Wednesday, June 29, 2011
அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் 3 இலங்கை தமிழர்கள், அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' என்ற அமைப்பின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இலங்கை முப்படைகளின் தலைவர் என்ற முறையில், போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல், மற்றும் சித்ரவதை படுகொலைகளுக்கு ராஜபக்சேவே பொறுப்பு என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மேலும் 2006ம் ஆண்டு போரின் போது திரிகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான ராஜீகர் மனோகரன், பசிப்பிணிக்கு எதிரான அமைப்பில் பலியான 17 ஊழியர்களில் ஒருவரான ஆனந்தராஜா, இறுதி கட்ட போரின் போது பாதுகாக்கப்பட்ட பகுதியில் பதுங்கு குழியில் கொல்லப்பட்ட ஜெயக்குமார் என்பவரின் உறவினர் ஆகிய மூன்று பேருடைய குடும்பத்துக்கும் ராஜபக்சே ரூ.150 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கொம்பியா மாவட்ட கோர்ட்டு நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார். உரிய பதில் அளிக்கா விட்டால் ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த சம்மனை இலங்கை அரசு உதாசீனப்படுத்தியது. இலங்கை அரசுக்கும் அதிபருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக, வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்மனுக்கு பதில் அளிக்கத் தேவை இல்லை என்றும், இலங்கையின் சட்டப்படி இது போன்ற வழக்குகளில் ஆஜராகாமல் இருக்க அதிபருக்கு விதிவிலக்கு உண்டு என்றும், வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.
ஆனால், இதன் மூலம் அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சேவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அதன் மூலம் உலக அரங்கில் இலங்கை அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்ததால் இலங்கை அரசு பணிந்தது.
இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்திய நீதித்துறை அதிகாரிகள், அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சே சார்பில் ஆஜராக அந்த நாட்டைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை நியமிக்க முடிவு செய்தனர்.
இந்த வழக்கில் அதிபரின் நலனை பாதுகாப்பதற்காக, அவர் சார்பில் அமெரிக்காவில் உள்ள வக்கீல் ஒருவர் ஆஜர் ஆவார் என்று, நீதித்துறை செயலாளர் சுதா காம்லத் அறிவித்தார்.
இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு - கருஞ்சட்டைத் தமிழர்
ஈழத்தில் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தியப் போர்க் குற்றவாளி இராபக்சேவிடம் விரல்நீட்டிப் பேசவேண்டிய இந்தியப் பேரரசு, கையேந்திப் பேசியதன் விளைவு, இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை என்ற தலைப்புச் செய்திகள் பத்திரிகைகளில் இடம் பெற்றன.
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இயற்றியபின், மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், இந்திய வெளியுறவுச் செயலாளர், நிருபமாராவ், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு கொழும்புவில் இராஜபக்சேவைச் சந்தித்துப் பேசியது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர மேனன், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் அடிப்படையில் தீர்வுகாண 1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13ஆம் அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்குச் சுய அதிகாரம் வழங்குவதில் இலங்கை அரசு தீவிரமாக இருப்பதாகச் சொன்னார்.
ஆனால் இந்தியக் குழு இலங்கையிடம் பேசிவிட்டு நாடு திரும்பும் முன்னரே, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக இந்திய அரசின் யோசனையை இலங்கை நிராகரித்தது என்று, அந்நாட்டு ஊடகங்களே செய்தி வெளியிட்டு விட்டன.
ஈழத் தமிழர்களக்கு அரசியல் அதிகாரங்கள், வாழ்விடங்கள் மீதான அதிகாரங்கள், காவல்துறை அதிகாரங்கள் போன்ற முக்கியமான அதிகாரங்களை அளிக்க முடியாது என்று இந்தியக் குழுவினரிடம் இலங்கை அரசு நேரடியாக தெரிவித்ததாகத் தெரிகிறது என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
ஐ.நா. அவையின் ஆய்வுக் குழு அளித்த அறிக்கையின்படி, இராஜபக்சே மனிதநேயமற்ற ஒரு போர்க்குற்றவாளி. இனப்படுகொலையாளன்.
புகழ்பெற்ற பி.பி.சி. தொலைக்காட்சியின் 4ஆவது அலைவரிசை ஈழப்படுகொலைக் கொடூரங்களைச் செய்திப்படமாக இப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இக்கொடூரத்தை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கச் சகிக்காமல் அவையை விட்டுக் கண்ணீரோடு வெளியேறியதாகவும் ஒரு தகவல் கூறுகின்றது.
