Labels

Tuesday, June 7, 2011

தமிழீழத் தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்! விரைந்து வெளிப்படுவார்!! மே-30-2009 அன்று சந்தித்தவர் மூலம் உறுதிப்படுத்துகிறார் பழ.நெடுமாறன்.



மே-30-2009 அன்று சந்தித்து நபர் மூலமாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாக பத்திரமாக நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தியதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதற்கு அறுதியிட்டு இதுவரை எந்த தகவல்களும் வெளிப்படையாக கிடைக்காது இருந்து வருகையில் சில தினங்களிற்கு முன்னர் தமிழக தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் இந்த உறுதிப்பட்ட தகவலை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து நடத்தப்பட்டுவரும் பொலிமர் தொலைக்காட்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.

பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் உலகத் தமிழர்களது சார்பில் முன்வைக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது தமிழீத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நலமுடனும் பாதுகாப்புடனும் பத்திரமாகவும் உள்ளார். அடுத்தகட்டப் போரை முன்னெடுக்க செய்ய வேண்டிய ஆயத்தப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார் விரைவில் உலகத்தின் முன் தோன்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை எவ்வாறு உறுதிபடத் தெரிவிக்கின்றீர்கள் என எதிர் கேள்வியை எழுப்பிய போது மே-30-2009 அன்று தலைவர் பிரபாகரன் கூட இறுதிவரை இருந்தவரை சந்தித்ததன் அடிப்படையில் இதனை தெரிவிப்பதாக உறுதியாக விடையளித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைமை இல்லை என்ற நினைப்பில் இனத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கோடு செயற்படுபவர்கள் கவனத்திற்கு. எமது இனத்தின் விடுதலையினை வென்றெடுத்து தமிழர்களுக்கென்று ஒரு அரசை நிறுவுவதே தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது அவதாரத்தின் கடமையாகும். அதனை எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை ஆயிரம் பேர் துரோகிகளாக அணை போட்டு நின்றாலும் எத்தனை வல்லரசுகள் சிங்களத்தை காத்து நின்றாலும் நிறைவேற்றுவது திண்ணம்.

No comments:

Post a Comment