Tuesday, June 1, 2010
ராஜபக்செ ஒரு சிங்கள பயங்கரவாதி: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் சாடல்!
'ராஜபக்செ ஒரு சிங்கள பயங்கரவாதி" என்றும், 'இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ பியாங் யூ தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பிரதமராக பதவி வகித்த அவர் பதவி ஓய்வு பெற்ற பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் மேலும் கூறியது...'இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் பயங்கரவாத தாக்குதல் தொடங்கியதால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கை அரசு செய்தது மிகப்பெரிய யுத்தக் குற்றம். இதற்கு ராஜபக்செ தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். சிங்கள பயங்கரவாதியாக ராஜபக்செ செயல்பட்டுள்ளார். அவரை சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். இலங்கையில் இன்றைக்கும் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ ஒரே வழி தமிழீழம் அமைவதுதான்" என்று தெரிவித்தார். சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரின் இந்த வெளிப்படையான கருத்து இலங்கை அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment