Labels

Saturday, May 15, 2010

அறைந்தேன்..... இனியும் அறைவேன்...


தாயை இது உன் அம்மா அல்ல,
என் அம்மா என்றவனை,
ஓங்கி அறைந்தது குழந்தை....

நீ
என் தாய் மண்ணை உன் தாய் மண் என்றாய்...
அறைந்தேன் இனியும் அறைவேன்....

முள்ளி வாய்கால் நெருப்பில்-

என் தாய் குலத்தில் பத்தாயிரம் உயிர்களை...
பாலியல் நகங்களால் கிழித்தெறிந்தாய்...

பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய்..
என் தாய் மண்ணில் நாற்பதாயிரம் ...
உயிர்களை ஒரே நாளில் சாம்பல் ஆக்கினாய்...

உன்னிடம் இல்லாத புத்தனை என்னிடம்
எப்படி எதிர்பார்ப்பாய்?

அறைந்தேன்.....
இனியும் அறைவேன்...

குண்டுகளால் தாய்மார் கருப்பை கிழித்து.......
என் தாய் மண்ணில் ஈரிலக்கம் உயிர்களை அழித்த நீ.......
என்னை உன் வாயால் வன்முறையாளன் என்றாய்....

அறைந்தேன்.....
இனியும் அறைவேன்...

உடல் கிழிந்த தாயும்..
ஊர் கிழிந்த தாய் மண்ணுமாய்.......
நிற்கும் என்னிடம்...

இன்னுந்தான் இன்னுந்தான்....
சிங்களவன் மண் இது என்கிறாய்......

நீயும் மாற போவதில்லை......
அது வரை நானும் மாற போவதில்லை.....

அறைந்தேன்.....
இனியும் அறைவேன்...

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

No comments:

Post a Comment