Monday, November 1, 2010
தமிழ்செல்வனுக்கு சிலை: இலங்கை எதிர்ப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் திறக்கப்படவுள்ளதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2007 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீரமரணமடைந்த அவரின் மூன்றாம் ஆண்டு நினைவாக பிரான்ஸ் நாட்டில் அவரது சிலை திறக்கப்படவுள்ளது.
ஆனால் இச்சிலை பிரான்ஸில் திறக்கப்படுவதற்கு பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சிலை திறக்கப்படவுள்ள நகரின் பிரெஞ்சு மேயருக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து கடிதம் எழுதவுள்ளதாக இலங்கை அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment