Labels

Wednesday, August 4, 2010

இலங்கைத் தமிழர் குறித்து அவதூறுச் செய்தி - ஆங்கில ஊடகங்கள் பணிந்தன


லண்டன் ஆக. 2 கடந்த ஆண்டு லண்டனில், பிரிட்டன் நாடாளுமன் றத்தின் முன்பாக உண்ணாநிலையில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் சுப்ரமணியம் பரமேஸ்வரனின் பட்டினிப் போராட்டத்தினை அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற செய்தி வெளியிட்ட, லண்டன் ஆங்கில ஊடகங்கள் இரண்டுக்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த வழக்கில், லண்டன் உயர் நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரமேஸ்வர னுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள் ளது.
பரமேஸ்வரனின் போராட்டம் உண்மையானதெனவும், பத்திரிகை களின் செய்திகள் ஆதாரமற்றவை எனவும், இந்தத் தவறான செய்திகளால் பரமேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச் சலுக்காக அவரிடம் மேற்படி பத்திரி கைகள் மன்னிப்பு கோருவதுடன், வழக்கிற்கான செலவுகளுடன் இழப் பீட்டுத் தொகையாக 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்டுகளையும் வழங்க வேண்டுமெனவும், அத் தீர்ப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வன்னி நிலப்பரப் பில், தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கெண்ட போரினை உடன் நிறுத்தக் கோரி, 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர் கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளா கத்தின் முன் நடத்திய போராட்டத் தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாள்கள் பட்டினிப் போராட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏதுமறியாது புலம் பெயர் தமிழ் சமூகம் திக்கித்து நின்ற வேளையில், இளையவர்களின் உணர்வெழுச்சி யோடு நடைபெற்ற இந்த உண்ணா நிலைப் போராட்டத்தில் பெருமள வான மக்கள் இணைந்து கொண்டி ருந்தனர்.
கோரிக்கைகள் எதுவும் முழுமையாக நிறை வேற்றப்படாத நிலையிலும், அரசியற் பிரமுகர்கள் எடுத்த இடைமுயற்சிகள் காரண மாகப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அப்போராட்டங் கள் முடிந்த சிலகாலங்களுக்குப் பின், அப்போராட்டத்தினை அவதூறு செய்யும் வகையில், உண்ணாநிலையி லிருந்த பரமேஸ்வரன், அந்த நாள்களில் இரகசியமாகப் உணவு சாப்பிட்டார் என்று லண்டனில் இருந்து வெளியாகும், டெய்லி மெயில், மற்றும் சன் பத்திரிகைகள், செய்தி வெளியிட்டிருந்தன.
2009ஆம் ஆண்டு, அக்டேபர் 9 ஆம்தேதி டெய்லி மெயில் பத்தி ரிகை, பட்டினிப் போராளியின் 7 மில்லியன் பிக் மக் என்ற தலைப் பில், அந்த அவதூறுச் செய்திக் கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அதில் பரமேஸ்வரன், பட்டினிப் போராட்டம் காலத்தில் இரகசிய மாக பர்கர்ளைச் சாப்பிட்டு, பொய் யாக உண்ணாநிலை மேற்கொண்ட தாகவும், அவரது இந்த நடவடிக் கையால் லண்டன் காவல்துறையின ருக்கு 7மில்லியன் ரூபா செலவினம் ஏற்பட்டதாகவும், இதன் மூலம் பொது மக்கள் பணம் விரயமாக்க நேரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டி ருந்தது.
இந்தச் செய்தித் திரிபுக்கு எதிராக உண்ணாநிலை மேற் கொண்டிருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன் மிகுந்த சிரமங்களின் மத்தியில் எதிர் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புகள் பங்கேற்றிருந்த போதும், தனிப் பட்ட முறையில் அவை இந்த வழக் கிற்கு உதவ முன்வராத நிலையில், வெற்றி பெற்றால் வழக்குரைஞருக் குச் சன்மானம் என்ற அடிப்படை யிலேயே வழக்குரைஞர் மேக்னஸ் பாயிட்டினை அமர்த்தி, இந்த வழக்கை எதிர்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரி கைகளின் சார்பில் வாதாடிய வழக் குரைஞர்களும் தாங்கள் வெளி யிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண் டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் இழப்பீடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்குரைஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்திருக்கிறார்.
இந் நிலையில் இந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை லண்டன் ராயல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பினை அடுத்து, மேற்படி பத்திரிகைகளின் பொய்ச் செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங் களாக மிகுந்த அவமானங்களை தான் பல தரப்புகளிடமிருந்தும் சந்தித்த தாகவும், இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பரமேஸ்வரன் செய்தி யாளர்களுக்குத் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை மீறல் கள் குறித்து மேற்குலகின் கவனம் பெற்று வரும் இன்றைய பொழுது களில், பரமேஸ்வரனின் நீதியான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி, இத்தகைய போராட்டங்களை மேற் கொண்டு வரும் இளைய தலைமுறைக்கு உற்சாகம் தருவதாகவும், அற வழிப் போராட்டங்களில் மேலும் நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இந்த வெற்றி அமைந்திருப்பதாக செய்திகள் தெரி விக்கின்றன.

No comments:

Post a Comment