இயக்கத்திற்குத் தடையும், தடை நீட்டிப்பும் செய்கின்ற நாடு உலகிலேயே இந்தியாவாகத் தான் இருக்கமுடியும். எந்த விதத்தில் பார்த் தாலும் நியாயமே இல்லாத இந்தத் தடையை இந்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் உலக அரங்கில், இந்தியா ஒரு மக்களாட்சி நாடு என்பது கேள்விக்குள்ளாகி விடும்.
- இரா.உமா
நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்.
மாவீரர் நாள் - எப்போது கேட்போம் அந்தக் குரலை!
நவம்பர் 27 - அன்றைய தினம் அந்தப் போராளித் தலைவனின் உரையைக் கேட்க உலகமே காத்துக் கிடக்கும். உலகின் அத்தனை ஊடகங்களும் தென் திசையை நோக்கி அலைவரிசை அதிர்வெண்ணை மாற்றிக் கொள்ளும். தமிழ் ஈழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரைக்காகத்தான் இத்தனை காத்திருப் புகளும். ஆனால் கடந்த ஆண்டு தமிழீழத் தலைவரின் உரை இல்லாமலே கடந்து சென்று விட்டது மாவீரர் நாள்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27 அன்று தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனால் நிகழ்த்தப்பெறும் மாவீரர் நாள் உரை என்பது வெறும் வழமையான உரையன்று. ஈழ விடுதலைப் போரில் இந்தியா உட்பட பிற உலக நாடுகளின் போக்குகள் ஏற்படுத்தி வருகின்ற தாக்கங்கள் குறித்த அரசியல் விமர்சனப் பார்வையுடனும், சிங்களப் பேரினவாத அரசின் இனவெறிப் போக்கைக் கண்டித்தும், உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத் தமிழர்களின் மனஉறுதியைப் புடம் போடுவது, விடுதலைப்புலிகளின் படைபலம், அரசியல் செயல்பாடுகள், பகையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும், தாய்த்தமிழகத்தின் உணர்வெழுச்சிகளுக்கு நன்றி சொல்வது ஆகியவற்றை உள்ளடக்கிய செறிவான உரையாகவும் மாவீரர் நாள் உரை அமைந்திருக்கும்.
குறிப்பாக, புலிகளின் அடுத்த கட்டப் போர் நடிவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய பேச்சில் கோடிட்டுக்காட்டுவார் என்பதே பெரும் எதிர்பார்ப்புடன் மாவீரர் நாள் உரையை உலக நாடுகள் கவனிக்கக் காரணம்.
விதைக்கப்பட்ட போராளிகளின் குடும்பத்தினர் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர்துயிலும் இடம் இன்று ராஜபக்சேயின் இராணுவத்தினால் சிதைக்கப்பட்டாலும், விதைக்கப்பட்ட விதைகளின் வீரியம் என்றைக்கும் குறைந்துவிடாது. அந்த மாவீரர்களின் உயிர்க்கொடை வீண்போகாது. உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு புது நம்பிக்கையை, ஊக்கத்தைத் தருகின்ற நாள் நவம்பர் 27.
முப்படையுடன் தற்கொடைப் படையையும் கொண்டு விளங்கிய தமிழ் ஈழ அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கை உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காமல் இருக்கிறது.
“ ... நாம் விடுதலையில் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்டு நிற்கின்றோம். இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றோம். இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண், நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு ”- தமிழீழத் தேசிய தலைவரின் நம்பிக்கை வரிகளை நெஞ்சில் ஏந்தி காத்திருக்கிறோம் நாமும்.
தாயகப் போரினில்
சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே!
உங்களுக்கு எமது வீரவணக்கங்கள்
- இரா.உமா
நன்றி : கருஞ்சட்டைத்தமிழர் .
நினைவுகள் அழிவதில்லை...
தமிழீழத் தேசியத் தலைவரின் ஒப்பற்ற தளபதி மாவீரன் கிட்டுவின் நினைவு நாள் சனவரி 16. 1993 ஆம் ஆண்டு மேற்குலக நாடுகள் பங்களித்த சமாதனத் திட்டத்துடன் தன்னுடைய தலைவரைக் காணச் சென்றுகொண்டிருந்த போதுதான், இந்தியக் கடல் எல்லைக்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் கிட்டு தாக்கப்பட்டார். இந்தியக் கடற்படையின் கொடுஞ்செயலால் இந்துமாக் கடலில் வீரமரணத்தைத் தழுவி 18 ஆண்டுகள் ஆகின்றன.