ஈழத்தமிழ் இனத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் தீவிரம் காட்டி வரும் இராஜபக்சே, ஐ.நா. அறிக்கையைக் கூட மதிக்கவில்லை என்பது மட்டுமன்று, இந்தியாவையும் மதிக்கவில்லை. ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமட்டும் இந்தியா துணை செய்ய வேண்டும் என்று முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும் மீண்டும் பேசுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் புறப்பட இருக்கிறாராம் இலங்கைக்கு.
வாழிடங்களுக்கான அதிகாரம் மறுக்கப்படுவதால், அங்கு சிங்களக் குடியேற்றம் நடக்கும். காவல்துறை அதிகாரம் மறுக்கப்படுவதால் சிங்களக் காவலரின் ஒடுக்குமுறை தொடரும். அரசியல் அதிகாரம் மறுக்கப்படுவதால், ஈழத்தமிழர்கள் நிரந்தரமாக இரண்டாந்தரக் குடிகளாக்கப்படுவார்கள்.
இனியும் மேனன்களும், ராவ்களும் பேசிப்பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.
போர்க்குற்றவாளி இராஜபக்சேவைத் தண்டிக்க இத்தருணத்தையாவது பயன்படுத்தித் தன் தவற்றை இந்தியா திருத்திக் கொள்ளவேண்டும்.
நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்
Monday, June 27, 2011
மதுரையில் ஒளி வணக்கம்
சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுத்திரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.
இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும்,
இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்கும்
நினைவஞ்சலி செலுத்த,
அவர்களுக்காக நீதி கேட்க
நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கு கொண்டு மெழுகுத்திரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இன உணர்வாளர்களும், பொதுமக்களும் எழுச்சியுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்வு உணர்ச்சிகரமாக அமைந்தது.
Sunday, June 26, 2011
மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.
இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்தல் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி 26.6.2011 அன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்காணோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பழ.நெடுமாறன் எழுச்சி உரை ஆற்றினார். சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.
பழ.நெடுமாறன் பேசுகையில், “இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளை உலக நாடுகள் அறியும். ஈழத்தமிழர்களின் விடியலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நாம் தோள் கொடுப்போம். சாதி மறப்போம்; கட்சி மறப்போம். தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும். தமிழ் ஈழம் வெல்லட்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்போம். உலக சமுதாயமே, ஐ.நா. சபையே ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குங்கள். இப்போதும், இலங்கையில் நடைபெறும் சித்ரவதைகளை ஐ.நா. சபை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா ? மாநாட்டில் வைகோ பேச்சு
மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு இன்று திருச்சியில் ஹோட்டல் பெமினாவில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள்.
இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார்.
அவர், ‘’நடந்து முடிந்த தேர்தல் இயக்கத்துக்கு சோதனையான காலம். நமக்கு துரோகம் இழைக்கப் பட்டபோது கழக வழக்கறிஞர்கள் நீங்கள் தான் தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொன்னீர்கள்
மிக துணிவான முடிவு உங்களால் தான் எடுக்க முடிந்தது.நமது இயக்கத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டது... நாம் சுயமரியாதை இயக்கத்தின் அடையாளம்....
ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்...எத்தனையோ கஷ்டங்களை
சந்தித்துவிட்டோம்...இனி நமக்கு வசந்தம் வீசும்....
தனி நாடு கேட்டார் பெரியார்...சுய ஆட்சி கேட்டார் அண்ணா .... நாங்கள் அப்படி கேட்கவில்லை.... ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்....
ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது...ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள்... என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன் , இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது... நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா,மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே .... எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா?
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான்...ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா .....எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது.
குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு ... என் தமிழக மீனவன் இலங்கை சிங்கள அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு...
சேனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது...பல கொடுமைகள் நடத்தப்படும்
காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது... இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே
தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா..
இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொள்கிறார்கள் ... அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள்... ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள்... இதற்க்கு தீர்வு என்ன...சுதந்திரமான தனி ஈழம் தான்... அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும்... என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்..
உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாகிநீர்கள்... ஈழம் எப்போது....
சேனல் 4 ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள்.... நாம்
என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா ?
வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம்...தன் மானத்தோடு வாழ்வோம்....’’ என்று பேசினார்.
இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார்.
அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை.
புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும் ..... தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.
இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா.
எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும்....பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.
மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட்டு தீர்மானங்கள் :
மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் தொடங்கியது. 100கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை.
1. சென்னை உயர்நீதி மன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும்.
2. மதுரைக்கு தனி நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.
3. தமிழகம் முழுவதும் தமிழில் பெயர் பலகையை வைக்க வேண்டும்.
4. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும்.
5. வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்.
7. இலங்கை உடனான எல்லா விதமான உறவையும் இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும் என்ற 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை மீது பொருளாதார தடை: தமிழக அரசின் தீர்மானம் கண்துடைப்பு: வைகோ
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தாமல், தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வெறும் கண்துடைப்பு என்று வைகோ கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
பொருளாதார தடை கொண்டுவரவேண்டுமானால் இந்திய அரசு பத்து நாட்களுக்கு முன்னால் இலங்கையோடு போட்ட பொருளாதர ஒப்பந்தங்கள், வர்த்த ஒப்பந்தங்களையும் இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இந்திய அரசு பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டதை கண்டித்து, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போறீர்களா இல்லையா என்று தமிழக அரசு கேட்க வேண்டும். இதையெல்லாம் கேட்காமல் பொத்தாம் பொதுவாக பொருளாதா தடை என்றால் அது உண்மையாகவே சிங்கள அரசுக்கு ஒரு பொருளதார நெருக்கடியை உண்டாக்குகின்ற அனுகுமுறையாக இருக்காது
சமச்சீர் கல்வி பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆரோக்கியமாக இல்லை. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல்.
200 கோடி ரூபாய் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி குறித்த தமிழக அரசு அமைத்துள்ள ஆய்வுக் குழுவில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் இடம்பெற்றிருப்பது அக்கல்வி குறித்த நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் சிதைக்கும் செயல் என்றார்.
Thursday, June 23, 2011
இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்!
''18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சேனல் 4’ தொலைக்காட்சி.
போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.
'முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது!'' எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.
'இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்!'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, 'சேனல் 4 ஒளிபரப்பிய காட்சி கள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது!’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்தது.
கூடவே, அதி முக்கிய விளக்கமாக, 'சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டி னென்ட் கர்னலாக இருந்தவர்!’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியா வுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை. இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ''போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட் டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடிய வில்லை என்பதுதான் உண்மை!'' என்கிறார் வருத்தமாக.
கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர் களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், '' 'சேனல் 4’ ஒளிபரப்பியகாட்சி கள் உலகத்தின் கவனத்தை இரக் கத்தோடு திருப்பி இருக்கின்றன. தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங் களைக் கண்டித்தும் பொருளா தாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. 'சேனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்ரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக் கிறோம். முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங் களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள் கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது. 'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல் களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும்!'' என்கிறார் எதிர்பார்ப்புடன்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், ''ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார் கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங் கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங் கள் தேடப்படுகின்றன. ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இன வெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.
இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!'' என்கிறார் ஆதங்கமாக.
லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, ''இன வெறிக் கொடூரங்களாக 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும். தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும்!'' என்கிறார் ஏக்கத்துடன்.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சேனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.
தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?
- ஆனந்த விகடன்
வட அயர்லாந்து அரசாங்கம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வ சந்திப்பு
வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.
நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், போர்குற்றங்கள் இனப்படுகொலை மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்துறை அமைச்சர் டிலக்சன் மொறிஸ் ஆகியோர் தலைமையில் சென்றடைந்துள்ள நா.த.அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினரை, அரச மரியாதையுடன் வட அயர்லாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை (யூன்21) வட அயர்லாந்து துணை முதலமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும், நா.த.அரசாங்க குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
பாராளுமன்ற - துணை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 2மணி நேரம்வரை இடம்பெற்றது.
தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலை, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுப்பு, ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் ஆகிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதனுடைய சனநாயக நடைமுறைச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துரைத்த அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய சனநாயகவழி போராடத்தின் உயர்பீடமாக அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, வெளிப்படையயை கிடைத்து வருகின்ற உலக நாடுகளின் அங்கீகாரமாகவே இதனைக் கருதுவதாக தெரிவித்தார்.
அமைச்சர் டிலக்சன் மொறிஸ் அவர்கள் கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய நிலைப்பாடு - நிலைவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டு வட அயலர்லாந்து அரச பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுவது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டதோடு, தமிழ் மக்களுடைய சனநாய பொறிமுறையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும் வரவேற்றுள்ளனர்.
வட அயர்லாந்து அரச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களுடனான தொடர் சந்திப்புக்களை நா.த.அரசாங்க உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Wednesday, June 22, 2011
ஈழத்தமிழருக்காக ஒரு நாள்! - மெரினாவில் மெழுகுவத்தி அஞ்சலி
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில், ஈழ மக்களின் துயர் நீக்கும் வழி தென்படாத நிலையில், ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்காக ஈரமனம் கொண்ட இளைஞர்கள் மெரினாவில் அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகிறார்கள்!
'மே 17 இயக்கத்தின்’ உறுப்பினர்களில் ஒருவரான திருமுருகன் நம்மிடம் பேசினார். ''ஈழத்தில் நடந்த படுகொலைகள், இந்திய அரசின் துணை இல்லாமல் சிங்கள அரசாங்கம் மட்டுமே செய்தது அல்ல. அங்கே 'எத்தனை பேர் செத்தார்கள், எத்தனை பேர் முகாம்களில் இருக்கிறார்கள்’ என்ற விவரங்களை இன்னும் அரசு சொல்லவில்லை. 'சக தமிழனாக, தோழனாக ஈழத்தில் என்ன நடக்கிறது?’ என்கிற கேள்வியை ஒரு குடிமகனாக நான் முன் நின்று கேட்கும்போது, இந்த அரசாங்கம் என்னிடம் நேர்மையற்றதாக நடந்து கொள்கிறது. நான் ஏமாற்றப்பட்டதன் வலியை உணர்ந்து இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். இது தனிப்பட்ட என்னுடைய கோபம் அல்ல. தமிழ் இனத்தின் கோபம். சுமார் 1,46,000 பேர் ஈழத்தில் கொல்லப்பட்டனர். இந்தப் பேரழிவை இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்கவே இல்லை. வியட்நாம் போரின்போது, அமெரிக்க மக்கள் எந்த அளவுக்கு வருந்தினார்களோ, அந்த மனிதநேயத்தின் அடிப்படையில்தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
60 ஆண்டுகாலமாக நடக்கும் போராட்டத் தில், '1976-ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக தமிழீழம் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானத்துக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு அளித்தோம்? தமிழீழம் மட்டுமே அல்ல... தமிழர் சார்ந்தும் கேள்விகள் எழுப்பப்படாமல் போனதன் விளைவே இந்தப் படுகொலைகள். டிசம்பர் 10, 2009-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, 'ஈழத்தில் நடந்த இனப் படுகொலை’ என்ற வார்த்தைகளைச் சொன்னார். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால், இலங்கை மேற்கொள்ளும் படுகொலைகளை இந்தியா ஊக்குவிக்கிறது என்பது தெரியும்.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 70,000 பெண்களை மட்டும் சிறைப் பிடித்து இருக்கிறார்கள். அத்தனை பேரையும் பலாத்காரம் செய்து கர்ப்பிணிகள் ஆக்கிவிட்டனர். போருக்குப் பிந்தைய படுகொலைகள், உலகத்தை உலுக்கி வருகின்றன. இப்படிச் சித்ரவதை களுக்கு உள்ளானவர்களின் ஆதரவுக்கான சர்வதேச தினமாக ஜூன் 26-ம் தேதியை அறிவித்து இருக்கிறது ஐ.நா.!
இன்று வரையிலும், 'போர்க் குற்றவாளி’ என்ற ஒரு பக்கத்தில் இருந்து மட்டுமே பேசுகிறோம். அடக்குமுறை களுக்கு உள்ளான, குற்றவாளிகளின் பிடியில் இருக்கும் மக்களை விடுவித்து, என்ன கோரிக்கைக்காக இத்தனை துயர்களை அடைந்தார்களோ, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகிற ஜூன் 26-ம் தேதி மெரினா, கண்ணகி சிலை அருகில் மெழுகுவத்தி அஞ்சலி செலுத்த இருக்கிறோம். தங்களைத் தமிழர்களாக உணர்பவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வாக இது இருக்கும்!'' என்று ஆவேசப்பட்டார் திருமுருகன்.
அந்த நாளில் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஈழத் தமிழர்கள் துயர் தீரட்டும்!
நன்றி : ஜூனியர் விகடன்
செயிண்ட் ஜார்ஜ் தீர்மானம் செங்கோட்டையில் எதிரொலிக்குமா?
ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்...
இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார்.
'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது சீறிப் பாய்ந்தார்கள். ஆனால், ஜெயலலிதா இன்று கொண்டுவந்து இருக்கும் தீர்மானத் தைப் படித்தவர்களுக்கு, ஏதோ தனி ஈழமே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட வைகோ, தி.மு.க-வு டன் கூட்டணியில் இருக்கும் திருமாவள வன், 40 ஆண்டுகளாக ஈழப் பிரச்னைக்கா கத் தன்னை அர்ப்பணித்துவிட்ட பழ.நெடு மாறன் என எல்லோருக்கும் ஜெயலலிதா வின் தீர்மானத்தால், மகிழ்ச்சி.
'இது ஜெயலலிதா நடத்தும் அரசியல் நாடகங்களில் ஒன்று’ என்று தி.மு.க. சார்பு ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். எத்தனையோ நாடகங்களை நடத்திய கருணாநிதி, இதையும் செய்திருக்கலாமே? ஏன் மறுத்தார்?
கருணாநிதியின் மௌனம்கூட, ஜெயலலிதாவைப் பேசவைத்து இருக்கலாம். எது காரணமாக இருந்தாலும், ஈழப் பிரச்னையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது ஜெயலலிதாவின் தீர்மானம்!
''தமிழர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. பரவலாகக் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங் களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய மறுத்தது. போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீதும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது போன்ற கடுமையான, நம்பத் தகுந்த குற்றச் சாட்டுகளை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு நிகழ்த்தி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது'' என்று குற்றம்சாட்டும் தமிழக அரசின் தீர்மானம், ''இத்தகைய போர்க் குற்றங் களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்ற வாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று பகிரங்கமான கோரிக்கையை வைத்துள்ளது.
2009 மே மாதம் வரை நடந்த கொடுமைகளுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்தாத தமிழகம்... 16-ம் நாள் கூடப் பதறாத தமிழகம்... சுமார் 750 நாட்கள் கழித்து மாட்சிமை பொருந்திய தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொடுமைக்குக் கண்ணீர் விடும் தீர்மானத் தைக் கொண்டுவந்து இருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் ஓர் உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறது. ஆயிரக் கணக்கில் தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் அந்நாட்டு அரசுகள் செய்ததைக்கூட, ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் தமிழகம் இதுவரை செய்ய வில்லை. இப்போது ஜெயலலிதாவின் தீர்மானம், ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளது.
ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு எதிர்விளைவை ராஜபக்ஷே மட்டும் அல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியின் காரணமாகத்தான், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் உடனடியாக சென்னை வந்து ஜெயலலிதாவைச் சந்தித் தார். இலங்கை அரசுக்கும், இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் இந்தத் தீர்மானம் தீராத தலைவலியைக் கொடுக்கப்போகிறது.
'இலங்கையை முன்னால் விட்டு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுதான் பின்னால் நின்று போரை நடத்தியது!’ என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை மன்மோகனும் சோனியாவும் மௌனம் சாதிக்கிறார்கள். காங்கிரஸ் அரசு ராணுவ உதவிகளைப் பகிரங்கமாகவே செய்தது. வைகோ வுக்கு பிரதமர் எழுதிய கடிதங்கள் இதற்குச் சான் றாக உள்ளன. 'இந்தியா வுக்கு நன்றி’ என்று கொழும் பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. 'போரில் ஒவ்வொரு நாளும் நடப்பதை இந்தியாவுக்கு நாங்கள் தகவல் தந்துவந்தோம்’ என்றார் இலங்கை ராணுவத் தளபதி. இலங்கை சார்பில் சரத் ஃபொன்சேகா, பஷில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே ஆகிய மூவரும்... இந்தியா சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு போர்க்காலங் களில் பேசி வந்தார்கள்’ என்று பகிரங்கமாக இலங்கை அரசு அறிவித்தது. இதை எல்லாம் சொல்லும்போது, 'மத்திய அரசுதான் எதையும் செய்யவில்லை என்கிறார்களே’ என்று பொத்தாம் பொதுவாக பதிலைச் சொன்னார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி.
''இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்'' என்றால், அதில் மகிந்தா ராஜபக்ஷேவுடன் சேர்ந்து மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் சிக்கலாம். ஊழல் வழக்குகளில் சிக்கி மூச்சுத் திணறும் மன்மோகன் தலையில் பெரிய கொட்டுவைத்து உள்ளது தமிழக அரசின் இந்தத் தீர்மானம்.
ஜெயலலிதாவின் கடமைகள் இதோடு முடிந்துவிடவில்லை. தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தின் விவாதப் பொருளாக ஆக்கி, அங்கும் இப்படி ஒரு தீர்மானத்தை முன்வைக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இன அழிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே இடத் தில் கூட்டி ஒரு தீர்மானத்தை முன்மொழிவதும்... அதையே டெல்லியில், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட்டுகள், முலாயம் சிங் மற்றும் லாலு கட்சி எம்.பி-க் களையும் ஒருங்கிணைத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களின் வழிமொழிதலுடன் டெல்லி செங்கோட்டைக்குள் எடுத்துச் செல்வதும் ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது.
ஜெயலலிதா, நினைவாற்ற லில் தேர்ந்தவர். 1983 கால கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனா இதே போல் தமிழர்களைக் கொன்று தீர்த்தபோது, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கறுப்புச் சட்டை அணிந்து போராடினார். 'ஜெயவர்த்தனாவுக்கு அமெரிக்க அரசுதான் ஆயுத உதவி செய்கிறது’ என்பதைக் கேள்விப் பட்டதும், சென்னயில் இருந்த அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிராக (12.10.1983) பேரணி நடத்தினார். அன்று, தூதர் விக்டேக்கரிடம் மனுவைக் கொடுத்தவர் அப்போதைய அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதாதான்.
'மனித உரிமைகள் குறித்து நாள் தோறும் பேசி வருகிற அமெரிக்க அரசு, இலங்கைத் தமிழர் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்காதது தவறு. தனது அரசியலுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னையை அமெரிக்க அரசு ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று தனது தீர்க்கமான குரலில் ஜெயலலிதா அப்போது சொன்னார்.
அமெரிக்காவுக்கு அன்று சொன்னதை, இங்குள்ள காங்கிரஸ் அரசுக்கு இப்போது சொல்வாரா ஜெ?
நன்றி : ஆனந்த விகடன் 22-ஜூன் -2011
ராஜீவ் படுகொலை.. அதிரும் உண்மைகள்! இதுவரை வெளிவராத தகவல்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.
உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..
என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?
1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே... தெரியுமே.. என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.
அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’
சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..
நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.
பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.
நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’
அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?
இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.
மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.
வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.
என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.
அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’
சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?
அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.
நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.
பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’
சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?
ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.
சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.
மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.
அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.
அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.
இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.
தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.
ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.
ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?
அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.
சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.
சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.
என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!
நன்றி - சூரியகதிர்
Thursday, June 9, 2011
தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்!
தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!
மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள் வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்
என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.
அவர்கள்:
ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!
சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.
அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.
இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது
Wednesday, June 8, 2011
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா 08.06.2011 அன்று ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:
தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.
பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.
எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:
"இலங்கை நாட்டுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் "சுயாட்சி அந்தஸ்து", "தனி ஈழம்" உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அதிமுக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின. இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.
1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு மு.கருணாநிதி தலைமை வகித்தார். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.
2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.
திமுக அரசு மீது குற்றச்சாட்டு...
இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன்.
ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, "அனைத்துக் கட்சிக் கூட்டம்", "சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்"; "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்", "மனிதச் சங்கிலி போராட்டம்" "பிரதமருக்கு தந்தி"; "நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு"; "ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது"; "இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு" என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நடத்தப்பட்டன.
இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று "போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்" என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி.
மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் "விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது" என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் "உண்ணாவிரதம்" என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.
"போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது" என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, "இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்" என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
"போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது" என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு "தமிழினப் படுகொலை"-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது" என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இலங்கை மீது பொருளாதார தடையின் அவசியம்...
இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான்.
இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.
ராஜபக்ஷே போர்க்குற்றவாளியா?
இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.
அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை - ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.
அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.
எனவே, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று ஜெயலலிதா பேசினார்.
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்துவது தொடர்பான தீர்மானம் மீது உறுப்பினர்கள் சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), துரைமுருகன் (திமுக), விஜயகாந்த் (தேமுதிக) ஆகியோர் பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
முன்னதாக, தி.மு.க. சார்பில் துரைமுருகன் பேசினார். அவரும் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக கூறினார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும், தி.மு.க. ஆட்சியைப் பற்றியும் சில கருத்துக்களை கூறினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
விஜயகாந்த் கருத்துக்கு பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தார். விஜயகாந்த் பேசி முடிந்த பிறகும் துரைமுருகனுக்கு பதில் அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு துரை முருகன் கூறியதாவது:
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடும் தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரிப்பது அனைவரின் கடமை. நாங்களும் ஆதரிக்கிறோம் என்று பேசினேன்.
சிலர் தி.மு.க.வை மறைமுகமாக தாக்கி பேசினார்கள். நான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை வெளியே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேச தொடங்கிய உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் சரமாரியாக தாக்கி பேசினார்.
எனக்கு பதில் சொல்ல தெரியும். விளக்கம் அளிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டேன். எதிர்க்கட்சி தலைவர் பேசி முடித்த பிறகு என்னை பேச அனுமதிப்பதாக கூறினார். ஆனால் அவர் பேசி முடிந்த பிறகும் அனுமதி தரவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஆனால் நாங்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தோம் என்றார்.
இலங்கையுடனான ராஜ்ய உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் - பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தல் :
இலங்கை அரசு மீது பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது உறுப்பினர்கள் பேசியதாவது:
செ.கு.தமிழரசன் (இகுக):
உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன். இலங்கை தமிழர்கள் படுகொலை, கற்பழிப்பு என்று பல்வேறு துன்பங்களுடன் சொந்த மண்ணிலேயே வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் துன்பங்களுக்கு மருந்தாக இந்த தீர்மானம் உள்ளது.
