Labels

Monday, March 1, 2010

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கவிதை


வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும்
சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!
- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

2 comments:

  1. இந்தப் பாடல் பாவாணர் எழுதியதன்று. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல் இது.

    ReplyDelete
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடலே இது.

    ReplyDelete