தன்னுடைய 17 ஆவது வயதில் தலைவர் பிரபாகரனோடு கைகோர்த்துக் களம்புகுந்த அந்த மாவீரனுக்குள்தான் எத்தனை பரிமாணங்கள் ! எத்தனை எத்தனை திறமைகள் ! அத்தனையும் தாயக விடுதலைக்காகவே என்பதுதான் அவரின் மூச்சாக இருந்தது. கிட்டுவின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மாசற்ற தலைவன் மீதான கட்டற்ற பாசமும், மரத்தமிழ் வீரமும், மக்கள் மீதும் மண்ணின் மீதும் அவருக்கிருந்த எல்லையற்ற பற்றும் நிரம்பிக் கிடக்கின்றன. குறும்புத் தனமும், கசிந்துருகும் காதலும் அவருடைய வாழ்க்கையை மேலும் அழகானதாக ஆக்கியிருக்கின்றன.
யாழ்க் கோட்டையை முற்றுகையிட்டு, சிங்கள இராணுவத்தை மாதக்கணக்கில் மண்டியிட வைத்த புலிப்படையின் தளபதி, ஒரு குரங்குக் குட்டியை வீட்டிற்குள் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, வெளியே விட மாட்டேன் என்று அடம்பிடித்த செய்தி தெரியுமா?
ஒரு முறை தலைவரோடு தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது நடந்த ஒரு நிகழ்வினால், காவல்துறை கிட்டு உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்யத் தேடியது. அதனால் அவர்கள் அனைவரும் பாபநாசத்தில் பழ.நெடுமாறன் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் மறைவாகத் தங்க வைக்கப்பட்டனர். ஒரு நாள் குரங்குக் குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார் கிட்டு. குட்டியைத் தேடிவந்த தாய்க்குரங்கு கத்திய கத்தலில் ஒரு குரங்குக் கூட்டமே வீட்டை முற்றுகையிட்டுக் கொண்டது. தோழர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் நீண்ட நேர வற்புறுத்தலுக்குப் பிறகு, விட மனமின்றி அக்குரங்குக் குட்டியை வெளியில் விட்டிருக்கிறார். பிறகு யாழ் தளபதியாக இருந்த காலத்தில் ஒரு குரங்குக் குட்டியை வளர்த்துத் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.
சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டு வாசலில் நோய்வாய்ப் பட்டுக் கிடந்த நாயைக் குளிப்பாட்டி, மருந்திட்டு, வேளாவேளைக்கு நல்ல உணவு கொடுத்து அதை மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது, அவருடைய பிரிவைத் தாங்க மாட்டாமல் உணவுண்ணாமல் அந்த நாய் இறந்துபோனது.
எவ்வுயிரும் துன்புறுவதைப் பார்க்கச் சகியாதவன்தானே போராளியாக இருக்க முடியும். பகைவனுக்கும் அருளிய நன்னெஞ்சத்தையும் பார்ப்போம்.
யாழ் கோட்டை முற்றுகையின் போது, சிங்கள இராணுவத்தின் கையிருப்பில் இருந்த குடிதண்ணீர், விறகு தீர்ந்துபோனது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, குடிதண்ணீரையும், இரண்டு லாரிகளில் விறகையும் அனுப்பி வைத்தார் கிட்டு. அதோடு தன் அன்பினை வெளிப்படுத்த ஒரு கூடை மாம்பழங்களையும் அனுப்பி வைத்தார்.
என்ன செய்தும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியாது என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. ஆயுத மொழி மட்டுமே அறிந்தவர்களுக்கு, அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற குறள் மொழி எப்படிப் புரியும்.
தமிழீழக் குழந்தைகள் அவரை எப்படி அழைப்பார்கள் தெரியுமா ‡ கிட்டு மாமா என்றுதான் அழைப்பார்கள். தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவர் வரும்போது மாமா மாமா என்று அன்போடு ஓடிவரும் பிள்ளைகளை வாரியணைத்து ஆசைதீரக் கொஞ்சாமல் அவர் போவதில்லை. நிற்காத குண்டுமழைக்கும், ஓயாத யல் அடிகளுக்கும் நடுவில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் சரணாலயம் அமைத்தார்.