கிருஷ்ணசாமி (பு.த):
முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரே நாளில் 30 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். அதற்கான முன்னோட்டமாக இந்த தீர்மானம் உள்ளது. என்ன நடக்கிறது என்பதை அறிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.
ஜவாஹிருல்லா (ம.ம.க):
தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இலங்கையுடனான ராஜ்ய உறவை உடனடியாக துண்டிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
கலையரசன் (பா.ம.க):
சரித்திர புகழ் வாய்ந்த இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ள முதல்வரையும், அரசையும் பாராட்டுகிறோம். கர்நாடக மக்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கட்சி பாகுபாடின்றி, அனைவரும் ஒன்றாக நிற்பார்கள். அதேபோல், நாமும் இலங்கை தமிழர்களுக்காக ஒரு அணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்.
என்.ஆர்.ரங்கராஜன் (காங்.):
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக பல்வேறு நலன் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
நஞ்சப்பன் (மார்க்சிஸ்ட்):
இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு காரணம் இந்திய அரசுதான் என்று உலக தமிழர்கள் நினைக்கிறார்கள். எனவே, இந்திய அரசு தனது போக்கை மாற்ற வேண்டும். உலக அரங்கில் இலங்கை அரசை தனிமைப்படுத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் 500 பேரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. பகை நாடான பாகிஸ்தான்கூட நமது மீனவர்களை சுடுவதில்லை. மத்திய அரசின் தவறான போக்கினால்தான் இந்த தேர்தலில் மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிரான போர்ப்பிரகடனமாக இந்த தீர்மானம் உள்ளது.
குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):
ராஜிவ்காந்தி கொலையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பலியான நேரத்தில் அவருடன் இருந்த எங்கள் கட்சி செயலாளர் பாண்டியனின் உடலில் இன்றளவும் குண்டு துகள்கள் உள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு பின்கள உதவிகளை செய்து மக்கள் நடமாட்டங்களை அறிய உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழர் விரோத கட்சியாக உள்ளது. அதோடு துணை நிற்கிற கட்சிகளும் அப்படித்தான்.
சவுந்திரராஜன் (மார்க் சிஸ்ட்):
இலங்கை யில் போ ரால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சர்வ தேச செஞ்சிலுவை சங்கத்தை அனுமதிக் கவில்லை. வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில், இலங்கை மீது பொருளாதர தடை விதித்தால், அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களும் பாதிக்கப்படுவர். இலங்கை யில் போர்க் குற்றம் விளைவித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.
இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் - வைகோ வரவேற்பு :
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் - ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.
இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.
எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான் :
தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.
ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், இன்றளவும் தமிழின அழிப்பில் ஈடுபட்டுவரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, கண்ணியமிக்க, சமவுரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடிவரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும். அதற்காக பெரும்பான்மை பலத்துடன் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவாக நின்ற சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத சிறிலங்க அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும்.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலைப் போரைத் தொடங்கி, இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலம் நடத்தப்பட்ட அந்தப் போரில் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission – LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்த சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1,46,679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை சிறிலங்க அரசு மறுக்கவில்லை. ஆனால், அதுபற்றி இன்று வரை எந்த வினாவையும் சிறிலங்க அரசை நோக்கி இந்திய அரசு எழுப்பவில்லை. இது இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையில் அது உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றுமொருச் சான்றாகும்.
இந்திய அரசின் மெளனமே, சிறிலங்க அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவேதான் தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது. இந்த நிலையில்தான், தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னபின்னமாக்கப்பட்ட நிலையில், சிறிலங்க அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிப்பதே ஒரே வழியாகும். அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டப் பேரவை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார்.
இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டப் பேரவைக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் என்றென்றும் நன்றி தெரிவிக்கும் என்பது மட்டுமின்றி, இத்தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.
அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் - திருமாவளவன்:
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது.
ஐநா பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றத்தை குறிப்பாக ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை அண்மையில் அம்பலப்படுத்தியது.
அதன் அடிப்படையில் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசின் இதரப் போர்க்குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என தமிழகத்தில் இருந்தும் உலகின் பிற நாடுகளில் இருந்தும் கோரிக்கைக்குரல்கள் எழுந்தன.
அத்துடன் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசும் இக்கோரிக்கையை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி இந்திய அரசை வற்புத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக அரசு இத்தகைய தீர்மானத்தை
நிறைவேற்றி யிருப்பது ஆறுதலை அளிப்பதாக அமைந்துள்ளது.
ஆனால் கடந்த காலங்களில் தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின்
அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு தமிழக அரசின் இந்தத்தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.
ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.
குறிப்பாக ஈழத்தமிழர்கள் தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.
அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதை நாடறியும்.
எனவே தற்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத்தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசைச்செயல்பட வைக்கிற அளவுக்கு அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாகப்பயன்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரச்சனையில் டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் - ஜெயலலிதாவுக்கு தங்கர்பச்சான் கோரிக்கை :
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்த வேளையில், ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அறிக்கை நம்பிக்கையை விதைத்தது.
இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு தண்டனையாக கடந்த ஆட்சி தோல்வி கண்டு மக்களின் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. தேர்தல் முடிவு வரும் முன்னரே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் முதல் சட்டப்பேரவைத் தொடரிலேயே இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடையை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என எனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தேன்.
என்னைப் போன்றோரின் வேண்டுகோள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும்படியான தீர்மானம் நிறைவேறக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழர்கள் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கு அடுத்த கட்டமாக முதல்வர், டெல்லியில் முகாமிட்டு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் பற்றிய விமர்சனத்தை ஜெயலலிதா தவிர்த்திருக்க வேண்டும் - கி. வீரமணி :
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஈழத் தமிழர்களுக்காக 08.06.2011 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்மீது முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய உரை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
08.06.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன் மொழியப்பட்ட ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதனை தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன; ஆதரவு தெரிவித்துள்ளன.
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வரின் விமர்சனங்கள்
ஒட்டு மொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இத்தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் தி.மு.க.வையும், அதன் தலைவர் கலைஞர் அவர்களையும் கடுமையாக தாக்கி விமர்சித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்; தமிழ்நாட்டு அரசியலில் நடந்த கடந்த கால கசப்பான அனுபவங்களையே சுட்டிக் காட்டி, ஒவ்வொருவரும் பரஸ்பரக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள் என்ன?
அருள்கூர்ந்து நடுநிலையோடு விருப்பு, வெறுப்பின்றி யோசிக்க வேண்டும்.
பொது எதிரியைத் தப்பிக்க விடுவதா?
1. பொது எதிரியான போர்க்குற்றவாளி ராஜபக்சே தப்பித்துக் கொள்ளவே இது வழி வகுக்கக்கூடும்.
2. மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக, இங்குள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினையை மறந்து விட்டு, பொது எதிரியை ஒதுக்கிவிட்டு, ஒருவருக்கொருவர் மறுப்பு அல்லது தன்னிலை விளக்கம் அளித்து, தமிழ்நாட்டவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை இனவுணர்வுப் பிரச்சினையாகவோ, மனித உரிமைப் பிரச்சினையாகவோ பாராமல், நல்ல அரசியல் முதலீடு என்றுதான் கருதி, தீப்பற்றி எரியும் நேரத்திலும், அணைப்பதற்கு முந்துவதற்குப் பதிலாக, யார் எந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்; அணைக்கவில்லை என்ற ஆராய்ச்சியிலா இறங்குவது?
காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்க செல்வி ஜெயலலிதா முன்வரவில்லையா?
மத்தியில் ஆளும் காங்கிரசை ஆதரிப்பதில் இதற்கு முழு முதற் காரணமான இலங்கைக்கு இராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுப்போம் என்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது
மறுமொழியாக தி.மு.க. பதிலுக்குக் கூற ஆரம்பித்தால், எந்த நோக்கத்தோடு இத்தீர்மானம் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுணர்வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோ அந்தச் சூழல், அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வலிமை குறைந்து விடுமே! மீண்டும் பழைய கருப்பனாகவே ஈழத் தமிழர் வாழ்வுரிமை ஆகிவிடுமே என்ற கவலையாலும், பொறுப்புணர்ச்சியினாலும் தான் நாம் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி யாருக்காகவும் வாதாட அல்ல.
தி.மு.க. தோல்விக்குக் காரணம்
தி.மு.க. தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றதற்குள்ள பல காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகும்.
எனவே அனைத்துக் கட்சி ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயல் உருவாக்கம் கொள்ளச் செய்ய ஆளுங்கட்சியும், முதலமைச்சர் அவர்களும் முன்வர வேண்டும் என்றால் ஒற்றுமை, ஒத்துழைப்பு நம் அனைவருக்கும் இடையே தேவை.
இல்லையானால் ராஜபக்சேக்கள் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் உதவும்; மற்ற நாடுகளுக்குள்ள மனிதநேயம்கூட மத்தியில் ஆளும் கட்சிக்கு இல்லை என்ற நிலைப்பாடு மாறியுள்ளது என்று காட்ட மத்திய அரசுக்கும் இது ஒரு நல் வாய்ப்பு செய்யுமா மத்திய அரசு?
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)