Labels

Friday, September 17, 2010

தமிழீழத்தின் விடுதலை நோக்கி, தொடரும் நீதிக்கான தார்மீக நடைப் பயணங்கள்…! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…..



இலங்கை அரசினால் கடந்த வருடம் ஈழத்தமிழ் மீது மக்கள் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு போரில், உடல், உள, வாழ்வியல் ரீதியில் இன்று வரை மீளமுடியாது அல்லற்படும் மக்களிற்கு, நீதி வழங்கும் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வரும் சர்வதேச மன்றங்களை தட்டியெழுப்பும் வகையில் நீதி தேடி தொடரும் நீண்ட மனிதப் பயணங்கள்…!

தமிழீழ மக்களிற்கு, இலங்கை இனவாத அரசினாலும், அதன் இராணுவ, காவற்றுறை, புலனாய்வுத் துறை படைகளினாலும் ஏற்படுத்தப்பட்டன வழிப்புக்கு எதிரான சட்டங்களுக்கு முறனான குற்றங்களுக்கும் மானிடத்திற்கு எதிரானகுற்றங்களுக்கும் போர்க் குற்றங்களிற்கும், தமிழீழ மக்கள் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரவலங்களிற்கும், சர்வதேசத்திடம் நீதி கேட்டு, சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும், மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய அமைதி வழி செயற்பாடுகளை, நாடுகடந்த அரசாங்கம் வரவேற்று ஆதரவளிக்கிறது!

அந்த வகையில் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் நாள் கனடா ரொரன்ரோ நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் 5 மாணவர்கள் சமாதானத்தை நோக்கி ஒபரா வின்ப்பிரேயை சந்திக்கழூ என்று அமெரிக்கா சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கி, கடும் குளிர் காலத்தில் 60 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

அண்மையில் யூலை 2010ல் திரு.சிவந்தன் அவர்கள் பிரித்தானியாவில் இருந்து, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயலகத்தை நோக்கி «நீதிக்கான நடை» என்று கடும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

 இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

 மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

 தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

என்கிற கோரிக்கைகளை முன் வைத்து பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய தமிழ் மக்களுக்கான அடுத்த நீதிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும்,

திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ், ஆகியோருக்கு, அவர்களின் இந்த மனித நேய முயற்சி அதன் இலக்கினை எட்டவும், இந்த நீதிக்கான நடைப் பயணத்தை ஒருங்கமைத்தோருக்கும் நாடு கடந்த அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய இத்தகைய செயற்பாடுகள் தொடரப்பட வேண்டும், என்பதில் நாடுகடந்த அரசாங்கம் தனது அக்கறையை வெளிப்படுத்துகின்றது.

செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Thursday, September 2, 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு: உருத்திரகுமாரன் அறிவிப்பு


திகதி:02.09.2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்;பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம்.


கடந்த மே மாதம் 17-19ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது அமர்வினை அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப்பிரகனடம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப்புகழ்மிக்க பிலடெல்பியா மாநகரில் நாம் கூட்டியிருந்தோம். இம் முதல் அமர்வின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான இடைக்கால நிறைவேற்றுச் சபையினை அமைத்துக் கொண்டதுடன், இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரையும் தெரிவு செய்து கொண்டது.


மேலும் இம் முதலமர்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் அமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும், உடனடித் தேவைகளையொட்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அமைப்பு விவகாரக்குழு, அரசியல் அமைப்பு உபகுழு, கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு, அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவுதிரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும்.


நாம் அமைத்துள்ள வௌ;வேறு குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இதேவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு அரசியலமைப்புக் குழுவினால் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசிலமைப்பை விவாதித்து ஏற்றுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பை வடிவமைப்பதே இம்மாத இறுதிப் பகுதியில் கூட்டப்படவுள்ள அரசவையின் இரண்டாவது அமர்வின் நோக்கமாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்கும்போது செயற்பாட்டுக் குழுக்கள் அமைச்சுக்களாக வடிவமைக்கப்பட்டு நிரந்தரக் கட்டமைப்புக்களாக்கப்படும். இவ் இரண்டாவது அமர்வு தொடர்பான மேலதிகத் தகவல்களை மக்களுக்கு இயன்றளவு விரைவில் அறியத் தருவோம்.


இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் என்ற நிலையில் இருந்து மக்கள் முன்னால் ஒரு சில விடயங்களைத் தெளிவு படுத்துவது எனது தலையாய கடமையெனக் கருதுகிறேன்.


நாம் எமது அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுப்பதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளோம்.

தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த எழுச்சி மிகுந்த விடுதலைப்போராட்டத்துக்கு உறுதுணையாக நாம் முன்னர் விடுதலைப்பணிகளை மேற்கொண்டு வந்தோம். தற்போது தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் வெளியெதுவும் தாயகத்தில் இல்லாதமையால் புலத்தில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் உலகத் தமிழினத்தின் பங்குபற்றுதலுடன், நியாயத்துக்காகவும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உலக சமூகத்தின் ஆதரவுடன் எமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுக்க திடசங்கற்பம் ப+ண்டுள்ளோம்.

நமது செயற்பாடுகள் தாயக மக்களின் அரசியல் வெளியையும் அதிகரிக்க உதவும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம்.
எம்மைப் பொறுத்த வரையில் சுதந்திரத் தமிழீழம் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் இலக்கு அல்ல. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் உயிர்ப்ப+ட்டப்பட்ட விடுதலைத்தீ நாம் நமக்கெனத் தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை எம் நெஞ்சமெல்லாம் கனன்று கொண்டுதான் இருக்கும். இவ் விடுதலைத்தீயினை அணைத்துவிடுவதற்கு எதிரி பகீரத முயற்சி செய்து வருகின்றமை நாம் அறிந்ததே. எதிரியிடம் இருந்து நம் விடுதலைத்தீயினை பாதுகாப்பதனையும், எமது விடுதலை இலக்கினை முன்னோக்கி நகர்த்துவதனையும் சவால்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுக்க உறுதி ப+ண்டுள்ளது. எமது இரண்டாவது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபின்னர் நமது பணிகள் வேகம் பெறும்.


நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரியிடமிருந்து வரும் சவால்களை முறியடித்து, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ள இக் காலகட்டத்தில் நாம் எமக்குள்ளேயே முரண்படுவதும், ஆளுக்காள் அவதூற்றுச்சேறு வீசுவதும் எதிரிக்குத் துணைபோகும் நடவடிக்கைகளேயன்றி நம் இலட்சியத்துக்கோ அல்லது நமது விடுதலைப்பயணத்துக்கோ எவ்விதத்திலும் உதவும் நடவடிக்கைகள் அல்ல. இந்த அவதூறுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதும், அதன் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனராகப் பணிபுரியும் என் மீதும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தமது சொந்த நலன்கள் சார்ந்து மேற் கொள்ளும் கைங்கரியம் இது என்பதனை நாம் அறிவோம். நாம் அனைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஜனநாயக விழுமியங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. ஆக்கப+ர்வமான விமர்சனங்கள் எமது பணியைச் செழுமைப்படுத்தும். ஆனால் உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களை உண்மை போல் திருப்பி திருப்பிக் கூறுவதும், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைவதும் போராட்டத்தின் நலன் சார்ந்த அல்லது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல.


அண்மையில் தமிழீழத்துக்கு எதிராக நான் கருத்துச் சொல்லியுள்ளதாகவும், சிறீலங்கா அரசுக்காகச் செயற்படுவதாகக் கூறியுள்ளதாகவும் அபாண்டங்கள கூறி; நான் கதைத்ததாகக் கூறும் ஒலிப்பதிவு உலவ விடப்பட்டு கண்டனங்கள் எழுப்பப்;பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து மக்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்த வேண்டியது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க அவசியமானது என உணர்கிறோம்.


தமிழ் ஈழம் சாத்தியமானதல்ல என நான் என் வாழ்நாளில் எவருக்கும் கூறவும் இல்லை, நான் அப்படிக் கருதவும் இல்லை. தமிழ் ஈழம் சாத்தியமானது மட்டுமல்ல, அது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம் என்ற அடிப்படையில் தான் எனது கடந்த கால, தற்போதய அரசியல் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன, அமைந்து வருகின்றன.


கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து கதைப்பதாகக்கூறி; சுரேந்திரன் எனும் பெயரில் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய இவருடன் நான் மேற்கொண்ட உரையாடல் எனக்குத் தெரியாமலே பதிவு செய்யப்பட்டு, அதனை இடையிடையே வெட்டி ஒட்டி மோசடியான முறையில் திரிபுபடுத்தப்பட்ட கதையொன்று சோடிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். தமிழீழத்துக்கான போராட்ட வடிவம் மாறியுள்ளமை குறித்தும், எமக்கிடையே நடைபெறும் சேறுப+சும் நடவடிக்கைகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்யும் வேலைகளை நாமும் செய்கிறோம் என்று கண்டனம் வெளிப்படுத்தியும் நான் தெரிவித்த கருத்துக்களை, கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உரையாடலின் சில பகுதிகளை நீக்கி, சிலபகுதிகளை வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டி இந்த மோசடியினை இவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு மோசடி தமிழ்த் தேசியத்தின் பேரிலும் தமிழீழ விடுதலையின் பேரிலும் இடம்பெற்றிருப்பது தமிழர் சமூகத்துக்கு பெரும் வெட்கக்கேடானது.

மக்களை ஏமாற்றுவதற்காக வௌ;வேறு மோசடிகளின் ஊடாகப் பொய்க்கதைகளைச் சோடிப்பது கருத்துச் சுதந்திரத்தினையும் மக்களின் அறிவாற்றலையும் அவமதிக்கும் மிகவும் அற்பத்தனமான செயற்பாடாகும்.
நான் முன்னர் கூறியபடி எமது தற்போதய போராட்டம் ஜனநாயகத்தின் வழியில் முன்னனெடுக்கப்படுவதாகும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களிலொன்று வெளிப்படைத்தன்மை (வசயnளியசநnஉல) என்பது. எனவே தனிப்பட்டவர்களோ அல்லது அமைப்புக்களோ தம்மை யாரென மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தித் தமது கருத்துக்களை, கண்டனங்களை வெளியிடுவதுதான் அரசியல் நாகரீகம். அதுதான் அரசியல் துணிவு மிக்க செயலாகும். இதைவிட இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில இணையத்தளங்கள் கடந்த காலங்களில் நாடு கடந்த அரசாங்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளை மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.


செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பின் நிர்வாகத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம். இந்த நேரத்தில்; மேற்கூறிய மோசடியான அவதூறுப் பரப்புரை முயற்சிகள் இன்னும் தீவிரமடையவும் கூடும். எனினும் நாம் இந்த மோசமான நடத்தைகளைக் கடந்து ஆரோக்கியமான அரசியற் பண்பாட்டை உருவாக்கியாக வேண்டும். இதனால் இத்தகைய அவதூறுச் சேறுவீசல்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு நாம் முன்னேறிச் செல்லவே விரும்புகிறோம். இனி வரும் காலங்களில் இத்தகைய அவதூறுகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருப்பதனைத் தவிர்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம். மக்கள் எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வார்கள் என நாம் திடமாக நம்புகிறோம்.
நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இடைக்கால முதன்மை நிறேவேற்றுனர்.