போராடிக்கொண்டே கற்றுக் கொண்டும் இருந்தார் கிட்டு. ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவு வாழ்க்கையின்போது, மெக்சிகோ ஓவியர் ஒருவரிடம் தூரிகை வித்தையையும் கற்றுக்கொண்டார். பிகாசோ ஓவியங்களின் தீவிரமான ரசிகர். சிறந்த புகைப்பட நிபுணராகவும் விளங்கினார்.
சென்னை மத்திய சிறையில் இருந்த படியே அவர் எழுதிய ஈழப்போர் நிலவரம் பற்றிய தொடர், கிட்டுவின் டைரி என்னும் பெயரில் தேவி இதழில் வெளிவந்தது. பெண்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் முழுமையான வெற்றியைப் பெற முடியாது என்று சொல்வார் தந்தை பெரியார். அதனால்தான் பெண்கள் அதிகம் பேர் படிக்கக் கூடிய பத்திரிகையான தேவியில் தங்களுடைய விடுதலைப் போர் குறித்தப் பதிவுகளை எழுதினார். விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகப் பொறுப்பாளராக இருந்த காலத்தில், எரிமலை, உலகத்தமிழர், சுதந்திர தாகம் போன்ற செய்தி இதழ்களை நடத்தியிருக்கிறார். அந்நாட்டவருக்கு தன் நாட்டின் நிலையை உணர்த்திட, ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தார். இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், அதைத் தமது விடுதலைப் போராட்டத்திற்கான களமாக மாற்றிய பன்முகக் கலைஞன் கிட்டு.
வீரமும் காதலும் இரண்டறக் கலந்தது தமிழர் வாழ்வு. அகமும் புறமும் கொண்டவை சங்கத் தமிழ் இலக்கியங்கள். இரண்டும் சங்கமித்த இடம் ஈழப்போராட்டக் களம் என்றால் மிகையாகாது.
தம்பி ஜெயத்தின் கல்லறை மீது வைக்கப்பட்ட புல்லாங்குழல் உயிர்சுரக்கும் காதலின் சாட்சி. களம் பல கண்ட கிட்டுவின் காதலும் ஆழமான காவியம்தான்.
ஒரு முறை மாத்தையாவுடன் தன் அன்பிற்கினிய சிந்தியாவின் வீட்டிற்குச் சென்றபோது,
“தங்கச்சி! உன்னைப் பார்க்காமல் இவனால் இருக்க முடியவில்லை. தினமும் உன்னைத் தேடி வந்து விடுகிறான்”
“இவளையா நான் தேடி வருகிறேன். தேநீர் குடிக்கக் காசிருப்பதில்லை. இங்கே வந்தால் காசில்லாமல் தேநீர் குடிக்கலாம் என்றுதான் வருகிறேன்”
காதலர்களுக்கே உரிய சீண்டல்கள் இருந்தாலும் கடமையோடு கட்டுண்ட காதல் அது.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கூடப் பொதுவுடைமைச் சிந்தனை இருக்கும். அப்படித்தான் சிந்தியாவிற்குக் கிட்டு எழுதிய கடிதங்களும். காதலிக்கு எழுதும் கடிதமே ஆனாலும் தாயகக் கடமையே முன்னிற்கும்.
“நானும் நீயும் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று, வளர்ப்பது மட்டும் வாழ்க்கையாக முடியாது. எமது வாழ்க்கைக்கு நாமேதான் அர்த்தத்தைத் தேடவேண்டும். நான் தேடிக் கொண்டிருக்கின்றேன். நீயும் தேட வேண்டும்”
அவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டார்கள்.
அக்னிக் குஞ்சுகளாய் அவர்களின் நினைவுகளை அடைகாத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கொடுப்போம். வெந்து தணியட்டும் காடு.விடியலைப் பார்க்கட்டும் நாடு!
- இரா.உமா
நன்றி : கருஞ்சட்டைத்தமிழர் .
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு தெற்கு சூடான் அங்கீகாரம்
சூடான் நாட்டின் அடக்குமுறைக்கு எதிராகச் ‘ சூடான் மக்கள் விடுதலை இயக்கம் ’ நடத்தி வந்த விடுதலைப் போராட்டம், வெற்றி முனையில் முடிவுக்கு வந்திருக்கிறது.
சூடானில் தெற்கு சூடான் தனிநாடாக வேண்டும் என்று ஒரு நெடிய போராட்டத்தை சூடான் மக்கள் இயக்கம் நடத்தி வந்தது. இந்தப் போராட்டத்தில் 20 இலட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பசி, பட்டினி என்றும், மருத்துவ வசதி இன்றியும் கொடுமைக்கு ஆளான தெற்கு சூடான் மக்கள் கொத்துக் கொத்தாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் மக்கள் விடுதலைப் போராட்டம் என்றும் தோற்றதில்லை என்பதைத் தனிநாடாகும் தெற்கு சூடான் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டது. தெற்கு சூடான் தனிநாடு என்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இது குறித்து, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா ‘ நியூயார்க் டைம்ஸ் ’ இதழுக்கு அளித்த நேர்காணலில், “ இலட்சக் கணக்கான சூடானிய மக்கள், தம் விதியைத் (தனிநாடு) தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் ” என்று கூறியுள்ளார்.
இச்செய்தியை வரவேற்றுள்ள சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஏற்ப, இறையாண்மையுள்ள தமிழீழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்டமைக்கு, அறுதிப்பெரும்பான்மை மக்கள் வாக்களித்து, தனிஈழம் என்பதை ஈழத்தமிழர்கள் உறுதி செய்தார்கள்.
ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தலைவர் பிரபாகரன் காட்டிய வீரமும், போர் உத்தியும் சிங்கள இனவெறி அரசை நடுங்கச் செய்தது மட்டுமன்று, உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தன.
என்றாலும் தனித்து வீரம் காட்டிப் போராடிய விடுதலைப் புலிகளை நேர்கொள்ள முடியாத கோழை இராஜபக்சே, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் உதவியுடன் ஈழ மக்களைப்படுகொலை செய்து வெற்றி பெற்றதாகக் கூறிக்கொள்கிறான்.
சூடானின் அடக்குமுறைக்கும், சிங்கள இலங்கை அரசுக்கும் ஆதரவாகவும், பாது காவலனாகவும் செயல்பட்ட சீனாவையும் மீறித் தெற்குச் சூடான் விடுதலை பெறுகிறது. சூடானின் முதல் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழீழம் நாளை விடுதலை பெறும் என்பதற்கான அடையாளம் இது.
சூடான் நாட்டின் அடக்குமுறைத் தலைவர் பசீர், சூடான் மக்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இராஜபக்சேவும் ஈழமக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலை குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்.
தவிர, 2009 ஆம் ஆண்டு, பிலடெல்பியா நகரத்தில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவுக்கான, தம் பிரதிநிதி டொமாக் வால்லு ஆச்சே வை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. இன்று நாடு கடந்த தமிழீழப் பிரதிநிதிகள் தெற்கு சூடான் விடுதலை நாள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
தமிழீழப் பிரதிநிதிகளை சூடான் மக்கள் விடுதலை இயக்க உயர் அதிகாரிகள் வரவேற்க இருக்கிறார்கள். அவ்விழாவில் பங்கேற்க வரும் பிற நாடுகளின் தலைவர்களை ஈழப்பிரதிநிதிகள் சந்திக்க இருக்கிறார்கள்.
இது கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதில் ஐயமில்லை.
விடுதலை பெறும் தெற்கு சூடானை வாழ்த்தி வரவேற்போம் ! ஈழத்தின் விடுதலையை எதிர்பார்ப்போம் !
நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்
இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன்
இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன்,
உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன்.
அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வாக்குவாதம் நிறைந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைத்தேன். அது எனக்கு நியாயமானதாகத் தெரிந்தது. அந்த நிபுணர் குழு இன்னமும் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்கவில்லை, அது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி வருகின்றனர்.
குற்றம் செய்தவர் யாராயிருப்பினும் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும். அதுவே நீதியின் கொள்கை என்று பான் கி மூன் கூறியுள்ளார்.
Sunday, February 6, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளுக்கு எதிரானதா…? – பேராசிரியர் சரஸ்வதி பரபரப்பு பேட்டி
இலங்கைத் தமிழர் பிரச்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ருத்ரகுமாரன். இந்த அரசின் பிரதமரும் அவர்தான். இதில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் குறையாமல் இருக்க, தங்கள் அரசின் இந்தியாவின் எம்.பி.க்களாக நாடு கடந்த தமிழீழ அரசு 5 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. அதில் முதல் எம்.பி.யாக அறிவிக்கப்பட இருப்பவர் பேராசிரியை சரஸ்வதி. இவர் ஏற்கெனவே தமிழீழப் பிரச்னைக்காக, 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படு த்தியவர்.
ஜெயலலிதா நேரடியாக அறிக்கை விட்ட பிறகுதான் அந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டார் சரஸ்வதி. எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதியை நேரில் சந்தித்துப் பேசினோம்.
‘‘ஒரு மிகப் பெரிய இனம் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. ராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டதன் மூலம் தமிழீழத்தின் கோரிக்கையை விட்டுவிடுவார்கள் என்று இலங்கை அரசு நினைத்திருக்கலாம்
ராணுவ ரீதியான போராட்டத்தில் பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் மூலம் தமிழீழத்திற்கான முக்கியத்து வத்தை உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மூலம் கொண்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறோம்.
85 நாடுகளில் தேர்தல் மூலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதால் நேரடியாக என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
அதேபோல், பலரும் இந்த அமைப்பை விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்பு என்று கூறி வருகின்றனர். உலக அளவில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்பு தமிழீழத்திற்குத் தேவை என்று சொன்ன தலைவர் பிரபாகரனின் கருத்திற்கேற்பவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வருகிற 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் என்பதால் நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்களின் அறிவிப்பை அந்தந்த நாடுகளில் வெளியிட்டு தமிழீழத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
சென்னையிலும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சார்பாக கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் ரீதியான கருத்துகளை தமிழீழத்தின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் பிரசாரமாக செய்ய இருக்கிறோம். தமிழகம்மட்டுமில்லாமல் இந்தியாவில்உள்ள மற்ற மாநிலங்களிலும் இந்தக் கருத்தைப் பரப்ப முடிவு செய்துள்ளோம்.
தமிழீழத்தின் அவசியத்தை இதுவரையில் உலக நாடுகள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் கருத்தை அனைத்து நாடுகளிலும் பரப்பி தமிழீழத்தின் முக்கியத்துவத்தை அந்த நாடுகள் ஏற்கும் வகையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்’’ என்று முடித்துக்கொண்டார் பேராசிரியை சரஸ்வதி.
படம்: ஞானமணி
ப.ரஜினிகாந்த்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி!
இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத்தோற்கடிக்கப்பட்ட பின்னரும், ‘புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’!
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்.
மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்படும் இவர், ஈழத் தமிழர் படுகொலை உச்சகட்டத்தில் நிகழ்ந்த நேரத்தில், அதைத் தடுக்கக் கோரி 13 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். உயிருக்குப் போராடும் அளவுக்கு உடல்நிலை மோசமாகி, கட்டாய சிகிச்சையில் உயிர் மீண்டவர். இவருடன் பல்வேறு தமிழின அமைப்புகளும் இணைந்து, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தோழமை மையம்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர்.
சரசுவதியைச் சந்தித்துப் பேசினோம்.
”நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?”
”ஈழ விடுதலைக்கான ராணுவப் போராட்டம், தற்காலிகப் பின்னடைவு அடைந்த நிலையில்… தமிழீழ லட்சியத்துக்காக, உலக அளவில் அரசியல் ரீதியில் செயல்பட ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் பல நாடுகளில் பகிரங்கமாகத் தேர்தல் நடத்தி, இதன் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்தந்த நாடுகளின் அரசுகள் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியம் இல்லையே! நாங்களும், தமிழ் ஈழம் அமைவதற்கு ஆதரவாக ஜனநாயகரீதியில் குரல் கொடுப்பதற்காகவே, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான தோழமை மையத்தைத் தொடங்கி உள்ளோம். இதில், பெரியார் தி.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சேவ் தமிழ், மே 17 இயக்கம் உள்பட 20 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் இன்குலாப், டி.எஸ்.எஸ்.மணி போன்ற செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆதரவு சக்திகளுடன் இணைந்து கருத்துப் பரப்பல் செய்வதுதான் எங்களின் வேலை.”
”இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை இருக்கும் நிலையில் உங்களின் ஈழ ஆதரவு செயல்பாடுகளுக்குப் பிரச்னை வராதா?”
”ஈழத்தில் இனப் படுகொலையால், உறவுகளை இழந்து நொறுங்கிக்கிடக்கும் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வேளை உணவு கிடைக்காமல், வசிப்பதற்கு வீடு இல்லாமல், ஊனமடைந்து, சிகிச்சை பெற முடியாமல் நம் சகோதரர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஈழத்தை அடைவதற்கான முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குத்தான் கடமை இருக்கிறது.
நாடே இல்லாமல் இருந்த யூதர்கள், பல நாடுகளில் பரவியிருந்தும் தங்களுக்காக இஸ்ரேல் என்ற தனி நாட்டை எப்படி உருவாக்கினார்களோ, அந்த வழியில்தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசும் செயல்படுகிறது. சூடான் நாட்டில் இருந்து அண்மையில் வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்துள்ள தெற்கு சூடான் அரசு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அங்கீகாரம் செய்துள்ளது. இது உலக அளவில் கிடைத்த முதல் வெற்றி. படிப்படியாக ஈழத்துக்கான நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் எங்கள் பணி.
இந்தியாவில் தமிழ் ஈழ அரசை ஆதரித்துப் பேசுவதும் அதற்கான நியாயங்களை மக்களிடம் எடுத்துச்செல்வதும் முழுக்கவும் ஜனநாயகச் செயல்பாடுதான். இது எந்த வகையிலும் இந்தியாவின் இறையாண்மைக்கோ, சட்ட திட்டங்களுக்கோ எதிரானது அல்ல. சொல்லப்போனால், அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படையான பேச்சுரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமைப்படி இது சரியானதே.”
”ஈழம் பெறுவது ஒரு புறம்… இலங்கை ராணுவத் தாக்குதலால் கண், கை, கால் இழந்து கதறும் ஈழத் தமிழர்களுக்கு, இப்போது நாடு கடந்த தமிழ் ஈழ அரசால் எப்படி உதவ முடியும் என நினைக்கிறீர்கள்?”
”இதைக் கவனத்தில்கொண்டுதான் புலம் பெயர் தமிழ் மக்கள், அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் செயல்பாடுகள் மூலம் சர்வதேச அளவில் நெருக்கடி தருவதன் மூலம், அடிப்படை மனிதாபிமான உதவிகளைச் செய்யவைக்க இலங்கை அரசை நிர்பந்தம் செய்ய முடியும். மேலும், உடனடியாக, அகதிகளுக்கான பொருளாதார, கல்வி மேம்பாடு போன்ற உதவிகளைச் செய்யவும் நாடு கடந்த அரசு திட்டமிட்டுள்ளது.”
”இலங்கை அரசுடன் சேர்ந்துவிட்டதாகக் கருதப்படும் கே.பி-யின் நீர்டோ அமைப்பினரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் பிரதிநிதிகளாக இருப்பது முரண்பாடாக இருக்கிறதே?”
”நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உருவாக்கத்தில் கே.பி-யின் பங்கு இருந்தது உண்மைதான். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை என நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசின் பிடிக்குள் போய்விட்ட கே.பி. போன்ற தனி மனிதர்களைப்பற்றிப் பெரிதாகப் பேசவேண்டியது இல்லை. மற்றபடி யாராக இருந்தாலும் செயல்பாட்டைவைத்தே அவர்களைப்பற்றி தீர்மானிக்க முடியும். என்னைப் பொறுத்த வரை, தமிழீழத்தை நோக்கிய அரசியல் முயற்சிகளை வெற்றி பெறவைப்பதில் கவனம் செலுத்துவதுதான் உணர்வாளர்களின் இப்போதைய கடமையாக இருக்க முடியும் என நினைக்கிறேன்!”
- இரா. தமிழ்க்கனல்
படம்: வி.செந்தில்குமார்
நன்றி: ஜூனியர் விகடன்
Friday, February 4, 2011
அடித்தவன் தூங்குவான் அடிப்பட்டவன் தூங்கமாட்டான் - சீறும் இயக்குநர்.கௌதமன்
தமிழ்: ஈழத்தின் மீது உங்களுக்கு தாக்கம் ஏற்பட்டது எப்போது?
கௌ : அப்பா ஒரு கம்யூனிசவாதி என்பதால் நான் சிறுவயதாக இருந்தபோதே எங்கள் வீட்டு திண்ணையில் ஈழத்தை பற்றி பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.அதனால் பள்ளி பருவங்களில் இருந்தே ஈழத்தின் மீது எனக்கு தாக்கமிருந்தது.
தமிழ்: ஈழத்தின் கடந்த கால நிகழ்வுகள் ஓர் உணர்வாளனாகஇபடைப்பாளியாக உங்களுக்குள்
என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கௌ : எல்லாம் சிதைந்து உலகமே நின்று வேடிக்கை பார்த்து உலக வல்லரசுகள் பல ஒன்று சேர்ந்து மொத்தமும் அழித்து முடித்து சொல்ல முடியாத துயரை தந்துள்ளது. ஈழ மக்களின் சிதைவை மீண்டும் நினைத்தாலும்இஎங்காவது பேசினாலும் என் மனநிலையை பாதிக்கிறது ஆனாலும் ஒரு நொடி சுதாரித்து வந்துவிட்டால் மனதளவில் என்னுள் பெரும் நம்பிக்கையுண்டு.தமிழன் என்கிறவன் ஆதிகாலம் தொட்டு இந்த மண்ணில் ஆளுமை செலுத்திய இனம்இமனிதனாக இருந்துள்ளான்.வட இந்தியரான அம்பேத்கரே சொல்லியுள்ளார் தமிழன் தான் இந்தியா முழுதும் இருந்துள்ளதாகஇஇன்னும் பல ஆராய்ச்சிகளில் பார்ப்போமேயானால் ஈழம் தான் ஆதித்தமிழன் தோன்றிய இடமாக சொல்லப்படுகிறது.மண்ணையும்இமானத்தையும் காப்பதற்கு குடும்பம் குடும்பமாக சென்று போரிட்டு வீரமரணம் அடைந்தயிடம் ஈழம்."அடித்தவன் தூங்குவான்இஅடிபட்டவன் தூங்கமாட்டான்"அந்த வகையில் மனதளவில் உடைந்திருந்தாலும் என் படைப்பின் மூலம் இனவிடுதலைக்காக ஏதேனும் செய்தே தீருவேன்.
தமிழ் : திரைப்பட படைப்பு துறை கலைஞர் குடும்பத்திடம் மட்டும் உள்ளது உண்மையா?
கௌ : உண்மையாக சொல்லப்போனால் அப்படியான ஆளுமையே நடந்து கொண்டுயிருக்கிறது.எல்லோரும் வாழணும்இஇதுவே ஒரு மன்னன் மக்களை பார்த்து வழிநடத்தி செல்லக்கூடிய செயல். அதுபோன்று கலைஞர்
குடும்பத்தை மட்டுமில்லாமல்
பொதுபடையாக சிந்தித்து எல்லோரும் சமம் என்று நினைக்க வேண்டும்.
தமிழ் : இந்திய அரசு சாமன்ய மக்களுக்குரியதாக உள்ளதா?
கௌ : சாமன்ய மக்களுக்கு உரியதா என்பதை விட என் மொழிக்கும் இனத்திற்கும் சாதகமாகயில்லை என்பது உண்மையான விசயம்.இந்தியா என் தாய்நாடுஇஇந்தியர் யாவரும் என் உடன்பிறப்புக்கள் என் தாய்திருநாட்டை உளமாற நேசிக்கிறேன் என்று பள்ளி பருவங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தமிழன் நான்.ஆகா தற்போது ஆள்கின்ற காங்கிரசு அரசு என் இனத்தை காப்பாற்றுவதற்கு மாறா அழிப்பதற்கு துணை நின்றிருக்கிறது.
தமிழ் : ஈழத்தை போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற
கொடுமைகள் நடந்து கொண்டுள்ளது அதைபற்றி பேசுவீர்களா?
கௌ : மனிதர்கள் எங்கு சிதைந்தாலும் குரல்கொடுக்க வேண்டியது மனிதனின் கடமை.அந்த வகையில் இந்துஇமுசுலீம்இசீக்கியர் யாரை கொடுமை படுத்தினாலும் மனிதனாக வேடிக்கை பார்க்ககூடாது.என்னை பொறுத்தவரை அடிப்பவனை விட அடிக்கிறவனை வேடிக்கை பார்ப்பதே மிகப்பெரிய வன்முறையாகும்.அதன் அடிப்படையில் ஓர் அரசு தன் மக்களை பிள்ளையாக பார்க்க வேண்டும்இஅதைவிட்டு விட்டு தொல்லையாக நினைத்து மக்களை அழிக்க கூடாது.
தமிழ் : கடந்த நாடாளமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக நீங்கள் சீமான் போன்றோர் பேசினீர்கள். அதன்படி கடந்தயாண்டு சீமான் அவர்கள் தமிழர் உரிமைகளை தாங்கி நாம் தமிழர் கட்சியினை தொடங்கியுள்ளார்இஅதைபற்றிய கருத்து.
கௌ : அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக நான் பேசவில்லை என் இனத்தை அழித்த எதிரியை அடையாளம் காட்டுவதற்கே நான் போனது.ஈழத்திற்காக என் இனத்திற்காக என் மொழிக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர் பக்கம் நிற்பேன்இஅதற்காக அந்தக் கட்சியில் இணைந்து கொள்ளமாட்டேன்இமற்றபடி சீமான் அண்ணன் எனக்கோர் உயிர் நண்பர்இபிடித்தமான தமிழர்.
தமிழ் : அப்பொழுது உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்ட தலைவன் யார்?
கௌ : நான் தலைவனாக ஏற்றுகொண்டது என் அண்ணன் பிரபாகரனை மட்டுமேஇதலைவன் என்பதற்கான ஒழுக்கமும்இநேர்மையும் கொண்டு வழிய வழிய வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே மனிதர் பிரபாகரன் மட்டும் தான்.
தமிழ்: வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களின் ஆதரவு யார் பக்கமிருக்கும்.
கௌ : என்னுடைய ஆதரவு யார் பக்கமும் இல்லை.நான் அரசியல்வாதியுமில்லஇஎன் பின்னாடி ஒரு கூட்டமுமில்ல என்னை உணர்வாளனாக காட்டியது சந்தனக்காடுஇமகிழ்ச்சி.அந்த படைப்புகளால் தான் தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்தேன்.ஈழத்திற்கு உண்மையாக யார் குரல் கொடுக்கிறார்களோஇபேசுகிறார்களோ அவர்களுக்கு உறுதுணையாகயிருப்பேன்.அது எந்தக்கட்சியாக இருந்தாலும் சரிஇஓர் படைப்பாளியாகஇதமிழனாக குரல் கொடுப்பேன்.
தமிழ்: பாசிசவாதிகள் சிங்களராகயிருந்தாலும் தமிழர்களையே சொல்கிறார்கள் அது ஏன்?
கௌ : விடுதலை புலிகள் இது வரை ஒரு பொது மக்களையோஇசிங்கள பத்திரிக்கையாளர்களையோ கொன்றதாக பதிவில்லை.ஆனால் இதற்கு நேர்மறையாக இருந்தவர்கள் சிங்களர்கள்.இந்த பழிச் சொற்களுக்கெல்லாம்
துரோகிகளே காரணம்.ஈழத்தில் கருணா போன்றே உலகெங்கும் பல கருணாக்கள் பணத்திற்காக இனத்தை விலைபேசியதே தமிழன் பாசிசவாதி என்று முத்திரை குத்தப்படக் காரணம்.
தமிழ்: “சந்தனக்காடு" என்ற வரலாற்று தொடரின்
வெற்றியாக எதை கருதுகிறீர்கள்.
கௌ : தொடரின் முழு ஒளிபரப்பு முடிந்த பின்னர் ஒரு நாள் சீமான் அண்ணன் அந்த முழுத்தொடரின் இறுவெட்டையும் தயார் செய்ய சொன்னார்.பின்னர்இ
மொத்த தொடரையும் மூன்றே நாளில் என் அண்ணன் பிரபாகரன் பார்த்துவிட்டு வீரப்பன் பற்றிய தகவல்களை துல்லியமாகஇஅற்புதமாக பதிவு செய்துள்ளார் கௌதமன் என்று என் தாய்க்கு நிகராக உள்ள அண்ணன் பிரபாகரன் பாராட்டிஇஈழத்தை பற்றிய வரலாற்று நிகழ்வை பதிவு செய்ய தம்பியை கூப்பிடணும் என்று சொல்லியதே ஆசுகார் விருதை விட மிகப்பெரிய விருதாக எண்ணுகிறேன்.
தமிழ்: வீரப்பன் அவர்களின் மனைவிஇகுழந்தைகளின் நிலையென்ன?
கௌ : வீரப்பனின் மனைவி தற்போது கர்நாடக சிறையில் உள்ளார்.அவர் ஒரு பாவப்பட்ட பெண்னென்று தான் சொல்லணும்.இது கர்நாடகாவின் பழி வாங்கும் செயல்இஎல்லை காத்த வீரனின் மனைவியை காப்பாற்ற தமிழர்கள் நாம் முயற்சி செய்யணும்.
குழந்தைகள் படித்து கொண்டுள்ளனர்.
நன்றி !வணக்கம்...
நேர்காணல் : மகா.தமிழ்ப் பிரபாகரன்
04 Feb 2011
Subscribe to:
Posts (Atom)